New member
- Joined
- Aug 16, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
ஜெனி தனது மொபைலின் மூலம் ஏற்கனவே அந்த பப்பில் இருந்த அனைத்து கேமராக்களையும் ஹேக் செய்து இருந்தாள். ஆகையால் இப்பொழுது தனது அலைபேசியில் சரண்யாவின் பாதுகாவலர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, அந்த பப்பில் இருக்கும் கேமராக்கள் மூலம் ஆர்வி அந்த இடத்தை விட்டு சென்று விட்டான் என்பதையும், மேலும் அவன் ஜெனியை கண்காணிக்க நியமித்திருந்த ஆட்களும் இன்னும் கார் பார்க்கிங் வர இரண்டு நிமிடங்கள் இருப்பது என்பதையும் கணக்கிட்டு கொண்டாள்.
பனிக்காற்று அடிக்க ஆரம்பித்திருந்தது. கார்பார்க்ங்கில், ஜெனி தனது தோழியை அவளது காரில் அமர்ந்தி விட்டு, அந்த ஏழு பேரை நோக்கி திரும்பினாள். மேலே ஒளிரும் டியூப் லைட் சில நேரங்களில் மட்டும் மினுக்கி அணையத் தொடங்கியது. இரவில் அந்த இடம் நிரம்பியிருந்தது — நிசப்தம் மட்டும் அல்ல, அச்சமும் கூட.
அவள், பதினோறு வயதிலேயே சண்டையை கற்றுக்கொண்டு, இப்போது 21ஆம் வயதில் உடல் இறுக்கமாகவும், கண்கள் நேரத்தை அளக்கும் கடிகாரம் போலவும்.
அவள் முகம் அமைதியாக இருந்தது. கறுப்பு டாங்க் டாப், பழைய ஜீன்ஸ், நன்கு கட்டிய ஜடையாக முடி. சண்டைக்கு தயாராக இருந்தது அவளுடைய ஒவ்வொரு சுவாசமும்.
முதல் பையன், தலையைக் குனித்தபடியே ஓடி வந்து ஒரு பெரிய கை வீசினான்.
அவள் அசையவில்லை. அந்த ஹூக் பஞ்ச் சரியாக அவளுக்குப் பக்கத்தில் சென்றது.
அவள் மெதுவாகப் பக்கமாக நகர்ந்தாள்.
அவனின் கை இன்னும் மேலே இருக்கும் முன்பே, அவள் அவனது மூக்கீழ் ஒரு வலிமையான பன்ச் கொடுத்தாள்.
அவன் பின்னோக்கி விழுந்தான். மண்ணில் விழும் போது அவன் கண்கள் மூடியிருந்தன.
இரண்டாவது மற்றும் மூன்றாவது பையன்கள் ஒரே நேரத்தில் ஓடி வந்தார்கள்.
அவள் இடது காலால் ஒன்று சிறிய சுழற்சி செய்து கீழே எடுத்து வந்தாள். ஒரு low kick— நேராக முழங்காலில்.
அவன் தவித்தபடியே கீழே விழுந்தான், எழ முடியாதபடி.
அவள் நிலையை மாற்றிக் கொண்டாள். மூன்றாவது பையனின் காலில் அவள் ஒரு நேரடி அடியை வைத்தாள் — instep-க்கு நேராக.
அவன் தொண்டையில் ஒரு அழுத்த சத்தம் விட்டான், அதற்குப் பிறகு மூச்சே வாங்க முடியாமல் விழுந்தான்.
நான்காவது பையன், ஒரு உடைந்த பியர் பாட்டில் எடுத்துக் கொண்டு ஓடினான்.
அவன் அடிக்க வரும் முன்பே அவள் தன் எல்போவை கொண்டு அந்த பாட்டிலை உடைத்தாள்.
அவள் உடனே அவனது கையை பிடித்து, ஒரு திடமான wrist lock கொண்டு அவனை வளைத்தாள்.
அவனது உடல் கட்டுப்பாட்டை இழந்து, நேராகக் concrete சுவரில் பறந்தது. சுவர் அதிர்ந்தது. அவன் கீழே சாய்ந்தான்.
அவளுடைய கண்கள் மற்றவர்களை நோக்கின. அவர்கள் நிற்கிறார்கள். பதற்றம் தெளிவாக முகங்களில் தெரிந்தது.
