Member
- Joined
- Aug 11, 2025
- Messages
- 32
- Thread Author
- #1
என் கனவோடு கைவீசும் காதல் இவள் யாரோ 💜
எபி 12
வந்த வேகத்தை விட அதி வேகமாக காரை ஒட்டி சென்றான் சித்தார்த்... காவ்யாவோ அவனை கண்டு ' எதுக்கு இப்ப இவளோ வேகமா போற சித்தார்த் ' என்றாள்
அவனோ கோபமாக ' உனக்கு இந்த பீலிங்ஸ் எல்லாம் இல்லையாடி நானும் காலையில இருந்து பாக்குறேன் அந்த பொம்பள அவளோ பேச்சு பேசுது நீயும் அமைதியா கேட்டு கிட்டு இருக்க ' என பொறிந்து தள்ள
காவ்யாவோ கசந்த புன்னகையோடு " யாருக்காக சித்தார்த் நான் அவங்க கிட்ட சண்டை போடணும் எனக்கு தான் யாருமே எதுவுமே நிரந்தரம் இல்லையே " என்றாள்
சித்தார்த்தோ அவள் பதிலில் குழம்பி தான் போனான் பின் ' லூசு மாதிரி பேசாத கவி ஏண்டி நான் இல்லையா உனக்கு ' என கேக்க
அவளோ ' இன்னக்கி இருப்ப நீ ஆனா நாளைக்கி நாம பிரிய தான வேணும் ' என்றாள்
அவனும் அதன் பின் எதுவும் பேசாமல் வண்டியை வேகமாக ஒட்டி சென்றான். வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தி இருவரும் உண்டு விட்டு அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர். வீட்டில் காவ்யாவை இறக்கி விட்ட சித்தார்த்தோ நேராக மித்ரன் வீட்டிற்கு தான் சென்றான்.
---
சித்தார்த் வீட்டுற்குள் செல்ல அங்கே மித்ரனோ சோபாவில் அமர்ந்து எதோ கணக்குகளை பார்த்து கொண்டு இருந்தான். மித்ரனோ " வா சித்தார்த் என்னடா தனியா வந்து இருக்க கவி வரலையா " என்றான்
சித்தார்த்தோ ' பச்! அவள கேக்காத மித்து சரியா ரோபோ டா அவ எந்த உணர்ச்சியும் இல்லாம என்ன கொல்ற ராட்சசி... என்றான்
மித்ரனோ சிரித்து கொண்டே " என்னடா பிரச்சனை எதுக்கு இப்படி பொலம்புர " என்றான்
பின்ன என்ன மித்து... இன்னக்கி அந்த கோதவரி அவளோ பேச்சு பேசுறாங்க ஆனா இவ காலு மாதிரி இருக்கா... எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசுறல... என்றான்
மித்ரனோ " இதுக்கா இப்படி இருக்க... அவ அப்படி தான் சித்தார்த்... என்னா அவ சந்தோசமா இருக்க வேண்டிய வயசுல அனுபவிச்ச கஷ்டம் எல்லாம் அப்படி... இது வர அவளுக்கு அன்பு நம்பிக்கை கொடுத்த எல்லாரையும் இழந்துட்டா... இப்ப நீயும் எங்க அவளுக்கு நம்பிக்கை கொடுத்து விட்டுட்டு போய்டுவியோன்னு பயம்... அதான் இப்படி இருக்கா... " என்றான்
சித்தார்த்தோ ' அப்படி என்ன தான் நடந்துச்சு நீயாவது சொல்லு மித்து ' என்றான்
மித்ரனோ சொல்றேன் என காவ்யாவை பற்றி கூற ஆரம்பித்தான்...
வாசுதேவன் -அஞ்சலையம்மாள் அவங்களுக்கு ரெண்டு பசங்க மூத்தவர் என் அப்பாவோட நண்பர் காளிராஜன் ரெண்டாவது கிருஷ்ணன்.
