கவிதை 5

Joined
Aug 20, 2025
Messages
10
கவிதை 5

நள்ளிரவு மணி ஒன்றை தாண்டியது, லேசாக மழை சாரல் அடித்துக் கொண்டிருந்தது. ராகவனின் வீட்டிற்கு எதிரில் ஒரு ஒற்றை வேப்ப மரம் இருந்தது. அவன் வீட்டு வாசலில் நிற்க கூட செக்யூரிட்டி அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அந்த வேப்ப மரத்தடியில் தான் கிட்டதட்ட மூன்று மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

"கண்டிப்பா இங்க தான் நீ தங்கனுமா?" என்று பார்த்தீபன் இத்துடன் நூறு முறையாவது கேட்டிருப்பான் இந்த இடைப்பட்ட நேரத்தில்.

அவளும் "ஆம்" என்ற பதிலை சலிக்காது சொன்னாள்.

அவனிற்கு வேறு வழியுமில்லை அவளை அப்படியே விட்டுச் செல்ல மனமும் இல்லை.

அவர்கள் இருவரின் பொறுமையை சோதித்த பின்னரே தெரு முனையில் நின்ற அவனது உயர் ரக கார் ராகவனின் வீட்டிற்குள் நுழைந்தது.

"வேணும்னே பண்றான் பிலடி பிஸ்கட்" என்று ஸ்ரீ முனுமுனுத்துக் கொள்ள பார்த்தீபனிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே.

"நான் அவன்கிட்ட பேசுறேன்" என்று பார்த்தீபன் சொல்ல...

"இப்போ வேண்டாம் ப்ரோ... நான் பார்த்துக்குறேன்" என்றவள் அவன் கேட்டை மூடும் முன் ஓடினாள்.

"ராகவ்.... ராகவ்... ஏன் இவ்வளவு நேரம்... உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணோம் தெரியுமா நானும் பார்த்தீ ப்ரோவும்?" என்றவள் மூச்சிறைக்க கேட்க.

"நானும் தான் அஞ்சு வருஷமா வெயிட் பண்ணேன்" என்றான் அவன் அழுத்தமாக.

ஒரு நொடி தயங்கியவள் "பார்தீ ப்ரோ வெளியில தான் இருக்காரு... நான் கூப்பிடவா?" என்றவள் கேட்க.

இல்லையென தலையசைத்தவன் முன்னே செல்ல... அவன் பின்னால் வீட்டிற்குள் நுழைந்தாள் அவள்.

தத்தமது அறைக்குள் சென்று குளித்து வந்தவர்கள் அவர்களுக்கு தேவையானதை செய்து சாப்பிட்டனர்.

"குட் நைட் ராகவ்" என்றவள் கொட்டாவி விட்ட படி தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைய "வெயிட்" என்றவன் அவளது அறைக்குள் சென்று அவள் உலர்த்த போட்டிருந்த துணிகளை ஒரு குச்சி மூலம் எடுத்தவன் அதை நடு ஹாலில் போட்டு தான் கையில் வைத்திருந்த மதுபானத்தை அதில் சரித்தவன் லைட்டரினால் பற்ற வைக்க அவனை புரியாது பார்த்தாள் அவள்.

"இப்போ நீ போகலாம்" என்றவன் மதுபானத்துடன் டிவி முன்னால் அமர்ந்து விட...

"உனக்கு ட்ரிங்ஸ் பழக்கம் இல்லையே" என்றாள் அவள் அவனை புருவம் சுருக்கிப் பார்த்த படி...

"யார் சொன்னா? ஐம் அ சோசியல் ட்ரிங்கர்" என்றான் அவன்.

"உனக்கு ஆல்கஹால் அலர்ஜினு பார்த்தீ ப்ரோ ஒரு நாள் சொன்னாரு" என்றவள் சொல்ல...

அவளை முறைத்து பார்த்தவன் "இனி இந்த வீட்ல ராகவ், ஸ்ரீ இந்த இரண்டு பேரைத் தவிர மூனாவது யார் பேர் வந்தாலும் நடக்குறதே வேற" என்றவனின் குரலில் என்ன கண்டாளோ அப்படியே அமைதியாகி விட்டாள்.

அவளை அழுத்தமாகப் பார்த்த படி தனது கையில் இருந்த மதுபானத்தை அவன் வாயில் சரிக்கப் போக, அதை வேகமாக வந்து தட்டி விட்டவள் "அது தான் அலர்ஜினு தெரிதுல அப்புறம் ஏன் அதைப் பண்ற ராகவ்? ஆர் யூ மேட்?" என்றவள் கேட்க.

அவனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ அவளது குரல்வளையை நெறுக்கிப் பிடித்தவன் அவள் மூச்சுக்கு சிரமப்படுவதையும் கருத்தில் கொள்ளாது அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தவன் "நோ யுவர் லிமிட்ஸ்" என்று அவளை பொத்தென்று கீழேப் போட்டான்.

அவளோ அவனை மிரண்டு பார்க்க...