அவர்களில் ஒருவன் எதிர்பாராத விதமாக ஓடி வந்து அவளை கட்டிக்கொள்ள முயன்றான்.
அவள் அவனது கால்நிலையை வாசித்தாள். பறவையைப் போல ஒரு சுற்றுப்பட்டு தூக்கி, hip toss — அவர் எளிதாக பூமியைத் தொட்டான்.
இன்னும் இரண்டு பேர் மீதமிருந்தார்கள்.
ரித்விக் மட்டும் துணிவோடு நேராக வந்தான்.
அவள் ஒரு பக்கம் பார்த்தாள் — ஏமாற்றியது.
அவன் அதனை உணரவும் முடியாமல், அவள் காலால் leg sweep— அவன் தூக்கி எறியப்பட்டார். நேராக ஒரு குப்பை டம்பருக்குள் விழுந்தான். அடிபட்ட சத்தம் மட்டும்.
இப்போ ஒரே ஒருத்தன் தான். பிரணவ் முகத்தில் பயம். கைகளை தூக்கி:
"நா எதுவும் பண்ணலம்மா… என் நண்பர்களுடன் வந்தேன்… மன்னிச்சுக்கோ..."
அவள் அவனை ஒருமுறை பார்த்தாள்.
பின்னர் மெல்ல திரும்பி நடந்தாள்.
பின் சரண்யாவின் காரை எடுத்துக்கொண்டு ஜெனி அவ்விடத்தை விட்டு அகலவும், ஆர்வி அவளை கண்காணிப்பதற்காக நியமித்திருந்த ஆட்களும் வந்து சேர சரியாக இருந்தது. ஆர்வியும் ஜெனி இருக்கும் இடங்களில் உள்ள கேமராக்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பது நன்றாக அவளுக்கு தெரியும்.
அதனால்தான் தற்பொழுது சண்டை செய்வதற்கு முன்பே அந்த கேமராக்களை வெவ்வேறு கோணங்களில் திசை திருப்பி இருந்தாள்.
இப்பொழுது ஆர்வியின் ஆட்கள் கார்ப்பார்க்கின் வந்து சேரவும், அங்கு யாரும் இருந்ததற்கான தடயம் கூட இல்லை. மினிஸ்டரின் ஆட்கள் அந்த ஏழு பேரையும் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தியிருந்தனர், ஜெனி சரண்யாவின் பாதுகாவலர்களிடம் அவளை ஒப்படைத்து விட்டு மீண்டும் அந்தப் பப்பிற்க்கே வந்தாள்.
இப்பொழுது அங்கு ஆர்வியின் ஆட்கள் இல்லை, எப்பொழுதும் ஜெனி ஒரு இடத்திற்கு செல்லும் முன்பு அவ்விடத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து அங்குள்ள அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் தனது நெட்வொர்க்குக்கு கீழே கொண்டுவந்து ,ஹேக் செய்து தனக்கு உபயோகமாக இருக்கும் தகவல்களை சேகரித்த பின்பு தான், அவ்விடத்திற்கு செல்வது வழக்கம்.
இங்கு வருவதற்கு முன்பும், இங்கு எந்தவிதமான நடைமுறைகள் நடக்கிறது... என்பதையும் மேலும் எவ்வாறு பொருட்கள் அவர்களுக்கு கிடைக்கிறது என்பதையும்... தெரிந்து கொண்டுதான் வந்திருந்தாள். அவளது நல்ல நேரமோ அல்லது ஆர்வியின் கெட்ட நேரமோ... அந்தப் பப்பிற்கும் ஆர்வியின் ஆட்கள் மூலம்தான் போதைப் பொருட்கள் கிடைத்துக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது ஜெனி நேராக சென்று நின்றது, பார் கவுண்டரில் இருந்து, அனைவருக்கும் போதை மருந்து சப்ளை செய்து கொண்டிருந்த ஆடவனிடம் தான்.