வாசுதேவன் ரொம்ப ஜாதக பைத்தியம் அதுனால அவர் சொந்த பையனையே வீட்டை விட்டு ஒதுக்கி வச்சாரு. காளி மாமா எங்க அப்பா கூடவே இங்க தங்கிட்டாரு.. அப்பறம் கிருஷ்ணன் மாமாவுக்கு கல்யாணம் ஆச்சு அவங்க மனைவி கோதவரி அவரும் சரியான மூட நம்பிக்கை பைத்தியம். எல்லாமே நல்லா தான் இருந்துச்சு. அவங்களுக்கு ஹரிஷ் பொறந்தான்.
இங்க காளி மாமாவுக்கு நான் தான் உலகமே.. அவரும் கல்யாணமே பண்ணிக்காம எங்க குடும்பத்துக்காகவே தனியா வாழ்ந்துட்டார். அப்ப தான் ஒரு நாள் அஞ்சு பாட்டி போன் பண்ணி மாமா கிட்ட காவ்யா பொறந்து இருக்கானு சொன்னாங்க. அவருக்கு ரொம்ப சந்தோசம். நேர்ல போய் அவர் தான் அவளுக்கு காவ்யாஞ்சலினு பெரு வச்சாரு...
ஆனா அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட இல்ல பொறந்த குழந்தைய வேணாம்னு கிருஷ்ணனும் கோதவரியும் சொல்லிட்டாத சொல்லி காவ்யா பாப்பா வோட எங்க வீட்டுக்கு வந்துட்டாரு நாங்களும் எதுவும் கேக்கல... எங்க வீட்ல இருந்த வர குட்டி பார்பி டால் பொம்மை மாதிரி இருப்பா... அவ...
மூணு வருஷம் கழிச்சி அஞ்சு பாட்டிக்கு உடம்பு சரி இல்லனு காவ்யாவோட ஊருக்கு போனவரு பொணமா தான் திரும்புனாரு... அப்பாவும் காவ்யாவா என் கூடவே கூட்டிகிட்டு போறேன்னு சொன்னதுக்கு அஞ்சு பாட்டி தான் என் பேத்திய நான் பார்த்துக்குறேனு சொல்லி அங்கேயே வச்சி கிட்டங்க...
அதுக்கு அப்பறம் அவள நான் ஆறு வருசம் கழிச்சு தான் பார்த்தேன் அப்ப அவளுக்கு ஒரு ஒன்பது வயசு இருக்கும்..... ஒரு நாள் எங்க வீட்டுக்கு ரெண்டு பெரும் வேலைக்கு வந்தாங்க. நான் பார்த்த பொம்ம குட்டி காவ்யாவா இதுனு எனக்கே ஆச்சர்யமா தான் இருந்துச்சு....
எப்பவும் சிரிப்பும் குழந்தை தனமான இருந்த அவ சிரிப்பை மறந்த பாறை மாறி இறுகி போய் இருந்த ஆளும் பாக்க வெறும் எலும்பும் தொழும் தான் இருந்துச்சு.... அதுக்கு அப்பறம் அஞ்சு பாட்டி எங்க வீட்ல சமையல் வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காவ்யா தான் உலகமே எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா பொறந்ததும் இறந்து போயிடுச்சினு அம்மா சொல்லுவாங்க ஒரு வேலை இப்ப அவ இருந்த என் காவ்யா மாதிரி தான் இருந்து இருப்பா....
நாங்களும் நிறைய முறை பாட்டிகிட்ட எதுக்காக நீங்க காவ்யா வோட இங்க தனியா இருக்கீங்கன்னு கேட்டேன் அப்ப தான் சொன்னாங்க...
காவ்யா பொறந்த அன்னக்கி தாத்தா எதோ ஜோசியற பாக்க... அவரோ இந்த குழந்தை இருந்த உங்க உயிருக்கு ஆபத்துனு சொல்லி இருக்காரு....
