கனவு 4

New member
Joined
Aug 11, 2025
Messages
16
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜

எபி 4

கண்களை மூடி படுத்தாளே தவிர காவ்யாவிற்கு உறக்கம் தான் வரவில்லை. அவள் மனமோ வழக்கம் போல வெறுமையை தான் உணர்ந்தது. நீண்ட நேரமாக எதோ யோசனையில் இருந்தவள் அதி காலை போல தான் உறங்கினாள் பெண் அவள்.

காலை ஆறு மணி போல எழுந்த சித்தார்த் சென்று வேகமாக குளித்து விட்டு காலை உணவை சமைத்து கொண்டு இருந்தான். காவ்யாவும் அப்போது தான் உறக்கம் கலைந்து எழுந்தாள். பின் சென்று குளித்து விட்டு வெளியே வரவும் சித்தார்த் அவளை காண வரவும் சரியாக இருந்தது.

சித்தார்த் அவளை பார்த்து " எனக்கு தெரிஞ்ச வர சமைச்சு இருக்கேன் மறக்காம சாப்பிடுங்க அப்பறம் நான் வேலைக்கு போறேன் ஈவினிங் தான் வருவேன், உங்களுக்கு எதாவது வேணும்னா இது என் நம்பர் என ஒரு கார்டுஐ அவளிடம் கொடுத்து மெசேஜ் பண்ணுங்க ஈவினிங் வரும் போது நான் வாங்கிட்டு வரேன் " என கூறி வெளியே சென்று அவன் பல்சர் வண்டியில் சென்று விட்டான்.

அவன் சமைத்த உணவை உண்டு விட்டு வீட்டில் உள்ள பொருட்கள் மூலம் இரவு உணவை சமைத்து வைத்தாள் காவ்யா. அவளுக்கு தேவையான பொருட்களை மட்டும் சித்தார்த் யின் எண்ணிற்கு தட்டச்சு செய்து அனுப்பினாள். அவனும் இரவு வழக்கம் போல குடித்து விட்டு வந்து அமைதியாக உண்டு விட்டு படுத்து விட்டான். ஆனால் காவ்யா கேக்கும் பொருளை மட்டும் தவறாமல் வாங்கி வந்து கொடுத்து விடுவான். அவளும் அவனை கண்டு கொள்ளாமல் இருக்க இப்படியே ஒரு வாரம் சென்றது.

அன்று இரவு ஒரு மணி ஆகியும் சித்தார்த் வீட்டிற்கு வரவே இல்லை. காவ்யாவும் காத்து இருந்து இரண்டு மணி போல உறங்கி விட்டாள். மறுநாள் காலை பொழுது சூரியனின் ஒளி திரையை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. காவ்யா இன்னும் தூக்கத்திலிருந்து முழுமையாக எழாமல் படுத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். ஹாலிலிருந்து கண்ணாடி பாட்டில்களின் சத்தம், மேசையில் இடிக்கப்படும் கண்ணாடி கிண்ணங்கள் சத்தம் கேட்டது.

அவள் பயந்து எழுந்து பார்த்தாள். ஹாலில் சித்தார்த் சாய்ந்து அமர்ந்தபடி, கையில் ஒரு விஸ்கி பாட்டிலோடு குடித்துக்கொண்டு இருந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன, முடியும் சீர்குலைந்திருந்தது.

“சித்… தார்த்… இது என்ன?” என்று காவ்யா மெதுவாக கேட்டாள்.

அவளது குரல் கேட்டதும் அவன் தலை தூக்கி, சிரிக்க முயன்றான்.
“ஹா… காவ்யா… கவி… நீங்களா! வாங்க வாங்க , நான்தான் உங்க ஹஸ்பண்ட் இல்லையே அப்பறம் நான் குடிச்சா உங்களுக்கு என்ன பிரச்சனை ? ” என கேக்க

அவள் அதிர்ச்சியுடன்,
“ஆனா இது… உங்க ஹெல்த்க்கு நல்லது கிடையாது… இன்னிக்கு காலைலேயே குடிக்கிறீங்களே?”