அவள் முன் குத்த வைத்து அமர்ந்தவன் "இதுக்கு அப்புறம் இந்த வீட்ல தேவை இல்லாம உன் சத்தம் வெளிய வந்தது தொலைச்சிடுவேன்" என்றவன் மீதமிருந்த மதுபான குடுவையை கையில் எடுத்துக் கொண்டே தனது அறைக்குள் நுழையப் போக...

"ஏன் ராகவ் இப்படி மாறிட்ட?" என்றாள் அவள் உணர்வே இல்லாது வெற்றுக் குரலில்.

அவளை ஓர் நொடி திரும்பிப் பார்த்தவன் "கண்ணாடி முன்ன நின்னு கேளு ஏன் ராகவை இப்படி மாத்திட்டோம்னு" என்றவன் கதவை அடித்து சாற்றினான்.

மூடிய அறைக் கதவை சோர்ந்து போய் பார்த்தவள் "பதில் தெரிஞ்சிக்கிட்டே கேள்வி கேட்டது என் தப்பு தான்" என்று முனுமுனுத்தவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று விட்டத்தைப் பார்த்து படுத்துக் கொண்டாள். தூக்கம் தான் வருவேனா என்றது.

சில நிமிடங்கள் ராகவனின் வீட்டை நின்று பார்த்த பார்தீபனும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு நண்பனின் வீட்டிற்கு கிளம்பினான்.

ஒரே நாளில் அவன் வாழ்வு இப்படி தலைகீழாக மாறும் என்று யாரும் சத்தியம் செய்திருந்தால் கூட நம்பியிருக்க மாட்டான். அனைத்தும் இன்று அதுவும் தனது நெறுங்கிய நண்பன் மூலம் நடப்பதை அவனாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்த நினைக்கும் நண்பனுக்கு அப்படி தான் என்ன செய்து விட்டோம் என்ற கேள்வியே அவன் மனதில் வண்டாக குடைந்தது.

இதில் சுஜியின் நிலை எப்படி இருக்கும் என்ற கவலை வேறு அவனை பாடாய் படுத்தியது.

'எப்படியும் வீட்டில் இருப்பவர்கள் அவளை வார்த்தைகளால் வதைத்திருப்பர். மேலும் தன்னை எண்ணி எண்ணி அவளும் கவலையில் வாடுவாள்' என்று அவனால் நினைக்க மட்டுமே முடிந்தது இப்பொழுது இருக்கும் சூழலில்.

அவளிற்கு அழைத்து பேசலாமா என்று நினைத்தவன் அந்த நினைப்பை அப்படியே கை விட்டான்.

'பின்னே அவள் கேட்பாளே, என்ன செய்கிறாய்? எப்பொழுது என்னை அழைக்க வருவாய் என்று?' இதற்கெல்லாம் அவனிற்கே பதில் தெரியாத போது அவளிடம் மட்டும் என்ன சொல்வான். அவளிடம் பேசி அவளை மேலும் காயப்படுத்த விரும்பவில்லை அவன்.

பல யோசனைகளோடு அவன் தன் நீண்ட நெடிய இரவை கடக்க...

அங்கே தன்னவன் நினைப்பில் உண்ண மறந்து உறங்க மறந்து கிடந்தாள் பேதையவள்.

காதல் திருமணம் அல்ல அவர்களது. ஆனால் இருவரும் மனம் விரும்பி ஏற்றுக் கொண்ட உறவிது. ஆயுள் முழுவதும் தொடர நேசம் கொண்ட உறவு.

பார்தீபன் வீட்டில் நடந்த கலாட்டாவில் சுஜியின் தந்தைக்கு பலத்த ஏமாற்றம். பெற்ற மகள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்ற வருத்தம் அவருக்கு.

பார்தீபன் பற்றி நன்கு விசாரித்து தான் தன் மகளைக் கொடுக்க சம்மதம் தெரிவித்து இருந்தார். இன்று பார்தீபன் வீட்டு ஆட்களும் நிலைமையை கொஞ்சம் நிதானமாக கையாண்டு இருந்தால் கூட அவரும் இதற்கு ஏதேனும் தீர்வு இருக்குமா என்று யோசித்து அதை தீர்த்து வைக்கவே நினைத்திருப்பார்.

ஆனால் அவர்களோ அவரது மகளை குறை சொன்னதும் அவருக்கு கோபம் வந்து விட்டது. நீயே சரி செய் என்று மகளையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.

மகளின் மனநிலையும் அவரால் யூகிக்க முடிந்தது. அதனால் தான் அருகில் இருந்து அவன் படும் கஷ்டங்களைப் பார்த்து தன் மகளும் சங்கடப்பட்டு விட கூடாது. அவளது மனநிலையை கொஞ்சமேனும் மாற்ற வேண்டுமே என்று கேரளாவில் இருக்கும் தனது அண்ணன் மகனின் வீட்டில் மகளை விட வந்திருக்கிறார்.

"என்ன சித்தப்பா நீங்க? இப்படி ப்ராடுகார குடும்பமா இருக்கு... அங்கேயே அத்து விட்டுட்டு வராம இப்படி பாப்பாவை இங்க கொண்டு விடுறதால மட்டும் எல்லாம் சரியாகிடுமா?" என்று சுஜியின் பெரியப்பா மகனான சுந்தர் கேட்க.

