6. என்னருகே நீ வேண்டும்.

New member
Joined
Aug 21, 2025
Messages
18
6.. என்னருகே நீ வேண்டும்..

போன பகுதியில்:“உங்களோட அக்கவுண்டுக்கு வந்துடும் இந்தப் புத்துணிச்சியோட வொர்க்ல உங்களோட டேலண்ட் காட்டுவீங்கன்னு நாங்க நம்புறோம்.”என்று சொன்னான் ஆபீர்‌.

இனி…

இவன் சொல்லி முடித்தவுடன் அனைவருக்கும் முகத்திலும் புன்னகை தெரிந்தது அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்.

“okay guys within 1 hour meeting இருக்கு அதுக்கு ரெடியா இருங்க ..மிஸ்டர் அமுதன் என்னோட கேபின்.”என்று கேட்டான் போகன்.

“சாரி சார் வாங்க.”என்று சொன்னான் அமுதன்.

CEO என்று பெயர் பதிக்கப்பட்டிருந்தது அந்த அறையின் அருகே வந்தவுடன்.

“சார் இது உங்களோட கேபின்.”என்று சொன்னான் அமுதன்.

சிறு தலை அசைவை மட்டும் கொடுத்தவன் அவனின் கேபினுக்குள் நுழைந்து விட்டான் அதை பார்த்த அமுதன் கொஞ்சம் திணறித்தான் போனான் என்னதான் அமுதனை விட போகனுக்கு சிறு வயது என்றாலும் அவனின் கம்பீரமும் மெடுக்கம் பார்த்தவுடன் அமுதனுக்கு வாய் அடைத்து விட்டது சிறிது நேரம் நின்று அப்படியே பார்த்தவனுக்கு யாரோ பக்கத்தில் அழைப்பது போல் இருக்க அதில் ஒரு நிமிடம் பதவி திரும்ப அங்க அபீர் நின்று கொண்டு இருந்தான்..

“ஐயோ நீங்களா நான் கொஞ்ச நேரத்துல சார் தான் நினைச்சு பயந்துட்டேன்.”என்று சொன்னான் அமுதன்.

“இதுக்கே இவ்ளோ பயமா..”என்று கேட்டான் ஆபீர்.

இவனின் வார்த்தையில் அமுதன் அசடு வழிந்தவன் சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

“ரேஷ்மி என்னடி நம்மள கொஞ்சம் கூட போகன் பார்க்கவே இல்லை.”என்று சொன்னாள் அசிரா.

“நீ வேற ஏண்டி அதே ஞாபகப்படுத்தற எல்லாரும் முன்னாடியும் அசிங்கமா ஆயிடுச்சு அதை நினைக்கும் போது ஒரு மாதிரியா இருக்கு.”என்று சொன்னாள் ரேஷ்மி.

“ரேஷ்மி போகன் நமக்கு மட்டும் கனவு கண்ணன் கிடையாது எல்லாருக்குமே தான். போகன் பார்க்கல்ல என்ன நம்ம பார்க்க வைப்போம்.”என்று சொன்னாள் அசியா.

“என்னடி சொல்ற.”என்று கேட்டாள் ரேஷ்மி.

ரேஷ்மி கேட்டவுடன் அசிரா ரேஷ்மியின் காதருகே வந்தவள் அவள் காதில் ஏதோ சொல்ல அதைக் கேட்ட ரேஷ்மிக்கு கண்கள் மின்னியது.

“நீ சொல்றது நடக்குமா.”என்று கேட்டால் ரேஷ்மி ஆர்வத்துடன்.

“நம்ம மனசு வச்சா எதுவா இருந்தாலும் நடக்கும் உன்னால முடிஞ்சத நீ பண்ணு என்னால முடிஞ்சதா நான் பண்றேன் நம்ப ரெண்டு பேருக்கு யாருக்கு கிடைத்தாலும் இன்னொருத்தர் அமைதியா போய்டணும் அது எனக்கா இருந்தாலும் சரி உனக்கா இருந்தாலும் சரி.”என்று சொன்னாள் அசிரா.

“நமக்குள்ள என்னடி போட்டி எனக்கு டபுள் ஓகே.”என்று சொன்னால் ரேஷ்மி.

இவர்கள் இப்படி சிரித்து பேசிக் கொண்டி இருக்க அப்பொழுது அங்கு வந்த துவாரகா. தனக்கான பணிகளில் மூழ்கினால்.அவளது விரல்கள் கோப்புகளைத் திருப்பி கொண்டு இருந்தன. ஆனால் சுற்றியிருப்போரின் முகங்கள் அவளது பார்வைக்குள் தானாக வந்து சேர்ந்தன. ரேஷ்மி, அசிரா இருவரும் பக்கத்தில் கூச்சலாகக் கிசுகிசுத்துக் கொண்டு, சிரிப்பு அடக்கிக் கொண்டே ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.துவாரகா தலையை உயர்த்தி பார்த்தாள்.

“ரேஷ்மி… ஏன் இப்படி எல்லாரும் ஒரு மாதிரி பதட்டமா இருக்காங்க.”என்று கேட்டாள் துவாரகா.

