New member
- Joined
- Aug 20, 2025
- Messages
- 19
- Thread Author
- #1
நேற்று கார்த்தி சொன்னது போல் தான் நடந்தது.
காலை எட்டு மணிக்கு அவர்கள் கடையை திறப்பதற்கு முன்பே கார்த்தி வுமன்ஸ் செக்ஷனிற்கு மாற்றப்பட்டிருந்த செய்தி ஹாஸ்டலுக்கு வந்திருந்தது.
குமரனும் பாண்டியும் நக்கலாக சிரிக்க, கார்த்தி பல்லைக் கடித்தான்.
“இன்னிக்கு இருக்கு அந்த குள்ளனுக்கு” என்றவன் சாப்பிடாது சத்யமிற்கு விரைந்திருந்தான்.
கடையின் திறப்புதான் ஒன்பது மணி. ஆனால் உள் வேலையெல்லாம் காலை ஏழு மணிக்கே ஆரம்பித்துவிடும்.
குமரன் பொறுமையாய் நேரத்திற்குக் கிளம்பி நின்றிருக்க, பாண்டி, “கருப்பு முத்துராமன் வந்திருக்கானாம்டா. நேத்து மேல சர்வர் ரூம்ல பார்த்ததா பசங்க சொன்னாங்க” என்க,
“அவனெங்க இங்க? சென்னை மகாலட்சுமில தான இருக்கறதா சொன்னாங்க?” என்றவன் புருவம் சுருங்கியது.
“அது வெள்ள முத்துராமன்’டா. அங்கையே அவன் வைஃபோட செட்டில் ஆகிட்டான். இவன் ஊரு பக்கம் இருந்தவேன், குள்ளமுனி சொல்லி ஸார் கூப்டிருக்கார்” என்க, மெல்ல மெல்ல காமராஜின் முடி பிடிபட ஆரம்பித்திருந்தது குமரனிற்கு.
ஆக, பிரச்சனைக்குப் பிள்ளையார் சுழி இட்டுவிட்டார் காமராஜ். அதை குமரனும் நுகர்ந்துவிட்டான்.
எந்தளவிற்கு அவர் செல்கிறார் பார்ப்போம் என்று நினைத்தபடி வேலைக்குச் செல்ல நடந்தவனை யோசனைகள் சூழ்ந்து சுழற்றியது.
நிச்சயம் அந்த சுழலின் அடி ஆழம் அவன் வாழ்வாதாரத்தை இந்தமுறை புரட்டிவிடும் என்று தெரிந்திருந்தாலும் ஒரு அசட்டு தைரியமும் அவனிடம் வராது இல்லை.
நடந்தபடியே ஊருக்கு அழைத்து அவன் ஐயா, அம்மா, தம்பியிடம் பேசிய கையுடன் பின் வழியாக சத்யத்திற்குள் நுழைந்தவனை வரவேற்றது ப்ரத்தியேக லேக்டோ கேலமைன் (Lacto Calamine) மணம்.
கண்ணை மூடி ஆழ மூச்சை இழுத்து விட்டவனுக்கு சமநிலை சுத்தமாய் இல்லை.
நேற்றிலிருந்து தவித்தவனின் மனது இப்போது மொத்தமாய் கோபத்தைப் போர்த்திக்கொண்டது.
பல்லைக்கடித்துக்கொண்டு பையோ மெட்ரிக் பன்ச் வைத்தவன் கடைக்குள் திரும்ப, “குமரா” என்றவள் குரலோடு மணமும் அவனை வசமிழக்க வைத்திருக்க, கோபவேகமாய் அவளிடம் திரும்பினான், சந்தனக்குமரன்.
குமரனின் கட்டுப்பாடு தான் அவன் குமரியிடம் மொத்தமாய் கட்டவிழ்ந்து போகுமே!
அந்த குமரியானள், நயனி.
நயன மனோகரி.
சந்தனகுமரனின் காதல் பைங்கிளி.
தேன் நிறத்தில் பாந்தமாய் குட்டிக் குட்டி மடிப்பெடுத்து கட்டிய இளஞ்சிவப்பு வண்ண டிஸ்யூ புடவையில், சற்று தூக்கலான முக அலங்காரத்துடன், பிச்சோடா கொண்டையில் காதிலும் கழுத்திலும் சற்று பெரிய முத்து பாசிகள் அணிந்திருந்தவள் நயனம் ஆடிய பய நர்த்தனத்தில் குமரனின் பொறுமை பறந்திருந்தது.
செக்யூரிட்டி அக்கா கத்தக் கத்த அவளின் கொடுங்கையைப் பற்றி இழுத்துக்கொண்டு பக்கவாட்டு அட்டை பொட்டி குடோனிற்குள் சென்றான்.
