8. என்னருகே நீ வேண்டும்

New member
Joined
Aug 21, 2025
Messages
18
8.. என்னருகே நீ வேண்டும்..

போன பகுதியில்;அதைக் கேட்டு அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தால் ஆனால் அவனும் அதை எதையும் கண்டு கொள்வது போல் தெரியவில்லை அமைதியாக ஏனென்றால் அனைத்திற்கும் நான் தாயார் என்பது போல் அவள் தோரணையே அவனுக்கு சொல்லியது அவளின் எண்ணத்தை அதை நன்கு அறிந்தவன்.

இனி..

“இங்க பாருங்க மிஸ் துவாரகா இனி நீங்கதான் எனக்கு என்ன தேவையோ எல்லாமே பாத்துக்கணும் என்ன டைம் காபி குடிப்பேன் எந்த டைம் லஞ்ச் என்ன லஞ்ச் சாப்பிடுவேன் எல்லாமே நீங்க தான் பாத்துக்கணும் இதுதான் உங்களோட பனிஷ்மென்ட் எப்போ நீங்க உங்க ஒர்க்ல கரெக்ட்டா இருக்கீங்கன்னு எனக்கு தோணுதோ அப்ப தான் உங்களோட பனிஷ்மென்ட் முடியும்.”என்று சொன்னான் போகன்.

இவன் சொன்னதை கேட்டவுடன் நேற்றிலிருந்து தனக்கு அடக்கி வைத்திருந்த கோபம் வெளியே வந்து விட..

“சார் நான் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு லேட்டா தான் வந்தேன் அதுக்கு ஒன்னு எனக்கு வேலை இல்லைன்னு அனுப்புங்க இல்லனா எக்ஸ்ட்ரா ஒர்க் குடுங்க நான் என்ன பேபி சிட்டர உங்களுக்கு என்னென்ன தேவைன்னு டைம்க்கு டைம் பார்த்து செய்வதற்கு இதெல்லாம் என்னால செய்ய முடியாது.”என்று சொன்னாள் துவாரகா.

“வெயிட் மிஸ் துவாரகா இங்க நான் தான் உங்களுக்கு பாஸ் உங்களுக்கு என்ன ஒர்க் கொடுக்கணும்னு நான் தான் டிசைட் பண்ணனும் நீங்க கிடையாது நான் சொன்னதை செய்ய முடியாதுன்னா தாராளமா நீங்க இந்த வேலையை விட்டு போய்க்கிட்டே இருக்கலாம்.”என்று சொன்னான் போகன்.

இவன் சொல்லியதைக் கேட்டவுடன் அவள் மூளை அவளிடம்.

“ இந்த வேலை உனக்கு வேண்டாம் உடனே ரிசைன் பண்ணிடு இவனை இனி நீ பார்க்க அவசியம் இருக்காது இதுதான் நல்ல சமயம்.” என்று சொல்லியது..

ஆனால் அவள் மனமோ..

‘ இந்த வேலையை விட்டு விட்ட அம்மாவை யார் பாத்துக்குறது இப்ப தான் அம்மாக்கு ட்ரீட்மெண்ட் செய்றதுக்கு ஏற்பாடுகள் நடந்துகிட்டு இருக்கு அப்படி இருக்கும் போது நீ வேலையை விட்டா மற்ற செலவுக்கு என்ன செய்வ.’ என்று மனம் சொல்லியது.

மூளை சொல்லியதையும் மனது சொல்லியதையும் கேட்டவளுக்கு கடைசியில் மனம் சொல்வதுதான் சரி என்று தோன்ற..

“இப்போ உங்களுக்கு என்ன வேணும்.”என்று கேட்டாள் துவாரகா.

அதைக் கேட்டவனுக்கு இதழோறும் ஒரு வெற்றி புன்னகை அவனுக்கு தெரியாதா பின்பு இந்த வேலை அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்று அதனால் தானே அவளுக்கு இப்படி ஒரு பனிஷ்மென்ட் என்ற பெயரில் அவளை டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறான்.

“ஒரு கப் காபி.”என்று சொன்னான் போகன்.

அதைக் கேட்டவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் காங்கிரனுக்கு வந்தவள் ஒரு காபியை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே கையில் எடுத்தவன் ஒரு சிப் குடித்தவுடன் அவன் முகம் மாறியது. அவனின் முகம் மாற்றத்தை கண்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை அவனை என்ன என்பது போல் பார்த்துக் கொண்டிருக்க இவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன்.

“இது என்ன.”என்று கேட்டான் உருவங்களை உயர்த்தி போகன்.

“காபி…

“காபி தான் நான் இல்லன்னு சொல்லல இது என்ன காபி.”என்று கேட்டான் போகன்.

