- Thread Author
- #1
"அப்புறம் உங்க தங்கச்சி சொல்றான்னு நம்ம பொண்ணுக்கு நீங்கே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடாதீங்க. அவள் இப்பதான் வேலைக்கு போறாள். நீங்க சொல்ற மாதிரி அவள் நல்ல பொசிஷனுக்கு வரணும். அதுக்கு அப்புறம் அவளை கல்யாணம் பண்ணி கொடுக்கலாங்க"
"நான் ஏன் மீனாட்சி அதெல்லாம் பண்ணப் போறேன்? ஆனாலும் பரவால்ல மீனாட்சி, மத்த அம்மா எல்லாம் சீக்கிரம் பொண்ண கட்டி கொடுக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா நீ அந்த மாதிரி இல்ல"
"ஏங்க எதுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணுறாங்க? அவங்க, அவங்க பொண்ணு மேல நம்பிக்கை இல்ல அதனால தான். ஆனா, நான் என் பொண்ண நம்புறேன்"
"சரியா சொன்ன மீனாட்சி, நம்ம பொண்ண நம்ம தான் நம்பணும். இன்னும் ஒரு வருஷத்துக்கு வேலைக்கு போகட்டும். நல்ல பொசிஷனுக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம்"
"சரிங்க, நான் போய் மலர் வந்தா சாப்பிடறதுக்கு ஏதாவது செஞ்சு வைக்கிறேன்"
"ஆமா மீனாட்சி, புள்ள பாவம். காலைல போயிட்டு சாயந்திரம் தான் வராள். முகமே வாடி போய் வராள். உன் பையன் தான் இருக்கானே? ஏதாவது வேலைக்கு போறானா?"
"ஏங்க நம்ம பொண்ணு கஷ்டப்படுறாங்கறது உண்மைதான். அதுக்காக தேவையில்லாத மதன்ன ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க? அவனும் வேலை தேடிட்டு தான் இருக்கிறான்"
"அவன் எங்க வேலை தேடுறான்? பிரண்ட்ஸோட சேர்ந்து வெளிய எங்கயோ கிளம்புறேன்னு பேசிட்டு இருந்தான்"
"என்னங்க சொல்றீங்க? அவன் அப்படி எல்லாம் பண்ண மாட்டானே. இருங்க, கூப்பிட்டு கேட்கிறேன். மதன்....... டேய் மதன்......"
"சொல்லுங்கம்மா"
"என்னடா பண்ணிட்டு இருக்க?"
"அது வந்தும்மா...... வெளியூர்ல ஒரு வேலைக்கு அப்ளை பண்ணி இருந்தேன். அங்க கூப்பிட்டிருந்தாங்க. அதான் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண போறேன்"
"அதுக்கு ஏன் பேக் பண்ணிட்டு இருக்க?"
"அது வந்தும்மா...... அங்க ரெண்டு நாள் தங்கி இருந்துதான் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண முடியும். ஏன்னா ஆபீஸ்கு போறதுக்கு கொஞ்சம் தூரம்மா"
"டேய் மதன், அப்பா சொல்றதெல்லாம் உண்மையாடா?"
"அவரு என்னம்மா சொன்னாரு?"
"நீ எங்கேயோ பசங்க கூட சேர்ந்து வெளிய போறியாம்மா?"
"அம்மா, நான் ஏன் அதெல்லாம் பண்ண போறேன்?"
"டேய் மதன், பொய் சொல்லாதடா" (ராகவன்)
"யாருப்பா உங்களுக்கு சொன்னா? மலர் தான?"