ஜெனி எப்பொழுதும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, அமைதியாக சென்று அவனிடம் நின்றாள்,தனது கை துப்பாக்கியை எடுத்து அவனது விலா எலும்புக்கு கீழே வைத்தாள்... அவன் அவளிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தான்... அடுத்த நொடி சரியாக அவளது துப்பாக்கியில் இருந்து ஒரு தோட்டம் அவனது தொடையை பதம் பார்த்திருந்தது.அதேசமயம் அந்த சத்தம் யாருக்கும் கேட்காத வகையில் அங்கிருந்த கிளாஸ் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து கொண்டிருந்தது.
அடுத்த நொடி அங்கிருந்து அனைவருக்கும் ஏதோ சரியில்லை என்பது புலப்பட அங்கிருந்து கிளம்ப தயாராகினர். ஜெனியும் அந்த நபரை அழைத்து கொண்டு அவள் எப்பொழுதும் இன்வஸ்டிகேசன் செய்யும் இடத்திற்கு சென்றாள்.
வேறு எங்கும் இல்லை அந்த 7 நட்சத்திர விடுதியில் உள்ள கடைசி தளத்தில் தான் அவளது இடம் உள்ளது. அங்கு தான் அவனை அழைத்துச் சென்று இருந்தாள். அந்த 7 நட்சத்திரம் விடுதியில் உரிமையாளர் ஆன எம்பி விஸ்வநாதன் ,அவர்கள் மட்டும் எப்பொழுதும் பயன்படுத்தும் லிப்டில் தான் அவளும் எப்பொழுதும் பயன்படுத்துவாள்.
ஆகையால் அதில் உள்ள சி சி டிவி புட்பேஜ் எப்பொழுதுமே ஜெனியின் கிலவுட் ஸ்டோரேஜ் இல் தான் சேவ் ஆகும்.
"மேடம் ,என்ன எதுக்கு இங்க அழைச்சிட்டு வந்து இருக்கீங்க... எனக்கு எதுவுமே தெரியாது... சரக்கு தருவாங்க ,நான் அத சப்ளை பண்ணுவேன், மத்தபடி எனக்கு வேற எந்த விஷயமும் தெரியாது என்ன விட்ருங்க"
ஜெனி தனது பிஸ்டலை அவனது உதட்டின் மேல் வைத்து....
"ஷ்ஷ்ஷ்"என்று சைகை செய்தாள். ஜெனி அழைத்து வரும்போது அறைமயக்கத்தில் இருந்தவன் தட்டு தடுமாறி தான் அவளோடு வந்து சேர்ந்தான்.
"நாம் ஒரு குறும்படம் பார்க்கலாமா?"என்று கூறியவள் அந்த அறையில் உள்ள ப்ரொஜெக்டரை ஆன் செய்தாள், அதில் சில பள்ளி மாணவிகளை போதை மருந்துக்கு உட்படுத்தி, அவர்களை அங்கு பப்பில் உள்ள பண பிசாசுகளிடம் விற்றுக் கொண்டிருந்ததை தெளிவாக காட்டியது.
மேலும் அங்கு வந்த சிலர் அந்த பணக்கார பிள்ளைகளையும் மற்றும் அந்த பள்ளி மாணவிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்துவதும் நன்றாக பதிவாகி இருந்தது.
இவை அனைத்தும் கண்ட அந்த ஆடவனுக்கு வியர்த்து வழிய ஆரம்பித்தது, ஜெனி அவனை எதுவும் செய்யவில்லை, தனது செல்லப் பிராணியான பைரவை அழைத்தாள் ஜெனி . அது ஒரு ராட்வீலர் வகையை சார்ந்த நாய் ஆகும். அதன் உயரமும் அதன் கூர்மையான பற்களும் பார்ப்பதற்கு பயத்தை விலை விப்பதாக இருக்கும். ஜெனி அழைத்த ஒற்றை அழைப்பிற்கு ஓடிவந்து அவளது காலுக்கு அருகில் மண்டியிட்டது.
"அவன் தூங்கக் கூடாது"என்று கட்டளையை பிறப்பித்தவள் அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.
அவனுக்கோ அடிபட்ட இடத்திலிருந்து குருதி வழிந்து கொண்டே இருந்ததால், உடலில் உள்ள அனைத்து சத்துக்களும் வற்றி கண்கள் சுழற்றிக்கொண்டு வந்தது. அவன் கண்ணை மூடிய அடுத்த நொடி அவனது அடிபட்ட காலை தனது நகத்தின் மூலம் மீண்டும் காயப்படுத்தியது பைரவ். அவன் அலறல் அந்த அறையிலேயே முடங்கி விட்டது, அது ஒரு சவுண்ட் அறை என்பதால்.
