- Thread Author
- #1
அத்தியாயம்1
"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். ..
"மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை
வெட்டி விட்டோ மென்று "
பாரதி
நம் நாயகி பெயர் : திவ்ய பாரதி
திவ்யா என்றால் தெய்வீக ஒளி
பாரதி என்றால் இந்து கடவுளில் தேவியின் பெயர்.
நம் நாயகி தன் பெயருக்கு ஏற்றார் போல் இருப்பாளா என்பதை நாம் அவளுடன் தொடர்ந்து பயணித்து தெரிந்து கொள்வோம்.
அது ஒரு காலை பொழுது. அந்த வீட்டின் பூஜை அறையில் சிவகாமி அம்மாள் சஷ்டி கவசத்தை பாடி கொண்டே தன் இஷ்ட கடவுள் ஆன முருகப்பெருமானிடம் தான் தினமும் வைக்கும் கோரிக்கையை வைத்து மனமுருகி அவரை பிராத்தனை செய்து விட்டு அன்றாட வேலைகளை செய்ய சமையல் அறையை நோக்கி சென்றார்.
வீட்டின் ஹாலில் அந்த வீட்டின் பெரியவர் அதாவது நம் நாயாகியின் பெரியப்பா Mr. ரங்கசாமி சோஃபாவில் அமர்ந்து அன்றைய தினத்தந்தி நாளிதழை ஒரு வரிவிடாமல் படித்து கொண்டு இருந்தார்.
அவர் அருகில் அவரது தர்மபத்தினி சீதா லெட்சுமி தரையில் அமர்ந்து முந்திய தினம் வாங்கிய கீரையை கூலம் பார்த்து கொண்டு இருந்தார்.
வீட்டின் வெளியில் திண்ணையில் ரங்கா சாமியின் அம்மா வீராயி பாட்டி தன் வெத்தளை இடிக்கும் கல்லில் பாக்கை போட்டு நங் நங்....இடித்து கொண்டு இருக்க.
அந்த வீட்டின் அமைதியில் அந்த சத்தம் மட்டும் கேட்க நாளிதழை படித்து கொண்டு இருந்த ரங்கசாமிக்கு தொந்தரவாக இருக்க.
" ம்மா.... அதை இடிக்கிறதை கொஞ்சம் நிப்பாட்டே ....காலையிலே ஆரம்பிச்சிட்டயா உன் வேலையை " என்று கோவமாக கூறி விட்டு திருப்பவும் நாளிதழ்க்குள் புகுந்து கொள்ள.
"ஆமாம் இவன் இப்பதான் அந்த பேப்ரை படிச்சு ஜில்லா கலெக்டர் ஆக போறான்" என்று தன் மேல் வாய்யை சுளித்து காட்டி விட்டு தன் இடித்த பாக்கை எடுத்து வாய்யில் போட்டு கொண்டார்.
அதை பார்த்த சீதா லெட்சுமி ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்க.
அதனை கண்டு கொண்ட வீராயி பாட்டி
" என்ன டி மருமகளை உனக்கு குலு குலு னு இருக்கு போல. காபி போட போன சின்ன வளையும் காணாம். இவ ஒன்றறை மணி நேரமா அந்த கீரையில் என்னத்த கூலம் பாக்காலோ ? பேராண்டிங்க வெளியே கிளம்பி போவானுகளே அதற்குள் சமைக்கனுமே அவனுக பொண்டாடிங்க இன்னும் எழுத்து வரலேயே, பிள்ளைங்க பள்ளிகூடத்துக்கு கிளம்பனுமே என்கிற பொறுப்பு உனக்கு இருக்கா "என்று அவரை பிடித்து கொள்ள.
சீத்தாவின் மைண்ட் வாய்ஸ்🥺🥺🥺
ஆத்தாடி காலையிலே இவங்க கிட்ட நாம சிக்கினம் நம்மளை வைச்சு செய்திடும் இந்த மாமியார் என்று நினைத்து .
"அய்யோ....! அத்தை அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை இதோ முடிந்தது " என்று கூறிவிட்டு வேகமாக கூலம் பார்த்த கீரையை எடுத்து கொண்டு சமையல் அறையை நோக்கி வேகமாய் சென்று விட்டார்.
சமையல் அறையில் அனைவருக்கும் டீ போட்டு அதை கொடுக்க தயாரக வைத்து கொண்டு இருந்தார் சிவகாமி.
"சிவகாமி முதல்ல அதை கொண்டு போய் அத்தை கிட்ட கொடுத்து அவர் வாயை மூடு இல்லைன்னா அவர் வாயிக்கு அவல் இன்று நாம் தான் " என்று கூறி கொண்டு இருக்கும் போதே அந்த வீட்டு மருமகள்கள் சமையல் அறைக்குள் நுழைந்தனர்
"வாங்கடிங்க ம்மா.... உங்க இரண்டு பேத்துக்கும் இப்பதான் விடிந்ததா இந்தாங்க போய் இந்த டீயை உங்க புருஷ்னுகளுக்கு கொடுத்துட்டு சீக்கிரம் வாங்க இனி தான் சமையலை தொடங்கனும்".
