New member
- Joined
- Aug 16, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
ஆர்வி அமர்ந்திருந்த மேஜைமேல் தனது உடைமைகளை விட்டு சென்ற ஜெனி.. அதனை எடுத்துக்கொண்டு புறப்படலாம் என்று வேக வேகமாக அனைத்தையும் எடுத்து வைக்கும் நேரம் அவள் பின்னே மிகவும் நெருக்கமாக கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்..
"ஆர் யூ லாஸ்ட் பேபி கேர்ள்"ஆர்வியின் கம்பீரமான குரலில் பெண்ணின் தேகம் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.
ஜெனி அவசரமாக திரும்பிப் பார்க்க ஆர்விக்கும் ஜெனிக்கும் மிகவும் குறைந்த இடைவெளியே இருந்தது.
அவன் தனது கேள்விக்கு பதில் வராத காரணத்தால் ஜெனியை துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
"சார்,அ..அது...வந்து"எச்சில் கூட்டி விலங்கிய ஜெனி..
"என்ன ரெண்டு பேர் ஃபாலோ பண்ணிட்டு வந்தாங்க சார், அதனாலதான் உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்தேன்... மத்தபடி நீங்கள் நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல சார்"பள்ளிக்கூட பிள்ளை திருட்டுத்தனம் செய்துவிட்டு வாத்தியார் இடம் மாட்டி, காரணம் சொல்வது போல் இருந்தது ஜெனியின் நிலைமை.
அவள் கூறி முடிக்கும் சமயம் ஆர்வி அவளை இன்னும் நெருங்கி வந்திருந்தான். அவன் நெருக்கத்தின் திணறலில் தடுக்கி ,அவள் பற்றி இருந்த இருக்கையில் அமர சென்றவளை.... இடையோடு தாங்கி இருந்தான் ஆர்வி.
"உன்னோட பனிஷ்மென்ட் முடியவில்லையே... அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட பேபி"அவன் சற்று மார்க்கமாக கேட்டு வைக்க .ஜெனியின் இதயத்துடிப்பு ரயில் வண்டிவிட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஜெனி தனது மலர் கரங்களைக் கொண்டு அவனது நெஞ்சத்தின் மேல் வைத்து அழுத்தி தள்ளிக் கொண்டிருந்தாள். ஆனால் என்ன செய்வது அவனுடைய திடகாத்திரமான உடலுக்கு ஜெனியின் ஒட்டுமொத்த சக்தியும் சேர்த்து தள்ளினால் கூட... ஏதோ பூ தன் மீது விழுந்தது போலத்தான் இருக்கும் அவனுக்கு.
அவன் நெருங்கி வந்து கொண்டே இருக்க ஜெனி இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு இருந்தாள்.
இரண்டு நிமிடங்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை என்று மெதுவாக ஒற்றை கண்ணை திறந்து பார்த்தால் , ஆர்வி அவளை விட்டு தள்ளி இரண்டு அடி நகர்ந்து நின்றிருந்தான்.
அவன் இப்போது நெருங்கி வந்ததற்கு காரணம் கூட அவளை பின்தொடர்ந்து வந்தவர்கள் மீண்டும் அந்த ஷாப்பிற்கு வந்ததுதான். அதை கவனித்த ஆர் வி... ஜெனியிடம் நெருங்கி நின்றான்.
அவள் இறுக்கமாக கண்களை மூடும் போது அவனுடைய உஷ்ணம் பார்வை வெளியில் நின்று கொண்டிருந்த இருவரையும் தாக்கியது. அவன் பார்வை ஒன்றே அவர்களை உயிர் வரை நடுங்க செய்தது ..என்னவோ ,அவ்விடத்தை விட்டு சென்று விட்டனர்.
ஆர்வி இருந்த இடத்தில் வேறொரு ஆண்மகனாக இருந்திருந்தால் இந்நேரம் அவனது கன்னங்கள் பழுத்திருக்கும் என்பது உண்மைதான். யாரும் தன்னிடம் வரம்பு மீறி நடக்காத வரை, ஜெனி முடிந்து மட்டும் அவர்களிடம் இருந்து விலகி தான் செல்வாள்.