அதனால எல்லாரும் அவள கள்ளி பால் ஊத்தி கொள்ள பார்த்து இருகாங்க அப்ப தான் காளி மாமா பார்த்து அவள தூக்கி கிட்டு இங்க வந்துட்டாருனு... எல்லாமே நல்லா தான் போச்சு....
கடைசியில ஒரு நாள் அவங்க தாத்தா சொன்ன மாதிரி காவ்யாவுக்கு மூணு வயசு இருக்கும் போது எதோ வாங்கணும் காளி மாமாவோட வெளிய போன தாத்தா லாரி மோதி இறந்து போய்ட்டதாகவும் அதுக்கு காவ்யா தான் காரணம்னு யாரும் அவ கிட்ட பேசுறதே இல்ல....
இதுக்கு எல்லாம் ஒரு படி மேல கிருஷ்ணன் அவள பார்த்து பேசவே மாட்டாரு ஆனா கோதவரி எப்பவும் அவள தேள் மாதிரி வார்த்தையால கொட்டி கிட்டே இருப்பாங்க... இப்படியே பாட்டியோட கவனிப்புல தான் அவ வளர்ந்தா... பாட்டியும் அவங்க கிட்ட இருந்த காசு எல்லாம் வச்சு அவள பார்த்திக்கிட்டாங்க....
அவ அந்த வீட்ல அனுபவிக்காத கொடுமையே இல்லனு சொல்லலாம். அஞ்சு பாட்டி மட்டும் இல்லனா அவ எப்பவோ செத்து இருப்பா... தினமும் எல்லாரும் சாப்பிட்டு மிச்சம் இருக்குறத தான் சாப்புடுவா... சில நாள் வெறும் தண்ணிய மட்டும் குடிச்சிட்டு தூங்கிடுவா.... காலையில நாலு மணிக்கே எழுந்து எல்லா வேலையும் செய்வா... இது வர அவ சரியா தூங்கியே நான் பார்த்தது இல்ல கேட்டா அப்படியே பழகிடுச்சுனு சொல்லுவா...
அந்த வீட்ல சொந்தக்காரங்கனு யாரு பார்த்தாலுக்கு அவள ராசி கெட்டவ... பொறந்த நேரம் சரி இல்லனு... திட்டிகிட்டே இருப்பாங்க அவளும் அது எதுவும் புரியலானாலும் எல்லாத்தையும் பாட்டி கிட்ட சொல்லிடுவா...
இப்படி ஒரு நாள் அஞ்சு பாட்டி உடம்பு முடியலன்னு இருந்து இருகாங்க அவளும் பசிக்குதுன்னு அந்த வீட்ல போய் சாப்டு இருக்கா அந்த நேரம் அவள பார்த்த கோதவரி கோபமா அவ கையில இருந்த தட்டை கீழே தள்ளி விட்டு
' ஏண்டி சனியனே நீ இருக்க அழகுக்கு முதல சோறு கேக்குதோ போ போய் வேலை எல்லாம் முடிச்சிட்டு தின்னு ' என கத்த..