"அவள் எல்லாம் ஒன்னும் சொல்ல, நீ ஃபோன் பேசிட்டு இருக்கும்போது நானே கேட்டேன்"
"அப்பா அது வந்து....... இன்டர்வியூக்கு தான்பா போறேன்"
"டேய் மதன், உன் தங்கச்சிய கொஞ்சமாவது யோசிச்சு பார்க்குறியாடா? படிச்சு முடிச்சுட்டு, வேலைக்கு போயிட்டு இருக்காள். பாவம்டா அந்த பொண்ணு. ரெஸ்ட் இல்லாம வேலைக்கு ஓடிட்டு இருக்காள். ஆனா நீ என்னடா பண்ற வீட்ல இருந்துட்டு? நீ கொஞ்சம் வேலைக்கு போனா வீட்டு செலவு நீ பார்த்துக்கலாம்ல? அவளும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பாள்"
"அப்பா இவ்வளவு தூரம் நீங்க சொல்றீங்க. இதுக்கு மேலயும் நான் இப்படியே இருக்க மாட்டேன்பா. இவ்வளவு சொல்லியும் நான் மனசாட்சியே இல்லாம வெளிய போய் ஊர் சுத்திட்டு வேலைக்கு போகாம இருந்தன்னா நான் மனுஷனே கிடையாது. சீக்கிரமா நான் ஏதாவது ஒரு வேலைக்கு போறேன்பா. இவ்வளவு நாள் நான் இப்படி பண்ணிட்டு இருந்ததுக்கு சாரிப்பா"
"அப்புறம் மதன், என்னையும் மன்னிச்சிடுடா. பல தடவை உன் மனசு காயப்படுத்துற மாதிரி நான் பேசிருக்கேன். நீ வேலைக்கு போகணுங்கறதுக்காக தான் நான் இதெல்லாம் சொன்னேன். உனக்கு வீட்டு பொறுப்பு வரணும்னு தான் சொன்னேன். நாளைக்கு உனக்கு ஒரு கல்யாணமே பண்ணுனாலும், அந்த பொண்ணு வீட்ல கேட்பாங்கள்ளடா நீ என்ன வேலைக்கு போறேன்னு? அப்போ என்ன வேலைன்னு சொல்லுவ? அதுக்காக, தான் அப்பா கொஞ்சம் கடினமா பேச வேண்டியதா போச்சு. அதெல்லாம் மனசுல வச்சுக்காதடா"
"பரவால்லப்பா, நீங்க எனக்காக தான் திட்டினீங்கன்னு எனக்கு புரியுது. இன்னும் ரெண்டு, மூணு நாள்ல ஒரு இன்டர்வியூ வருதுப்பா. நான் வெளியே டூர் போலாம்னு தான் இருந்தேன். ஆனா நான் எங்கேயும் போகல. நான் இந்த இன்டர்வியூவ அட்டென்ட் பண்ணி, கண்டிப்பா அந்த வேலைக்கு போவேன்"
"சரிடா மதன்"
பேசி முடித்துவிட்டு மதன் ரூமுக்கு சென்றான். உள்ளே சென்றவன்,
"இவ்வளவு நாள் மலர பத்தி நம்ம யோசிச்சதே இல்ல. இனிமேலாவது அவளுக்காக ஏதாவது பண்ணனும். அவள் கல்யாணத்துக்குள்ள நம்ம அவளுக்குன்னு ஏதாவது செய்யணும்"
என மதன் தனியாக பேசிக் கொண்டிருக்க, அப்போது தான் மலர் வீட்டுக்குள் வந்தாள்.
"அம்மா நான் வந்துட்டேன்"
"வந்துட்டியா மலர்?"
"அம்மா, நான் உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?"
"வந்த உடனே ஏன்டி கிச்சனுக்குள்ள வர? நீ போய் ஃபிரஷ் ஆயிட்டு ரூமுக்குள்ள இரு. நான் உனக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வரேன். இன்னைக்காவது ரெஸ்ட் எடு மலர்"
என சொல்ல, மலர் அங்கிருந்து கிளம்பி ரூம்பிற்குச் சென்றாள். கை, கால், முகம் எல்லாம் கழுவி விட்டு சோர்வாக பெட்டில் படுத்திருந்தாள். மதன் மலருடைய ரூம்பிற்கு வந்தான். மலர் சோர்வாக பெட்டில் படுத்திருப்பதை பார்த்தான்.