இப்பொழுதும் நிலைமை வேறுவிதமாக இருக்கிறது, அவளாகத்தானே அவனது அருகில் வந்து அமர்ந்தாள்.
"சாரி..சாரி சார் இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன் "
"ஆர் வி"
"ஹான்"
"கால் மீ ஆர்வி,ஐம் நாட் யுவர் மாஸ்டர்"
ஜெனிக்கு எவ்வாறு எதிர் வினை புரிவது என்று புரியவில்லை. சரி என்றும் இல்லாமல் இல்லை என்றும் இல்லாமல் நாங்கு பக்கமும் தலை செய்தாள்.
"குட்,இனி உனக்கு எதாச்சும் பிராப்லம் இருந்தா ,தைரியமா பேஸ் பன்னு,
எல்லோரும் என்னை மாதிரி நல்லவனா இருக்க மாட்டாங்க. காட் இட்"
"என்னது நல்லவனா, நீயா?" இது ஜெனியின் மனசாட்சி.
"எஸ் சார்"
"வாட்?"
"எஸ் ஆர்வி"
"சீ யு பேபி கேர்ள்"
ஆர்வி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்பு
தான் பென்னவளால் சீரான மூச்சுகளையே வாங்க முடிந்தது.
அவன் சென்று விட்டானா இல்லையா என்று தெரியாமல் அவன் இருந்த இடத்திலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
பின்பு ஜெனியின் தோழி லலிதா வந்து அழைத்த பின்பே, ஆர்வி சென்று விட்டான் என்று பலமுறை பரிசோதித்து விட்டு காபி ஷாப்பை விட்டு வெளியில் வந்தாள் ஜெனி.
"சாரி டி , மற்ற வண்டி பஞ்சர் ஆயிடுச்சு அதனால தான் லேட் ஆயிடுச்சு"
"சரி சரி இங்க இருந்து பஸ்ட் கெளம்பு, நாளோட ஆரம்பமே சிறப்பா இருக்கு..இன்னும் நாள் புள்ள என்ன நடக்குமோ தெரியல"புலம்பிய படியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
ஆர்வி தனது ஜாகுவரில் தந்தையின் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது அருகில் அமர்ந்திருந்த ஜெயிக்கு ஒரு முக்கியமான சந்தேகம் இருந்தது.
"யாரு பாஸ் அவங்க ,நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே?'
ஆர்வி என்ன நினைத்தானோ தனது முதுகுக்கு பின்னாடி இருந்த துப்பாக்கியை எடுத்து சரி பார்த்தவன்...
ஜெயின் நெற்றியில் அதை வைத்தான்..
ஜெய்க்கு அந்த ஏசி காரிலும் வேர்வை வழிய ஆரம்பித்துவிட்டது... அதில் அவனுடைய சட்டை பாதி நனைந்து விட்டது.
"பா...பாஸ்... என்னாச்சு பாஸ் நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?"எச்சில் கூட்டி விலுங்கினான் அவன்.
நான் தான் உன்கிட்ட அந்த கேள்வி கேட்கனும், நீங்க அத்தனை பேரு இருந்தாலும் அந்த பொண்ணு எப்படி உள்ள வந்தா?
"பாஸ் அது வந்து நீங்க தான் பப்ளிக் பிளேஸ்ல... எதுவும் வய்லெண்டா பிஹெவ் பண்ண கூடாதுன்னு சொன்னீங்க இல்ல"
"அதுக்கு..?"
"சரி பாஸ் ,நான் சொல்லிடுறேன்... அவங்க உள்ள வந்தத யாரும் நாங்க கவனிக்கல"
"ம்ம்ம்...நீ ஏதோ கேட்டியே அதுக்கு அவசியம் நான் பதில் சொல்லனுமா?"
"நோ பாஸ் ஜம் கிளியர்.. நீங்க எது பண்ணினாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்"
சரியாக, ஆர்வி குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் தலைமையகம் வந்துவிட தனது உடைகளை சரி செய்து கொண்டு. மீண்டும் அந்த ஒரு துப்பாக்கியை தனது பின் பக்கம் சொருகிக் கொண்டான் ஆர்வி.
