கல் வெளி : 1

New member
Joined
Aug 21, 2025
Messages
16
காலை 9:00 மணி :

பெங்களூர் விமான நிலையத்தில், ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. தனக்கு பிடித்த நடிகர்களை பார்ப்பதற்காக...

அவர்களும், எல்லோரிடமும் கையை கொடுத்துவிட்டு நீட்டிய தாள்களில் தங்கள் கையொப்பங்களை இட்டும், தங்கள் பாடிகாட்கள் மூலம் பாதுகாப்பாக உள்ளே வர இங்கு எந்த ஆரவாரமும் இன்றி, நாற்காலியில் சாய்ந்து, யோசனையில் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்...

அவள் யோசனையை கலைக்கும் வண்ணம், விமான நிலைய பணிப்பெண், மேடம் நீங்க கேட்ட ஹாட் வாட்டர், என்று குயிலை ஒத்த குரலில் தெளிந்து, வேண்டாம் என்பது போல் தலையை மட்டும் அசைத்து விட்டு மீண்டும் தன் யோசனையில் உழன்று விட்டாள்...

பின்பு எல்லோரும் வர, அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தனி விமானத்தில், நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்த நபர்களின் உதவியுடன், தன் தோழிகளுடனும் தனக்கென, ஏற்பாடு செய்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்...

அவர்களுக்காகவே ஏற்பாடு செய்திருந்த அந்த தனி விமானம் ஹைதராபாத்தை காலை 10.30 மணிக்கு.... வந்தடைந்தது, அதிலிருந்து எல்லோரும் இறங்கி, தங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஓட்டல் அறைக்கு சென்று ஓய்வு எடுத்து விட்டு, இன்னும் ஒரு வாரத்தில், நடைபெறவிருக்கும், தென்னிந்திய விருது விழாவிற்கு, அவரவர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும், பாடல்களுக்கு, நடனமாட நடன ஒத்திகைக்காக சென்று விட்டனர்.

அவளுடன் இருந்த தோழிகளும், அவற்றையெல்லாம் கண்டுகளிக்க சென்றுவிட்டனர். இவளோ தன் அறையில் இருக்கும் பால்கனியின் கம்பிகளை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்....

மீண்டும், அவளின் தோழிகள் வந்து எவ்வளவு அழைத்தும் அவள் செல்லவில்லை....

அதில் ஒருவள்... ஏண்டி இவ இப்படி இருக்கா...

ஏய், இங்க பாரு அது அவ விருப்பம்.. நமக்கு அவதான் எல்லாம் சொல்லி தரா, அவதான் எல்லாமே செய்றா, ஆனா நமக்கு பிடிச்சத அவ செய்ய தடுத்ததில்லை நம்மளும் அதுக்கேத்த மாதிரி இருக்கணும் சரியா என்று சொல்ல சரி என்று இவர்களும் அங்கு சென்று விட்டனர். இவ்வாறாக ஒரு வாரம் கழிய....

அவர்கள் வந்த அந்த விருது வழங்கும் விழா நாளும் வந்தது....

இரவு 12 மணியளவில் ஹைதராபாத்தின் சினிமா விருதுகளுக்கும், இசை வெளியிட்டு விழாவிற்கும் என வைத்திருக்கும் பிரம்மாண்டமான, ரிசார்ட் அது அதில் ஒரு புறம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என நான்கு மொழி கலைஞர்களும் வந்து குவிந்த வண்ணமும், அவர்களின் பாதுகாவலர்கள் அவர்களை இருபுறமும் சூழ்ந்து கொண்டு பாதுகாத்து அவர்களை மறைத்தும், அங்கு அமைத்திருக்கும் சிறு மேடைக்கு புகைப்படத்திற்காக அழைத்துச் செல்ல....

மேடையில் ஏறி தங்களின் ஆடைகளின் அழகையும் தங்களின் அழகையும் சிரித்த முகமாக அந்த புகைப்பட கலைஞர்களுக்கு போஸ், கொடுத்து ஒவ்வருவராக இறங்க...

