New member
- Joined
- Aug 19, 2025
- Messages
- 8
- Thread Author
- #1
கண்ணீருடன் காருக்குள் ஏறினாள் முல்லைக்கொடி. அவள் அருகில் இறுகிப் போய் அமர்ந்திருந்தான் ஆதிஷ்.
நண்பர்கள் மீது கையை வைக்கவும் பொறுக்க மாட்டாது சம்மதம் கூறி விட்டான்.
அவன் கூறாவிடிலும் தப்பியிருப்பது கடினமே. அந்த அளவு இறக்கத்தை காட்டியவனுக்கு அதை துளிக்கூட காட்ட விரும்பாது இறங்கி விட்டது இந்த கூட்டம்.
உருட்டு கட்டையால் மனோஜூம், வினோத்தும் அடி வாங்க. லாவண்யாவை நெருங்கையில் இவனுக்கு பயம் எடுத்து விட்டது.
தன்னை அடித்தால் கூட இப்படி துடித்திருப்பானா தெரியவில்லை. ஆனால் தன் வினையால் நண்பர்கள் பாதிக்கப்படும் போது வழியில்லை.
கண்ணை மூடிக் கொண்டு, "சரி..." என்று கத்தினான்.
கையில் தந்த மாலையை அவள் கழுத்தில் வீசினான்.
தந்த தாலியை வாங்கி அவள் கழுத்தை நெறிக்க முடியாத வெறியுடன் மூன்று முடிச்சுக்களை இறுக்கி போட்டு முடித்திருந்தான்.
உச்சியில் அவன் வைத்த குங்குமத்தின் அழுத்தமே அவன் அழுத்த குணத்தை அவளுக்கு கூறி விட்டது. பயந்து போயிருந்தாள். அப்படியும் அவனுடன் போக வேண்டிய கட்டாயம்.
இதற்கு அவள் விழுந்த பாழுங்கிணறே பரவாயில்லை. இனி காப்பாற்றியவனே அவளை உயிரோடு கொன்றாலும் ஆச்சர்யம் கொள்ள இல்லை என அறியாது அவள் பெற்றோர் மகளுக்கு பிரியாவிடை தந்தனர்.
"இதோ பாருங்க தம்பிகளா. உங்க மெத்ராசு ஆஸ்பத்திரி விலாசம், இந்த பையன் வினோத்து அப்பா நம்பரு விலாசம் எல்லாம் எங்கக்கிட்ட இருக்கு. எங்க புள்ளை நல்லா இருக்குதானு பாக்க எப்போ வேணா கிளம்பி வருவோம்!" என்றார் மணமுடித்து வைத்த பெரியவர்.
"வாங்களேன். மொத்தமா கவனிச்சுக்கிறேன்!" என்றான் ஆதிஷ்.
"நாங்க புள்ளை வீடுப்பா. நீ கவனிச்சு தான் ஆகோணும்!" என்றார் முல்லையின் தாய்மாமன்.
இவன் பல்லை கடித்தான். நிச்சயம் இந்த மலை பகுதியை கடந்ததும் தனக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கேட்கும் முடிவில் இருந்தான்.
"அம்மாடி முல்லையை நல்லா பார்த்துக்கோங்க. நடந்தது எதுவுமே புரியலை. ஆனா இங்க நடந்த விஷயத்துக்கு பிறகு அவளை யாரும் கட்ட மாட்டாங்கமா. அதான்..." என்றார் இந்த மலைப் பகுதியை தாண்டிராத செந்தாமரை.
"அதெல்லாம் நல்லா பார்த்துப்பாங்க. சரி தானங்களேம்மா...?" கேட்ட முல்லையின் தந்தைக்கும் சரி, அவள் அன்னைக்கும் சரி லாவண்யா மீது தான் நம்பிக்கை எல்லாம்.
"இவனுக்கு அந்த பொண்ணை கட்டி வச்சதுக்கு இங்க உள்ள எதாவது ஒரு மரத்துல கட்டி வச்சிருக்கலாம்னு ஃபீல் பண்ற அளவு நடக்க போறான் பாரு!" மனோஜ் காதில் கூறினான் வினோத்.
"உன்னால ஆரம்பிச்சதுடா இதெல்லாம்!" என்ற மனோஜ் திரும்பி ஆதிஷை பார்த்தான்.
