1.என்னருகே நீ வேண்டும்..

New member
Joined
Aug 21, 2025
Messages
9
எபிசோட் 1

1.என்னருகே நீ வேண்டும்..


காலை 8 மணி..

“ஏய் துவா என்ன ஆபீஸ்க்கு கிளம்பாம அப்படியே உட்கார்ந்து இருக்க..”என்று கேட்டாள் நிவி..

“இல்ல நிவி எனக்கு ஆபீஸ் போகவே கடுப்பா இருக்கு.”என்று சொன்னால் துவாரகா.

“ஏண்டி ஏன் இப்படி சொல்ற ஒர்க் பிரஷர் எதனா அதிகமா இருக்கா.”என்று கேட்டால் நிவி.

“ஒர்க் பிரஷர் எல்லாம் எதுவும் இல்லடி எல்லாம் அந்த பிசாசுங்க பிரச்சனை தான்.”என்று சொன்னால் துவாரகா.

“என்ன துவா இன்னும் அவளுங்க அடங்கவே இல்லையா.”என்று கேட்டால் நிவி.

“அவளுங்க எப்படி அடங்குவாளுங்க டெய்லியும் ஏதாவது ஒரு பிரச்சனை கொடுத்துக்கிட்டே இருக்காங்க, அதிலும் அந்த அஷீரா இருக்கா பாரு, அவளோட ஆட்டத்தை தாங்கவே முடியல என்னால.”என்று சொன்னால் துவாரகா.

“நீ இத அமுதன் சார் கிட்ட சொல்லலாம் இல்லையா.”என்று சொன்னால் நிவி.

“எப்படி நிவி சொல்ல சொல்ற ஒருவாட்டி ரெண்டு வாட்டி இருந்தா பரவால்ல இவங்க ரெண்டு வருஷமா இதே தான் பண்ணிட்டு இருக்காங்க,ஆல்ரெடி சில டைம் கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன் மறுபடி மறுபடி கம்ப்ளைன்ட் பண்ண அவரே என்னை பார்த்து சிரிப்பார்ன்னு. எனக்கு தோணுது அவரு சிரிக்கிறது கூட இருக்கட்டும் அவரு என்ன ஒரு பார்வை பாக்குறாரு பாரு எல்கேஜி யுகேஜி குழந்தைங்க கம்பளைண்ட் பண்ற மாதிரி இருக்கு அவரோட பார்வை அதனால தான் நான் இதை அப்படியே விட்டுட்டா அவங்களும் அமைதி ஆகிடுவாங்கன்னு பார்த்தா அடிக்கடிக்க இதே பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க.”என்று சலிப்புடன் சொன்னால் துவாரகா.

“அப்போ வேற எங்கனா ஜாப் தேடலாம் இல்லடி துவா.”என்று கேட்டால் நிவி.

“ஏண்டி நீ யோசிக்கும் போது நான் யோசிக்க மாட்டேனா ஆல்ரெடி நான் தேடிட்டு தாண்டி இருக்கேன் ஆனா எனக்கு எங்குமே ஜாப் கிடைக்க மாட்டேங்குது. அதுவும் இல்லாம இப்போ ஜாப் கிடைக்கிறதே பெரிய விஷயமா இருக்கு நான் வேற ஜாபுக்கு எதிர்பார்த்து இப்போ இருக்கிற இந்த வேலையும் விட முடியாது என்னோட சூழ்நிலை தெரிஞ்சே நீ கேட்கிற பாத்தியா.”என்று கவலையாக கேட்டால் துவாரகா.

“உன்னோட situation எனக்கு புரியுது, ஆனா அந்த பிசாசுங்க உன்ன தொல்லை பண்ணிட்டே இருக்குதுங்களே அதுக்கு தான் நான் சொன்னேன்.”என்று சொன்னால் நிவி தன் தோழியின் தோள் மீது ஆதரவாக கை வைத்து.

“நீ சொல்றது எனக்கு புரியுது டி புரியாம இல்ல ஆனா என்ன பண்றது எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போணும்ன்றது என்னோட விதி வேற எதுவும் பண்ண முடியாது. அதுவும் இல்லாம இன்னைக்கு நான் ஆப்டர்நூன் வரேன்னு சொல்லி அமுதன் சாருக்கு இன்பார்ம் பண்ணிட்டேன்.”என்று சொன்னால் துவாரகா.