என்னதான் ஒரே துறையில் இருந்தாலும் அடிக்கடி பார்க்க முடியாமல் இருப்பவர்கள் ஒருபுறம் பார்த்து கட்டியணைத்து பரஸ்பரம் விசாரித்துக் கொண்டும், ஒருபுறம் தொகுப்பாளர்கள் அவர்களை பேட்டி எடுக்கும் பொருட்டு கேள்விகளை கேட்டு, கிண்டல் அடித்துக் கொண்டும் இருக்கும் நேரம்....
வேகமாக ஒரு ரோல்ஸ் ராயல் கார் வந்து நின்றது.
அதிலிருந்து கம்பீரமாக, இறங்கினான். ஆறடிக்கு சற்றுக் குறைவு தான் என்றாலும், மிதமான தாடி, அழகான மீசை கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, காண்போரை காந்தம் போல் இழுக்கும் கண்கள்.... எதுவாக இருந்தாலும் ஒரு அடி தொலைவில் நின்று பேசு என்பது போல் எச்சரிக்கும் கூர் நாசி, எப்போதும் சிரிக்கும் ஆனால், சிரிக்காத இதழுக்கு சொந்தக்காரன். தருண் குமார்...

காரிலிருந்து இறங்க, நடிகர்களுக்கு எனவே அமைத்திருக்கும் பாடிகார்ட்ஸ் வந்து அவனை சூழ்ந்து கொண்டனர். அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு அங்கே எல்லாம் சரியாக இருக்கின்றதா? என பார்த்துக் கொண்டு இருந்தான்....

அப்போது தான், அவனை கவனித்த, தொகுப்பாளர்களின் ஒருத்தி,

ஏய், சாரா, அங்க பாரு தருண்குமார் சார், வந்துட்டாரு போல, எப்போ வந்தாரோ?? தெரியல.... கொஞ்சம் வேகமா வா

வரேன்....
ஆமாம், வா அவரை, போய் சீக்கிரம் இன்வைட் பண்ணலாம்..... அப்போதான் சரியா இருக்கும்... அப்பறம், சம்பளம் ஏதும் கம்மியாகிடப் போகுது...

ஏண்டி, இப்படி சொல்ற....

ஏய், சும்மா சொன்னேன்.... அவர் தானே இந்த ப்ரோக்ராம் நடக்கிறதுக்கு காரணம், அதனால சொன்னேன்..

உன்னை... என்று சிரித்துக் கொண்டே அடிக்க வர...

சரி, சரி வா!! என்னை அப்பறமா கொஞ்சலாம்.

(ஆம். அவன் தான் இந்த விழா நடக்கக் காரணமே...

தென்னிந்திய விருதை தேர்ந்தெடுக்கும்..... தலைவர்கள் ஐவரில் ஒருவன் அவன், தென்னிந்திய சினிமாவின் ஒரு தூண் என்று சொல்லும், ராதாகிருஷணனின் மகன், பல படங்களை இவனே, தயாரித்து இயக்கியும் இருக்கிறான். தனக்கு தோன்றுவதை செய்யும் கிறுக்குப் பிடித்தவன்.

தனக்கு பிடிக்காததை யாராவது செய்தால் அதை எல்லோரும் முன்பும் உடைத்து பேசிவிட்டு சென்று விடுவான். அதனாலே, இவனைக் கண்டால் அனைவருக்கும் பயம்)

என இவர்கள் பேசிக் கொண்டே வந்தனர். அவர்கள், அடித்துப் பிடித்து ஓடி வர,

ஹே, கூல், கூல்... ஏன்? இவ்ளோ வேமாக வரீங்க...

இல்ல உங்களை பாக்கல, அதான் சார்!!

நாம இப்போ விருந்தாளி இல்லை.... சோ, இங்க வர ஸ்டார்ஸ்சை நல்லா கவனீங்க.... என்று சொல்லி விட்டு... சென்று மீண்டும் நினைவு வந்தவனாக, திரும்பி... மிஸ். ஒரு நிமிடம்,

சாரா, சார்...

ஓகே, எனக்கு அந்த கேட்டில் இருக்கும். ரெண்டு பேரை இங்க வர சொல்ல முடியுமா?? என்றுக் கேக்க...