தங்க நிறத்தில் ஆர்வி குருப்ஸ் என்ற பெயரை தாங்கிய வளாகத்தில் வந்து நின்ற காரில் இருந்து மிடுக்காக இறங்கினான் ஆர்வி.
ஓங்கி உயர்ந்த அந்த 25 மாடி கண்ணாடி கட்டிடத்தின் உள் நுழைந்தனர்.அவர்கள் குடும்பத்தினர் மட்டும் பயன் படுத்தும் மின் தூக்கி மூலம் தனது தந்தையை கான விரைந்தான் ஆர்வி.
ராகவ் ரகுவன்ஸி இருந்த தலத்தில் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைய இயலாது.
ஜெய் வெளியில் நிற்க ,ஆர்வி மட்டும் கேட்பினுள் நுழைய முற்பட்டவன் .... மீண்டும் ஜெய்யை அழைத்து..
"அந்த பொண்ணு யாரு என்னனு டீடைல்ஸ் கலெக்ட் பண்ணு.. மேக் இட் குவிக்"
"எந்த பொண்ணு பாஸ்"ஆர்வி முறைத்த முறைப்பிள் , ஓடியே விட்டான் ஜெய்.
"ஹெ... ராண,வா டா...ம்ம்ம்."என தனது மகனை ஆற தழுவினார்...ராகவ் .
இப்பேவாச்சும் நம்ம கம்பெனி சிஇஓ ஆக சம்மதிச்சியே, நம்மளோட கம்பெனி எவ்வளவு பெரிய இடத்துக்கு இத்தனை குறுகிய காலத்தில் வந்ததற்கு உன்னோட புத்திசாலித்தனமும் ,தைரியமும் தான் காரணம். ஆனா எப்பயும் என்ன முதன்மைப்படுத்தி தான் நம்மளோட கம்பெனியோட வளர்ச்சி வெளிகாட்டப்படுது.
"நீயே பொறுப்பு ஏத்துக்கோன்னு எப்ப சொன்னாலும் ,நம்ம எதிரிகளுக்கு எதுவும் சாதகமா அமைஞ்சிட கூடாது, நான் வெளி உலகத்துக்கு தெரியாம இருக்கும்போது நம்மளுடைய எதிரிகள் எல்லாத்தையும் அழிச்சிட்டு தான் இந்த பொறுப்புக்கு வருவேன் ..'நீ சொல்லிட்ட.."
நானும் உன்னை தடுக்கல ஒரு வழியா இப்பதான் உனக்கு இந்த கம்பெனியோட ,முகமா நீ இருக்கணும்னு ஞாபகம் வந்திருக்கு போல!
"இனிமே இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தேவை இல்லை டேய் , நம்ம காம்பட்டீடர்ஸ் ஓட முழு கண்ட்ரோலும் இப்ப என்கிட்ட... சோ இனி இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்துக்கு முடி சூடா மன்னன் நான்தான்"நெஞ்சை நிமிர்த்தி சிங்கமாக முழங்கியவனை கண்ணாரக் கண்டு ரசித்தார் ராகவ்.
இன்னும் சரியாக ஒரு மாதத்தில் ஆர்வி, அபிஷியல் ஆக இந்த கம்பெனிக்கு சிஇஓ என்று முடி சூடப் போகிறான். அதற்காக ஆபீஸில் இருந்த அனைவரையும் அழைத்து மீட்டிங் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராகவ் ராகுவன்ஸியின் மகனைப் பற்றி அங்கிருந்து அனைவரும் அறிவார் ஆனால் யாரும் இதுவரை அவனுடைய முகத்தை பார்த்ததில்லை. அதேபோல சீட்டா (cheetah) என்னும் அவனது மாபியா உலகின் பெயரும் அனைவருக்கும் பரிச்சயமானது தான் ,ஆனால் அவனது முகத்தை இதுவரை யாரும் கண்டதில்லை.
யாருக்கும் பயந்தவன் அவ்வாறு இருப்பதில்லை, பதுங்குவதே பாய்வதற்காக தானே...
