கவிதை 4

Joined
Aug 20, 2025
Messages
11
கவிதை 4

டக் டக் என்ற தொடர் சத்ததிற்குப் பிறகு கண்களை கசக்கிய படி மெத்தையில் எழுந்து அமர்ந்தாள் ஸ்ரீ. "ஹாஆஆ... அதுக்குள்ள யாராது தூக்கத்தை டிஸ்ரப் பண்ணிக்கிட்டு பிலடி பிஸ்கட்" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே கதவைத் திறந்தாள் அவள்.

கலைந்த தலை, தொளதொள உடை என்று முகத்தை அஷ்ட கோணத்தில் வைத்துக் கொண்டு கொட்டாவி விட்ட படி நிலைக் கதவில் சாய்ந்து அவள் நிற்க. அவளை ஏறயிறங்க ஓர் பார்வை பார்த்த ராகவனோ "டேக் திஸ். அண்ட் சேன்ஜ் இட். வீ ஹேவ் டூ லீவ் நவ்" என்றவன் அவள் கையில் ஒரு பையை திணித்து விட்டு ஹால் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன் லைப்டாப்பில் தனது அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தான்.

'பெரிய பீட்டர் இவன். டப்பா தலையா...' என்று வாய்க்குள் முனுமுனுத்தவள் அந்த பையில் இருந்த அவளுக்கென அவன் வாங்கி வந்த உடைகளைப் பார்த்தவள் 'நாட் பேட் நல்ல செலெக்ஷன்' என்று நினைத்துக் கொண்டவள் குளித்து முடித்து ஒரு சிவப்பு நிற சுடிதாரை அணிந்தவள் தனக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டு விட்டு அவனைத் தேடி வந்தாள்.

அவளை ஓர் பார்வை பார்த்தவன் "எனக்கு வொர்க் இருக்கு வெளிய போறேன். நீ வெளிய போனா வீட்டை மூடிட்டு கிளம்புவேன்" என்றான் அவன் அவளை அழுத்தமாகப் பார்த்த படி.

சற்று அமைதியாக யோசித்தவள் "எனக்கு இப்போ வேலையும் இல்லை தங்க இடமும் இல்லை. இரண்டு கிடைக்குற வர உங்க வீட்லையே இருக்கட்டுமா ப்ளீஸ்?" என்றவள் அவனை இறைஞ்சுதலாகப் பார்க்க.

அவனோ அசைந்தான் இல்லை.

"ஹாஸ்டலுக்கு கொடுக்க கூட காசு இல்லை ராகவ். பிரண்ட்ஸ் யாரும் கெல்ப்க்கு இல்லை. பெத்தவங்களும் இப்போ கூட இல்லை. எனக்கு இப்போ உன்னை விட்டா வேற வழி இல்லை புரிஞ்சிக்கோ. என்னால உனக்கு இதுக்கு மேல எந்த பிரச்சினையும் வராது. இருக்க இடம் தெரியாம இருந்துட்டு போய்டுவேன். கொஞ்ச நாள் இங்க ஸ்டே பண்ண பெர்மிஷன் கொடேன்" என்றவள் அவனை பாவம் போல் பார்க்க.

"தென் சைன் தி பேப்பர்ஸ்" என்றவன் அவள் முன் சில காகிதங்களைப் போட்டவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரவும் இதே பேப்பரை ராகவன் கொடுத்தது நினைவு வந்தவளாக 'எல்லாம் ப்ளான் பண்ணி பண்றான் பட்டர் பிஸ்கட் மண்டையன்' என்று அவனை உள்ளுக்குள் திட்டிக் கொண்டே அதை பிரித்து படிக்க, இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது அதிலிருந்த ஒவ்வொரு வார்த்தைகளையும் படிக்கும் பொழுது.

"இதெல்லாம் ரொம்ப ஓவர் ராகவ்" என்றவள் சினுங்க.

"இதுல ஓவரா என்ன இருக்கு. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வேலையும் தங்க இடமும் தேடிட்டு இடத்தை காலி பண்ணலைனா கடைசி வரை என் கம்பெனில என் என்னோட பர்சனல் செகரட்டரியா என் கூடவே இருக்கனும்னு இருக்கு. இதுல என்ன?" என்றவன் சாதாரணமாக கேட்க.

"என்ன இருக்கா? இதுக்கு அப்புறம் தானே எல்லாம் இருக்கு... இந்த ஒரு வாரமும் நைட் பனிரெண்டு மணியில இருந்து விடியற்காலை ஆறு மணி வரை தான் இந்த வீட்ல இருக்கனும்னு போட்டுருக்கு" என்றவள் அதிர்ந்து கேட்க.