இதைக் கேட்ட சாராவிற்கோ... ஒன்றும் புரியவில்லை, எவ்வளவு பெரிய தயாரிப்பாளரின் மகன், பெரிய இயக்குனரும் கூட... இந்த சிறிய வயதிலேயே இவ்வளவு உயர்ந்திருக்கிறான். இவன் கை சொடுக்கினாலே போதுமே எல்லோரும் வந்து நிற்பார்கள். இவன் அவர்களை வர சொல்ல முடியுமா?? என்று பணிவுடன் கேட்கிறானே, என்று ஆச்சரியத்தில் கண்கள் விரிந்து நின்றாள் அவள், ஆனால் அவனுடைய உண்மை முகம் பாவம் அவளுக்கு தெரியாதே??

என்ன மிஸ். சாரா கொஞ்சம் கூப்பிடுங்களேன்....


ம்ம்ம்.... சார் என்று அவரை வரவழைத்துவிட்டு,

அடுத்தடுத்து, சினிமா பிரபலங்கள் தொடர்ந்து வர, அவர்களை கவனிக்க இவள் சென்று விட்டாள்.

இவனும் வந்து வாட்ச்மேனிடம் ஏதோ? காதில் சொல்லிவிட்டு, உள்ளே சென்று விட்டான்.

மீண்டும், ஒரு பி. எம். டபள்யூ, கார் வர, அதிலிருந்து, சிரித்த முகமாக இறங்கினான். பெண்கள் மனதைக் கொள்ளை கொண்டு சாக்லேட் பாய் என சொல்லப்படும் நாயகன், ஆதிரன்.... இவனும், விரல் விட்டு எண்ணக் கூடிய பெரிய நடிகர்களில் ஒருவன் தான்... நிறைய மாஸ் படங்களில் நடித்திருந்தாலும், இவனின் அழகான தோற்றம்... இவனை சாக்லேட் பாய் என்று தான் அறிய முடிகிறது....

அவனைக் கண்டதும், இவர்களுக்கும்... முகம் முழுக்க பல்லாய் மாறிப் போய், அவனிடம் பேசினர்...

ஹாய் சார்... எப்படி இருக்கீங்க...

ஐ அம் பைன்,

அப்பறம் சார், எப்படி பீல் பண்றீங்க வழக்கம் போல இந்த வருஷமும் உங்க படம், நாமினேஷன் ல வந்து இருக்கு....

சந்தோசமா இருக்கு... வேற என்ன சொல்ல முடியும்.

வின் பண்ணுவீங்கன்னு நம்பிக்கை இருக்கா சார்...

அது எப்படி?? நாம சொல்ல முடியும்...

பாக்கலாம்,

அப்போது, மீண்டும்.... தருண் போன் பேச வெளியில் வர...

அவனிடம் பேச சென்று விட்டான்....

ஹாய்... தருண்,

ஹே, ஹாய்... ஆதி எப்படி?? இருக்க,

ம்ம்ம்... பைன்,

அப்பறம், உன் படம் எல்லாம் எப்படி?? போகுது...

ம்ம்ம்.... நல்லா போகுது,

எப்படியோ?? இந்த மூஞ்சிய கன்னட மக்கள் ஏத்துக்கிட்டாங்க, என்று நக்கலாகக் கூற,

இவனும், எல்லாம் உங்கள மாதிரி, தயாரிப்பாளர் எங்கள மாதிரி... ஹீரோவை நம்பி காசு கொட்டுற வரை எனக்கு என்ன கவலை இருக்கப் போகுது தருண்,

அப்போ?? எங்கள முட்டாளுன்னு சொல்லமா சொல்ற அப்படித்தானே!! என்றுக் கண்ணில் கோவத்துடனும், முகத்தில் சிரிப்புடனும் கேக்க....

நான் அப்படி சொல்லல, தருண்... உங்களை எல்லாம், அப்படி சொல்ல முடியாதே!! நீங்க இல்லமா நாங்கள் எல்லாம் ஏது?? என்று இவனும் மீண்டும், திருப்பிக் கொடுக்க....


ஏய்... என்ன இப்போ?? நீ பெரிய ஹீரோவா இருக்க திமிரல பேசுறீயா??

ஐயோ?? நான் எப்போ?? அப்படி சொன்னேன்... நாம பெரிய ஹீரோ, இல்ல... ஹீரோவான்னு எல்லாம் ஆடியின்ஸ் தான் தீர்மானிக்கணும்.

