New member
- Joined
- Aug 19, 2025
- Messages
- 8
- Thread Author
- #1
"வாட் புல்ஷிட் இஸ் திஸ் லாவண்யா?" தன் எதிரில் நிற்பவளை கண்டு காட்டு கத்தாக கத்திக் கொண்டிருந்தான் ஆதிஷ்.
பாவம் அவனையே இந்த முல்லை கொடியும், நண்பர்களும் சுற்றி சுற்றி வந்தால் அவனும் என்ன தான் செய்வான்?
"புல் ஷிட் இல்லை மச்சான் முல்லைக்கொடி. டேய் மனோ அதுக்கு இங்லிஷ்ல என்னடா வரும்? ஜாஸ்மின் வைனா?" வினோத் கேட்க.
ஆர்வக்கோளாறில் மனோஜூம், "ஜாஸ்மினம் பாலியன்தம்(jasminum polyanthum)டா" என தன் அறிவாற்றலை அங்கு பறைசாற்றி இருந்தானே.
ஆதி அவர்கள் இருவரையும் முறைத்தவன் லாவண்யாவை கண்டான்.
"இந்த பட்டிக்காடுக்கு என் ஹாஸ்பிடல்ல வேலை தருவேன்னு எந்த நம்பிக்கைல கூட்டிட்டு வந்த? அதுவும் இவ பண்ணி வச்சிருக்க வேலைக்கு அப்புறம்?" என கேட்கவும் லாவண்யா போதும் என்பதாக தன் கரத்தை உயர்த்தினாள்.
"நேத்து கோபமா கிஃப்ட் கூட தராம கிளம்பிட்டேன். அதை மறந்து வீட்ல வேற வச்சிட்டு வந்துட்டேன். இப்போ நீ என்ன கேட்டாலும் தர்றேன் கேளுனு சொன்னதால தான், இவளை உடனே இங்க வர வச்சேன்டா. நீ சொன்ன வார்த்தையை நம்பி வர வச்சேன். ஆனால் எனக்கு தந்த வார்த்தையை கூட நீ என் பர்த்டே அதுவுமா காப்பாத்தலை. இட்ஸ் ஓகே!" என்றாள் அவள்.
ஆதிஷ் அவளை விடுத்து மீண்டும் முல்லையை தான் முறைத்து பார்த்தான்.
பச்சை நிறத்தில் சிஃபான் சேலை கட்டி இருந்தாள். அதே டிசைனில் லாவண்யா மஞ்சள் நிற சேலை. இருவரும் ஏதோ ரியல் அக்கா தங்கை போல நடப்பதும், முல்லைக்காக லாவண்யா இவனை தள்ளி வைப்பதும் அவன் எரிச்சலை அதிகரித்துக் கொண்டே போனது.
"இப்ப என்ன தான் பண்ணனுங்கிற? இவளுக்கு வேலையை தவிர என்ன வேணா கேளு. ஏன் இவளுக்கே வேற எங்கயாவது கூட வேலை கேளு. ஏற்பாடு பண்ணி தரேன்!" என இறங்கி வந்தான்.
"ஓகே பட் நானும் அப்ப இவளோடயே போயிடுறேன்!" என்ற லாவண்யாவை அதிர்ந்து பார்த்தான் ஆதிஷ்.
"ஆமா. இவளுக்கு வெளிய பாதுகாப்பு இல்லை. இவளுக்கு விவரமும் பத்தலை. எவனாவது தொந்தரவு பண்றான். அதனால நான் இனி இவளை என் கண் பார்வைல வச்சு பார்த்துக்க போறேன்!" என்றாள் லாவண்யா.
"கண் பார்வைலயேனா அவக்கூடவே காலேஜ் போவியா?" என கேட்ட ஆதிஷ் குரலில் அத்தனை கடுப்பு.
"இவளை காலேஜ்ல டிராப் பண்ணிட்டு பிக் அப் பண்ணிடுவேன். ஆனால் வேலைல தான் கஷ்டம். ஏன்னா அது தானே ஈவினிங் டு நைட்!" என்றாள் அதற்கும்.
