நயனவாசினி - 09(ii)

Member
Joined
Aug 20, 2025
Messages
36
ஹேமாவிற்கு பத்திரிகை வைக்க அவர் வீடு தேடி சென்றிருந்தனர், குமரனும் நயனியும்.

நல்ல தரமான நாட்டுக் கொய்யா, செந்தூரம், தேன் பலா, நெல்லிக்காய் என்று கை நிறைய வாங்கிக்கொண்டு முகம் பூரிக்க சென்றனர்.

அவர்கள் வரும் தகவல் தெரிந்ததால், ஹாலில் தயாராக அமர்ந்திருந்த ஹேம லஷ்மி தான் முற்றிலும் மாறியிருந்தார்.

கண்களுக்குக் கீழ் கருவளையம் பூத்து, உடல் எடை நன்றாக குறைந்து மெலிந்து காணப்பட்டார்.
ஆனால் என்ன நடந்திருந்தாலும் அவர் முகத்தில் இருந்த புன்னகை மட்டும் மாறவே இல்லை.

இடது முன்னங்காலில் முறிவு மற்றும் வலது மேற்புற கையில் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.

விபத்தின் போது அவர் கீழே விழுந்ததினால் முன் வரிசை பற்கள் ஏறுக்குமாறாய் உடைந்தும், மேற்புற தாடையில் குத்தியும் இருந்ததால் அவர் தாடை அமைப்பில் ஒரு மெல்லிய மாற்றம் வந்திருந்தது.

ஹேமா மிகவும் வருந்துவார் என்று கருதியே பெரும்பாலும் யார் வீட்டுக்கு வர முனைப்பு காட்டினாலும், நித்யன் மறுத்துவிடுவான்.

“ஸாரி, உங்க பார்வையில ஒரு சின்ன சேஞ்ச் வந்தாலும் அம்மா வருத்தப் படுவாங்க. அவங்க நல்லான பின்ன நீங்க வந்து பாருங்க. எங்களோட ஹும்பிள் ரெக்வஸ்ட் இது” என்றுவிடுவான்‌.

நிரஞ்சன் தான் மொத்தமாய் ஹேமாவை உடன் இருந்து பார்த்துக்கொண்டது. சைலேந்திரன் இருந்தாலும் அவரை எட்ட நிறுத்திவிட்டனர் மகன்கள் இருவரும்.

“நிரா, ஜூஸ் போட்டு வெளியவே வைடா. கொஞ்சமா ஸ்நாக்ஸ் மட்டும் வை, போதும். அப்பா சூடா சக்க உப்பேரி போடுறாரே அத ப்ளேட்ல வை” என்க, வாசல் கதவை திறந்துக்கொண்டு வந்தான் சந்தனக்குமரன்.

அவன் அவரும் முன்னரே, “ஹேமா’ம்மா” என்று ஆர்ப்பரித்து கொண்டு ஓடி வந்தாள், நயனி.

அங்கு வரும் முன்னரே குமரன் சொல்லித் தான் அழைத்து வந்திருந்தான்.

“அவங்க உடலளவுல நல்லா இருக்காங்க நயனி. மனசு தான் என்ன இருந்தாலும் சங்கடப்படும். நடக்க முடியாம பசங்க தூங்கிப் பிடிக்கும் போது நம்மல அறியாம ஒரு இயலாமை வந்திடும். பார்க்க போற நாமலும் பார்வையும் பேச்சும் அவங்களுக்கு ஆதரவா இருக்கனும். பரிதாபத்தை கொண்டு பாத்து வைக்காத, அதுதான் அவங்களுக்கு ஆபத்து. புரியும்னு நெனக்கறேன்” என்றிருக்க, மண்டையை ஆட்டிக்கொண்டாள்.

நயனி, “ஹேமா’ம்மா நல்லாகிட்டீங்களா? நல்லா சாப்டறீங்களா? தூங்கறீங்களா? ஆனா இளச்சுட்டீங்க” அவள் சோக ராகம் படிக்க, “நயனி” என்று குரலுயர்த்தினான், குமரன்.

