காதல் தீ❤️‍🔥-3

New member
Joined
Aug 16, 2025
Messages
27
"நிலா, என்னடா ஏன் ஒரு மாதிரி இருக்க?"என்று அவளின் இடை வளைத்து தன் மீது அமர்த்திக் கொண்டான் அந்த பச்சை மற்றும் நீல நிற கண்களுக்கு சொந்தக்காரன்.


வழமை போல், பெண்ணவள் எதுவும் பேசவில்லை. அவனது கழுத்தில் முகம் புதைத்து இறுக்கமாக கட்டிக்கொண்டாள். என்றும் இல்லாது இன்று அவனுடன் அதிகம் ஒன்றி இருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.


சிறிது நேரம் அமைதி காத்தவள் அவனிடம் ஒரு கோரிக்கை விடுத்தாள்.


"எ...எனக்கு உங்க முகத்தை பாக்கனும் மகி(மகிழன்)"

அவனது உதட்டில் பொன்முறுவலை படர விட்டவன்...

"இதுக்கு தான் இவ்வளவு தயக்கமா?"என்று அவன் அணிந்திருந்த முகமூடியை கழட்டினான்.

ஆம் அவனேதான் பெண்ணவளை காலையில் மூச்சு முட்ட நெருக்கத்தில் பார்த்த, அவன் தான் ஆர்வி (ராணவ் ரகுவன்ஷி).


ஜெனி திடுக்கிட்டு கனவில் இருந்து எழுந்தாள்.


ஆம் ஜெனியின் கனவில் அன்றாடம் வரும் அந்த முகமூடி மனிதனின் கண்களே இன்று காலை அவள் சந்தித்த ஆர்வியின் கண்களுக்கு அச்சு பிசிறாமல் பொருத்தமாக இருந்தது.

நினைத்தேன் வந்தாய் படத்தில் வரும் விஜய் அவர்களுக்கு பருவ வயதில் வந்த கனவு போல அல்ல ஜெனியின் கனவு.

நினைவு தெரிந்த நாளில் இருந்து, ஒரு முகமூடி அணிந்த மனிதன் கண்கள் மட்டும் தெரியும் படி அவள் கனவுகளில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறான். சிறுவயதில் அத்தகைய கனவு வரும் போது பயந்து பல நாட்கள் தூக்கத்தை தொலைத்தது உண்டு.


ஆனால் பருவ வயதில் யாரிடம் பயந்து நடுங்கினாலோ அவனிடமே தஞ்சம் புகுந்து விட்டாள். சிறுவயதில் இருந்து அவள் அனுபவித்த அனைத்து துன்பங்களுக்கும் அவன் ஒரு ஆறுதலாகவும் உற்ற துணையாகவும் இருப்பதாகவே அவள் மனது ஏற்றுக்கொண்டது.

கனவில் அவர்களது பெயர் நிலா 💖 மகிழன். எப்பொழுதும் அவள் அனுபவித்த துன்பங்களுக்கு வடிகாலாக இருப்பவன் அவன். கனவில் வருபவன் நிஜத்திலும் இருப்பான் என்று அவள் கற்பனை கூட செய்து பார்த்து இல்லை.


அது அவனே தான் காலையில் அவள் கண்டது உண்மைதான் என்பதே இன்னும் ஜெனியின் மனதில் பதியக்கூட இல்லை... தினமும் கனவில் வருபவன் நிஜத்தில் வருவான் என்று அவள் என்ன எதிர்பார்த்திருந்தாளா ...


ஜெனி பொருத்தவரை அவன் ஒரு பாதுகாவலன் அல்லது தனது சுகதுக்கங்களில் பங்கெடுப்பவன், அவளது மானசீக காதலன்.


அதைப் பற்றி எல்லாம் அவள் பெரிதாக இதுவரை நினைத்தது கிடையாது, ஏனென்றால் அவன் வெறும் கனவு என்பது அவளுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் அந்த கனவை தினமும் எதிர்பார்த்து தான் தூங்குவாள்.