"ஏன்டி நீ என்ன இவளுக்கு ஆயாம்மாவா?" எரிச்சலாக கேட்டான் ஆதிஷ்.
"உன்னை வளர்த்த உன் அக்கா உனக்கு ஆயாவா?" லாவண்யாவும் திருப்பி கேட்டாள்.
"அதானே இவனை மட்டும் இவங்க பாட்டி நாலு கழுதை வயசாகியும் பச்சை புள்ள போல தாங்கிட்டு இருக்காங்க. அம்மாவோட கொஞ்சல் என்ன. அக்கா பாசமென்ன. இதுல கேர்ள் பெஸ்ட்டி நீ வேற!" என்றான் வினோத்.
மனோஜோ லாவண்யா வேலையை விட்டு விடுவேன் என்றதுமே உரைந்து விட்டான்.
"படுத்தாத லாவண்யா. டாக்டருக்கு படிக்கிறது எப்படி கஷ்டமோ, அதே போல வேலையிலும் கஷ்ட நஷ்டம் இல்லையா? அவ்ளோ ஈசியா உனக்கு இந்த வேலை? அதை போயும் போயும் இவளுக்காக போய் விடுறேங்குற. பேசாம இவளுக்கு நான் அமவுன்ட் தரேன். இந்த அம்மணியை சும்மா கொட்டிக்கிட்டு படிக்க மட்டும் சொல்லு. அதே அவ நமக்கு பண்ற பெரிய நல்ல வேலை தான்!" என்றான் அவன்.
"எனக்கு சும்மா இருந்து கிடைக்கிற பணம் வேணாம். அதும் நீங்க இப்படி மூஞ்சியை வச்சி பேசி தர்ற பணம் வேணவே வேணாம்!" முறைத்துக் கொண்டு சொல்லியது முல்லை கொடியே தான்.
"அடிங்க..." என இருக்கையை விட்டு எழுந்தவன், "இவளே என் ஃபிரண்ட் தான்டி. இவளை விட்டு போய் தொலை!" என்றான்.
"ஏன் உங்க ஃபிரண்டுனு பட்டா போட்டிருக்கா?" முல்லை கேளவும், "அதானே!" என்றான் வினோத்.
"அக்கா நான் இங்க இருக்க மாட்டேன். இவர் முன்ன எல்லாம் வேலை பார்க்க மாட்டேன். நாம போகலாம்!" என முல்லை அழைக்க. லாவண்யா அவளுடனே வெளியேற முன்னேறிட ஆதிஷூக்கு பீபி ஏறியது.
"என்ன வேலைடி தெரியும் இவளுக்கு? டிகிரி கூட இல்லை!" என்றான்.
லாவண்யா உடனே திரும்பியவள், "நர்சிங் படிக்கிறாடா. நான் தான சேர்த்து விட்டேன்!" என்றாள்.
"ஆமா நாலு நாளு நர்ஸ் மச்சான். இப்போ தான் பார்ட்டி காலேஜ் சேர்ந்ததே!" என்றான் வினோத்.
"இதோ பாரு லாவண்யா டிவல்த் தான் படிச்சிருக்கா. இங்லிஷ் வராது. அஃபிஷியல் வொர்க், ரிசப்ஷனுக்குனு போட முடியாது! நர்ஸூக்கு எல்லாம் துளிக்கூட வாய்ப்பில்லை. ஹவுஸ் கீப்பிங் தான் தர முடியும் பரவாயில்லைனா சொல்லு. உனக்காக தான் இவ்ளோ இறங்கி வர்றேன். அதனால இதுக்கு முடியாதுனா நீ அவளை வேணா அனுப்பலாம். நீ எல்லாம் இங்கிருந்து போகக்கூடாது!" என்ற ஆதிஷ் முல்லையை வேறு முறைத்தான்.
லாவண்யா முல்லையை கண்டாள். அவளும் இவளை தான் கண்டிருந்தாள்.