"ம்ம்... அந்த நேரத்துல தான் வீட்ல இருப்பேன். உன்னை நம்பி வீட்ல தனியா விட முடியாது. எதையாவது தூக்கிட்டு ஓடிட்டா?" என்றவன் அவளை கேலியாகப் பார்க்க.

"நான் ஒன்னும் திருடி இல்லை" என்றாள் அவள் அழுத்தமாக.

" யா... பட் நீ ஒரு நாடகக்காரி" என்றான் அவன்.

அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருந்தாள்.

"இது எல்லாத்துக்கும் ஓகேனா இங்க தாராளமா இருக்கலாம். நான் இந்த வீட்ல இருக்க நேரம் நீ இங்க இருக்கலாம். என் ரூமைத் தவிர இந்த வீட்ல எந்த இடத்தை வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்" என்றான் அவன் தோள்களைக் குலுக்கி.

அவள் மனதில் இருந்ததெல்லாம் இன்னும் ஒரு வாரத்தில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை தேடி ஓடி விட வேண்டும் என்பது மட்டும் தான். அதன் பிறகு அவன் போட்டிருந்த எந்த கண்டிஷன்களையும் அவள் கருத்தில் கொள்ளவே இல்லை. இந்த ஒரு வாரமும் எதையாவது செய்து இவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தவள் "இந்த கன்டிஷன் எனக்கு ஓகே" என்றாள் அவள்.

தோள்களைக் குலுக்கியவன் பேனாவை அவள் கையில் கொடுக்க அந்த பத்திரத்தில் தனது கையெழுத்தை இட்டாள் அவள்.

ஒற்றை கையெழுத்து அவள் தலையெழுத்தை மாற்றப் போவது உறுதி.

"சரி நீ கிளம்புனா... வீட்டைப் பூட்டிட்டு நானும் கிளம்பிடுவேன்" என்றவன் வாயிலைப் பார்க்க.

அவளும் ஒரு பெருமூச்சுடன் தனது கைப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவள் அங்கிருந்து கிளம்பிய அடுத்த நொடி அவனுமே தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

'சண்டாளன் முழுசா விடிய கூட இல்லை. அதுக்குள்ள விரட்டி விட்டுட்டான். மணி இப்போ தான் அஞ்சு. டீ கடை கூட திறக்கலை. இதுல எங்க போய் நான் வேலை தேட' என்று புளம்பிக் கொண்டே அங்கிருந்த பூங்கா அருகே சென்றவள் 'இங்க கொஞ்ச நேரம் இருப்போம். எப்படியும் வாக்கிங் ஜாக்கிங்னு ஆள் நடமாட்டம் இருக்கும். நல்லா விடிஞ்ச பிறகு கிளம்பலாம்' என்று நினைத்தவள் அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்தவள் சோர்வில் அப்படியே தூங்கியும் போனாள்.

சற்று நேரத்தில் ஏதோ அனத்தல் சத்தம் கேட்க. மெலிதாக கண் விழித்தவள் 'யார் அனத்திட்டு கிடக்கா இந்த நேரத்துல' என்று சுற்றும் முற்றும் பார்க்க.

அவளுக்கு பின்னால் இருந்த கல் பெஞ்சில் உடலைக் குறுக்கிக் கொண்டு கிடந்தான் பார்த்தீபன். காலையில் கட்டிய பட்டு வேட்டி சட்டை அழுக்கடைந்து மழையில் பொதுபொதுவென நனைந்து போய் இருந்தது.

அவனது முகமே அவனது சோர்வை காட்ட அவளுக்கு ஒரு மாதிரி ஆகிப் போனது.

ஏசி அறையில் பஞ்சு மெத்தையில் மனைவியின் முந்தானை சேலை சூட்டில் சுகமாக தூங்க வேண்டியவன் திருமணமான மறுநாளே இப்படி தெருவில் கொசுக் கடியில் கசங்கிய வேட்டியில் கிடக்கிறானே என்று பாவமாக இருந்தது அவளிற்கு.