ஆனால் இன்று அவளுடைய அத்தனை கற்பனைகளையும் உடைத்து எறிந்து அவள் கண் முன்னால் வந்து நின்று விட்டானே... அதற்காக அவனிடம் சென்று நான் இவ்வாறு உன்னை கனவில் கண்டேன் ,காதலித்தேன் என்று கூறினால் பைத்தியக்கார தனமான பிதற்றல்லாகத்தான் தோன்றும்.


ஜெனியை பொருத்தவரை கனவெது, நிஜம் எது என்பதை நன்றாக தெரிந்தவள் தான் .ஆகையால் அவள் கனவில் வரும் அவளது மகிழன் ,அவன் அல்ல என அவள் நினைக்கிறாள்.இருந்தும் அவனைக் கண்ட தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தான் திணறி கொண்டு இருந்தாள் ஜெனி.


யோசனைகளை எல்லாம் இப்போதைக்கு ஒத்தி வைத்துவிட்டு தனது பார்ட் டைம் ஜாப் காக ரெஸ்டாரன்ட் செல்வதற்காக தயாராகினாள் ஜெனி.


இங்கு ஜெய் , ஜெனியை பற்றி அனைத்து தகவல்களையும் சேகரித்து வந்து ஆர்வி முன் ஒப்பித்துக் கொண்டிருந்தான்.


சென்னைக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் தான் ஜெனி அவளது உண்மை பெயர் ஜெனி என்பது கூட கிடையாது. பின் அவளது தாய் தந்தை மற்றும் உடன் பிறந்த ஒரே தம்பி ஒரு விபத்தில் இறந்து விட்டதால் அவள் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தாள்.

அந்த ஆசிரமத்தில் இருந்து மைக்கில் என்னும் பெரியவரால் தத்தெடுக்கப்பட்டு ஜெனி என்று பெயர் சூட்டப்பட்டது . ஜெனி காலேஜ் செல்வதற்கு முன்பு வரை அவருடன் தான் வளர்ந்து வந்தாள்.


இப்பொழுது சென்னையில் மிகப் பிரபல கல்லூரியில் ஆர்க்கிடெக்சர் படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் கிடைத்ததால், இங்கு வந்து மூன்றாம் வருடம் நிறைவடைய போகிறது என்று, தனக்கு தெரிந்த அனைத்து தகவல்களும்களையும் தெரிவித்தான் ஜெய்.

அவள் இப்பொழுது எங்கே தங்கி இருக்கிறாள் என்றும், அவள் ஒரு பிரபல ரெஸ்டாரண்டில் பகுதிநேர வேலை செய்வதாக, கூடுதல் தகவல்களும் தெரிவிக்கப்பட்டது ஆர்விக்கு.

ஆனாலும் ஆர்வியில் முகம் யோசனையில் மூழ்கி இருப்பதை பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஜெய்.


"என்னாச்சு பாஸ், ஏன் ஒரே யோசனையா இருக்கீங்க"

"யூ ஆர் மிஸ்ஸிங் சம்திங் அபௌட் ஹர்"


'இல்ல பாஸ் ,நம்மளோட ரொம்ப நம்பகமான இன்டெலிஜென்ஸ் கிட்ட இருந்து கிடைச்சிடு ரிப்போர்ட் ஜன தான் உங்ககிட்ட சொல்லி இருக்கேன்"தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெய். ஆர்வி முறைத்த முறையில் அமைதி ஆகிவிட்டான்.


"சீ ஸ் சம் திங்க் டிஃப்ரண்ட்"என்று முனுமுனுத்தான் ஆர்வி.


ஆர்விக்கு அன்றைய நாள் அவனது பிசினஸிலும் சரி ஆனது மாஃபியா பிசினஸிலும் சரி, சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் ஜெனியின் நினைவில் ஆட்கொள்ளப்பட்டிருந்தான்.