அவன் பிடித்திருந்த கை நன்று வலியெடுக்க, அதை பிரிக்கும் மார்க்கமின்றி சன்ன குரலில், “நேத்து நைட்டு அந்த தெரு நாயி வீட்டுக்கே வந்துட்டான் குமாரா” என்றாள் தவிப்பாய்.
ஒரு சிறு அதிர்வோடு, “என்ன?” என்றவன் மண்டை சூடானது.
அவன் கண்ணைப் பார்த்தபடி, “ம்ம்.. குடிச்சிருந்தான் வேற” என்க,
அவன் கோபம் அவள் கையில் வெளிப்பட்டது.
அதில் சற்று நெளிந்தவள், “வேல முடிஞ்சு போறப்போ வழி மறச்சு நின்னான். மொத அந்நேரத்துக்கு எனக்கு ஒன்னும் புரியல. அவனா பக்கத்துல வரவும் வேகமா வீதி பக்கம் நடந்து வேலண்ணே பட்டற’குள்ள போயிட்டேன்”
குமரனின் முகம் தீவிரமாய் உருமாறிவிட, “அப்றம்” என்றான் தாடை இறுக.
“வேலண்ணே கூட தான் வீட்டுக்கு நடந்து வந்தேன். பார்த்தா வீட்டு முன்ன வந்து நிக்கறான். நைனா அவனிருந்த இருப்பப் பார்த்து சத்தம் போட்டு அனுப்பிட்டாரு. பார்த்தா.. இப்போ..” என்றவள் இழுக்க, அவன் முறைத்தான்.
“முழுசா சொல்லு நயனி. என்னத்த செஞ்சான்?” குமரன் அழுத்த,
எச்சிலை விழுங்கியபடி, “என்னைய லவ் பண்…” என்றவள் முடிப்பதற்குள் குடோனிற்குள் நாலைந்து ஆட்களுடன் நுழைந்திருந்தான், காமராஜ்.
நொடி தாமதிக்காது, “அடிங்கடா” என்றொரு சப்தம் தான்.
நால்வரும் சேர்ந்து குமரனை அடி வெளுத்துவிட்டனர்.
“அய்யோ, ஸார் வேண்டாம். நிறுத்த சொல்லுங்க” என்று கத்திய நயனியின் கையைப் பற்றி தன்புறம் இழுத்துக்கொண்டான், காமராஜ்.
நடுவில் குமரனின், “டேய்” என்ற அதட்டலையெல்லாம் காமராஜ் கண்டுகொள்ளவே இல்லை.
நயனியின் கையை இறுக பிடித்தபடி நின்றிருந்தவன் அவளை துளி விலக விடவில்லை.
சத்தம் கேட்டு செக்யூரிட்டிகள் வந்துவிட, பன்ச் வைத்து வந்த ஊழியர்களும் குடோனிற்குள் வந்துவிட்டனர்.
என்ன முயன்றும் குமரனை அடிப்பதை அந்த நால்வரும் நிறுத்தவில்லை. ஆட்கள் பிடித்து தள்ளி நிறுத்துவதற்குள் வலி தாங்காது சுருண்டு விழுந்துவிட்டான் சந்தனக்குமரன்.
அதை பார்த்து சத்தமில்லாது நயனியை நகர்த்த விளைந்த காமராஜ், அங்கு வேக நடையில் வந்த ஹேமாவை சுத்தமாய் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஹேம லஷ்மி, சத்யம் சில்க்ஸின் மேனேஜ்மென்ட் ஹேட்.
சத்யமின் ஹேட் ப்ரன்ச், திருச்சிராப்பள்ளியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பணியில் இருந்தவர்.
சரபேஷ்வரனின் செப்பமான தோஸ்த்.
புதிய கிளை நிர்வாகிக்கவென இங்கு வந்திருப்பவர், ஆள் கட் அண்ட் ரைட். நேர்மையும் நிமிர்வுடன் வளைய வரும் ஆர்மி மேனின் மனைவி.
“கடை ஷட்டர் தெறக்கறதுக்கு முன்னவே சண்டையா?” என்று வந்தவர் என்னமோ அமைதியாகத் தான் கேட்டார்.
அங்கு ஹேமாவிற்கு இருந்த மதிப்பு சற்று அதிகம் தான். அதை கணக்கிட்டு, தன்னை காக்கும் முயற்சியாய், “என்ன மேடம், இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீங்க சாவுகாசமா பேசறீங்க” என்று குரலை உயர்த்தியிருந்தார், காமராஜ்.