“ஆப்டர்நூன் வரேன்னு சொல்லிட்டியா அப்போ அம்மாவ பாக்க போறியா.”என்று கேட்டால் நிவி.

“ஆமா அம்மாவ தான் பாக்க போறேன் போன வீக் அம்மாவை பார்க்க முடியல அதனால இன்னைக்கு அம்மாவ பாத்துட்டு தான் வேலைக்கு போகணும் என்னவோ நேத்துல இருந்து அம்மாவை பாக்கணும் போலவே தோனிட்டு இருக்கு அதனால தான் காலையில எந்திரிச்ச உடனே அமுதன் சார்க்கு மெசேஜ் பண்ணிட்டேன் அவரும் ஓகேன்னு சொல்லிட்டாரு.”என்று சொன்னால் துவாரகா.

“சரிடி நீ பொறுமையா கிளம்பி அம்மாவ பாத்துட்டு ஆபீஸ்க்கு போ, நான் இன்னைக்கு என்னோட ஆபீஸ்ல சைட் விசிடுக்கு போகணும் நான் அப்படியே போயிட்டு ஆபீஸ்க்கு போறேன்.”என்று சொன்ன நிவி அங்கே இருந்து கிளம்பினால்.

அவளுக்கு சிறு தலை சேவை மட்டும் கொடுத்தவள் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தால். இப்படி ஒரு பத்து நிமிடங்கள் கடந்து இருக்க அதன் பின் எழுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தன் அன்னையைப் பார்க்க இன் முகத்தோடு கிளம்பினால்…

மருத்துவமனை..

மருத்துவமனை வாசல் வரை வந்தவளுக்கு முகத்தில் இருந்த சந்தோஷம் காணாமல் சென்று இப்பொழுது வேதனை வந்து குடி கொண்டது அந்த வேதனை உடனே உள்ளே நுழைந்தவள் லிப்டில் நான்காம் தளம் வந்து சேர்ந்தால் நான்காம் தளம் வந்தவளுக்கு மனது வேதனையுடன் பாரமும் குடி கொண்டது மெல்ல நான்கு அறைகளை கடந்து வந்து ஐந்தாவது அறையின் முன்பு நின்றவள் கனத்த இதயத்துடன் அந்தக் கதவை திறந்தால். அங்கு 45 வயதுமிக்க ஒரு பெண்மணி மருத்துவ உபகரணங்கள் உதவி உடன் படுத்திருக்க அவர் அருகே வந்து அமர்ந்தவள் அவர் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு.

“அம்மா எப்படிம்மா இருக்கீங்க நல்லா இருக்கீங்களா.”என்று குரல் கம்மியபடி கேட்டால் அவரை பார்த்து துவாரகா.

ஆனால் அவரோ எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக அந்த பெட்டில் படுத்திருந்தார்.

“அம்மா நான் இப்ப எல்லாம் எதுக்குமே கோபப்படுறதில்ல எல்லாத்துக்கும் அமைதியா தான் இருக்கேன் நீங்க தானே சொல்லுவீங்க கோபம் எதுக்குமே தீர்வு இல்ல பொறுமையா இருந்தா இந்த பூமியை கூட ஆளலாம் இப்போ நான் ரொம்பவே பொறுமையா இருக்கேன்ம்மா ஆனா எனக்கு இந்த பூமியை ஆள்ற சக்தி கிடைக்கல அப்படி கிடைச்சிருந்தா இந்நேரம் நீங்க என் கூட இருந்திருக்கலாம் இல்ல.”என்று கண்ணீருடன் கேட்டால் துவாரகா.

ஆனாலும் அந்தப் பெண்மணியும் நான் அசைவனா என்பது போல் அப்படியே படுத்திருந்தார். அவரைப் பார்த்து ஒரு பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டவள் மீண்டும் பேச்சை தொடங்கினால்.

“ இப்படியே அமைதியா இருந்தா என்னமா அர்த்தம் எப்போ தான் என் கிட்ட பேசுவீங்க, எனக்கு நீங்க இல்லாம இருக்க முடியல அம்மா இந்த பத்து வருஷத்துல நீங்க இல்லாம நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன் அம்மா ப்ளீஸ்மா என் கிட்ட பேசுங்க, நான் எந்த சேட்டையும் பண்ண மாட்டேன் மா நீங்க சொல்ற மாதிரி கோவப்படாம நல்ல பொண்ணா இருக்கேம்மா ப்ளீஸ் மா என் கிட்ட மறுபடியும் பேசுங்கம்மா.”என்று கண்ணீருடன் சொன்னால் துவாரகா.