இதுவரை எந்த ஒரு பெண்ணின் நினைவும் தன்னை இத்தனை அவஸ்தைக்கு உள்ளாக்கியதில்லை என்பதை சரியாக உணர்ந்து கொண்ட ஆர்வி.


என்னதான் ஜெய், ஜெனியை பற்றி அவனுக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் கூறியிருந்தாலும் கூட மேலும் அவளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருப்பதாகவே தோன்றியது ஆர்விக்கு.


ஜெனி அவனைப் பார்த்த விதம் இதுவரை எந்த ஒரு பெண்ணின் கண்ணிலும் தென்படாத உணர்வு , இதுவரை அவனை நெருங்க நினைத்த அனைத்து பெண்களின் கண்களிலும் அவன் பார்த்தது என்னவோ அவன் மீது கொண்ட ஆசையும் அல்லது அவனின் செல்வாக்கின் மீது கொண்ட தாபமாகவே இருந்தது.


ஆனால் ஜெனியின் கண்களில் இருந்தது முற்றிலும் மாறுபட்ட ஒரு புதுவிதமான உணர்வு, அவனது விரல் பெண் அவளை தீண்டியதும் அவள் உடல் சிலிர்த்து அடங்கியதை , நினைக்கையில் இப்பொழுது அவனுக்குள்ளேயும் அப்படி ஒரு சிலிர்ப்பு நிகழத்தான் செய்கிறது.


ஜெனிக்கும் தனக்குமான பிணைப்பு சாதாரணமானது இல்லை என்பதை அவளைக் கண்ட ஒரு சில கணங்களிலேயே அவனால் நன்றாக உணர முடிந்தது. ஒரு வழியாக அன்றைய நாளை நெட்டிதள்ளிவிட்டு, தனது மாஃபியா இடத்திற்கு பயணமானான் ஆர்வி.


இங்கு வழக்கம் போல், பகுதி நேர வேலைக்காக அந்த மிகப்பெரிய ஏழு நட்சத்திர ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரண்டில் வெயிட்டர் ஆக வேலை செய்வதற்கு உள்ளே நுழைந்தாள் ஜெனி.


அத்தனை பெரிய உணவகத்தில் வேலை செய்வதற்கு காரணம் ஜெனியின் தோழி சரண்யா, மிகப்பெரிய தொழிலதிபரும் அரசியல் பிரமுகருமான விஸ்வநாதன் அவர்களின் ஒரே பெண் பிள்ளை.


ஏனோ அவளுக்கு ஜெனி உடன் பழகுவது அத்தனை பிடித்தம். ஆகையால் அவளது நிலைமையை கருத்தில் கொண்டு தங்களது ஏழு நட்சத்திர விடுதியிலேயே ரெஸ்டாரண்டில் வேலைக்கு தந்தையிடம் சிபாரிசு செய்து பெற்று தந்து விட்டாள்.


ஜெனியும் தனது அன்றாட வேலைகளில் ஐக்கியம் ஆனாள்,தனக்கு வரப்போகும் பிரச்சனைகள் தெரியாமல்.


சரியாக வேலை முடியும் சமயம் இரவு 10 மணியை நெருங்கி இருந்தது, ஆர்வியும் ஜெய்யும், அவனது போதை மருந்து கடத்தல் விஷயமாக ஒரு டீலிங் பேசுவதற்கு , அதே விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.


"இப்ப நாம இந்த ஹோட்டலுக்கு வந்தது, எதேர்ச்சியாக வந்திருக்கோம் இல்ல பாஸ்"வழக்கம்போல் தனது அதி முக்கிய சந்தேகத்தை கேட்டு அவனது பாஸிடமிருந்து முறைப்பை வாங்கிக் கொண்டான் ஜெய்.


ரெஸ்டாரன்ட் இன் உள்ளே நுழைந்த உடன் ஆர்வியின் கண்கள் தன்னிச்சையாக ஜெனியை தான் தேடியது. ஆனால் அவனது தேடலுக்கு உரியவளோ, பில்க் கவுண்டருக்கு முன்பாக மேனேஜரின் வசைகளை வாங்கிக் கொண்டு இருந்தாள்.