ஏற்கனவே ஈரமான உடை இதில் பனி வேறு லேசாக பொழிந்து கொண்டிருக்க அவன் உடல் குளிரில் நடுங்கியது. என்ன நினைத்தாளோ தன் தோளில் கிடந்த ஷாலை எடுத்து அவனுக்கு போர்த்தி விட்டவள் பழைய படி தான் இருந்த கல் பெஞ்சில் சென்று அமர்ந்து கொண்டாள். ஆனால் இம்முறை அவளுக்கு தூக்கம் வரவில்லை. மனம் பாரமாகியது. இன்று இவனின் இந்நிலைக்கு அவளும் ஒரு காரணம் அல்லவா. இந்த நினைப்பே அவளை கொல்லாமல் கொன்றது.

இதையெல்லாம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ராகவனின் பற்களோ கோபத்தில் அவன் உதடுகளைப் பதம் பார்த்தது.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ ஆட்கள் வர வர இறைச்சலும் அதிகமாக அதிலே கண் விழித்தான் பார்தீபன்.

"பார்த்தீ ப்ரோ முழிச்சிட்டிங்களா?" என்று ஸ்ரீ அவன் அருகில் செல்ல.

அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் "இங்க என்ன பண்ற ஸ்ரீ" என்றவன் தன் மேல் போர்த்தியிருந்த ஷாலை அவளிடம் நீட்டியபடி அவளிடம் கேட்க.

அவளோ நடந்த அனைத்தையும் கண்ணீருடன் சொன்னாள்.

"இவ்வளவு நடந்தும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல தோணலையா ஸ்ரீ உனக்கு?" என்றவன் கோபமாக கேட்க.

"நீங்களே கஷ்டத்துல இருக்கும் போது நான் எப்படி உங்களை தொல்லை பண்றது?" என்றாள் அவள்.

"ப்ச் இதெல்லாம் உனக்கு தொல்லையா?" என்றவளை கடிந்தவன். "இதுவும் ராகவன் வேலையாத் தான் இருக்கும். ராஸ்கல் பண்றதையும் பண்ணிட்டு நக்கலா பேசுறானா அவன்? ஆமா நீ எதுக்கு அவன் கொடுத்த பேப்பர்ஸ்ல சைன் பண்ண? என்கிட்ட கேட்கனும்னு தோணலையா? அட்லீஸ்ட் கொஞ்ச யோசிச்சிட்டு பண்ணியிருக்கலாம்ல?" என்றவன் கேட்க.

"நான் யோசிக்குறது இருக்கட்டும் ப்ரோ... இனி நீங்க எது பண்றதா இருந்தாலும் யோசிச்சு பண்ணுங்க. சொல்ல முடியாது இங்க எங்கையாவது நின்னு நம்பல பார்த்துட்டு இருந்தாலும் இருக்கலாம் உங்க எக்ஸ் ப்ரெண்ட்" என்றாள் அவள் நக்கலாக.

அவனோ அவளை முறைக்க. "என்ன முறைக்குறது அப்புறம் இருக்கட்டும். முதல் கிளம்புங்க?" என்றவள் சொல்ல. எங்க? என்னும் விதமாக அவளைப் பார்த்தான் பார்த்தீபன்.

"சுஜி வீட்டுக்கு தான். சுஜியோட அப்பாகிட்ட இதைப் பத்தி சொல்லலாம். அதுக்கு அப்புறம் எல்லாம் அவர் பார்த்துப்பாரு" என்றவள் சொல்ல.

"இந்த பிரச்சினை முடியாம சுஜி அப்பா முகத்துல நான் எப்படி முழிக்குறது. இதைக் கூட உன்னால சரி பண்ண முடியாதானு அவர் என்கிட்ட கேட்டா என்ன சொல்றது?" என்றவன் கேட்க.

"என்ன ப்ரோ?" என்றாள் அவள் சலித்த படி.

"இந்த பிரச்சனைக்கு தீர்வு என் மாமனார்கிட்ட இல்லை ஸ்ரீ, ராகவன்கிட்ட இருக்கு. இதை ஆரம்பிச்சவன் அவன்.முடிக்குறதும் அவனா தான் இருக்கும். அவனைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்" என்றான் பார்த்தீபன்.

"அது சரி நீங்க ஏன் இங்க இருக்கீங்க? உங்க அம்மா அப்பா அண்ணா எல்லாம் எங்க போய்ட்டாங்க. பாவம் வீடு இல்லாம அவங்களும் கஷ்டபட்டுருப்பாங்க. நைட் இந்த மழைல குழந்தைகளை வச்சிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டாங்களோ" என்றவள் வருத்தம் போல சொல்ல.