மதன் ரூமுக்குள் வந்து நிற்பதை கவனித்தாள் மலர்.
"என்ன ஆச்சு அண்ணே? ஏன் என்னைய பார்த்துட்டு இருக்க?"
"அது வந்து மலர்........ இந்தா உன்னோட காசு"
"ஏன் அண்ணே, வெளிய போறேன்னு சொன்ன போகலயா?"
"இல்ல மலர். நான் எங்கேயும் போகல"
"அண்ணா நான் அப்பா கிட்ட எல்லாம் சொல்ல மாட்டேன். நீ போயிட்டு வா, உனக்கு காசு பத்துலயா? நான் வேணா இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா தரட்டுமா?"
"இல்ல மலர், சாரி..... இவ்வளவு நாள் நான் உன் காச வாங்கிட்டு ஊர் சுத்திட்டு இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு இன்னைக்கு தான் புரிஞ்சது. உன் முகத்தை பார்க்கவே எனக்கு கஷ்டமா இருக்கு. எவ்வளவு சோர்வா இருக்க? உனக்கு எவ்வளவு டயர்டா இருக்கும்? கொஞ்சமாவது அண்ணங்கற இடத்துல இருந்து நான் நல்ல வேலைக்கு போய் உன்ன வீட்ல இருக்க வச்சிருக்கணும். நான் தப்பு பண்ணிட்டேன்"
"அப்படி எல்லாம் இல்ல அண்ணா, எனக்கு இந்த வேலை புடிச்சுருக்கு, அதான் போறேன்"
"பொய் சொல்லாத மலர். உனக்கு இந்த வேலை பிடிக்கவே இல்ல, ஆனா வீட்டுக்காக தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இந்த காச நீயே வச்சுக்கோ. நீ வேணா பாரு, உன் கல்யாணத்துக்கு அண்ணனா நான் ஏதாவது உனக்கு செய்வேன்"
"அதெல்லாம் எதுவும் வேணாம், நீ ஏன் அண்ணா சிரமப்பட்டுக்குற?"
"அப்படி எல்லாம் சொல்லாத மலர், நான் கண்டிப்பா ஏதாவது வேலைக்கு இந்த முறை போயிடுவேன். எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல இன்டர்வியூ இருக்கு. அந்த இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி அதுல செலக்ட் ஆகி நான் வேலைக்கு போயிடுவேன். இனிமேல் நீ கஷ்டப்பட வேண்டாம்"
"அண்ணே, நீ வேலைக்கு ஏன் இப்பவே போற? கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. நல்ல ஜாப்பா பார்த்துப் போ"
"என்ன மட்டும் வீட்ல இருக்க சொல்லாத மலர். என்னால வீட்ல இருக்க முடியாது. வீட்ல இருந்தா போரடிக்கும். அப்புறம் நானும் அத்தை மாதிரி சீரியல் பாத்துட்டு இருக்க வேண்டியதுதான்"
என சொல்ல, அதை கேட்டு சீரியஸாக பேசிக் கொண்டிருந்த மலர்விழி தன்னை மறந்து குபீரென சிரித்தாள்.
"ஒரு வழியா என் தங்கச்சி சிரிச்சுட்டாள்"
"அண்ணே, உனக்கு இதெல்லாம் செட் ஆகல. நீ ஜாலியா இரு, எப்பவும் போல இரு. ஆனாலும் உனக்கு இந்த குடும்ப பொறுப்பு வந்தது பார்க்க ஹாப்பியா தான் இருக்கு. அதுக்காக இவ்ளோ சீரியஸா இருக்காத அண்ணே. ஜாலியா இரு, ஜாலியா வேலை பாரு. ஹாப்பியா இரு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம ஃபேமிலிய பார்த்துக்கலாம். ஓகேவா?"
"சரி வா, நம்ம டிவி பார்க்க போலாம்"
"இல்ல அண்ணே, அத்தை டீவி பார்த்துட்டு இருப்பாங்க. நம்ம ஏன் அவங்கள டிஸ்டர்ப் பண்ணனும்?"