இவள் கண்ணீர் துளிகள் அவர் கைகள் மீது பட்டன அப்பொழுதும் அவர் இடம் இருந்து எந்த அசைவும் இல்ல அதில் இன்னும் மனம் வேதனை கொண்டு அந்த வேதனை தாங்க முடியாமல் அவள் கண்ணீர் இன்னும் வெளியேற மௌனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்பொழுதே வாய்விட்டு கதற வேண்டும் என்று போல் இருக்க.

“அம்மா ப்ளீஸ் மா என் கிட்ட பேசுங்க எத்தனை நாளைக்கு என் கிட்ட இப்படி பேசாம இருப்பீங்க ப்ளீஸ் மா பேசுங்க அம்மா ப்ளீஸ் மா ப்ளீஸ் மா ப்ளீஸ் மா.”என்று இவள் கண்ணீருடன் கதறிக் கொண்டிருந்தால் துவாரகா.

அப்பொழுது கதவை திறந்து கொண்டு ஒரு நர்ஸ் உள்ளே நுழைந்தவர்.

“துவா என்னமா பண்ணிட்டு இருக்க, எதுக்கு இப்படி அழுந்துட்டு இருக்க. அதுவும் அவங்க பக்கத்துல ஒக்காந்து இப்படி அழுதுட்டு இருக்க பாரு அவங்களோட பிபி அதிகமாகுது உனக்கு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன் இந்த மாதிரி பண்ணாதன்னு வா வெளியே.”என்று அவளை அதட்டி கொண்டே அவளிடம் வந்தவர் அவளை வெளியே அழைத்து வந்து விட்டார் அந்த நர்ஸ்.

அவள் வெளியே வந்தும் அழுது கொண்டே இருக்க அவளை ஒரு நிமிடம் பார்த்தவருக்கு வேதனையாக தான் இருந்தது அவள் நிலைமையை நினைத்து ஒரு பெண் எந்த அளவுக்கு கஷ்டப்படக்கூடாது அந்த அளவுக்கு இவள் கஷ்டப்பட்டு விட்டால் தாய் இருந்தும் இல்லாமல் தந்தை எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை சொந்த பந்தங்கள் யாரும் ஆதரவு இல்லை தனி ஒரு பெண்ணாக இருந்து அவள் கஷ்டப்படுவதை இந்த பத்து ஆண்டுகளாக அவரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் அதை அனைத்தையும் நினைத்துப் பார்த்தவர்.

“துவா ஏம்மா இப்படி அழுவுற, நீ அழுந்து மட்டும் உங்க அம்மா பழையபடி ஆயிடுவாங்களா, டாக்டர் தான் அன்னைக்கே சொல்லிட்டாரு இல்ல உங்க அம்மாவுக்கு ஆப்ரேஷன் பண்ண 1 1/2 கோடி வேணும்னுட்டு அதுவும் அவரால எதுவும் பண்ண முடியாது ஃபாரினுக்கு கூட்டு போய் தான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்க, அதுக்கான ஏற்பாட்டை எதனா பண்ணியா இல்லையா டா.”என்று கேட்டார் நர்ஸ்.

“ஆன்ட்டி உங்களுக்கு தெரியாதது இல்ல, அவ்ளோ பெரிய அமௌன்ட் நான் எங்க போறது என்னால முடிஞ்ச அளவுக்கு நான் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் ஆனா என்னால முடியல.”என்று கண்ணீருடன் சொன்னால் துவாரகா.

“கவலைப்படாதடா உனக்காக நான் ஒரு டிரஸ்ட்ல விசாரிச்சு இருக்கேன் ஒருத்தர் மூலமா. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு நான் உனக்கு டீடைல் அனுப்புறேன் நீ போய் அங்க கேட்டு பாருடா ஏதோ அவங்களால முடிஞ்சது கொடுப்பாங்க.”என்று சொன்னார் நர்ஸ்.

“எப்படி ஆன்ட்டி இவ்வளவு பெரிய தொகையை அவங்க குடுப்பாங்க என்ன தான் டிரஸ்ட்டா இருந்தாலும் ஒரு ரெண்டு லட்சம் மூணு லட்சம் அவ்ளோ தான் குடுப்பாங்க இப்படி ஒன்றை கோடி கொடுக்கிற அளவுக்கு அவ்வளவு பெரிய ட்ரஸ்ட் எங்க ஆன்ட்டி இருக்கு.”என்று கேட்டால் கண்ணீருடன் துவாரகா.