"அண்ணா... என்ன பேசுற? பார்த்தீ அப்படி இல்லை... அது அவர் அண்ணா வாங்குன கடன்.. அதுக்கு பாவம் அவர் என்ன செய்வாரு... இதுல அவரும் விக்டிம் தான்" என்று தன்னவனை சகோதரனே ஆனாலும் இளப்பமாக பேசுவதை கேட்க சகிக்காது பதறினாள் சுஜிதா.

"நீ சின்ன பொண்ணு உனக்கு ஒன்னும் தெரியாது" என்று அவளை அடக்கினான் அவன்.

"நீ தான்ப்பா தெரியாம பேசுற... சுஜி பேசுறது சரி தான்... அது மாப்பிள்ளையோட அண்ணனால வந்த பிரச்சனை... அவனைப் பத்தியும் நான் கல்யாணத்துக்கு முன்னாடியே விசாரிச்சேன்.. சரியான ஏமாளி... பிஸ்னஸ் பண்றேன்னு ஊரெல்லாம் கடன் வாங்கி நாலு நாள் என்னதையாவது பண்ணிட்டு அஞ்சாவது நாள் இழுத்து மூடிட்டு தூங்குற ஆள்... நமக்கு நம்ப மாப்பிள்ளை ஒழுங்கா இருந்தா போதும். அதுவும் இல்லாம அது பிடிக்கலை இது பிடிக்கலைனு மாத்துறதுக்கு இது என்ன சட்டியா? பெட்டியா? வாழ்க்கை... பொறுமையா தான் எதுவும் முடிவு பண்ணனும்" என்றார் சுஜியின் தந்தை.

சுந்தர் உடனே அமைதியாகி விட்டான் பின்னே அவர் சொல்வதும் சரி தானே. அதுவும் பெண் பிள்ளை விஷயம் எடுத்தோம் கவிழ்தோம் என்றெல்லாம் எதுவும் செய்து விட முடியாதே.

"அங்க பிரச்சனை எல்லாம் முடியுற வரை பாப்பா இங்கையே இருக்கட்டும்" என்றார் அவர்.

"சரிங்க சித்தப்பா... பாப்பாவை நான் பார்த்துக்குறேன்" என்றவன் உறுதியளிக்க நிம்மதியாக அங்கிருந்து கிளம்பினார்.

கிளம்பும் முன் மகளிடம் "இங்க பாரும்மா... உன்னையும் உன் புருஷனையும் பிரிக்குறது என் எண்ணமில்லை. பிரச்சனை எல்லாம் முடிசிட்டு உன் புருஷன் வந்து கூப்பிட்டா நீ போகலாம். இல்லை நீ என்ன சொல்றது நான் என்ன கேட்குறதுனு இப்போவே கிளம்புறதுனாலும் உன் இஷ்டம் தான். ஏன்னா கல்யாணம் வரைக்கும் தானே இந்த அப்பனுக்கு மக மேல உரிமை எல்லாம்" என்றவர் சொல்ல...

"அய்யோ அப்பா என்ன வார்த்தை சொல்றீங்க... நான் இன்னைக்கு வேணும்னா பார்த்தீபனோட மனைவியா இருக்கலாம். ஆனா எப்பவும் உங்க மக தான்ப்பா... உங்க வார்த்தையை மீறி இதுவரை நான் எதுவும் செஞ்சதில்லை. இனியும் அப்படி தான்" என்றாள் அவள் அழுத்தமாக.

மெலிதாக சிரித்த படி அவளது தலையை தடவிக் கொடுத்தவர் "இந்த அப்பா என்னைக்கும் உனக்கு பிடிச்சதை தான் செய்வேன் அதுவும் சிறந்ததா தான் செய்வேன்" என்றவர் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.

தன்னவனுக்கு அழைத்து பேச எண்ணம் இருந்தாலும் அவன் இப்பொழுது எந்த சூழ்நிலையில் இருக்கிறான் என்று தெரியாது அவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்து விடக் கூடாது என்று உறுதியாக இருந்தாள்.

ஒருவர் மீது நாம் வைக்கும் அதீத நேசம் தான் அவர்களை அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும்... இதற்கு யாரும் விதி விலக்கல்ல...

இதோ ஒரு வாரம் முடியப் போகிறது. இன்று தான் கடைசி நாள். ஸ்ரீயும் பார்த்தீபனும் வேலைக்காகவும் ஹாஸ்டலுக்காகவும் அழையாத இடமே இல்லை.

அவர்கள் ஒரு இடத்திற்கு செல்லும் முன் அங்கு ராகவனின் ஆட்கள் இருப்பர்.

இதெல்லாம் தெரிஞ்தே தான் இருவரும் ஒவ்வொரு அலுவலகமாக ஏறியிறங்கினர். பலன் என்னவோ பூஜ்யம் தான். விடை என்னவோ அவனிடம் தான்.
 

Author: காதல் கவிதை
Article Title: கவிதை 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top