சீட்டா ஒருவன் முன் சென்றான் என்றால் அது அவர்களது இறுதி நாளாக இருக்கும் என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே... இப்பொழுதும் கூட ஜெய் அவர்கள் காவல் நிலையத்தில் "வேர்ஹவுஸை எரித்தை விபத்து என்று காண்பிக்க வேண்டுமா?" என்று கேட்டதற்கு...
"அது நாம தான் செய்தோம்ன்னு எல்லாருக்குமே தெளிவா தெரியனும்.. இனிமே நம்மளோட கூட்ஸ்ல கை வைக்க ஒவ்வொருத்தரும் யோசிக்கணும்"என்று கட்டளையாக கூறி விட்டான் சீட்டா.
அதேபோல அலுவலக விஷயத்திலும் ஆர்வி மிகவும் கண்டிப்பாக இருப்பவன். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட அவர்களை உண்டு ,இல்லை என்று செய்து விடுவான்... நிச்சயம் அவர்களை வேலையில் இருந்து தூக்க மாட்டான்... ஆனால் அதற்கு பதிலாக அவர்களும் வேலையை விட்டு செல்ல விடவும் மாட்டான்.
மிக அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாக்கி பின்பே அவர்களை வேலையில் இருந்து நீக்குவான். இது எப்பொழுதும் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் நடக்கும் என்பதால் ,அனைவரும் கண்ணும் கருத்துமாக வேலையில் இருப்பர்.
இங்கும் ஜெனியின் நிலை அந்தோ பரிதாபம், ஆர்வியை சந்தித்து விட்டு வந்த ஜெனி ,பிரம்மை பிடித்தது போல கல்லூரிக்கு சென்று வந்தாள்.இன்று முழுக்க கவனம் அவளது படிப்பில் இல்லை .
ஜெனி இப்பொழுது கல்லூரியில் படித்துக்கொண்டே, ரெஸ்டாரன்ட் ஒன்றில் பார்ட் டைம்மாக வேலை செய்து கொண்டிருக்கிறாள்... கல்லூரி ஹாஸ்டலில் இருக்க, அவளுக்கு சில பல நெருக்கடிகள் இருந்ததால். தனது தோழி லலிதாவுடன்
பிஜியில் தங்கி இருக்கிறாள்.
ஆர்வி யை காலையில் சந்தித்து வந்ததிலிருந்து , இத்தோடு ஆயிரத்து ஒரு முறை கேட்டு விட்டாள் லலிதா...
"என்னடி ஜெனி காலையில இருந்து ஒரு மாதிரி இருக்க, என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்ற..."
ஜெனியும் அதே பதில் தான் அளித்தாள்..
"ஒன்னும் இல்ல டி ,தலை வலிக்குது"
தனது அறைக்கு வந்து அடைந்து கொண்டவள், தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக குளியல் அறைக்கு சென்று விட்டாள்.
அவளது அரை முழுக்க ஓவியங்களாக இருந்தது, ஒரே ஓவியம் தான் ... ஆனால் அரை முழுக்க மாட்டி வைக்கப்பட்டிருந்த ஓவியச் சட்டங்களிள் அனைத்தும் -அதேதான் இருந்தது.
முகமூடி அணிந்த ஒரு மனிதன் ,அவனுடைய -"பச்சை மற்றும் நீல நிறம் கலந்த விழிகள்" மட்டும் தெரியும் வண்ணம் இருந்தான்.
ஆனால் இன்று அந்த முகமுடி அணிந்த மனிதனுக்கு ,முகத்தை வரைந்து இருந்தாள் ஜெனி...
"அதே கண்கள் பச்சை மற்றும் நீலம் கலந்த கண்கள் மேலும்
இடது புற புருவத்திலிருந்த வெட்டு காய தழும்பு" அனைத்துமே கச்சிதமாக பொருந்தி வந்தது.
ஆர்வி யின் முகத்திற்கு...
தொடரும்...
ஜானு...
ஜெனி ❤️🔥 ஆர்வி

Author: gomathi.C
Article Title: காதல் தீ ❤️🔥-2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.