"முல்லைமா நீ எதுவும் நினைச்சிக்காத. உனக்கு விருப்பம்னா மட்டும் சொல்லு. ஆனால் ஒன்னு உழைச்சு சம்பாதிச்சு படிக்கணும்னு நீ நினைக்கிற. அதனால இந்த வேலை அவமானம் இல்லை. இதே ஹாஸ்பிடல்ல ஒரு நாள் நீயும் நர்ஸாகலாம். இதே ஆதிஷூக்கு அசிஸ்ட் பண்ற சீஃப் நர்ஸ் கூட ஆகலாம்!"
லாவண்யா கூற ஆதிஷூக்கு காலமெல்லாம் தன்னை சுற்றிய இந்த கொடி தன்னை நீங்காதோ என்ற கடுப்பு தான்.
முல்லை விழிகளோ ஒரு நொடி விரிந்து அதன் பின் ஆதிஷை கண்டு சுருங்கியது.
"இவர் கிட்ட எல்லாம் எப்பவுமே எனக்கு வேலை வேணாம்க்கா!" என்று விட்டாள் பட்டென்று.
மனோஜூக்கும், வினோத்துக்கும் சட்டென சிரிப்பு வந்து விட்டது.
"ஆமா பார்த்தா இவளை பக்கத்துல வச்சிட்டு தான் வேலை பார்ப்பேன்னு நான் மட்டும் ஒத்தைக்கால்ல நிக்குறேன் பாரு. சம்பளம் வாங்கவே நீ என்கிட்ட தான்டி வரணும்!" என்றான் ஆதிஷ்.
லாவண்யா அவனை விடுத்து முல்லையிடம், "இவன் தானே உன் பிரச்சனை. இவன் ரூம் கிளீன் பண்றது மட்டும் இவன் இல்லாதப்ப பண்ணிக்க. இப்ப ஓகேவா?" என கேளவும் முல்லை ஆதிஷை முறைத்து பார்த்தபடி தலையாட்டினாள்.
செய்வதெல்லாம் செய்து விட்டு தன்னையே முறைப்பவளை வைத்து செய்தே இங்கிருந்து ஓட வைக்க வேண்டுமென உறுதியாக நினைத்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதிஷ்.
"அப்புறம் என்னடா? இவ என்னிக்கு ஜாயின் பண்ணட்டும்?" என லாவண்யா கேட்டு நிற்க.
"துடப்பத்தையும், மாப் ஸ்டிக்கையும் கைல எடுத்தா இப்பவே மேடம் ஹவுஸ் கீப்பிங் தான். காலேஜ் முடிஞ்சதும் இங்க வர சொல்ற. நைட்டு பத்து மணி வரையாவது வேலை பார்க்கணும். பார்ட் டைம் ஜாப் தர இது ஒன்னும் கம்பனி இல்லை. ஹாஸ்பிடல். இவளுக்கும் ஷிஃப்ட் பேசிஸ் தான். வேலை சரியில்லைனா உடனே டர்மினேஷன் தான்!" ஆதிஷ் கூற.
"ஆமா பெரிய ஆஃபிசர் வேலை இவரு டர்மினேட் பண்ண. ஹாஸ்பிடல் ஃபவுன்டர் பையனா இருந்துட்டு இவன் பண்ற அலப்பறை இருக்கே!" என்றான் மனோஜ்.
"கரெக்ட் மச்சான். இவங்க அப்பாவோட அப்பா இந்த ஹாஸ்பிடலை ஃபவுன்ட் பண்ணாரு. இவங்க அப்பாக்கூட எவ்வளவோ பண்ணாரு. ஆனால் இவனை பார் எதை ஃபவுன்ட் பண்ணி இருக்கான்னு!" என்றான் வினோத்.
"எதைடா?" மனோஜ் புரியாது கேட்க.
"முல்லைக்கொடி மச்சான்!" என்றான் வினோத்.
"அடுத்த வாட்டி பேப்பர் வெயிட் இல்லை வேற எதாவது வரும். வாயை மூடிட்டு இருந்திடு!" மனோஜ் கூறினாலும் இனி தங்களுக்கு சரி என்டர்டெயின்மன்ட் தான் என்றே ஆதிஷ் அறையை விட்டு வெளியேறினான் வினோத்.
