New member
- Joined
- Aug 19, 2025
- Messages
- 8
- Thread Author
- #1
ஊட்டி மலைகளை சார்ந்த கிராமப்பகுதி அது...
எப்போதும் புகையாக தவழும் குளிர் மேகங்களும், குருகலான ஒட்டிக் கொண்ட வீடுகளும் நிறைந்த இடத்தின் ஒரு இயற்கை பகுதியில் இன்று மக்கள் கூட்டம் ஒன்றோடு ஒன்றாக ஒட்டி நின்றிருந்தது சற்று முன் இதழ்கள் ஒட்டிய கிளிகளை குற்றம் சாடியே.
"இதோ பாருங்க இது முத்தம் இல்லை..." என அந்த கிராம மக்களுக்கு தெளிவுப் படுத்திக் கொண்டிருந்தான் ஆதிஷ். அவன் மருத்துவன் ஆயிற்றே.
"ஆமாங்க மருத்துவ முத்தம்!" வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினான் அவன் நண்பன் வினோத்.
"ஏதோ ஒன்னு முத்தம் தானுங்களே எங்க பிள்ளைக்கு கொடுத்து போட்டாரு. அதான் நாங்க எல்லாரும் எங்க கண்ணால பார்த்தோமே!" என கிராமத்து பெரியவர் கண்ட காட்சியை சாட்சியாய் கொண்டு நியாயம் பேசினார்.
"ஆமா பார்த்தோமுங்களே... அதுவும் இங்கிலிஸ் முத்தம்!" என்று கூட்டத்தில் இருந்து ஒரு இளசின் குரல் முதல் வரி கோஷம் முடிந்தும் தனித்து கேட்டது.
"எவன்டா அவன்? இவன் ஒரு உயிரை காப்பாத்த போராடும் போது ரசிச்சிட்டு இருந்தவன்...?" என குரல் வந்த திசையில் தேடினான் மனோஜ்.
"அவனை விடு இங்க பாரு!" என அவன் தோள் தட்டினாள் லாவண்யா.
இவர்கள் யாவரும் யாருக்கு முத்தம் வழங்கப்பட்டு விட்டதாக பேசிக் கொண்டுள்ளனரோ அவள் முல்லைக்கொடி!
உடையின் ஈரம் காய்ந்தாலும் கண்களில் ஈரம் காயாது அழுதுக் கொண்டிருந்தாள்.
லாவண்யாவிற்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது.
முந்தா நேத்து தானே தனக்கு கல்யாணமென "வந்துடுங்க அக்கா... எல்லா சாரும் வந்துடுங்க!" என சிரித்த முகமாக சொல்லி சென்றிருந்தாள்.
கண்ட நான்கைந்து நாட்களில் இந்த பதினெட்டு வயது மங்கை யார் மனதில் இடம் பெற்றிருந்தாளோ இல்லையோ, வினோத் கெஸ்ட் ஹவுசில் மலைச்சரிவினால் ட்ரிப் வந்தவர்கள் கூடுதல் தினங்கள் தங்க நேர்ந்த போது இவளுக்கு பிடித்து விட்டது.
இன்று அவளின் வாழ்வில் சநாதோஷமிகு நாளென நண்பர்களை கிளம்பும் முன் நச்சரித்து அழைத்து வந்திருந்தாள்.
அவர்கள் என்னவோ மலைப்புற கிராமங்களில் திருமணம் எப்படி நிகழும் என்ற ஆவலில் கேமராவை தூக்கிக் கொண்டு தான் வந்திருந்தனர்.
வந்த இடத்தில் ஒருத்தி உயிருக்கு போராடுகையில், மருத்துவம் படித்தவன் தன்னை தடுக்க முடியாது தண்ணீருக்குள் பாய்ந்து அவளை வெளியே இழுத்து வந்ததோடு, அவளுக்குள் புகுந்த தண்ணீரையும் வெளியே எடுத்து விட்டான்.
என்ன எடுத்த விதம் தான் சற்று அவன் வாழ்வை பதம் பார்க்க வந்து நிற்கிறது.
"இதோ பாருங்க அந்த பொண்ணு டேய் இவ பெயர் என்ன மல்லியா முல்லையா?" என நண்பனிடம் ரெஃபரன்சிற்கு கேட்டவன் வினோத், "முல்லைக்கொடி மச்சான்!" எனவும் தொடர்ந்தான்.