சகிக்கவில்லை. அத்தனை கோபத்தில், வெறுப்பின் உச்சத்தில் இருந்தான்.
அடுத்து இவன் என்ன செய்ய போகிறானோ நினைக்கவே கவலையாய் இருந்தது.
வெகுளியான மனிதர்கள் என்றே தன்னிடம் பேசிய அந்த சிறிய குடும்பத்தை பார்த்திருந்தாள் லாவண்யா.
அவர்கள் வினோத் கெஸ்ட் ஹவுசில் பணியாற்றுவோர் என தங்கியிருந்த வேளைகளில் பேச்சு வார்த்து பழகிக் கொண்டவளுக்கு, அவர்களை காண்கையில் அவ்வாறு தான் தோன்றியது.
விவரமும் புரிதலும் போதுமானதாய் இல்லாத மலை வாழ் கிராமத்து மக்கள் அவர்கள்.
முல்லை தற்கொலைக்கு முயன்றது அவள் விரும்பியே. அவளை ஆதிஷ் காப்பாற்றியதும் அவன் விரும்பியே.
ஆனால் திருமணத்தை மட்டும் இருவர் விருப்பம் கேளாமலே முடித்து வெறுப்பை தந்து விட்டனர் ஆதிஷிற்கு.
நடந்ததை திருமணம் என்றே ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் தான் இந்த நால்வரும்.
ஆனால் முல்லையை நினைக்கையில் பாவமாய் இருந்தது. ஆதிஷை நினைக்கையில் வருத்தமாய் இருந்தது. இங்கிருந்து சென்றதும் இருவரிடமும் பேசி முடிவெடுக்க எண்ணிக் கொண்டாள்.
முல்லையின் தங்கை மல்லி அன்னை பின் ஒளிந்தபடி அக்காளை கண்டு தேம்பிக் கொண்டிருந்தாள். முல்லையும் காருக்குள் இருந்தபடி தன் குடும்பத்தை தான் பார்த்திருந்தாள்.
"உன் அக்காவை நல்லா பார்த்துப்பேன். அழாதே!" என்ற லாவண்யா முல்லைக்கு அருகில் ஏறிக் கொண்டாள்.
அவள் ஏறவும் முல்லை இடம் தர எண்ணி சற்றே நகரும் நிலை. அவள் நெருங்கி வரவும் தீச்சுட்ட போல முறைத்தான் ஆதிஷ்.
இருள தொடங்கிய வேளையிலும் அவன் பார்வையின் வெம்மையை உணர்ந்தவள் நடுங்கிக் கொண்டு லாவண்யாவோடே ஒட்டிக் கொண்டாள்.
அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் லாவண்யா.
கார் புறப்பட தயாராக இருந்தது. வரும் போது லாங் டிரைவ் பிடிக்கும். அதுவும் ஊட்டியின் வளைவு சுழிவுகளில் ஏறி இறங்கும் லாவகம் பிடிக்குமென ஆதிஷ் தான் கூலாக காரை இயக்கி இருந்தான்.
போகும் போது அவன் மனம், மூளை என அத்தனை கோபமிருக்க மனோஜ் தான் ஓட்டுநர் இருக்கையில் இருந்தான். அவன் காரை எடுக்க அவர்கள் திரும்பும் பயணம் தொடங்கியது.
"வண்டியை இடைல நிறுத்தாம மலை இறங்குங்க. இருட்ட ஆரம்பிச்சிருச்சு. நீங்க மலை இறங்குற வரை எங்காளுங்க பாத்துட்டு தான் இருப்பானுங்க!" என்ற எச்சரிப்புடன் தான் அனுப்பி வைத்திருந்தனர்.
முல்லை திரும்பி திரும்பி தன் பெற்றோரை பார்த்த படி வந்தவள், அவர்கள் கண்ணை விட்டு மறையவும் தான் ஆதிஷ் பக்கமாக தான் திரும்பி இருப்பதை கவனித்தாள்.
ஆதிஷ் அவளை தான் வெறித்திருந்தான். எப்போதும் கமகமவென மணக்கும் படி உடலுக்கு பாடி வாஷ் உபயோகித்து குளிப்பவன் அவன். குளித்த பின் தேகத்தில் டியோட்ரன்ட் பூசி, சட்டைக்கு வாசனை திரவியத்தை தெளித்து, கேசத்திற்கு ஹேர் ஜெல், ஸ்பிரே என அடித்துக் கொள்பவன்.