குழந்தை காவ்யாவோ ' பசிக்குது மா கொஞ்சம் சாப்டு போறேன் ' என்றாள்
அதை கேட்ட அந்த ராட்சசியோ " யாருக்கு யாருடி அம்மா அனாதை நாயி நீ நான் உனக்கு அம்மா வா போடி வெளிய இனிமே நீ சமையல் கட்டு பக்கமே வர கூடாதுனு " அவள போட்டு அடிச்சி வச்சு இருகாங்க
அவளும் வலி தாங்க முடியாம பாட்டி கிட்ட சொல்ல அவங்களும் பதிலுக்கு அந்த கோதவரியா திட்ட மொத்த கோபத்துக்கும் சேர்த்து காவ்யா வயித்துல சூடு வச்சா அந்த ராட்சசி... அதுவும் சும்மா இல்ல காவ்யாவா மிரட்டி ' இத வெளிய சொன்ன உனக்கும் உன் அப்பத்தாவுக்கும் சோறு இல்லனு சொல்லி இருகாங்க '
அவளும் அத யாரு கிட்டயும் சொல்லல அதுக்கு அப்பறம் ரெண்டு நாள் ஒரே ஜுரம் அப்பதான் வயித்துல காயம் இருக்குறத பார்த்த பாட்டி கோதவரி கிட்ட கேட்டதுக்கு
" ஏய் கோதவரி, ஏண்டி இப்படி பச்ச புள்ளன்னு கூட பக்கமா சூடு வச்சு இருக்க " என்றார்
அவளோ ' அவ வீட்ல காச திருடி வாங்கி தின்னு டா அதான் சூடு வச்சேன் ' என வாய் கூசாமல் பொய் சொல்ல
அதை கேட்ட கிருஷ்ணனும் ' அதான் அவ சொல்லறத பார்த்த இவ திருடி தான் இருப்பா அதனால நாம அவள எதாவது ஆசராமத்துல விட்டுடலாம் மா இந்த மாதிரி ஒருத்தி நாளைக்கி காசுக்கு ஆசை பட்டு உங்கள எதாவது பண்ணிட்டா என்ன பண்றது ' என்றார்
அதை கேட்டு கோபமான பாட்டியோ " என்ற பேத்தி ஒன்னும் உங்கள மாதிரி மனுஷ மிருகம் இல்ல... இனிமே நீங்க யாரும் அவளுக்கு தேவை இல்ல... அவளுக்காக நான் இருக்கேன்,... நல்லா கேட்டுக்கோ பையன் பையன்னு கொண்டாடுற அந்த ஹரி தான் உங்களுக்கு நல்ல பாடத்த கத்து கொடுக்க போறான் " என கூறி காவ்யாவோடு சென்னை வந்து விட்டார்.
இதை எல்லாம் என் கிட்ட அஞ்சு பாட்டி சொல்லும் போது சாத்தியமா நான் ஒரு நிமிஷம் செத்து போய்ட்டேன்... இவ்வளவு சின்ன வயசுல அவளுக்கு எதுக்காக இப்படி ஒரு கஷ்டம்னு...
அதுக்கு அப்பறம் எங்க வீட்ல இருந்தே படிக்க ஆரம்பிச்சா... அப்பாவும் அவரோட கம்பெனில அவள வேலைக்கு சேர்த்து கிட்டாரு... அவளும் சிரிக்க தான் மாட்ட ஆன அவளோ பாசம் எங்க குடும்பத்து மேல அவளுக்கு.... ஆனா என்ன எவளோ பாசமா இருந்தாலோ அந்த அளவு இப்ப இறுகி போய்ட்டா... நான் இழந்ததா விட அவ இழப்பு பெருசு சித்தார்த்... அதுக்கு அப்பறம் அவ இப்படி தான் இருக்கா...
கடைசியா பாட்டிக்கு உடம்பு சரி இல்லனு அந்த ஊருக்கு போன அதுக்கு அப்பறம் தான் உங்க கல்யாணம் நடந்தது... இது வர அந்த வீட்ல இருக்க யாருக்கும் அவ என்ன படிச்சி இருக்கா... வேலைக்கு போறலா... இல்ல எப்படி இருக்கானு கூட கேக்கணும்னு தோணுனது இல்ல... ஏன் அவ பெரு கூட முழுசா தெரியாது அவங்களுக்கு... இதுல அவங்க பண்ண ஒரே விசியம் உன்ன கல்யாணம் பண்ண சொன்னது தான் ' என முடித்து அவன் முகம் பார்க்க
சித்தார்த்தோ ' அப்பறம் ஏன் அவ அவங்களுக்காக இந்த கல்யாணம் பண்ணிக்கணும் ' என்றான் கண்ணில் நீரோடு
மித்ரனோ " எனக்கும் அது தான் தெரியல ஆனா அவ கிட்ட நீயே கேளு உனக்காவது அவ உண்மைய சொல்லட்டும் " என்றான்
காதல் கூடுமா 💞...

Author: velvizhiyaal
Article Title: கனவு 12
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.