தன்னுடைய இச்சைக்கு இணங்காத காரணத்தால், ஜெனியை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவதும், அவளது வேலைகளை குறை கூறுவதும் வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தான் மேனேஜர்.


இப்பொழுது கூட அங்கு கஸ்டமராக வந்த ஒரு சிலர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை ஜெனி மேனேஜரிடம் கொண்டு சென்றதற்கு ...


அனைவர் முன்னிலையிலும் அவள் மீதே குறை கூறினான் அந்த மேனேஜர். இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஆர்விக்கு கோபம் எல்லையை கடந்து ,கண்கள் ரத்த சிவப்பாக மாறியிருந்தது.


ஜெயிக்கும் கூட அந்த மேனேஜர் மீது கொலை வெறி ஆகியது என்பதே உண்மை.
ஆர்வி இடம் டீலிங் பேசிக் கொண்டிருந்தான் அந்த ட்ரக் டீலர் டேனியல். ஆனால் அவன் கூறுவது எதுவும் இப்பொழுது ஆர்வியின் காதுகளில் விழவில்லை என்பதே உண்மை.

"இங்க பாருமா ,அவங்க சொல்றத பார்த்தா அவங்க மேல எந்த தப்பும் இல்லை என்று தான் நினைக்கிறேன் .நீ தான் ஏதுவது சிக்னல் கொடுத்திருப்ப, தானா வந்து அவங்க அந்த மாதிரி நடந்துபாங்களா"


"இங்க வரவங்க எல்லாம் ஹை கிளாஸ் பசங்க தான், அவங்க போய் உன் கிட்ட எதுக்கு மிஸ்பியவ் பண்ண போறாங்க?... நீ நினைக்கிற மாதிரி , நீ ஒன்னும் அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது"என்று அந்த மேனேஜர் பேசிக்கொண்டே போக ஜெனி அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

இங்கு ஆர்வி என்கின்ற சீட்டாவிடம்(cheetah) பேசிக் கொண்டிருந்த டேனியலுக்கும் இப்பூ உலகில் வாழ்ந்த நாட்கள் போதும் என்று நினைத்து விட்டான் போலும். அவனும் தன் பங்கிற்கு வெடிக்கப் போகும் எரிமலையாக குமரிக் கொண்டிருக்கும் ஆர்வி இன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தான்.


"இங்க பாருங்க சார் நீங்க சீட்டா ஓட ஆளுங்களா இருக்கலாம், எனக்கு அவன பத்தி எல்லாம் பயம் கிடையாது. நீங்க குடுக்குற மொக்கை சரக்குக்கு இந்த விலை தான் கொடுக்க முடியும் .வேணும்னா குடுங்க ....இல்லையா கிளம்பி போயிட்டே இருங்க, எனக்கு வேற நிறைய டீலர்ஸ் கிடைப்பாங்க"அவன் பேசி முடிப்பதற்குள் ஆர்வியின் இரண்டு காட்ஸ்கள் துப்பாக்கி முனையில் அவனை அவ்விடத்தை விட்டு யாரும் அறியா வண்ணம் இழுத்துச் சென்றனர்.


இப்பொழுது ஆர்வியின் மொத்த கவனமும் அந்த மேனேஜர் மீதும், மற்றும் ஜெனி
இடம் மிஸ்பிஹெவ் செய்துவிட்டு ,அவளை இப்பொழுது நக்கலாக பார்த்து சிரித்துக் ண பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மீதும் இருந்தது.

பாவம் அந்த நபர்களின் நிலை...
 

Author: gomathi.C
Article Title: காதல் தீ❤️‍🔥-3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
75
ரொம்ப கவலைக்கிடம் தான் 😂😂😂 டேய் அங்க ஒருத்தன் உங்களுக்கு ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்கான் வாயை மூடுங்க டா
 
Top