"ஹான்... ஹான்... முல்லைக்கொடி முல்லைக்கொடி! திடீர்னு தண்ணிக்குள்ள குதிச்சுட்டா. எல்லாரும் அந்த பொண்ணு குதிச்சிருச்சுனு யாரு குதிச்சு காப்பாத்தனு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க.
டிஸ்கஸ் பண்ற நேரமா அது? நேரம் ஆக ஆக அந்த பொண்ணு தண்ணியை குடிச்சிட போகுதுனு தான் நான் குதிச்சேன்.
இதுல காப்பாத்த போன என்னை அவ வேற உள்ள உள்ள இழுத்தா. நானே எப்படியோ அவளை வெளிய கொண்டு வந்தேன்!" ஆதிஷ் நடந்ததை கூற.
"அவ்ளோ கஷ்டப்பட்டதுக்கு ஒரு கிஸ் தானே விடுங்களேன்..." என்ற முணுமுணுப்பு.
இவன் திரும்பி பார்த்தான் வினோத் தான்!
"கொய்யால மூச்சை பிடிச்சு யாருக்கிட்டயுமே என்னை விளக்காத நான் இங்க புளிப்போட்டு விளக்கிட்டு இருக்கேன். நீ என்னடானா என் வாழ்க்கைல விளையாடவா பார்க்கிற!" என அவன் சட்டையை பிடித்த ஆதிஷ் என்ன நினைத்தானோ விட்டு விட்டு ஊரார் பக்கம் திரும்பினான்.
"இதோ பாருங்க அப்படி கஷ்டப்பட்டு காப்பாத்தி பார்த்தப்ப அவ நிறைய தண்ணியை, நீங்க எல்லாம் காப்பாத்தாம பேசிட்டிருந்த கேப்ல குடிச்சுட்டான்னு வயித்துல அமுக்கும் போதே தெரிஞ்சிடுச்சு.
அதான் தாமதிச்சா உயருக்கே ரிஸ்க்... ஆபத்துனு வாய் வச்சு தண்ணியை உறிஞ்சு துப்பினேன்.
இந்த பொண்ணு இடத்துல வேற ஆம்பிளை இருந்தாலும் இதே ட்ரீட்மென்ட் தான்.
ஏன் நீங்க எல்லாம் கிராமம் தானே. முன்ன பின்ன இப்படி விழுந்தவங்களை தண்ணியை வெளியேத்தி காப்பாத்தினதில்லை?" இவன் கேள.
"இல்லை..." என்றாரே அவர்.
இதற்கு மேல் விளக்கம் சொல்லவே அவனுக்கு வார்த்தை வரவில்லை. நனைந்து போயிருந்தவன் நொந்து போனான்.
உடன் ஒரு பெண்ணாக லாவண்யா மட்டும் இல்லை என்றால் இத்தனை நியாயம் எல்லாம் அவன் பேசிக் கொண்டு நிற்கும் ஆளே இல்லையே. என்னமோ பண்ணிக்கோங்க! என்று காரை கிளப்பிக் கொண்டு போயிருப்பான்.
ஆனால் இப்போதோ கார் சாவியை, ஃபோனை பிடுங்கி வைத்துக் கொண்டு ஊரே சுற்றி நின்று வழி விட மாட்டேன் என வம்பு செய்கிறதே என்ற நிலை.
அவன் சொன்னது அனைத்தையும் கேட்ட பெரியவர் தொண்டையை செருமினார்.
அங்கு அவர் சொன்னால் விடயம் சபையேறும் என இவனுக்கும் புரிந்திருந்தது. ஆனால் என்ன அவர் இவனுக்கு சாதகமாக பேசுவதாக தான் தெரியவில்லை.
"இங்க பாருங்க தம்பி யார் காதுல என்னென்னவோ சொல்லி பூ சுத்தறிங்கோ? காரணம் என்னவோ. ஆனால் நீங்க திரும்ப திரும்ப அந்த பொண்ணு குடிச்ச தண்ணியை உறியுறேன்னு முத்தம் தந்ததை இந்த ஊரே பார்த்துடுச்சு. இனி எங்க பிள்ளையை எவேன் கட்டுவான்? ஏற்கனவே கட்டிக்க இருந்தவனும் ஓடிப் போயிட்டான்!" அவர் பேசி முடிக்க.