அவளை விரக்தியாக ஓர் பார்வை பார்த்தவன் "அம்மாவும் அப்பாவும் ஊருக்கு போய்டாங்க மாமாவோட வீட்டுக்கு. அண்ணன் அவன் குடும்பத்தோட அவன் மாமனார் வீட்டுக்கு போய்டான்" என்றான் அவன் சோர்ந்து போய்.

"நீங்களும் உங்க அம்மாப்பா கூட ஊருக்கே போய்ருக்கலாமே. அங்க ஏதாவது பிஸ்னஸ் செட் பண்ணிட்டு சுஜியை கூட்டுட்டு போறேன்னு சொன்னா அவளோட அப்பா வேணாம்னா சொல்ல போறாரு" என்றவள் கேட்க.

"அவங்களை எல்லாம் பக்கத்து வீட்ல விட்டுட்டு வீடு தேடி நைட் எல்லாம் அழைஞ்சேன். எதுவும் கிடைக்கலை. சரினு அம்மாகிட்ட சொல்ல போன் பண்ணேன். ஒரு பனிரெண்டு மணி இருக்கும். நாங்க எல்லாம் ஊருக்கு வந்துட்டோம். உன் அண்ணன் மாமனார் வீட்டுக்கு போய்டான். நீ எங்க போக போறனு என்கிட்ட திருப்பி கேட்குறாங்க" என்று வெறுப்புடன் சொன்னவன் "நீ இனி ராகவ் வீட்ல இருக்க வேண்டாம். சுஜி வீட்டுக்கு போ. அவ உன்னை பார்த்துப்பா" என்றவன் சொல்ல.

அவளுக்கும் அது சரியெனப் பட அதற்கு ஆமோதித்தாள் அவள். "நீங்க என்ன பண்ண போறீங்க?" என்றவள் கேட்க.

"என் ப்ரெண்ட் ரூமுக்கு போய்டுவேன். அதுக்கு அப்புறம் ஏதாச்சும் வேலையைத் தேட வேண்டி தான்" என்றவன் அவளைக் கையோடு சுஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் "போ" என்று சொல்ல அவளும் ஒரு வித தயக்கத்துடனே அங்கு சென்றாள்.

ஆனால் அவளது இந்த முயற்ச்சியும் தோல்வியில் முடிந்து போனது. சுஜியின் வீடு பூட்டிக் கிடக்க அக்கம்பக்கம் விசாரிக்க "நேத்து கல்யாணம் முடிஞ்ச கையோட எல்லாரும் திருப்பதி கோயிலுக்கு கிளம்பியாச்சே" என்றனர்.

பார்த்தீபன், ஸ்ரீ இருவருக்குமே அதிர்ச்சி தான். ஸ்ரீ சுஜிக்கு அழைத்து நாசுக்காக விடயம் கேட்க அவளுமே அதே பதிலை சொல்ல சோர்ந்து போயினர்.

பார்த்தீபன் ஏற்கனவே நண்பன் வீட்டில் தங்கும் எண்ணத்தில் இருக்க ஸ்ரீயை தனது பெண் தோழிகள் வீட்டில் தங்க வைக்கலாம் என்று முயற்ச்சி செய்து பார்த்தான். அதுவும் அவனால் முடியாது போக லேடிஸ் ஹாஸ்டல் ஒவ்வொன்றாக தேடி அழைய "இப்போ ரூம் எதுவும் ப்ரீ இல்லை. வேற ஹாஸ்டல் பாருங்க" என்ற ஒற்றை வரி பதில் மட்டும் தான் வந்தது. வேறு வழியில்லாது மீண்டும் அவள் ராகவன் இல்லம் வந்தாள்.

அவன் வீட்டிற்கு வர எப்படியும் நள்ளிரவு தாண்டி விடும் . அவன் வீடு திரும்பும் வரை தான் அவளிற்கு வீட்டிற்குள் அனுமதி இல்லையே.... பார்த்தீபனுக்கு அவளை தனியே விட மனமின்றி ராகவன் வரும் வரை மழையில் நனைந்த படி அவள் துணைக்கு நின்றான்.

இதையெல்லாம் சற்று தள்ளி நிறுத்தப்பட்ட தனது உயர் ரக காரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த படி பார்த்துக் கொண்டு தான் இருந்தான் அவன்....
 

Author: காதல் கவிதை
Article Title: கவிதை 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 11, 2025
Messages
32
கொஞ்சம் வித்தியாசமான ஆள் தான் ராகவ்... வெயிட் பண்ணி பாப்போம் அப்படி என்ன பண்ண போறான்னு.....
 
Top