அவங்க இருவரும்"சரிங்க அத்தை "என்று கூறி டீ யை எடுத்து கொண்டு வெளியே வந்தவர்களில் பெரிய மருமகள் சின்ன மருமகளிடம் .
"என்னடி ஹிட்லர் காலையிலே மிளகாய் கடிச்சது போல இருக்காங்க இன்று நம்மளை என்ன பாடு படுத்த போறாங்களோ என்று கூறி கொண்டே தன் கணவர்களுக்கு டீயை கொடுத்து விட்டு வேகமாக வந்து விட்டனர்.
சிவகாமி அம்மாள் டீயை எடுத்து கொண்டு முதலில் தன் அத்தை வீராயிக்கு கொடுத்தார்.
" ஏன்டிம்மா ஒரு டீ போட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா ?"
"கொஞ்சம் லேட் ஆயிடுச்சு அத்தை "
என்று அவர் கூறவும்.
"ம்ம்... சரி போய் டீயை பெரியவனுக்கு கொடு ஆறிடபோது."
" ம்ம் சரிங்க அத்தை " என்று கூறி விட்டு
டீ யை ரங்க சாமியிடம் வந்து கொடுக்க அவர் அதை எடுத்து கொண்டு. "மாரி எங்கம்மா ஆளையே காணாம் " .
"அவங்க சந்தைக்கு சீக்கிரமாகவே போயிட்டாங்க மாமா இப்ப வந்துடுவாங்க"
என்று கூறி கொண்டு இருக்கும் போதே மாரியப்பன் ஒரு பை நிறைய காய்கறிகளை வாங்கி கொண்டு வீட்டின் னுள் நுழைந்தார்.
"சின்னவனே வெள்ளேனே சந்தைக்கு போயிட்டு யா ..
"ம்ம் ஆமா ம்மா ....அப்பதான காய்கறிகள் ப்ரெஷ்சா கிடைக்கும் ."
"ஆமாம் சின்னவனை, போ போய் டீ யை குடி."
"சரிம்மா " என்று கூறிவிட்டு "சிவகாமி சிவகாமி " என்று அழைத்து கொண்டே வீட்டினுள் நுழைந்தர்.
"இங்கே தான் இருக்கேன். அந்த பையை அங்கன வச்சிட்டுங்க . இந்தாங்க இந்த டீயை குடிங்க " என்று டீ யை மாரியப்பனிடம் கொடுத்துவிட்டு அவர் அந்த காய்கறி பையை தூக்கி கொண்டு சமையல் அறையை நோக்கி சென்று விட்டார்.
மாரியப்பனும் தன் அண்ணன் அருகில் அமர்ந்து டீயை குடித்து கொண்டு நாளிதழிழ் மூழ்கினார்.
அதன் பிறகு அந்த வீடு காலை பொழுதின் பரபரப்போடு காணப்பட்டது.
நம் நாயகியின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி :
வீராயி : நாயகியின் அப்பத்தா ( அப்பாவை பெற்றவர் )
ரங்கசாமி ,சீதாலெட்சுமி : நாயகியின் பெரியப்பா பெரியம்மா. (இவர்களுக்கு குழந்தை செல்வம் இல்லை)
மாரியப்பன், சிவகாமி : நாயகியின் அப்பா அம்மா. (இவர்களுக்கு ஐந்து குழந்தைகள்)
இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள்.
பரத், சங்கரி : நாயகியின் பெரிய அண்ணன் அண்ணி (இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஆதினி, தர்ஷினி )
கணேஷ் ,வைஷ்னவி : நாயகியின் சின்ன அண்ணன் அண்ணி
அருண் ,அஷ்விதா : நாயகியின் பெரிய அக்கா மாமா ( ஆதி, இவர்களுடைய செல்ல மகன்.)
ஜெகன் ,மாதவி : நாயகியின் சின்ன அக்கா மாமா.
அடுத்து கடை குட்டி நம்ம நாயகி திவ்ய பாரதி🥰🥰🥰 இது தாங்க நம்ம நாயகி குடும்பம்.
இனி கதைகுள் செல்வோம்மா.👍👍
காலை மணி 8.30 இருக்கும் நம் நாயகி திவ்யபாரதி ரூமில் இருந்து கிளம்பி கீழ் இறங்கி வந்தவள் கையில் ஒரு ட்ராவல் பேக் மற்றொரு தோளில் கேன் பேக்கும் இருந்தது வந்தவள் ஹாலில் அதை வைத்து விட்டு பூஜை அறைக்கு சென்றவள்.