சித்தார்த் சிரித்து, கிண்ணத்தை சத்தமாக மேசையில் வைத்து,
“என் ஹெல்த்-ஆ? காவ்யா… என் ஹெல்த் எதுக்குன்னு கேட்குறீங்க? என் வாழ்க்கையையே பாதியில் கிழிச்சுட்டாங்க. நான் என்ன ஆசைப்படினாலும் நடக்கலை. எல்லாருக்கும் என்னோட பொம்மை மாதிரி நடத்துறாங்க. நான் கூட யாரோட வாழ்க்கையில ஒரு டிராமா ஹஸ்பண்ட். அதனால தான் நான் குடிப்பேன்! இது தான் எனக்கு சத்தியமான மருந்து!”

அவளோ அந்த வார்த்தைகளை கேட்டதும் மனசு உடைந்தது. அவன் இதுவரை தன்னுடைய உண்மை முகத்தை மறைத்து வைத்திருந்தான் என்பதை புரிந்துகொண்டாள்.

அவள் மெதுவாக அவன் அருகே வந்து, பாட்டிலை எடுத்து வைக்க முயன்றாள்.
“சித்… குடிக்காதீங்க. உங்களுக்கு வேறு வாழ்க்கை இருக்கு. குடிப்பதால எதுவும் சரியாது. உங்க கனவ நோக்கி போங்க ” என கூற

சித்தார்த் அவளது கையைப் பிடித்து விட்டு,
“கவி… நீ எப்ப புரிஞ்சுக்க போறே? என் வாழ்க்கைல பாசம் கொடுத்தவங்க இல்லை. உங்க கூட வந்ததும் ஒரு அரை டிராமா கல்யாணம்னு நினைச்சேன். ஆனா நேத்து இரவு… நீ என்னை அணைத்து தூங்கின… அந்த உணர்வு எனக்கு புதுசு. அதுக்காக நான் உயிரோட இருக்கணும்னு தோணுது. ஆனா அடுத்த நொடி நம்பிக்கை எல்லாம் உடைஞ்சிடுது. உனக்கு தேவையில்லாதவன் மாதிரி தான் தோணுது.”

அவள் கண்களில் நீர் வழிந்தது.
“சித்தார்த் இங்க யாரும் யாருக்கும் நிரந்தரம் கிடையாது. ஆனா அதனால நம்மையே நாம கெடுக்கக்கூடாது. குடி விடுங்க. உங்க வாழ்க்கை இன்னும் அழகா மாறலாம். நீங்கள் உங்களை மாற்ற நினைச்சா மட்டும்…”

சித்தார்த் திடீரென சிரித்து எழுந்தான்.
“மாறணுமா? ஹா… சரி! நீங்க சொல்லுங்க நான் யாருக்காக குடிய விடணும் பெத்தவங்களே என்ன நம்பள, கூட பொறந்தவழும் அவங்களுக்கும் மேல காசுக்காக என் வாழ்க்கையை அடமானம் வச்சிட்டா !... அப்பறம் நீ.. நீங்க இன்னும் ஆறு மாசம் அப்பறம் நீங்க யாரோ நான் யாரோ, இதுல எனக்காக யாராவது இருந்தா சொல்லு நான் குடிய விடுறேன்.” என வேதனையோடு கேக்க

அவள் குழப்பமடைந்தாள். “அது என்ன அர்த்தம்?” என யோசித்து ' உங்களுக்கு வேணும்னா நாம நல்ல நண்பர்களா இருக்கலாம், இந்த ஆறு மாசம் வரை ' என்றாள்

அவன் கண்கள் சிவந்தபடியே அவளைப் பார்த்து,
“கவி… உன்னை நம்பணுமா இல்லையா தெரியல. ஆனா ஒன்னு நீ என் வாழ்க்கைல கிடைச்ச ஒரு ஒளி. நீ என்னை விட்டு போயிடாதே. இல்லனா நான் இப்படியே இருக்குறேன் ப்ளீஸ் என்ன கட்டாய படுத்தாத ” என கூற

காவ்யா அப்போது தான் உணர்ந்தாள்—இந்த ஆணின் மனசு உடைந்த பிள்ளை மாதிரி இருக்கிறது. பாசம் தேடிக்கொண்டிருக்கிறான். ஆனால், அவன் வாழ்க்கை முழுக்க குடி, கோபம், தனிமை எல்லாத்தாலும் சூழ்ந்து கிடக்கிறது.