அங்கு அழுது வடிந்த நயனியின் பின்பமும் தவறாய் பதிவாக ஆரம்பித்திருக்க, பாண்டி, “தூக்குங்கடா கட்டெறும்பு” என்று குரலில் குமரனை தூக்கிக்கொண்டு வெளியேற முயன்றனர்.
ஹேமா, “பாண்டி, மொத தண்ணீ தெளிச்சு அவன முழிக்க வை. சாப்டானா காலைல?” என்றபடி குமரன் அருகில் செல்ல, பொறுக்க முடியவில்லை காமராஜிற்கு.
அதற்குள் அவனின் கையாளுக்கு கண்ணைக் காட்ட, அவன் கடைக்குள் ஓடியிருந்தான்.
நயனிற்கு நிலை சற்று புரியவும், அத்தனை ஆத்திரம் மூண்டது காமராஜைப் பார்த்து.
“விடுய்யா கைய” என்று அவள் உதறிய வேகத்தில், சற்று தள்ளி தள்ளாடி நின்றிருந்தார் காமராஜ்.
நயனி, “ஹேமா’ம்மா” என்றவரிடம் விரைய,
“இந்தாம பொண்ணே, உன்ன இவன்கிட்ட இருந்து காப்பாத்துனா என்ன செய்யற நீ?” என்றபடி தன் அரையடி ஹூ அதிர,
“நேத்து தான் இந்த ஸ்தாபனம் ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள நம்ம கடைய நம்பி வேலையில இருக்க பொண்ணுகிட்ட இவன் தப்பா நடந்துக்க பார்த்திருக்கான்” என்க, அதிர்ந்துவிட்டனர் சுற்றியிருந்தவர்கள்.
அதை கேட்டபடி வந்த கார்த்தி, “வாயப் பேத்துடுவான் பாத்துக்க. யாருடா தப்பா நடந்துக்கிட்டா” என்று காமராஜின் சட்டைய பிடித்து ஒரே தூக்காக அவன் தூக்கிவிட, குள்ளமுனி காற்றில் தத்தளித்தது.
அந்த பிடியில் இருந்து வெளிவர சற்று நேரம் பிடித்தது காமராஜிற்கு.
கார்த்தியின் கையை அழுத்திப் பிடித்துக்கொண்டு இருவர் அவனை தள்ளி நிறுத்தினர்.
ஜவுளி கடைகளில் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் தெரிந்திருக்கும். கடைகளை சம்பள உயர்விற்காக மாறிக்கொண்டே தான் இருப்பார்கள். நிரந்தரம் என்று யாரையும் ஒரு வகையறைக்குள் நிறுத்திவிட முடியாது, சிலரை தவிர.
அப்படியிருக்க, காமராஜை தெரியாதவர்கள் அங்கில்லை. அதிலும் தன்னை ஒரு பெ..ரிய இஸ்திரி பொட்டி அளவிற்கு மிகைப்படுத்தியிருக்க, நல்லவர் வல்லவர் நாலும் தெரிந்தவர் மீது கை வைத்தால், தாங்குமா?
அங்கிருந்த பல எரிமலைகள் எப்படி பொறுக்கும்?
வெடிக்கும் நேரத்தில் தண்ணீரை ஊற்றியிருந்தார், ஹேமா.
“நீங்க உள்ள தானே இருந்தீங்க ஸார்? அதெப்படி உங்க கண்ணுக்கு அங்க இருந்து இங்க குடோன் வரை தெரிஞ்சுது. நூறு அடி வரை தெளிவா பார்க்கறீங்கனா?” என்றவர் முக பாவனையில் அத்தனை ஏளனம்.
நரியை கண்டுகொண்டார்.
நயனி, “அவர் என்கிட்ட பேசிட்டு தான் இருந்தார் ஹேமா’ம்மா. ஸார் தான் குமரன அடிக்க ஆள கூட்டிட்டு வந்தார்” என்றாள் காமராஜை முறைத்துக்கொண்டு.
அது காமராஜை நச்சென்று அடித்திருக்க, அதை அவளிடமே திரும்ப முயன்றார்.
“என்ன ஒரு இருபத்தி ரெண்டு வயசு தான உனக்கு. என்ன தெரியும் ஆம்பளைங்களைப் பத்தி? அவன் உன்னோட நின்ன நிலைப் பார்த்து தான் நா வேகமா வந்தேன்.
உன் அப்பா வயசு தான எனக்கு. ஊரு இருக்க இருப்புக்கு, அவன் என்ன எண்ணத்தோட இழுத்துட்டு வரான்னு கூடவா தெரியாது. என் பொண்ண எவனாவது இப்டி தள்ளிட்டு போயிருந்தா, வெட்டி கொன்னுருப்பேன் இப்போ” உடல் நடுங்க ஆத்திரம் பொங்கி வழிய காமராஜ் ஆடிய ஆட்டத்தில் ஹேமாவே அவரை நம்பியிருப்பார் போல.