“டேய், விடுடா. சும்மா அவள மெரட்டாத” என்ற ஹேமா முகம் அன்று கனிந்திருந்தது.

நிரஞ்சன் அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவர, “இந்தாங்க” என்றவன் நயனியிடம்,

“உங்க அம்மா சாப்டவே மாட்டீறாங்க’க்கா. அப்பா மிரட்டி தான் சாப்ட வைக்கறார். நீங்களே கேளுங்க” என்றவன் ஹேமாவின் அருகில் அமர, குமரன் முகம் கனிந்தது.

அம்மாவை தாங்கும் மகன்களை அவன் பார்த்திருக்கிறான். ஏன் அவனும் கூட அப்படித்தானே. ஆனால் இம்மாதிரியான ஒரு பெரும் இக்கட்டில் இருந்து மீண்டு வருபரை கண்ணும் கருத்தாய் பார்த்துக்கொள்ளும் பிள்ளைகளை இப்போதுதான் கண்ணுற்றான் குமரன்.

அதில் நிரஞ்சனின் பேச்சு அவனை நன்றாக இலக வைத்திருந்தது.

பழங்கள் அடங்கிய பையை அவன் நிரஞ்சனிடம் தர, அம்மாவை பார்த்தான்.

ஹேமா விழியசைக்கவும், “தேங்க்ஸ் ப்ரோ” என்றவன் அதை அப்படியே பக்கத்திலிருந்த டீபாய் மேல் வைத்துவிட்டான்.

நயனி, “ஏன் ஹேமா’ம்மா. சார் நல்லா சமைக்க மாட்டாரா?” என்க,
சத்தமாய் சிரித்துவிட்டார் அவர்.

“எங்க அப்பா சமையல் உங்க ஹேமா’ம்மா விட பெட்டர் தான். இவங்களுக்குத் தான் உங்க சத்யம் சில்க்ஸ் வரமுடியலையேன்னு கவலை.. கவலை” என்ற நிரஞ்சன்,
“இருங்க நா ஸ்நாக்ஸ் கொண்டு வரேன்” என்று எழுந்துக்கொண்டான்.

குமரன் அவன் பங்கு நல விசாரிப்பு முடிந்த கையோடு திருமண பேச்சை எடுக்க, “ம்ம் சரண் சொன்னான். எனக்கு ரொம்ப ஹேப்பி. எங்க கல்யாணம்? வீட்டுல என்ன சொல்லுறாங்க?” அவர் இயல்பாய் கேட்க,

“ஸாரா?” அதிசயத்தால் நயனி.

அவளுக்கு எல்லாம் ஆச்சர்யம் தான். அவள் இயல்பும் அதுதான்.

ஹேமா, “ம்ம்” என்றவர் குமரனை பார்க்க,

“நயனி வீட்டு சார்ப்புல மட்டும் தான் மேடம் கல்யாணம் நடக்குது. எங்க வீட்டுல ஒத்துக்கல” என்க,

சுருங்கிவிட்ட முகத்துடன், “ஓ..” என்றவர்,

“அதனால என்ன? நயனிய கல்யாணம் பண்ண சில தியாகம் நீ செய்யத்தான் வேணும். சும்மா தூக்கி எங்க பொண்ண நாங்க கொடுத்துடுவோமா என்ன?” அவனை இயல்பாக்க பேசினான்.

குமரன், “தியாகம் என்ன மேடம். நானே அவதான், இதெல்லாம் வரும்னு எனக்கு தெரியும். ஆனா இந்தளவுக்கு எதிர்பார்க்கல. அதான்” என்றான்.

அவன் பேச்சிலேயே அவன் மனகணப்பை உணர்ந்தார் ஹேமா.

“விடுடா. எல்லாம் கொஞ்ச நாள் தான். குட்டி குமரனோ நயனியோ வந்தா ஓடி வரப்போறாங்க. பிள்ளைங்க மேல கொட்டின கோபத்த பேரபிள்ள மேல கொட்ட முடியாதுல்ல” என்க, நயனி நெளிந்தாள் என்றால் குமரனை அதை இலகுவாக்கியது.