வாயில் மவுத் ஃபிரஷ்னரை அவ்வபோது போட்டு மெல்பவன். வாய் திறந்து பேசினாலே டூத் பேஸ்ட் விளம்பரத்தில் வரும் மாடல் வாயை திறந்ததும் பெண்கள் நெருங்குவார்களே, அப்படி இவனின் வசீகரமும், வாசமும் இருக்கும்.
ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை குளிப்பவன் தன் அருகில் உள்ளவள் வாடையை உள்வாங்கி முகத்தை சுழித்தான். அவளின் தோற்றம் கண்டு முகத்தை திருப்பினான்.
கார் மலைகளின் வளைவுகளை ஒன்றொன்றாக கடந்து இறங்கியது. முல்லையின் இதயத்துடிப்பு தன் கிராமத்தை விட்டு அகல அகல ஏகத்திற்கும் அதிகரித்தது.
ஒரு வழியாக கோவையை வந்தடைந்தார்கள். அங்கிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும்.
அந்நேரம், "நிறுத்துடா!" கர்ஜித்தான் ஆதிஷ். நடுங்கிக் கொண்டு அவனை பார்த்தாள் முல்லைக்கொடி.
"இங்க எதுக்குடா?" மனோஜ் புரியாது கேட்க.
"அன்வான்டட் லகேஜை ஏன் தூக்கி சுமக்கணும். அதோ தெரியுது பாரு மாமியார் வீடு. அங்க டிராப் பண்ணிட்டு கிளம்பலாம்!" என்றான் ஆதிஷ்.
அவன் சொன்ன அர்த்தம் புரிந்த மூவரும் சற்று தொலைவில் தெரிந்த காவல் நிலையத்தை கண்டனர். அவர்கள் பார்வை போன இடத்தை கண்ட பிறகே முல்லைக்கு ஏதோ புரிப்படுவது போலிருந்தது.
"அக்கா..." முல்லை நடுங்கிப் போனாள்.
"டேய் என்னடா?" லாவண்யா முல்லைக்காக பதறினாள்.
"இவன் எட்ஜ்ல இருந்தா அவளை எதாவது பென்ட்ல தள்ளி விட்றுவானோனு நான் பயந்தேன். ஆனால் பாரு அவன் சேஃபா கீழ வரை கூட்டி வந்து மாமியார் வீட்ல தான் டிராப் பண்றான். ஆதினா ஆதி தான்!" என்றான் வினோத்.
அவன் காலை வாற அடிப்படை காரணமாக இருந்து விட்டு, அதற்கு துளியும் வருந்தாமல் இத்தனை நேரம் ரன்னிங் கமென்ட்ரி தந்து விட்டு, இப்போது இப்படி புகழ்ந்து பேசினால் நம்பி விடத்தோன்றுமா என்ன?
"அந்த பொண்ணை உள்ள தள்ள முன்ன உன்னை தள்ளனும். அவன்கூட உனக்கு இன்டைரக்டா என்ன பிரச்சனைனு தெரியலை. எங்க கேங்ல இருந்துட்டே நீ என்னென்னவோ சதி பண்ற!" என்றான் மனோஜ்.
"நாலு வார்த்தை நக்கலா பேசினா வில்லனாடா. சர் தான் போங்கடா!" என்ற வினோத் அப்போதும் காரை விட்டு இறங்கவில்லையே.
"ஏய் இறங்குடி..." ஆதிஷ் கார் கதவை திறந்து இறங்கி நின்று முல்லையை வெளியே அழைத்தான்.
"சார் வேணாம் சார்..." என அழுதாள் அவள்.
"ஹே...ஹே... நான்கூட தான் வேணாம் வேணாம்னு அத்தனை சொன்னேன். உங்காளுங்க கேட்டாங்களா? இல்லை நீ தான் அங்க வச்சு வாயை திறந்தியா? நீ கெஸ்ட் ஹவுஸ் வந்தப்பவே நான் உன்னை என்னவோ பண்ணிட்டேன்றானுங்க. நான் தெரியாம தான் கேட்கிறேன். எனக்கு என்ன வேற ஆளா கிடைக்காது. ஊட்டி வந்து உன்னை போய்..." என இகழ்ச்சியாய் கூறியவன் முகத்தில் குத்து விட வேண்டும் போலிருந்தது இச்சமயம் லாவண்யாவிற்கு.