அத்தனை தேர்ந்த நடிப்பு. பெண்ணிக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்காத ஒரு ஆண் மகனை(?) அப்படியே பிரதிபலித்தான் காமராஜ்.
குமரன் முழித்திருக்க, அங்கு முத்துராமன் வந்துவிட்டான்.
நயனி ஹேமாவிடம் நடந்ததை விளக்க, “அவன காப்பாத்த சும்மா சொல்லாத மனோ. அவன் உன்கிட்ட தப்பா தான் நடந்துக்கிட்டான்” ஆணித்தனமாய் சொன்னவன், குடோன் சிசிடிவி காட்சிகளை அவன் போனில் ஓட்டிக்காட்டினான்.
அனைவரும் பார்த்தனர்.
அதில் நயனி - குமரனின் நெருக்கம் நெருடியது.
இங்கு யாரும் சுத்த யோகியன்கள் இல்லை. பற்பல காதல் பிட்டுகளும் சிற்சில எல்லைமீறிய உரசல்களும் இயல்பாய் நடக்கும்.
விதிவிலக்கான சிலரைக் கூட, தேவையற்ற கசடுகளோடு பின்னி பிணைந்து பேசும் பேச்சுகள் கூட இயல்பும் வழமையும் தான்.
இருந்தாலும், பொது சபையில் தங்களின் பதிவை அழுந்த பதிவு செய்துதானே ஆக வேண்டும்.
‘ஆச்சா, போச்சா.. ஸார் மேல என்ன தப்பு, அவன வெளிய தள்ளுங்க, நாத்தம் புடிச்சவன்.. பொம்பள மேல கைய வைக்கறான், ரொம்ப ஒழுக்கமானவன்னு சொல்லிட்டு இப்போ பண்ணியிருக்க வேலயப் பாரு, இவேன் அந்த கடையில இருக்கும் போதே அப்டிபட்டவன் தான…’ என்று அடுக்கடுக்கான பேச்சுகள், அதற்கு இன்னும் கை கால் வைத்து சீண்டு முடிய ஆரம்பிக்க பெண்கள் படை வந்திருந்தது.
ஹேமா, “ஸ்ஸ்.. சத்தம் போடாதீங்க. மொத எல்லாரும் வேலைக்கு போங்க, மணி என்னாகுது? போங்க மொத”
முத்துராமன், “மேடம், அந்த புள்ளைக்கு எத்தன பெரிய அநியாயம் நடந்துருக்கு. நீங்க என்ன?” அவன் சவுண்ட் விட,
ஹேமா, “சிசிடிவி புடேஜ்’ஜ எங்கள கேட்காம எப்டி எடுக்கலாம் நீ?” என்றார் கூர்மையாய்.
“யார் கொடுத்த ரைட்ஸ் உனக்கு? எடுத்ததும் இல்லாம இத்தன பேர் முன்ன போட்டு வேற காட்டுற, ஹீரோவா நீ?” என்க, அதை முத்துராமன் எதிர்பார்க்கவில்லை.
என்ன பேசுவது என்றில்லாது, “காமராஜ் ஸார் தான்” என்றிருந்தான்.
ஹேமா, “அவர் தான் உனக்கு எம்.டி’யா?” என்றிருந்தார்.
காமராஜ், “என்ன இத்தன கேள்வி கேட்கறீங்க? ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்தத ஆதாரத்தோட நா காட்டினா என்னையவே கொற சொல்லுவீங்களா” என்று கிடைத்த கேப்பில் வீடுகட்ட ஆரம்பித்திருந்தார்.
யாரும் நகரும் எண்ணமில்லாது நின்றிருக்க, HR’ரை அழைத்துவிட்டார் ஹேமா.
ஹேமா, “முத்துராமன், இவங்க நாலு பேரோட கணக்க முடிச்சு அனுப்புங்க. ரெண்டு நாள் பே மட்டும் கொடுங்க” என்றிருக்க,
காமராஜ், “நா வேலைக்கு சேர்த்த பசங்களை நீ யார் வேலையவிட்டு தூக்க?” என்று அதற்கொரு ஆட்டம்.
நடுவில் குமரனை கார்த்தியும் பாண்டியும் மருத்துவமனை அழைத்து செல்ல முனைய, “போலீஸுக்கு கூட்டுங்க. இந்த மாதிரி பொம்பள பொறுக்கி எல்லாம்…” என்று துள்ளிய முத்துராமனை தயவு தாட்சண்யம் பாராது ஹேமா விட்டார் ஒரு அறை!
மொத்த இடமும் கப்சிப்.

Last edited:
Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 2(i)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.