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? தட்ஸ் நாட் மை பிராப்ளம். ஹே ஹே..." எரிச்சலிலும் சிரித்தான் ஆதிஷ்.
"என்ன பண்ண முடியுமா? நீங்க தான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோணும்!" என்றவரை தொடர்ந்து, "முடியாது!" என்றான் ஆதிஷ்.
அவன் மறுப்பில் பெரியவர் தன் ஊர்க் காரர்களுக்கு கண்ணை காட்ட.
சுற்றி நின்று இத்தனை நேரம் தங்கள் ஒற்றுமையை வெறுமனே வேடிக்கை பார்த்தே காட்டிக் கொண்டோர், இப்போது இவர்களை நெருக்கமாக சுற்றி வளைத்தனர்.
"என்னடா ஓடிப்போன மாப்பிள்ளையை விட்டுட்டு நம்மளை ரவுண்ட் அப் பண்றானுங்க..." வெளியில் திடமாக எனினும் உள்ளார சிறு திடுக்கிடலுடன் கேட்டான் ஆதிஷ்.
"நம்மளை இல்லை ராஜா உன்னை... உனக்காக தான் எங்களை!" என்றான் வினோத்.
இவன் அவனை விட்டு மனோஜ் புறம் திரும்பினான்.
தங்கள் வட்டத்தில் வினோதமான இந்த மலைக்குரங்கை நம்பி அவனிடத்தில் தங்க வந்த தனக்கு இது தேவை தான் என்றிருந்தது.
"அவன் பண்ணதை விட இவங்களுக்கு நீ பண்ணது தான் பெருசாம். இரு நான் பேசுறேன்..." என்றவன் வாய் திறந்தான்.
"இதோ பாருங்க நீங்க நினைக்கிற போல இல்லை. நாங்க எல்லாம் சிட்டில இருந்து வர்றோம். எங்க ஜென்ரேஷன் கல்யாணமே வேற மாதிரி இருக்கும். முறைப்படி கல்யாணம் பண்ணி வச்சாலே மூணு மாசத்துல பல பேர் முறைச்சிட்டு போய் கோர்ட்ல நிக்குறாங்க. இதுல நீங்க கட்டாயப்படுத்தி கட்டி வச்சா மட்டும் என்னாக போகுது?"
அவன் நியாயமாக தான் பேசினான். என்ன அவன் நியாயம் தான் அங்கு யாருக்கும் புரியவில்லை.
"மூணு மாசத்துல எங்க புள்ளை வாந்தி எடுத்து ஆஸ்பத்திரி வாசல்ல நிக்குதோ, கோர்ட்ல நிக்குதோ அது அவ பாடு. இப்ப அவ கழுத்துல தாலியை இந்த தம்பி கட்டியே ஆகோணும்!" என்ற தீர்ப்பே திரும்ப திரும்ப வந்தது.
"என்னடா?" ஆதிஷ் எரிச்சலாய் கேட்டான்.
"அங்க பாரு அந்த பொண்ணு எப்படி அழுகுதுனு..." என அவளை இவனுக்கு கண் ஜாடையில் காட்டினான் மனோஜ்.
நிஜமாலுமே முல்லை இவன் என்னமோ தன்னை ஏமாற்றி விட்டப்போல அழுவதாய் தோன்றியது ஆதிஷிற்கு. அதற்கு ஏற்ற போல அடுத்த குற்றமும் சாட்டப்பட்டது.
"எங்களுக்கு என்னவோ இந்த பொண்ணு நீங்க தங்கி இருந்த வீட்டுக்கு வரப்போக இருந்த போதே, நீங்க உங்க கை வரிசை எதையும் காட்டி இருப்பீங்க தோணுது!" ஊர் பெரியவர்களின் இன்னோரு குற்றச்சாட்டு.
"அதானே முத முத்தம் மாதிரியா இருந்ததுங்கோ. எதோ பரிட்சையப் பட்ட போல இல்லை இருந்தது!" என உடனே நம்பியது கூட்டம்.