அவள் தன்னிடம் மெதுவாக மனதில் முடிவு எடுத்தாள்.
“இந்த மனிதனை நான் காப்பாற்றணும். இவனுக்கு வாழ்க்கையை மீண்டும் நம்ப வைக்கணும்.” ஆனால் ஒன்றை மறந்தாள் அவளும் அதே நிலையில் தான் இருக்கிறாள் என்பதில்

அங்கே சித்தார்த் இன்னும் கையில் பாட்டிலை பிடித்து கொண்டு,
“கவி… இப்ப நீ சொல்றியா? நீ என்னோட கூட இருக்குறவரைக்கும் நான் குடி விடுறேன். இல்லனா…” என்று பாட்டிலை உதடுகளுக்கு அருகே கொண்டு சென்றான்.

காவ்யா வேகமாக அவன் கையிலிருந்து பாட்டிலை பறித்து எறிந்தாள்.
“சித்தார்த் … போதும்! இப்போதிருந்து இந்த வீட்டுல குடி வரக்கூடாது. நீங்கள் குடிச்சா… நான் ஒரே நிமிஷம் கூட இங்க இருக்கமாட்டேன். தி சாய்ஸ் இஸ் யூர்ஸ் ” என்றாள்

அவள் கண்கள் தீப்பிடித்த மாதிரி இருந்தது. சித்தார்த் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.

ஒரு பக்கம் அவனுடைய பழக்கம் அவனை பிடித்துக்கொண்டு இழுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் காவ்யாவின் வார்த்தைகள் அவனுள் ஏதோ ஒரு நம்பிக்கையை விதைத்தன.

அவன் மெதுவாக சோபாவில் அமர்ந்தான்.
“சரி காவ்யா… உங்க முடிவுக்கு நான் ஒத்துக்குறேன். இன்று முதல் குடியை விட்டு விடுறேன். ஆனா நீங்க என்னை விட்டு போகக்கூடாது. நீங்க இருந்தா நான் மாறுறேன்.” என கேக்க

அவள் சுவாசம் விட்டுக் கொண்டாள். ஆனால் மனதுக்குள் தெரிந்தது—இது ஒரு தொடக்கம் தான். சித்தார்தின் குடி பழக்கம், மன அழுத்தம், தனிமை எல்லாம் அவளுடைய வாழ்க்கையை இன்னும் எத்தனை சோதனைகளுக்கு உள்ளாக்கும் என்று தெரியவில்லை.

ஆனால் ஒரே வாக்குறுதி தன்னிடம் வைத்தாள்.
“சித்தார்த் ஒரு குடிகாரன் என்ற பெயரில இருந்து நான் அவனை காப்பாற்றுவேன். அவனுக்கு வாழ்க்கையை மீண்டும் கொடுப்பேன்.” என்ற தீர்க்கமான முடிவோடு " ஓகே சித்தார்த் நீங்க சொன்னத்துக்கு நான் ஒதுக்குறேன் " என கூறி சமைக்க சென்று விட்டாள்.

அன்றைய நாளும் அப்படியே கழிய மறுநாள் காலை அழகாக புலர்ந்தது. முதலில் கண் விழித்த காவ்யா சித்தார்த் தின் கையில் இருந்து அவள் கையை உருவி கொண்டு எழுந்து சென்றாள்.

அவளின் அசைவில் கண் விழித்த சித்தார்த் நினைவோ முந்தைய நாள் நடந்த குடி சம்பவத்துக்கு சென்றது. காவ்யா அவனிடம் தன் முடிவை உறுதியாகச் சொல்லிவிட்டாள்.
“இனி குடிக்கக் கூடாது. இல்லையெனில் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்” என்று.

அந்த வார்த்தைகள் சித்தார்தின் உள்ளத்தில் ஏதோ தடம் பதித்தன. அவன் பாட்டிலைத் தள்ளி வைத்தாலும், மனசுக்குள் ஓர் அச்சமும், ஒரு புதிய நம்பிக்கையும் கலந்திருந்தது.