ரேஷ்மியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அதில் சற்றே கிண்டல் இருந்தது.


“உனக்கு தெரியலையா? எப்பவுமே அப்படிதான் நீ…” என்று சொன்னால் ரேஷ்மி.

அசிரா அந்தச் சிரிப்பைத் தொடர்ந்து, பக்கத்தில் சாய்ந்து கொண்டு சொன்னாள்.

“இந்தக் கம்பெனியோட விஷயமே கவனிக்க மாட்டாளே. அப்படி கவனிச்சிருந்தா இப்போ எல்லாரும் ஏன் பதட்டமா இருக்காங்கன்னு தெரிஞ்சிருக்கும் .அதுவும் இல்லாம மேடம் இன்னிக்கு பர்மிஷன் போட்டுட்டு போய் இப்ப தான் வந்தாங்க” என்று சொன்னால் அசிரா.

அவளின் வார்த்தைகள் சத்தமின்றி விழுந்த கல்லைப் போல துவாரகாவின் உள்ளத்தில் சுருண்டன. அவள் மீண்டும் அமைதியோடு கேட்டாள்.


“சரி… ஆனா, என்ன விஷயம்?”என்று கேட்டாள் துவாரகா

ஆனால் நேரடி பதில் வரவில்லை. ரேஷ்மியும் அசிராவும் ஒன்றோடொன்று சிரித்துக் கொண்டனர். துவாரகா அவர்களை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டுக் மீண்டும் தன் பணியில் மூழ்கினாள். சரியாக அப்பொழுது அவர்களிடம் வந்த பியூன்.

“மேடம் மீட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு அமுதன் சார் உங்க எல்லாரையும் வர சொன்னாங்க.”என்று சொன்னான்..

“மீட்டிங்கா என்ன மீட்டிங்.”என்று கேட்டாள் துவாரகா கேள்வி ஓடு.

“மேடம் எனக்கும் தெரியாது புது பாஸ் ஏதோ அரேஞ்ச் பண்ணி இருக்காங்க அதுதான் மேடம் எனக்கு தெரியும். அப்புறம் இந்த பைலை அமுதன் சார் உங்கள கரெக்ஷன் பாத்துட்டு வர சொன்னாரு.”என்று சொன்னான்.

அதை துவாரகா கையில் வாங்க ஆனால் ரேஷ்மி அசிரா இருவரும்.

“என்ன துவாரகா எங்களை எல்லாம் மீட்டிங்கு கூப்பிட்டு அமுதன் சார் உனக்கு மட்டும் வேலை கொடுத்திருக்கிறார் அப்போ என்னை மீட்டிங்கு நீ முக்கியமில்லையோ..”என்று கேட்டாள் ரேஷ்மி.

“இது என்ன கேள்வி? அதான் அமுதன் சாரே சொல்லாம சொல்லிட்டாரு அவளை ஃபைல் பார்க்க சொல்லி. சரி வா நமக்கு எல்லாம் மீட்டிங் இருக்கு இங்க நின்னு நம்ம டைம் வேஸ்ட் பண்ண கூடாது.”என்று சொன்னாள் அசிரா.

இவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட மத்த ஊழியர்களும் மீட்டிங் காலை நோக்கி சென்றனர் கையில் இருக்கும் பயலை ஒரு முறை பார்த்தவர் அதன் பின்பு எதையும் யோசிக்காமல் அவளின் இருக்கையில் அமர்ந்து வேலைகளை பார்க்க தொடங்கி விட்டாள் 10 நிமிடங்கள் சென்றது கையில் இருக்கும் செயலை அவள் பார்த்து முடிக்கும் நொடியும் வர அமுதனிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

“ஹலோ சொல்லுங்க சார்.”என்று கேட்டாள் துவாரகா.

“என்ன துவாரகா உன் கிட்ட கொடுத்த பைலை இன்னும் நீ எடுத்துட்டு வராம இருக்க நீ தான் அந்த ப்ராஜெக்ட் பத்தி எக்ஸ்பிளைன் பண்ணனும் சீக்கிரம் மீட்டிங் ஹாலுக்கு வா.”என்று அவளை அவசரப்படுத்தினார் அமுதன்.

“மொபைல் ஃபுல்லா செக் பண்ணிட்டேன் சார் இன்னும் 2 நிமிட்ஸ் அங்க இருப்பேன்.”என்று சொன்னவள்.