“அப்படி இல்லடா இந்த வாட்டி உங்க அம்மாவுக்கு கண்டிப்பா உதவி கிடைக்கும். இப்போ நான் விசாரிச்சு இருக்குற இடம் அவங்க நம்ம சொல்ற விஷயம் உண்மையா பொய்யான மட்டும் தான் பார்க்கிறாங்க உண்மைன்னு அவங்களுக்கு தெரிஞ்சா எல்லாம் உதவியும் அவங்களே பண்றாங்க அதனால தான் நான் விசாரிக்க சொல்லி இருக்கேன் கவலைப்படாத ஒரு நல்ல பதிலா வரும் அந்த கடவுளை வேண்டிக்கோ.”என்று சொன்னார் நர்ஸ்.

“ஓகே ஆன்ட்டி நீங்க பாருங்க என்னால முடிஞ்சது நானும் ட்ரை பண்றேன் அம்மாவை பத்திரமா பாத்துக்கோங்க நான் அடுத்த வாரம் வரேன்.”என்று சொல்லியவள் அங்கிருந்து கிளம்பினால் துவாரகா.

அங்கிருந்து கிளம்பியவள் நேராக ஆபீசுக்கு தான் வந்தாள்.

துவாரகா ஆபீஸ் வந்து சேருவதற்கு மதியம் மணி 12 ஆகியிருக்க அப்பொழுதுதான் ஆபீஸ் ஸ்கூல் நுழைந்தால். உள்ளே வந்தவள் தனக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் கேபினில் வந்த அமர அமர்ந்தது தான் தாமதம்.

துவாரகா ஆபீஸ் வந்து சேருவதற்கு மதியம் மணி 12 ஆகியிருக்க அப்பொழுதுதான் ஆபீஸ் ஸ்கூல் நுழைந்தால். உள்ளே வந்தவள் தனக்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் கேபினில் வந்த அமர அமர்ந்தது தான் தாமதம்.


இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி…
 

Author: Sanjana
Article Title: 1.என்னருகே நீ வேண்டும்..
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Aug 21, 2025
Messages
9
துவா office வந்ததும் enna ஆயிற்று🙄🙄🙄
வெயிட் பண்ணுங்க சகோ அத நான் சொல்லிட்டா எப்படி நீங்களே தெரிஞ்சுக்கணும் இல்லையா.. ஏதாவது குறைகள் இருந்தாலும் சொல்லுங்க நான் சரி பண்ணிக்கிறேன்
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
பாவம் துவாரகா!!அவளுக்கு அங்க என்ன தான் பிரச்சினை??? ஆரம்பத்துல எனக்கும் தோணுச்சு இவ்ளோ கஷ்டப்பட்டு என் அந்த இடத்துல வேலை பார்க்கணும்னு.. ஆனா அதன் பின்னான அவளோட சூழல பார்த்த போது அவளுக்கு வேற வழி இல்லைனு தெரியுது. அவளுக்கு உதவி கிடைக்குமா?
 
New member
Joined
Aug 21, 2025
Messages
9
பாவம் துவாரகா!!அவளுக்கு அங்க என்ன தான் பிரச்சினை??? ஆரம்பத்துல எனக்கும் தோணுச்சு இவ்ளோ கஷ்டப்பட்டு என் அந்த இடத்துல வேலை பார்க்கணும்னு.. ஆனா அதன் பின்னான அவளோட சூழல பார்த்த போது அவளுக்கு வேற வழி இல்லைனு தெரியுது. அவளுக்கு உதவி கிடைக்குமா?
பாவம் துவாரகா!!அவளுக்கு அங்க என்ன தான் பிரச்சினை??? ஆரம்பத்துல எனக்கும் தோணுச்சு இவ்ளோ கஷ்டப்பட்டு என் அந்த இடத்துல வேலை பார்க்கணும்னு.. ஆனா அதன் பின்னான அவளோட சூழல பார்த்த போது அவளுக்கு வேற வழி இல்லைனு தெரியுது. அவளுக்கு உதவி கிடைக்குமா?
அதுக்கு காலம் தான் பதில் சொல்லும் சகோ.. பொறுத்திருந்து பார்ப்போம், அவளின் விதி மாறுகிறதா என்று
 
Top