“காபி னா என்ன இருக்கும் காபி பொடி பால் சர்க்கரை இதான் இருக்கும்.”என்று சொன்னாள் துவாரகா..

“எனக்கு அது தெரியாதா காபி னா பால் சர்க்கரை காபி பொடி இருக்கோனு.. ஆனா எனக்கு மில்க் காபி பிடிக்காது பிளாக் காபி தான் பிடிக்கும்.”என்று சொன்னான் போகன்.

அதைக் கேட்டவுடன் தான் அவளுக்கு அப்படி ஒன்று இருப்பதே ஞாபகம் வந்தது அவளின் முகம் பாவனையே அவனுக்கு சொல்லியது அவளின் என்ன ஓட்டத்தை.

“என்ன மிஸ் துவாரகா இப்ப தான் ஞாபகம் வருதா இத்தனை நாள் மறந்து போயிருந்தீங்க இல்ல.”என்று கேட்டான் போகன்.

அவனின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே அவள் நிற்க அவள் அமைதி அவனுக்கு சிறு கோபத்தை அதிகப்படுத்தியது..

“எனக்கு என்ன புடிக்கும் பிடிக்காதது நீங்க எப்படி ஞாபகம் வச்சுக்கோங்க சரி விடுங்க உங்க பணக்கார பாய் ஃப்ரெண்ட் எப்படி இருக்காரு நல்லா இருக்காரா.”என்று கேட்டான் போகன்.

அதைக் கேட்டவுடன் அவளுக்கு மனம் ரணமாய் வலித்தது அவனை நிமிர்ந்து வேதனையுடன் பார்த்தவளுக்கு வார்த்தைகள் வெளியே வர மறுத்தது ஆனாலும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு.

“என்னோட பர்சனல் உங்களுக்கு தேவை இல்லாதது நீங்க என்னோட பாஸ் மட்டும் தான் உங்ககிட்ட என்னோட பர்சனல் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது.”என்று சொல்லியவள் அங்கிருந்து வெளியே வந்து விட்டால்.

இப்படி பேசிக்கொண்டு இருக்கும் பொழுது துவாரகா வெளியே சென்றது போகனுக்கு கோபம் வந்தது இருக்கும் அனைத்து வேலைகளும் அவளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக கொடுத்தான் அவள் மீது இருந்த கோபத்தில் அதுமட்டுமா ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அவளிடம் காபி வேண்டும் ஜூஸ் வேண்டும் லன்ச் டைமில் லஞ்ச் வேண்டும் என்று படாத பாடு படுத்தி எடுத்தான் அவளுக்கு மூச்சு கூட விட முடியாத அளவுக்கு வேலையை கொடுத்து அவளை நெறித்துக் கொண்டது நான் இந்த வார தாக்கோ ஒரு கட்டத்தில் எப்பொழுது மாலை பொழுது ஆகும் என்று இருந்தது இவள் படும் பாட்டை பார்த்து ரேஷ்மி அஷீரா இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை ஆனாலும் இருவருக்கும் ஒரு கடுப்பு இருந்தது அவ்வப்போது போகன் அறைக்கு இவள் சென்று வருவதை பார்க்கும் பொழுதெல்லாம் இவளை ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்ற ஆனால் இவள் சென்று வந்த பின்பு வேலை இன்னும் அதிகமாவதை நினைத்து இருவரும் சந்தோஷப்பட்டு கொண்டனர் ஒரு வழியாக மாலை பொழுதும் வந்துவிட அனைவர் வேலையும் முடிந்தவுடன் அனைவரும் கிளம்ப தொடங்கினார்கள் விட்டால் போதும் என்று துவாரகாவும் கிளம்பி விட தன் இல்லத்திற்கு வந்தவள் விட்டால் போதும் என்று அப்படியே படுத்து விட்டாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது அவள் நினைவுகள் சில பின்பங்களும் வந்து சென்றது சரியாக அந்த நேரம் நிவியும் வர நிவியை பார்த்தவுடன் தன் கண்களில் வலியும் கண்ணீரை துடைத்துக்கொண்டவள்.

“என்னடி இன்னிக்கு எவ்ளோ லேட்டா வந்திருக்க.”என்று கேட்டால் துவாரகா..

“ஓ மேடம்க்கு நான் இருக்கிறது ஞாபகம் இருக்கா.”என்று கேட்டால் நிவி.

“என்னடி ஒரு மாதிரியா பேசுற.”என்றால் துவாரகா.