அந்த பைலை எடுத்துக்கொண்டு வேகவேகமாக மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தாள் துவாரகா. அவள் நுழைந்ததும் எதிரே நிற்பவனை பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.ஆனால் அவளது பார்வை போகனின் பார்வையோடு மோதியது.அந்தச் சந்திப்பு — சில விநாடிகளே ஆனாலும்.துவாரகா ஒரு நொடிக்கு சுவாசத்தை மறந்தாள். அந்தக் கண்களில் ஏதோ பிணைப்பு, சொல்ல முடியாத வலி. அவளது உள்ளத்தில் எழுந்து, உடனே மறைந்தது.போகனின் கண்களிலும் அதே உணர்வு. அவன் முகத்தில் வெளிப்படாத சிரிப்பு தோன்றியது. ஆனால் அந்தச் சிரிப்பு சொல்லாத ரகசியத்தின் சாயலுடன் இருந்தது.இருவரின் பார்வைச் சந்திப்பு, அலுவலகத்தின் சத்தத்தை மறைத்தது. கைதட்டல்கள், பேசும் சத்தங்கள், கூடுதல் அசைவுகள் — அனைத்தும் மங்கின. அந்தச் சில நொடிகளில், துவாரகாவுக்கும் போகனுக்கும் உலகமே அமைதியான ஓவியமாக மாறியது. ஆனால் அந்த உணர்வு அடுத்த நொடியில் கரைந்து போனது.ஏதோ ஒன்று நடந்தது போல… ஆனாலும் எதுவும் நடக்காதது போலவும்.துவாரகா திடீரென பார்வையைத் திருப்பிக் கொண்டாள். மனதில் சிறிய அதிர்வுடன் இருந்தாலும், முகத்தில் எதுவும் வெளிப்படவில்லை. அவள் தனக்கென இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.போகனும் பார்வையைத் திருப்பி கொள்ளவில்லை அவளே தான் கண்கள் இமைக்காமல் பார்த்தான் ஆனால் அந்தப் பார்வையில் எந்த உயிரோட்டமும் இல்லை. ஆனால் அவளை விட்டும் கண்கள் அகலவில்லை அதை பார்த்த அபீர்.. போகனின் காதின் அருகில் வந்தவன்..

“பாஸ் கொஞ்சம் மீட்டிங்க பாக்கலாமே.”என்று கிசுகிசு தான் அபீர்..

அதில் திரும்பி அவனை ஒரு முறை முறைத்தவன்.

“மிஸ்டர் அமுதன் , இப்போ அதிகாரப்பூர்வமா இந்த கம்பெனியோட பொறுப்பை நான் எடுக்கிறேன். இந்த கம்பெனி இதுக்கு முன்னாடி எப்படி இருந்ததுன்னு தெரியாது ஆனால் இதுக்கு அப்புறம் நம்பர் ஒன் கம்பெனியா மாத்தணும்ன்றது என்னோட விருப்பம் அதுக்கு உங்க ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.” என்று சொன்னான் போகன்.


“நிச்சயமா சார். எப்போதும் உங்க வழிகாட்டுதலுக்கு ரெடியா இருக்கோம்.” என்று சொன்னான் அமுதன்.

அவர்களின் உரையாடல் சத்தமாகக் கேட்ட போதும், துவாரகாவின் காதுகளில் அந்த பார்வைச் சந்திப்பின் அதிர்ச்சி மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் அவள் கண்கள் தானாகவே அவனை பார்க்கத் தொடங்கியது..ரேஷ்மி, அசிரா இருவரும் அவளை நோக்கி கிசுகிசுத்தார்கள்.

“பாரு அசிரா, இவ ப்படி மோகன பாக்குற பாரு அப்படியே கண்ணாலேயே விழுங்கிடுவா போல.” என்று சொன்னால் ரேஷ்மி

“ஹா, சரி தான். இவனோட லெவல், ரேஞ்ச் கூட அவளுக்கு தெரியாது. சும்மா பார்த்துக்கிட்டு நிக்கறாளே. இதுல ஏதாவது பண்ணனும்” என்று சொன்னால் அசிரா.

“ஏய் அசி இதெல்லாம் என்ன அவ்வளவு பெரிய ஆளா இவள போய் ஏதாவது பண்ணனும்னு சொல்லிட்டு இருக்க. இவளா நம்ப ரேஞ்சுக்கு வருவாளா.”என்று சொல்லி இருவரும் சிரித்தனர்.

அவர்களின் சிரிப்பு துவாரகாவின் உள்ளத்தை குத்தியது. ஆனாலும், இப்பொழுது இருக்கும் வலியை விட இது அவளுக்கு பெரிதாக தெரியவில்லை அதனால் வழக்கம் போல அவள் அமைதியாக இருந்தாள். வெளியில் எதுவும் தெரியாமல், உள்ளத்தில் மட்டும் சுமையோடு.சில நேரம் கழித்து, போகன் தனது அலுவலக அறைக்கு சென்று விட்டான்.. இவர்கள் இருவருக்கும் வெளியில் அனைத்தும் இயல்பாக இருந்தாலும், உள்ளத்தில் புயல் எழுந்தது. போகன் சாளரத்தை நோக்கி நின்றான். மனதில் ஒலித்தது ஒரே பெயர்.

துவாரகா…

எத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பார்கிறேன் என்று மனதில் நினைத்தவன் ஆழ்ந்த மூச்சு விட்டுக் கொண்டு, நாற்காலியில் அமர்ந்தான். கைகளைக் கூப்பியபடி, தலையைத் தாழ்த்தினான். அந்த அமைதியிலும், அவனது கண்களில் துவாரகாவின் உருவமே ஒளிந்தது.


இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி..
 

Author: Sanjana
Article Title: 6. என்னருகே நீ வேண்டும்.
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top