"விசயம் தெரிஞ்சி தான் மாப்பிள்ளை ஓடிட்டான்..." என்றனர்.
ஆகமொத்தம் ஓடிப்போனவனை விட்டு விட்டு குற்றம் இருவர் மீதோ பாய்ந்தது. தீர்ப்பு கூற சட்டத்தை நாடக் கூட வழி இல்லை.
சாட்சி சொல்ல வேண்டியவளோ அவர்களின் கூற்றச்சாட்டில் அங்கிருந்து அழுது கொண்டே ஓடினாள்.
காரணம் அவளுக்கு முன் ஓடும் அவள் அன்னை செந்தாமரை. இந்த அன்னை மகளை தொடர்ந்து அவளின் தந்தையும் பின்னே போனார்.
அனேகமாக தாமரை சென்ற வேகத்திற்கு தற்கொலை எதுவும் செய்து கொள்வாரோ என அங்கு பரவலாக பேசப்பட்டது.
"மச்சான் உனக்கு அடுத்த கேஸ் ரெடி!" என்றான் வினோத்.
என்ன அவன் கடியை ரசிக்கும் மனநிலையில் அங்கு யாவருமே இல்லை.
"இதோ பாருங்க தம்பி. எங்க ஊருக்கு வந்தீங்களா சுத்தி பார்த்தீங்களானு நீங்க கிளம்பி போகாததன் விளைவு தான் இது. அந்த பொண்ணு வாழ்க்கைக்கு பதில் சொல்லாம இந்த பொண்ணை கூட்டிட்டு நீங்க இங்கிருந்த போக முடியாது!" என்றவர் பேச்சு லாவண்யாவை சாடியது.
அவர்களின் புரிதலற்ற பழி வாங்கும் படலத்தில் தங்களுடன் சிக்கிக் கொண்ட பெண்ணை நினைத்து மனதில் பாரம் கூடிப் போனது ஆதிஷூக்கு.
"நீ எனக்காக எல்லாம் யோசிக்காத. நீ எந்த தப்பும் பண்ணலை. உனக்கு எது சரினு தோணுதோ அதை பண்ணு. என்ன முல்லை பாவம்!" என்றாள் லாவண்யா.
அவளை முறைத்தவன் இவர்களிடம் திரும்பினான்.
கெஞ்சி எல்லாம் அவனுக்கு பழக்கம் இல்லை. இன்றும் இறங்கிப் பேச தெரியவில்லை. ஆனாலும் பேசினான். அது பலனற்று போகவும் ஏறி விட்டான்.
"நான் யார்னு தெரியுமா? எங்க அப்பா யார்னு தெரியுமா? நான் ஒரு ஃபோன் பண்ணா போதும்!" அவன் பேச பேச.
"இது வேலைக்காவாது. அந்த பிள்ளையை இழுத்து வாங்கம்மா!" என்றார் ஒருவர். அவர் முல்லையில் தாய்மாமனாம்.
"ஏய்... தோழியை நெருங்கிய பெண்கள் கூட்டத்தில் இருந்து அவளை காக்க முன் வந்து நின்றான் ஆதிஷ்.
ஆனால் அவனை பலமான நால்வர் வந்து மடக்கி பிடித்துக் கொள்ள.
லாவண்யா சில பெண்களாலும் மனோஜ், வினோத் சில ஆண்களாலும் மரத்தில் கட்டி வைக்கப்பட்டனர்.
இருள தொடங்கியும் அவர்களும் மனம் இலகவில்லை. இவனும் மனம் இறங்கவில்லை.
ஆனால் இவன் மனமிறங்கும் நேரமும் நள்ளிரவில் வந்தது. முல்லைக்கொடி கழுத்தில் இவன் கையால் தாலியும் ஏறியது. அவள் இவர்களுடன் விடியற்காலை நேரம் காரிலும் ஏறினாள்.
அவள் பயணம் அவனுடன் அத்தனை எளிதாக இருந்திடுமா என்ன? அல்லது அவனோடு தான் இருந்திடுமா? முள்ளோடு தன் வாழ்வில் முளைத்தவள் மீது நேசம் தோன்றுமா அவனுக்கு? காண்போம்.
தொடரும்...

Author: உங்களில் ஒருத்தி
Article Title: முள் நேசம் - 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.