வெளியில் வந்த ஜெனி அந்த அபார்ட்மெண்டில் இருந்த மற்றொரு பெரிய அறைக்குள் நுழைந்தாள். அந்த அறையின் நடுவே ஒரு , வெள்ளை தாளில் கேள்விக்குறி ஒன்று இருந்தது... அதன் கீழே சீட்டா என்று எழுதி இருந்தது. அதை சுற்றியும் இதுவரை சீடடாவை பற்றிய அவள் சேகரித்த அனைத்து விடயங்களையும், அந்த சுவர் முழுக்க வரிசையாக ஒட்டி வைத்து ...ஒன்றோடு ஒன்று எவ்வாறு இணைந்திருப்பது என்பதை நூலின் மூலம் அவளுக்கு புரியும் வண்ணம் வடிவமைத்து வைத்திருந்தாள். கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக அவள் சேகரித்த, அனைத்துமே இங்கு தான் அவள் வைத்திருக்கிறாள். இப்பொழுது ஆர்பி என்பவன் சீதாவின் ஒரு முக்கியமான ஆள் என்பது மட்டுமே அவள் அறிவாள்.
உண்மையில் யார் இந்த ஜெனி...
**********
இங்கு ஆர்வி, ரெஸ்டாரண்டில் ஜெனியிடம் மிஸ் பிகேவ் செய்த அந்த பணக்கார பிள்ளைகளையும், அந்த மேனேஜரையும் ஒரு வழி செய்து கொண்டிருந்தான் பாவம் அவனுக்கு தான் தெரியாதே ஜெனி உண்மையில் யார் என்பது.
ஜெய் அவன் அருகே நின்று இருந்த, கட்டுமஸ்தான காட்ஸ்யிடம் தனது சந்தேகத்தை பேசிக்கொண்டிருந்தான்.
"என்னடா நம்ம பாஸ் திடீர்னு இப்படி இறங்கிட்டாரு, இதுவரைக்கும் அவரோட லைஃப்ல கம்பெனி, கேங்ஸ்டர், ஸ்மக்லிங் அப்படின்னு எவ்ளோ மங்களகரமா போயிட்டு இருந்துச்சு, திடீர்னு நேத்து அந்த பொண்ண பாத்ததில் இருந்து நம்ம பாஸ் ஏன் இப்படி மாறிட்டாரு?"
"ஆமா சார், பாஸ் இப்ப ரொம்ப மாறிட்டாரு இல்ல?"
"நான் உன்ன கேட்டா, நீ என்ன கேளு"
" ஜெய்"
"ஜெனி இப்போ எங்க இருக்காங்க"
பாஸ் அவங்களோட போன் சிக்னல், அவங்க அவங்களோட பீஜில இருக்கிறத காட்டுது பாஸ்..
"ஓகே குட்"
"ஜெனி அந்த ரெஸ்டாரன்ஸ்ல இருந்து வேலையை விட்டுட்டாங்களா?"
எனக்கு தெரிஞ்சு இல்ல பாஸ் அவங்க வேலைய விட்டுற மாதிரி எதுவும் நான் கேள்விப்படல...
இட்ஸ் ஓகே இனிமேதான் இவன் அங்க இருக்க மாட்டான் இல்ல, என்று அந்த மேனேஜரை கைகாட்டி கூறியவன், நாளைக்கு அவளை சென்று பார்க்க வேண்டும் என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டான் ஆர்வி.
உண்மையிலே ஆர்வி தான் ஜெனிய பாலோ பண்றானா இல்ல ஜெனிதான் ஆர்விய ஃபாலோ பண்றாளா?
ஜெனி❤️🔥ஆர்வி.
தொடரும்....
ஜானு💖
தனது கனவில் வந்த காதலன் உண்மை வாழ்க்கையில் அவளது ஆகச்சிறந்த எதிரியாக இருக்கும்பொழுது, ஜெனி எதை தேர்ந்தெடுக்க வேண்டும் தனது காதலையா அல்லது கடமையையா?

Attachments
Author: gomathi.C
Article Title: காதல் தீ ❤️🔥-5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.