"ஆமா கிஸ்ஸடிக்கும் போது மட்டும் நல்லா இருந்திருக்கும்!" என்ற வினோத் ஆதிஷ் முன்னே வந்து அவனை குனிந்து பார்க்கவும், "இல்லைடா உயிரை காப்பாத்தும் போதுனு சொல்ல வந்தேன்!" என்றான்.
"உன்னை அங்க போய் கவனிச்சுக்கிறேன்!" என்ற ஆதிஷ் முல்லையின் கைப்பிடித்து தடாலடியாக வெளியே இழுத்ததில் அவள் தோளை விட்டு கை தனியாக வராதது தான் குறையாக, லாவண்யாவை விட்டு பிரிந்து வந்து சாலையில் விழுந்திருந்தாள் முல்லை.
விழுந்தவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்திருந்தாள். புது கண்ணீர் மறுபடி கண்களை நிறைத்து கன்னம் தாண்டி வழிந்தது.
"டேய்..." லாவண்யா பதட்டமாக இறங்கி வர. மற்ற இருவரும் கூட இறங்கி வந்து விட்டனர்.
"புது பொண்டாட்டியை டொமஸ்டிக் வைலன்ஸ் பண்றான்னு இவனை தான் உள்ள தூக்கி வைக்க போறாங்க பாரு!" லாவண்யா காதில் கிசுகிசுப்பாக கூறினான் வினோத்.
அவனுக்கு இனி மனோஜிடம் பேசினால் தனக்கு வில்லன் பட்டம் உறுதி என தெரியுமே.
"ஆதி போலிஸ் ஸ்டேஷன்டா. அந்த பொண்ணு எதிர்காலம், உன் பெயர் எல்லாமே பிராப்ளம்ல சிக்கிடும். மனோ வண்டியை எடு. பொறுமையா பேசுவோம்..." என்றாள் அவள்.
ஆதிஷ் அவள் சொல்வதை எல்லாம் காதில் போட்டுக் கொள்வதாகக்கூட தெரியவில்லை.
"மரியாதையா போலிஸ் ஸ்டேஷன் வா. வந்து உனக்கு என்னை தாலி கட்ட வச்ச ஒரு ஒருத்தன் பெயரையும் சொல்ற!" என்றான்.
"பெயர் தானே சொல்லுவா சொல்லுவா. என்ன கூடவே நீ அவ கெஸ்ட் ஹவுஸ் வரும் போது எல்லாம் காதல் அம்பு விட்டனு அவங்க சொல்லி தந்த போல கதையும் சொல்லுவா.
போலீஸ் அவங்களை போய் பிடிக்கிறாங்களோ இல்லையோ நம்மை பிடிப்பாங்க. மலை வாழ் பொண்ணுக்கு மருத்துவ முத்தம் தந்த மருத்துவர்னு நீ ஓவர் நைட்ல ஃபேமஸ் ஆகிடுவ. உன் அப்பா டென்ஷன் ஆகிடுவாரு...
அப்புறம் என்ன ஹாஸ்பிடல் பெயர் நாறும். உனக்கு ஹாஸ்பிடல்ல ஷேர் இல்லாம போகும். அடுத்து அது உன் மாமன் கைக்கும் போகும்!" வினோத் சொல்லி முடிக்க.
"என்னடா உன் ஆசையை சொல்றியா?" என கேட்டான் மனோஜ்.
"ச்சீ... ப்பே..." என்ற வினோத் குட்டையை குழப்பி விட்டு தெளிவு காண ஆதிஷ் முகத்தையே பார்த்திருந்தான்.
யார் ஆசையோ, திட்டமோ பலத்த சிந்தனையில் இருந்த ஆதிஷ் முல்லையை கண்டான். அவள் கழத்தில் இருக்கும் தாலியையும் கண்டான்.
அவள் இவனை கண்டு மறுப்பாக தலையசைத்தாள். ஆனால் இவன் உறுதி குறையாது அவளை நெருங்கினான். அனைவரும் அவர்களை என்னவோ என பார்க்க. ஆதிஷோ நொடிப்பொழுதில் முல்லை கழுத்தில் இருந்த தாலியை பற்றினான்.
தொடரும்...

Author: உங்களில் ஒருத்தி
Article Title: முள் நேசம் - 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.