நயனவாசினி - 2(ii)

New member
Joined
Aug 20, 2025
Messages
19
ஹேமா, “நயனி, நீ வீட்டுக்கு கெளம்பு. நான் சொன்ன பின்ன நீ வேலைக்கு வந்தா போதும்” என்றவர்,

“இனி யாராவது அது, இதுன்னு கண்ட எடத்துல நின்னு பேசுறது எங்க காதுக்கு வந்தா, யோசிக்காம சீட்ட கிழிச்சுடுவோம். கவனமா வேலைய பாருங்க. நிரஞ்சன் (HR) எல்லாரோட மொபைல்ஸையும் செக் பாயிண்ட்ல வாங்கி வைங்க. கொஞ்சம் லிபரலா இருந்தா போதும், தலைமேல ஏறிடுவாங்க” என்றவர் சென்றுவிட, காமராஜை சீண்டிட ஆளில்லாது தனித்து நின்றிருந்தான்.

பெருத்த அவமானம். அவன் எடுத்ததை அவனுக்கே அள்ளி வீசி வீழ்த்தியிருந்தார் ஹேமா.

குமரனுக்கு விரித்த வலையில் அவரே சென்று சிக்கியிருப்பது தான் அவரின் கேடு நிலை.

“இந்த பொம்பளையோட கொட்டத்த அடக்குனாதான் நா இங்க இருக்க முடியும். *** என் கிட்டையே மொதரா பாரு, பொ**” என்று மூச்சு வாங்க நின்றிருந்தவன் அங்கேயே அமர்ந்துவிட்டான்.

சரபேஷ்வரன் வரவும் செய்தி அவரை எட்ட, முகம் சுழித்துக்கொண்டார்.

புதிது இல்லை தான். ஆனால் கடை ஆரம்பித்த இரண்டாம் நாளே இப்படியொரு பிரச்சனை வரும் என்று அவர் நினைக்கவில்லை.

“நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ ஹேமா. உனக்கு நா ரைட்ஸ் கொடுத்திருக்கேன் தானே. கடை கொஞ்சம் டெவலப் ஆகுற வரை அந்தாளோட தயவு வேணும், பார்த்துக்க. யார் அந்த குமரன்?” என்று கேட்டறிந்து அவரின் வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

நயனியோடு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு குமரனை அழைத்து வந்திருந்தான், கார்த்தி.

குமரனுக்கு நல்ல ஊமை அடி. கால் வேறு சற்று தாங்கி தான் நடந்தான்.

மருத்துவம் பார்த்து முடியவும் வெளியே அழைத்துவந்து டீயும் பன்னும் உண்ண வைத்தாள் நயனி.

கார்த்தியின் முகத்திலேயே அவன் சினத்தின் அளவு தெரிந்தது.

“அந்த நாய் நேத்தே உன் வீட்டுக்கு வந்தத சொல்ல என்ன வந்துச்சு உனக்கு? வந்த ரெண்டாவது நாளே ஆடியிருக்கான் பாரு, ***” என்று நயனியைத் தான் திட்டினான்.

குமரன், “ம்ம்.. கார்த்தி” என்று அடக்கப் பார்க்க,

“அவளும் எனக்கு சிஸ்டர் தான். சும்மா உருமாம கெட” என்றவன் மேலும் ரெண்டு டீயை வாங்கி வர, அமைதியாய் குடித்தனர்.

நயனி, “அந்தாள் வேணும்னே இவர அடிக்க சொன்னாரு கார்த்தி’ண்ணா. இதுல எப்டி ப்ளேட்டைய மாத்தி போட்டிருக்கான் பாருங்க” மெல்ல அவள் கலங்க,

கார்த்தி, “நீ வாய தொறந்து பேசுனா தான் என்ன?”

குமரன், “இவ கைய அவன் விட்டா தானே பேசுவா. அருவருப்புல நெளிஞ்சுட்டு நின்னிருந்தா” என்றான் டீ க்ளாஸை வெறித்துக்கொண்டு.

“அந்த நாய்களை என் கையாள அடிச்சா தான்டா ஆச்சு. ச்சை”

பாண்டிக்கு அழைத்து நிலவரம் கேட்டறிந்தான். ஹேமாவிற்கு அழைக்க, அவர் எடுக்கவில்லை.

நயனி, குமரன், கார்த்தி, பாண்டி, இன்னும் பலர் எல்லாம் நீண்ட வருடங்களாகவே ஜவுளி கடையில் தான் வேலையில் உள்ளனர்.

ஹேமாவை தனித்து தெரியாது. ஆனால் நண்பர்களுடன் கூடி நின்று பேசும் நேரத்தில் அவரின் பெயர் அடிக்கடி நல்முறையில் அடிபடும்.