குளித்து முடித்த சித்தார்த்தோ நேராக
காவ்யாவை தேடி சென்றாள் அவளோ சமையலறையில் நின்று, எளிமையான சாப்பாடு செய்து கொண்டிருந்தாள். அடுப்பின் வாசமும், காபியின் மணமும் வீட்டில் பரவியது. சித்தார்த் மெதுவாக ஹாலிலிருந்து வந்து கதவின் அருகே நின்றான். அவன் கண்களில் இன்னும் ஒரு வித சோர்வு இருந்தாலும், உள்ளத்தில் ஒரு அமைதி தெரிந்தது.

“கவி…” என்று மெதுவாக கூப்பிட்டான்.

அவள் திரும்பிப் பார்த்தாள்.
“சார்… எப்போ எழுந்தீங்க? காபி கொண்டு வரவா .” என கேக்க

அவன் சிரித்தான். அந்த சிரிப்பு முந்தைய நாட்களில் இல்லாத, கொஞ்சம் பசுமை கொண்ட சிரிப்பாக இருந்தது.
“நீங்க காபி பண்ணினீங்கன்னா, அதுவே எனக்கு ஒரு போதை மாதிரி தான். மத்தவங்க காபி வேணாம்.” என அவன் கூற

அவள் அவனை பார்த்தப்படி “ சித்தார்த் உங்களோட ஜோக்குகள் கூட எப்போயும் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவரா தான் இருக்கும்” என்றாள்.

சரி.. சரி.. நகருங்க நான் காபி கலக்குறேன் என இருவருக்கும் காபி போட்டான்.

இருவரும் ஆளுக்கு ஒரு கப் எடுத்து கொண்டு ஹாலில் அமர்ந்து காபி குடித்தனர். அந்த நிமிடம் மட்டும் இருவரும் கண்களில் அமைதியை உணர்ந்தனர்.

சித்தார்த் கிண்ணத்தை விட்டு, அவளிடம் நேராக பார்த்தான்.
“கவி, நாம ஹஸ்பண்ட்-வைஃப் ரிலேஷன்ல மட்டும் இருக்கா தான் உங்களுக்கு பிடிக்கல சோ நீங்க சொன்ன மாதிரி நாம லைப் லோங் ப்ரெண்ட்ஸ் ஆகலாமா ?” என கேக்க

அவள் திகைத்தாள்.
“ப்ரெண்ட்ஸா? ஆனால்…”

அவன் இடையில் தடுத்து,
“ஆம்… எனக்கு வாழ்க்கையிலேயே உண்மையான நண்பர்கள் இல்லை. எல்லோரும் பணத்துக்காகத்தான் வந்தவர்கள். நீங்க மட்டும் வேற. உங்க வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால உங்களை ப்ரெண்ட் மாதிரி பேசிக்கணும் என்று தோணுது. அது உங்களுக்கு ஓகே வா ?”

அவள் சற்று அமைதியாக இருந்து கொண்டாள்.
“சரி சித்தார்த். இனிமே நாம ப்ரெண்ட்ஸ். ஆனா அதுக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு.” என்றாள்

அவன் ஆவலுடன் கேட்டான்.
“என்ன கண்டிஷன்?”

“நீங்க இனிமே குடிக்கக் கூடாது. அந்த குடிதான் உங்க வாழ்க்கையை கெடுக்குது. ப்ரெண்ட்ஷிப்புக்காக அந்த பழக்கத்தை விடுங்க அண்ட் என் பேமிலி பத்தியும் கேக்க கூடாது .” என கூற

சித்தார்த் சிறிது யோசித்து தலை அசைத்தான்.
“சரி. ஓகே உங்க கண்டிஷன்க்கு நான் ஒதுக்குறேன் அண்ட் நான் உங்க ப்ரெண்ட்ஷிப்புக்காக இந்த குடியையும் விடுறேன்.” என கூற

காதல் கூடுமா 💞 ....
 
Author: velvizhiyaal
Article Title: கனவு 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Joined
Aug 21, 2025

காவியா என்னோட பேமிலியை பத்தி நீங்க எதுவும் கேட்க கூடாதுன்னு சொல்றாளே அதுக்கான காரணம் என்னவா இருக்கும்?.... 🤔
 
Top