“பின்ன என்னடி நேத்து எனக்கு ஆபீஸ்ல கொஞ்சம் ஒர்க் இருந்தது லேட்டா தான் வந்தேன். அதுக்குள்ள நீ தூங்கிட்டேன் எதுவுமே சாப்பிடல எலும்பு எல்லாம் பார்த்தா நீ டயர்டா இருந்த மாதிரி இருந்தது சரி விட்டுட்டேன் காலையில எழுந்திருச்சு பேசலாம்னு பார்த்தா நீ பாட்டு கிளம்பி போயிட்டேன் நீ ஏதோ அப்செட்டில் இருக்கவேண்டும் மட்டும் எனக்கு நல்லா புரியுது அது நீ என்னன்னு சொன்னா தானே எனக்கு புரியும் துவா.”என்று கேட்டால் நிவி..

அதைக் கேட்டவுடன் தன் மனதில் இருக்கும் வேதனைகளை தன் தோழியிடம் சொல்லலாம் என்று நினைத்து அவள் வாயை திறக்க அந்த சமயம் சரியாக துவாரகாவின் போன் ஒலித்தது அதை எடுத்துப் பார்த்தவுடன் unknown number என்று வந்தது அதில் ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் பார்த்தவள் அதன் பின்பு போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தால் காதில் வைத்ததும் எதிரில் இருந்து கேட்ட குரலில் அது யார் என்று தெரிந்த விட தன் நம்பர் எப்படி தெரிந்தது என்று யோசனை இருந்தவளுக்கு மீண்டும் அவன் குரல் தான் அவளை நினைவுக்கு அழைத்தது..

“ஹலோ மிஸ் துவாரகா என்ன போன அட்டென்ட் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க.”என்று கேட்டான் போகன்.

“இல்ல என்னோட நம்பர் எப்படி.”என்று குழப்பமாக கேட்டால் துவாரகா.

“மிஸ் துவாரகா நீங்க என்னோட ஸ்டாப் உங்களோட டீடைல் என்கிட்ட இருக்காதா என்ன.”என்று சொன்னான் போகன்.

“ஓகே இப்ப எதுக்கு கால் பண்ணி இருக்கீங்க.”என்று கேட்டாள் துவாரகா.

“என்ன இப்படி கேட்டுட்டீங்க துவாரகா நான் தான் காலையிலேயே உங்க கிட்ட சொல்லி இருந்தேனே எனக்கு தேவையானது எல்லாமே நீங்கதான் பார்க்கணும்னு இப்போ எனக்கு டின்னர் வேணும்.”என்று சொன்னான் போகன்.

“என்ன கிண்டல் பண்றீங்களா ஆபீஸ்ல தான் உங்களுக்கு நான் எம்ப்ளாய் இப்போ ஆபீஸ் வொர்க் முடிஞ்சிடுச்சு.”என்று சொன்னால் துவாரகா.

“நான் சொன்னத நீங்க கவனிக்கல நினைக்கிறேன் மிஸ் துவாரகா எனக்கு என்ன தேவையோ அது நீங்க தான் செய்யணும் எப்போ என்ன என்ன வேணுமோ எல்லாமே அப்படி இல்லன்னா தாராளமா நீங்க இந்த வேலையை விட்டு போகலாம்னு சொல்லிருந்தேன். இப்ப கூட நோ ப்ராப்ளம் உங்களால முடியாதுனா ஜாப் டிசைன் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம்.”என்று சொன்னான் போகன்.

அதைக் கேட்டவளுக்கு கோபம் தான் வந்தது ஆனால் தன் நிலையை நினைத்து அந்த கோபம் மேலே கோபம் கொண்டவள்..

“நிவி நான் உன்கிட்ட வந்து பேசுறேன் இப்போ நான் அர்ஜெண்டா போயே ஆகணும் நான் போயிட்டு சீக்கிரமாக வந்தர்றேன் நீ நைட் டின்னர் பார்த்துக்கோ.”என்று சொன்னவள்.

அங்கிருந்து கிளம்பி விட்டால் துவாரகா. அங்கிருந்து கிளம்பியவள் அவன் என்ன சாப்பிடுவான் என்று யோசிக்க தொடங்கினால் அவளை நினைவுகள் எல்லாம் சற்று பின்னோக்கி சென்றது அதை நினைவு கொண்டவள் அவன் சாப்பிடும் உணவுகளை வாங்கிக் கொண்டு வேகமாக அவனின் வீட்டிற்கு வந்தால். இவளுக்காகவே காத்துக்கொண்டிருப்பது போல் அந்த வாசல் கதவு திறந்தே இருந்தது..

யார் இவன் எதற்காக துவாரகாவை இப்படி படாத பாடு படுத்துகிறான் இவனுக்கும் துவாரகாக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்தால் கமெண்ட் சொல்லுங்கள் சகோ..

இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
 

Author: Sanjana
Article Title: 8. என்னருகே நீ வேண்டும்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top