அப்படியான நேரத்தில் தான், கோவை சத்யமின் ஆரம்ப கட்டத்தில் நல்ல ஊறிய உழைப்பாளிகளான இவர்களை ஹேமாவே தங்கள் நிறுவனத்திற்கு அழைத்துக்கொண்டார். வேலையும் சம்பள உயர்வும் கனிசமாகவே தரவும் செய்திருந்தார்.

ஆனால் எங்கே, முன்பகை மொத்தத்தையும் மூடிவிட்டது!



இரவு வரை அமைதியாக இயங்கி அடங்கியிருந்தது சத்யம். யார் இருந்தாலும் இல்லை என்றாலும் பணிகள் நடந்தவண்ணம் இருந்தன.

மதியம் போல காமராஜும் சென்றுவிட்டான் என்பது செய்தியாகி இருந்தது.

ஹேமா, சரபேஷ்வர் எல்லாம் ஒன்பது மணிக்கு கிளம்பிய கையுடன், கடை பத்து மணிக்கே இன்று அடைத்திருந்தனர்.

மணி பனிரெண்டை கடந்த நிலையில் ஹேமாவின் கைப்பேசி அவரை அழைத்து கலைத்தது.

பார்க்க, காமராஜ்!

யோசிக்காமல் அழைப்பை ஏற்றுவிட்டவர் உணர்ந்தது அந்த குள்ளநரி, நீர்யானை ஆகியிருந்ததை.

“வாடி என் ஏமா.. ****”

ஒரு தகுதி தராதரம் எதுவும் இன்றி காமராஜ் உதிர்த்த வார்த்தைகள் வீரியம் மிகுந்திருந்தது‌.

வேலை நேரத்தைத் தாண்டி அவரின் அழைப்பை ஏற்ற தன்னின் மடமையை தான் அச்சமயம் நிந்தித்தபடி இருந்தார் ஹேமா.‌

அடக்கப்பட்ட கோபக் குரலில், “உன் தேவைக்குத் தான் ஊருக்கு பத்து பேர்.. ச்ச.. கடைக்கு நாலு பேர் வெச்சிருக்கியே, போதாதா? மூடிட்டு போன வை’டா நா*ரி நாயே. வந்துட்டேன், வரியா ப**கரியானுட்டு. உன் எச்சத்தனத்த வேற எவளோகிட்ட காட்டு, மீறி திரும்ப வந்த..” என்று நிறுத்தியவர் அவரின் வளர்ந்த மகன்களின் முகத்தைப் பார்த்தபடி,

“ஊத்த வேண்டிய எடத்துல ஆ*ட் ஊத்தி எரிச்சுடுவேன். காட் இட்” என்றவர் கத்தியதில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

எத்தனையோ பேரை கடந்து வந்திருக்கிறார் ஹேமா. அதில் காமராஜை போன்றோரும் அடக்கம். இருந்தாலும், இந்தாள் அளவிற்கு யாரும் தரமிறங்கி சென்றதில்லை.

மனது கொதித்தது. காலையில் அவன் அந்த பெண் நயனியிடம் பேசிய பேச்சென்ன? இப்போது என்னிடம் இவனின் அசூய பேச்சென்ன என்று நினைத்து பொசுங்கியவர் மூளையில் வெட்டிய யோசனையை யோசிக்காது செய்து முடித்திருந்தார்.

காமராஜ் அவரிடம் பேசிய ஆடியோவை வாட்ஸ் ஆஃப்பில் இருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் ஷேர் செய்துவிட, அதை கேட்டவுடன் சரபேஷ்வரனே அதிர்ந்து அழைத்துவிட்டார் ஹேமாவிற்கு.

விசயம் பெரிதானது. காமராஜின் மற்றொரு முகத்திரை கிழிக்கப்பட்டது கொரோனாவை விட வேகமாக பரவியது.

அதை கொஞ்சமும் எதிர்பாராத காமராஜின் வன்ம வெறி குமரனிடம் தான் திரும்பியது!


•••
 

Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 2(ii)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
அடேய் அடேய் குமரன் செவினேனு இருக்கான்டா. அவன் பக்கம் ஏன்டா திரும்புற குள்ளநரி... என்னை விடுங்க நானே அந்த குள்ளனை ஒரு கை பார்த்துடுறேன் 😡😡🏃‍♀️
 
New member
Joined
Aug 20, 2025
Messages
19
அடேய் அடேய் குமரன் செவினேனு இருக்கான்டா. அவன் பக்கம் ஏன்டா திரும்புற குள்ளநரி... என்னை விடுங்க நானே அந்த குள்ளனை ஒரு கை பார்த்துடுறேன் 😡😡🏃‍♀️
குள்ளன் நீர்யானையா மாறியது நீங்க ஒரு கை என்ன? ரெண்டு கையே பாருங்க 😂
 
Top