"எப்போ பார்த்தாலும் அத்தை தான டீவி பார்க்குறாங்க? நீ வா மலர், நம்ம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் டீவி பார்க்கலாம்"
"ஆனா அண்ணே, அத்தை டீவி பார்க்க விட மாட்டாங்களே? என்ன பண்றது"
"அதுக்கு நான் ஒரு ஐடியா பண்றேன் வா போலாம்"
என இருவரும் வெளியில் வந்தார்கள்.
"என்னடா மதன்? எங்கயோ வெளியே போறன்னு கிளம்பிட்டு இருந்த? போகலயா?"
"இன்னொரு நாள் போயிக்கலாம்னு விட்டுட்டேன் அத்தை"
"அப்படியாடா? வாம்மா மலரு, அப்படியே போய் அம்மாகிட்ட டீ வாங்கிட்டு வந்துடேன்"
"சரிங்க அத்தை"
"இரு மலர், ஒரு நிமிஷம்" (மதன்)
"அத்தை உங்களுக்கு ஒன்னு தெரியுமா? அம்மா சுட, சுட மசால் போண்டா போட்டுட்டு இருக்காங்க. செம டேஸ்ட். நானும், மலரும் இப்போ தான் சாப்பிட்டோம்"
"ஏன்டா, நீங்க மட்டும் தனியா சாப்பிட்டீங்க...... எனக்கு கொண்டுவர வேண்டியதுதான?"
"உங்களுக்கு கொண்டு வந்து கொடுக்கலாம்னு தான் அத்தை பார்த்தோம். ஆனா, நீங்க இன்ட்ரஸ்ட்டா டீவி பாத்துட்டு இருந்தீங்களா, ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்னு விட்டுட்டோம். அம்மா இன்னும் போண்டா போட்டுட்டு இருக்காங்க. உங்கள வர சொன்னாங்க. போய் வாங்கிக்கோங்க அத்தை"
"சரி இருங்க, நான் வந்துடறேன்"
என சொல்லிட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
"ஏன் அண்ணே இப்படி பண்ற?"
"விடு மலர், எப்போ பார்த்தாலும் டீவி பாத்துட்டு இருக்காங்க. அம்மா பாவம் தனியாக கிச்சன்ல வேலை செய்றாங்க. அம்மானால அத்தைய கூப்பிடவும் முடியல. அத்தை ஏதாவது சொல்லுவாங்களோன்னு அம்மாவும் எதுவும் சொல்றதில்ல. அத்தை போய் இன்னைக்கு ஹெல்ப் பண்ணட்டும். விடு, நம்மளும் டீவி பார்த்த மாதிரி இருக்கும்ல?"
"அண்ணே, இருந்தாலும் பாவம் அத்தை"
"இன்னைக்கு ஒரு நாள் வேலை செய்றதுல ஒன்னும் ஆக மாட்டாங்க. மலர் நீ கம்முனு இரு"
என சொல்லிவிட்டு இருவரும் டீவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கிச்சனுக்குள் சென்ற சாவித்திரி,
"என்ன அண்ணி மசால் போண்டா சுட்டு வச்சுருக்கீங்களா?"
"அப்படின்னு யார் சொன்னா சாவித்திரி?"
"மதன் தான் சொன்னான்"
(ஓ!! மதன் சொன்னானா.......?)
"அது இங்க தான் இருந்துச்சு. ஆனால் எல்லாரும் சாப்பிட்டமே. நீ சாப்பிடுவியோ? என்னமோன்னு நான் கொஞ்சம்தான் செஞ்சேன்"
"என்ன அண்ணி இப்படி சொல்றீங்க? எனக்கு கொஞ்சம் தரணும்னு உங்களுக்கு தோணல?"
தொடரும்.........
படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.

Last edited:
Author: Anu1997
Article Title: எபிசோட் 5
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.