இவன் எதிரில் உள்ள இருக்கை ஒன்றில் முல்லையை அமர வைத்தாள் லாவண்யா. அவள் அருகில் தானும் அமர்ந்தவள் முல்லையிடம் படிவம் ஒன்றை நீட்டினாள்.
"இந்தா இதுல உன் டீடெயில் எல்லாம் நீயே ஃபில் பண்ணு பார்க்கலாம்!" அவள் கூற, முல்லையும் தன் பெயர் விவரம் என அனைத்தும் அந்த படிவத்தில் நிரப்ப துவங்கினாள்.
"அச்சோ குண்டு குண்டா உன் கையெழுத்து உன் கன்னம் போல அவ்ளோ அழகுடி முல்லைமா..." அவள் கன்னம் கிள்ளிய தோழியால் இவனும் அவளையே பார்த்தபடி, தன் சுழல் நாற்காலியில் அரை சுழலாக சுற்றிக் கொண்டிருந்தான் ஆதிஷ்.
மெல்லிய உடலில் முகத்தில் கன்னமும், கண்களும் மட்டும் பெரிது அவளுக்கு. அவள் தன்னை கண்டு முறைக்கும் போது அவை தான் அவள் செயலை எடுத்துக் காட்டுவதாய் நினைத்தவன் அந்த கன்ன கொழுப்பை மட்டுமல்லாது, உடலின் மொத்த திமிரையும் கரைக்கிறேன் என நினைத்துக் கொண்டான்.
இன்று லாவண்யா உபயத்தில் மாடர்ன் மங்கையாக முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தவளை, கிராமத்தில் கண்ட நினைவு தான் இவனுக்கு.
உதகை அவனுக்கு புதிதல்ல. அவன் குடும்பத்திற்கே அங்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸூம், சில சொத்துக்களும் உண்டு. இருப்பினும் அங்கு செல்லாது வினோத் குடும்பத்திற்கு சொந்தமான கெஸ்ட் ஹவுசிற்கு சென்றது பெற்றோருக்கு தெரியாது சிறு சுதந்திரம் தேடியும் தான்.
என்ன வினோத்திற்கே வழி மறந்து விட்டது என்ற போது கடுப்பானவன், மலைகளின் ஓரம் விரகு எடுத்து சென்ற தாவணி பெண்களில் கடைசியில் சென்றவளை அழைத்தான்.
"ஹலோ..." இவன் அழைத்ததும் திரும்பி பார்த்து அடர் பச்சை நிற தாவணி அணிந்திருந்தவள் தான் இந்த முல்லைக்கொடி.
அவனை திரும்பி ஒரு கணம் பார்த்தாள், கண்களில் இருந்த கூலர்ஸை இறக்கி விட்டு அவனும் இவளை பார்த்தான். அவன் அணிந்நிருந்த பிரவுன் நிற லெதர் பிளேசரும் ஆளும், செய்கையும் இவளுக்கு என்ன தோன்றியதோ பதில் கூறாது முகத்தை திருப்பிக் கொண்டாளே முல்லை.
"என்னவாம்? கூப்பிட்டதுக்கே முட்டை கண்ணை உருட்டி முறைக்கிறா!" ஆதிஷ் கடுப்பாக.
"நீ கூப்பிட்டதும் சிரிச்சுட்டே ஓடி வர அவ என்ன உன் அத்தை மகளா? இல்லை இது தான் நம்மூரா? இங்க எல்லாம் பொண்ணுங்க இப்படித்தான்!" என்றான் வினோத்.
"எந்த ஊரா இருந்தா என்ன? உதவி தானே!" என்ற ஆதிஷ் காரை மெல்ல உருட்டி சென்றான் அவர்கள் பின்னேயே.
"விடுடா உன்னை என்னவோனு நினைச்சிருப்பா!" என்றான் மனோஜ்.
"என்னவோனா என்ன?" ஆதிஷ் கேள.
"விடுடா யப்பா. ஹலோன்னவும் ஃபோன் பேசுறன்னு நினைச்சிருப்பா. இரு நான் கூப்பிடுறேன்!" என்ற லாவண்யா, "இந்தாம்மா பொண்ணே!" என அழைக்கவும் முல்லை திரும்பி பார்த்தாள்.