தன் இரு கைகளையும் கூப்பி நிர்மூலமான மனதோடு இறைவா இது வரை நடந்த அனைத்தும் ,இனி நடப்பவை அனைத்தும் நன்மைக்கே .,என்று எண்ணி என் வாழ்க்கையில் தனியாக ஒரு முடிவு எடுத்து கிளம்புகிறேன் .இந்த பாதையில் எந்த சூழலிலும் என் நேர்மையிலும் உண்மையிலும் தவறாமா இருக்க எப்பழுதும் என்னுடன் உறுதுணையாக இருங்க இறைவா என்று வேண்டி கற்பூர தட்டில் இருந்த திருநீரை எடுத்து தன் நெற்றியில் சிறியதாக பூசி கொண்டு வெளியே வந்தவள் டைனிங் ஹாலே நோக்கி சென்றாள்.
திவ்ய பாரதிக்கு நல்ல நீளமான முடி தலைக்குகுளித்து இருப்பாள் போல், இருபுறமும் முடி எடுத்து நடுவில் கிளிப் ஒன்றை குத்தி முடியை விரித்து விட்டு இருந்தாள். அகன்ற நெற்றி அடர்த்தியான புருவங்கள் அதன் நடுவில் சிறியதகா ஒரு பொட்டு சொல்லபோனால் சினிமா நடிகை சுஹாசினி போன்ற தொரு தோற்றம்.
டைனிங் ஹாலில் ரெங்கசாமி, மாரியப்பன், பரத், கணேஷ் நால்வரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க . சீதா அனைவருக்கும் பரிமாறி கொண்டு இருந்தார். சங்கரி தன் இரு குழந்தைகளுக் சாப்பாடு ஊட்டி கொண்டு இருந்தாள். சிவகாமியும் வைஷணவியும் சமையல் அறை யுனுள் இருந்தனர்.
திவ்யபாரதியும் வந்து அமர்ந்து "பெரியம்மா எனக்கும் இரண்டு இட்லி வைங்க. "
"என்னடி எங்கோ கிளம்பின மாறி இருக்கு ?" என்று சீதா வினவ.
"ம்ம் ஆமாம் பெரியம்மா " ! என்று கூறிவிட்டு தன் சின்ன அண்ணன் கணேஷ்சை பார்க்க.
அவன் நான் இருக்கேன் நீ தைரியமா பேசு என்று கண்ணை மூடி திறந்து தைரியம் கொடுக்க.
சரி என்று இவளும் தலையை அசைத்து விட்டு
"பெரிய ப்பா " என்று கூப்பிட
தோசையை பிய்த்து வாயில் வைக்க போனவர் அதை அப்படியே தட்டில் போட்டு விட்டு ஆச்சிரியமாக திவ்ய பாரதியை ஏறிட்டு பார்த்தார்.
அவரின் பார்வையின் பொருள் உணர்ந்த திவ்யபாரதி
"ஒரு முக்கியமான விஷயம் பேசனும் அதான் ."
"ம்ம் சொல்லுமா பாரதி என்ன விஷயம்?"
"பெரியப்பா நான் இன்று அவினாசி கிளம்புறேன் அங்கு எனக்கு ஒரு கம்பேனியில் வேலை கிடைச்சிருக்கு " என்று கூறினாள்.
அதை கேட்ட ரங்கசாமி அவளிடம் எதுவும் பேசாமல் திரும்பி தன் தம்பியை பார்த்து
" என்ன மாரி இது ? நம்ம வீட்டடில் இல்லாதா புது பழக்கம் பொம்பள புள்ள வெளியூருக்கு வேலைக்கு போவது ?"என்று சற்று கோவமாக கேட்க.
அதற்க்கு மாரியப்பன் பதில் சொல்வதற்க்கு முன் திவ்யபாரதியிடம் இருந்து வந்தது.
"அப்பாவுக்கு தெரியாது நான் அதை பற்றி எதுவும் அவரிடம் சொல்ல."
இவர்களது பேச்சை கேட்ட சிவகாமி சமையல் அறையில் இருந்து வேகமாக வந்தவர்.
"மாமா.. என்று அழைக்க
"என்ன சிவகாமி நீயும் உன் மகளுக்கு ஒத்து ஊத வரயா?"
"அப்படி இல்ல மாமா அவபடிச்ச படிப்புக்கான வேலையை பார்கட்டுமே. "
"ஓஹோ பொம்பளைங்கள சேர்ந்து முடிவுஎடுக்க ஆரம்பிச்சிட்டிங்க போல " என்று கூறி கொண்டு இருக்கும் போதே .
மாரியப்பன் "அண்ணா பாரதிம்மா வேலைக்கு போகட்டும் அண்ணா "என்று தன் வாழ்க்கையில் முதல் முறையாக தன் அண்ணனின் பேச்சுக்கு மறு கருத்து சொன்னார்.
பாரதி வருவாள்.

Author: KMC 21
Article Title: வாழ்க்கை வாழ்வதற்க்கே
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.