நித்யன் ஸ்நாக்ஸ் கொண்டுவர, பிகு செய்யாமல் உண்டனர்.

“கல்யாணம் மதுரைல தான் ஹேமா’ம்மா. நீங்க வரமுடியாதுன்னு தெரியும். ஆனா மறக்காம ஸார் பசங்களோட ரிசப்ஷன் வந்தரனும் நீங்க” என்றவள் விபரம் சொல்ல, அவரும் வருகிறேன் என்றார்.

சைலேந்திரன் வர, அவருடன் பேசியவர்கள் தம்பதிகளாக அவர்கள் மாற இருக்கும் நிகழ்விற்கு பத்திரிக்கை வைத்து வரவேற்றனர்.

மறாம் நாள் சத்யமில் ஒருவர் விடாது அத்தனை ஊழியர்களுக்கும் பத்திரிக்கை வைத்தான், குமரன்.

கூட நின்றருந்த கார்த்தியோ, “இந்தாங்க அஞ்சு ரூபா சாக்லேட். சாப்பிட்டு வந்து என் குமரனை வாழ்த்துங்க” என்று அத்தனை நக்கலாகவே அத்தனை பேரையும் அவன் நடந்தினான்.

அன்று இந்த கூட்டம் தானே அவன் குமரனை நயனியோடு அத்தனை மோசமாய் சித்தரித்துப் பேசியது.

அவர்கள் பேச்சையெல்லாம் அவன் காது கொடுத்துக்கூட கேட்க மாட்டான் தான், இருந்தாலும் பேசியவர்கள் வாயை அவனால் உடைக்க முடியது.

ஆனால், அவன் பேச்சால் அவர்கள் மூக்கையாவது செய்கையில் உடைக்கும் முயல்வை திவ்யமாய் அரங்கேற்றிக்கொண்டிருந்தான் குமரனின் துணை மாப்பிள்ளை.

இதையெல்லாம் முத்துராமன் காதில் ஓதிக்கெண்டிருந்தான் சத்யமில் இருந்த அவன் நண்பன் (ஒற்றன்), பன்னீர்செல்வம்.

காமராஜின் மரண அடியில் இருந்து தப்பிப் பிழைத்து வேலூருக்கு சென்றிருந்தவன் முற்றிலும் முடங்கித்தான் கிடந்தான்.

வஞ்சம் அவன் மனதில் தீயாய் எரிந்தது. இருந்தும் என்ன பயன்? இனி அவனால் சரியாக நடக்க முடியாதபடி செய்திருந்தாரே காமராஜ்.

முத்துராமன், “அந்த *** கண்ணுல பட்டானா? எங்க பாத்தாலும் அவன கொல்லனும்டா பன்னீரு” என்று சீனந்தான்.

அவன் கணுக்கால் எலும்பு உடைந்திருக்க அதை சரி செய்தும் பலனில்லாது வலது காலை தாங்கித் தான் நடக்க முடியும் என்றுவிட்டனர் மருத்துவர்கள்.

முத்துராமனுக்கு அது பேரிடி.

காமராஜின் மேல் அத்தனை துவேஷம் மூண்டது. நயனியும் குமரனும் அவன் கண்முன் இருந்தாலும் அவர்களைவிட நம்ப வைத்து கழுத்தறுத்த குள்ளமுனியின் மீதான அவன் ஆத்திரம் மட்டும் அடங்கவே இல்லை.

இருந்தாலும் அவனால் நயன மனோகரியை விட மனதில்லை.

காத்திருக்க ஆரம்பித்தான் அவனுக்கான தகுந்த நேரத்திற்கு நயனியை அவன் வசமாக்குவதற்கு.

முடியுமா அது?

••••
 
Author: Nayanavaasini
Article Title: நயனவாசினி - 09(ii)
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
96

Marupadiyuma
 
Top