நல்லா தான்டா பேசுற... இப்போ நியாபகம் வச்சுக்கோ?? நீ தமிழ், கன்னடா, மலையாளம்.. ஏன்?? இந்திக் கூட போ?? ஆனா, தெலுங்குப் பக்கம் மட்டும் வராத, ஏன்? வரணும்ன்னு கூட நினைக்காத, புரியுதா??

நானா, வரணும்ன்னு நினைக்கல ஆனா... வாய்ப்பு வந்தா விட மாட்டேன்....

டேய்... மைதாமாவு மூஞ்சி, போடா மூடிட்டு.... அடிக்கப் போறேன். மூஞ்சில கோடு விழுந்தா, அப்பறம் கேரக்ட்டர் ரோலுக் கூட யாரும் சீண்ட மாட்டாங்க....

எங்க அடி பாக்கலாம்.... என்று இவனும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்கும் நேரம்...

மீண்டும் ஒரு பரபரப்பு வேறு ஒரு ஆடி கார், சர் என்று பயமுறுத்தும் அவர்களின் முன்பு வந்து நின்றது.

அதிலிருந்து, நல்ல அயர்ன் செய்த செந்தேறி காட்டன் சேலைக் கட்டிக் கொண்டு, கண்ணில் ஒரு மிடுக்குடன் இறங்கினாள்...

அவரைக் கண்டதும், ஆதி மரியாதை நிமித்தம், அவரைக் கட்டியணைத்து நலம் விசாரித்து விட்டு, வந்தான்.

தருணோ, தனது சுட்டெரிக்கும் பார்வையை அவர் மேல் வீசி விட்டு...

என்ன ஆதி, ஜுரி மெம்பரை காக்கா புடிச்சி, பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வாங்க பாக்குற அப்படி தானே!!

அவனுக்கு, கோவம் கொப்பளித்து கண்கள் சிவப்பு ஏற, அவன் சட்டையைப் பிடிக்கப் போக, அவர் தடுத்துவிட, அவனும் சற்று பொறுமைக் காத்து விட்டு, மிஸ்டர். தருண் யுவர் கிராஸ்ஸிங் யுவர் லிமிட்...
மவனே! இதுக்கு மேல பேசின... அவளோதான்.... என்று எச்சரித்தான்.

அவரும், தருணின் புறம் திரும்பி... மரியாதை நிமித்தம் கை நீட்ட,
அவனோ, ஒரு நிமிடம் சுற்றி தன்னை யாராவது பார்க்கிறார்களா!! என தன் கண்களை சுழல விட்டு தன்னை யாரும் பார்க்கிவில்லை என அறிந்தப் பின்பு, அவர் கைகளை தட்டி விட்டு,

சிரித்துக் கொண்டே, பேசிய வார்த்தைகளைக் கேட்டு, இருவருக்கும் கோவம் தலைக்கு ஏற, அடுத்த நடந்த நிகழ்வால் அமைதிக் காக்க வேண்டியதாயிற்று....

அதே நேரம், அந்த பிரம்மாண்டமான, ரிசார்ட்டின்... முன்பு, தன்னுடைய ஐடியைக் காட்டியும் உள்ளே விடாத, வாட்ச்மேனைப் பார்த்த வண்ணம், தன் கைப்பயை இறுக்கிப் பிடித்த வண்ணம் நின்று இருந்தாள்.

இந்தக் கதை யாரையும் குறிப்பிடவில்லை.... பல பெண்களின் நிலைப்பாடு தான் இந்தக் கதை, அந்த சூழ்நிலைகளை கடந்து வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த கதையின் நோக்கம்....

கதையின் போக்கு எப்படி இருக்குனு சொல்லுங்க.....
அப்படியே, மதிப்பீடுகளையும், தங்களின் விமர்சனத்தயும் கொடுத்து விட்டு போங்க... செல்லம்ஸ்
 

Author: Roja
Article Title: கல் வெளி : 1
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 20, 2025
Messages
37
சூப்பர் சூப்பர் 💐💐💐

அருமையான தொடக்கம்💐💐💐
 
Top