"ஏய் அந்த அக்கா கூப்பிடுறாங்கடி!" முன்னே இருந்த பெண்களிடம் சொன்னவள் மற்ற இருவருடன் நின்றாள்.
லாவண்யா இறங்கி வந்தவள் அவளிடம் வினோத்தின் தந்தை பெயரை கூறி அவரின் கெஸ்ட் ஹவுஸ் விலாசத்தையும் கூறி, "எப்படி போகணும்னு தெரியுமா?" என கேட்டாள்.
"வழி தெரியும். ஆனால் அதை ஏன் நீங்க கேட்குறீங்க?" சந்தேகமாய் கேட்டவளால் எரிச்சலுற்று காரை விட்டு இறங்கி வந்தான் ஆதிஷ்.
"அது அதோ கார்ல இருக்கான் பாரு எங்க ஃபிரண்ட் வினோத். அவன் அப்பா கெஸ்ட் ஹவுஸ் தான்மா. அவன் சின்ன வயசுல வந்தானாம். வழியை மறந்துட்டான்!" என்றாள் லாவண்யா.
அவனோ காருக்குள் அமர்ந்து தன் கேர்ள் ஃபிரண்டா ரீணாவிடம் எதற்கோ கெஞ்சிக் கொண்டிருந்தவன் யார் வீடோ என்பது போலல்லவா இருந்தான்.
முல்லை பதில் கூறாது அவர்களை நம்ப முடியாத பார்வை பார்த்தாள்.
அவ்வளவு தான் ஆதிஷ் கோபமாக, "எங்களை பார்த்தா எப்படி தெரியுது? கார்ல திருட வந்த கும்பல் மாதிரி தெரியுதா? வீட்டை என்னை தூக்கிட்டா போயிட போறோம். டேய் மனோ அந்த வினோத்தை தூக்கிட்டு வாடா..." என்றான்.
"என்னை நம்மளை தூக்க சொல்றான்..." வினோத் சுதாரித்த போது, மனோஜ் அவனை வெளியே இழுத்து விட்டிருந்தான்.
வந்தவன் ஆதிஷ் முறைப்பில் புரியாது விழிக்க. லாவண்யா தான் நடப்பதை கூறினாள்.
"அட இவ்ளோ தானா?" என்றவன் தங்கள் குடும்ப படத்தை அலைப்பேசியில் காட்டினான்.
முல்லை தன்னுடன் வந்த பெண்களுடன் அதனை கூர்ந்து நோக்க. அவளை கூர்ந்து நோக்கிய வினோத், "ஏய்... நீ மல்லிக்கொடி தானே!" என்றான்.
"மல்லி இல்லை முல்லை. முல்லைக்கொடி!" எரிச்சலாக சொன்னவளுக்கு தன் பெயரை மாற்றிக் கூறியவன் தங்கள் முதலாளியின் மகனே தான் என ஊர்ஜிதமானது.
"நீக்கூட வளந்துட்டியே முல்லை..." என்றான் பையன் ஆர்வமிகுதியில்.
"நீ வளரும் போது அவ மட்டும் சும்மா இருப்பாளா?" என்றான் மனோஜ்.
"வழி!" என்றான் ஆதிஷ் பல்லை கடித்து.
அந்த மலைகளின் சுற்று பாதையில் மேப் கூட உதவாத கடுப்போடு, தன்னை கடுப்படித்த இவளும் லிஸ்டில் சேர்ந்து கொண்டாள் அன்று. அன்று மட்டுமா இன்றும் தான்!
அதன்பின் அன்று வழி கூறியவளுக்கு இன்று அவன் மருத்துவமனையில் பணியில் சேர்த்திட வழி காட்டிக் கொண்டிருக்கிறாள் லாவண்யா. இனி முல்லை ஆதிஷிடம் சிக்கி முகிழ்வாளா கசங்கிடுவாளா?
தொடரும்...

Author: உங்களில் ஒருத்தி
Article Title: முள் நேசம் - 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.