முன்னோட்டம்

Member
Joined
Aug 17, 2025
Messages
34
“யா அல்லாஹ்! நீ ஏன் டா இப்படி இருக்க? இது உன் வாழ்க்கை டா. உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது அப்டின்னு வீட்ல நீ தான் சொல்லனும். அத விட்டுட்டு ஏன் உனக்குள்ளே உன் காதல போட்டு புதைக்கிற?” என்று அப்துல் கேட்க,

“ஒரு வேளை அவ வேற ஜாதி இல்லை வேற மதமா இருப்பான்னு யோசிக்குறியா? எனக்குத் தெரிஞ்சு எங்க நண்பன் அப்படி கிடையாது” என்றான் ஆல்பர்ட்.

“என்னை நீங்க புரிஞ்சுக்கிட்டது அவ்ளோ தானா டா? என் சூழ்நிலை உங்க ரெண்டு பேருக்கும் தெரியும் தானே. ஃபயர் ஆக்ஸிடென்ட்ல கால் ரெண்டும் கருகி போய் உடம்பு பூரா தீக்காயம் ஏற்பட்டு அதை சரி செய்யவும் உயிர காப்பாத்தவும் கால் தசைய வெட்டி எடுத்தா தான் முடியும்னு சொல்லி இப்போ முடமா படுத்து இருக்காரு. இதை எல்லாம் பார்த்த என் அம்மா மனசளவுல இறுகி போய் இப்ப வரைக்கும் ஓடா மாறி தேஞ்சு போற அளவுக்கு வேலை செய்யுறாங்க. அவங்க சிரிச்சு எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா? சரி அவங்கள விடு. குடும்பம் நல்லா இருந்தா நிம்மதியா இருப்பாங்க. எனக்கு அடுத்து தம்பியும் தங்கச்சியும் இருக்காங்க. அவங்கள யாரு பாத்துப்பா? மனசு விட்டு பேச வீட்ல ஆளும் இல்லை நேரமும் இல்லை. இந்த நிலைமைல நான் கல்யாணம் பண்ணனுமான்னு யோசிக்கிறேன். இதுல ஏதோ ரெண்டு மூணு தடவை பாத்த பொண்ணைத் தேடி அலைஞ்சு காதலிக்க எனக்கு நேரம் இல்லை டா. அதுக்காக நான் என் காதல பொய்னு சொல்லல. அவ பெயர் கூட தெரியாத போது நான் அவள தேடி என்ன நம்பி இருக்குறவங்கள நான் கஷ்டப்படுத்த விரும்பல டா. எத்தனையோ காதல் தோத்துப் போய் இருக்கு. உங்களுக்குத் தெரியாததா? அனார்கலி சலீமும் ரோமியோ ஜூலியட்டும். அதை விட இங்க பிரச்சினை வந்துடுமோனு பல காதல் சொல்லாம காணாம போய் இருக்கு டா. என் காதலும் அப்படியே போகட்டும்!” என்றான் அழகேசன்.

………………………​

“உனக்கு ஏன் டி காதல் அப்டின்னு சொன்னாலே முகம் வாடுது? உங்க வீட்ல காதல் கல்யாணம்னா ஒத்துக்க மாட்டாங்களா?” என்று ஆயிஷா கேட்க,

“இதுக்கு முன்னாடி ஏதும் காதல் தோல்வி ஆச்சா? இல்லை வேற யாரும் உனக்கு தெரிஞ்சவங்க காதலால பாதிக்கப்பட்டு இருக்காங்களா? சொல்லுடி!” என்று அலீனா கேட்க,

“எனக்கு கல்யாணம் பண்ணவே விருப்பம் இல்லை டி. எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் இத்தனை வருஷம் வாழ்ந்த இந்த கல்யாண வாழ்க்கைல ஒரு நாள் கூட சந்தோஷமா இருந்தது இல்லை. எல்லா நேரமும் சண்டை தான். என்னைய கூட இந்த ஊர் உலகம் பேசுற பேச்சுக்கு பயந்து தான் பெத்து இருப்பாங்க. ஒரு நாள் கூட என் கிட்ட சிரிச்சுப் பேசினது இல்லை. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் மேல இருக்கிற கோவத்த மட்டும் தான் என் கிட்ட காட்டி இருக்காங்க. இதுல புதுசா ஒருத்தன் வந்து என்னை படுத்தி எடுக்கனுமா? வேணாம் டி! நான் இப்படியே இருந்துடறேன். காதல்னு சொன்னா நான் வருத்தப்படுறதும் ஒருத்தன யாரு என்னன்னு தெரியாம அவன நினைச்சு வாழ ஆரம்பிச்சிட்டேன். ஆனா கல்யாணம்னு நினைச்சாலே பயமா இருக்கு. என் காதல் எனக்குள்ளயே இருந்துட்டு போகட்டும்!” என்று வருத்தமாக சொன்னாள் அம்பிகை.

………………………

விதியின் விளையாட்டு ஆரம்பம்!😊
1000240346.jpg
 
Last edited:

Author: chandran
Article Title: முன்னோட்டம்
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Aug 16, 2025
Messages
18
Kadhal கைகூட வாழ்த்துக்கள் இந்த ஜோடி kku🥰🥰🥰
 
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
இருவேறு மனநிலை!!! ஆனா ஒருத்தருக்கொருத்தர் அந்த காதலை ஏதோ ஒரு வகையில உணர ஆரம்பிச்சிட்டாங்க.. விதி அவங்கள சேர்த்து வைக்குமா??? ஹம் இந்த எழுத்தாளர் தான் முடிவு பண்ணனும் போல :cautious::rolleyes::LOL:
 
Member
Joined
Aug 17, 2025
Messages
34
இருவேறு மனநிலை!!! ஆனா ஒருத்தருக்கொருத்தர் அந்த காதலை ஏதோ ஒரு வகையில உணர ஆரம்பிச்சிட்டாங்க.. விதி அவங்கள சேர்த்து வைக்குமா??? ஹம் இந்த எழுத்தாளர் தான் முடிவு பண்ணனும் போல :cautious::rolleyes::LOL:
Writer ji unga alavuku yaaralayum couples ah vechu seiya mudiyathu 🤣🤣🤣
 
Top