எபிசோட் 17

New member
Joined
Aug 21, 2025
Messages
22
"வாப்பா அருள், இதுதான் என் பையன். நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல"

"அப்பா இவரு......???"

"உங்க அம்மாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இவரோட மில்ல தான் வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுக்கப்புறம் பெருசா ரெண்டு பேரும் சந்திச்சுக்க வாய்ப்பு கிடைக்குல. இவர் பெயர் ராகவன்"

(மலர்விழியின் அப்பா இவர்)

"உன் பையனா? நல்லா வளர்ந்துட்டான். இந்த வயசுலயே தைரியமா பிசினஸ் பண்றான். நம்ம இவன் வயசுல வேலைக்கு போயிட்டு இருந்தோம். ஆனா இந்த காலத்து பசங்க புத்திசாலியாவும், பொறுப்பாவும் இருக்காங்க. நீ கவலைப்படாதடா, உன் பையன் உன் வாழ்க்கையவே மாத்தப்போறான்"

"அப்படியா சொல்ற?"

"ஆமாம்டா, நான் மட்டும் பொண்ணு வீட்டுக்காரனா இருந்தா? இப்படி ஒரு பொறுப்பான பையன் கெடச்சா போதும்னு என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவேன்"

"ஆமா.......உனக்கு ஒரு பொண்ணு இருக்கால்ல?"

"ஆமாம்டா, சொல்ல மறந்துட்டேன். அவளும் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போயிட்டு இருக்காள். அப்புறம் ஒரு பையன் இருக்கான். அவனும் இப்பதான் வேலைக்கு ஜாயின் பண்ணிருக்கான்.

"சூப்பரடா"

"சரி, எப்போ தம்பி வீடு கட்ட போற? அப்பா எல்லாம் சொல்லிட்டு இருந்தாரு"

"ஆமாங்க அங்கிள், பிசினஸ்ல நல்லா நிலைமைக்கு வந்ததும், வீடு கட்ட ஆரம்பிச்சிடுவேன். சின்ன வயசுல இருந்தே அப்பா, அம்மா ரெண்டு பேரும் நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்களுக்குன்னு சொந்த வீடு கூட இருந்ததில்ல. கண்டிப்பா அவங்க கனவு நான் நிறைவேற்றுவேன்.

"அதுக்கு ஏதாவது ரெடி பண்ணி இருக்கியா?"

"அது வந்த அங்கிள்.......இங்க பக்கத்துல ஒரு இடம் பார்த்து வச்சிருக்கேன். ஆனா அந்த இடம் வாங்கறதா வேணாமான்னு டவுட்டா இருக்கு"

"பணம் வச்சிருக்கியா?"

"அதெல்லாம் வச்சிருக்கேன் அங்கிள். லோன் அமௌன்ட் கையில இருக்கு. கொஞ்சம் அமவுண்ட்ல பிசினஸ்க்கு தேவையான மெட்டீரியல் எல்லாம் வாங்கிட்டேன். மீதி அமௌன்ட் வெச்சு அந்த இடம் வாங்கிடலாம்னு பார்க்கிறேன்"

"சரியான முடிவு எடுத்துருக்கப்பா. இடம் வாங்கி போட்டா அதுக்கப்புறம் பொறுமையா வீடு கட்டிக்கலாமே? எந்த இடத்தை சொல்ற?"

"எங்க வீட்ல இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இடம் காலியா இருக்கு பாருங்க அங்கிள், அதுதான்"

"அந்த இடமா? அந்த இடம் நல்ல இடமாச்சேப்பா? எனக்கு அந்த இடத்தோட ஓனர் நல்லாவே தெரியும். அவர் ரொம்ப நாளா அந்த இடத்தை விற்கணும்னு தான் சொல்லிட்டு இருந்தாரு. அந்த இடத்த வித்தா போதும்னு நினைக்கிறாரு. குறைஞ்ச விலைக்கு கூட கொடுக்க வாய்ப்பிருக்குப்பா. கண்டிப்பா உனக்கு அந்த இடத்தை நான் வாங்கி தரேன்"

"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்"

"உன்னை மாதிரி பசங்களுக்கு ஹெல்ப் பண்றதுல எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. என் பொண்ணும் இப்படித்தான் வீட்டுக்காக ஏதாவது பண்ணனும்னு சொல்லிகிட்டே இருப்பாள். அவளுக்கு வீடு தான் உலகமே. வீட்டு தாண்டி வேற எதுவுமே யோசிக்க தெரியாது"

"இந்த காலத்துலயும் இப்படி ஒரு பொண்ணா? எனக்கு கூட இந்த மாதிரி ஒரு மருமகள் வந்தா நல்லா தான் இருக்கும். நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்பா. நீ எதுவும் நினைச்சுக்காத.

"அதெல்லாம் நான் எதுவும் நினைக்கல. சரி நான் கிளம்புறேன்பா"

"என்ன அண்ணே, பொண்ண பத்தி பேசுனதும் கிளம்புறீங்களா?"

"அதெல்லாம் எதுவும் இல்லம்மா, இதுல நான் மட்டும் முடிவெடுக்க முடியாது. எல்லாரையும் கேட்கணும். அது மட்டும் இல்ல, இப்போ கல்யாணம் பண்ற ஐடியாவும் இல்ல. பின்னாடி ஏதாவது ஐடியா இருந்தா சொல்றேன்"

என சொல்ல, அருளுக்கு சந்தோஷமாக இருந்தது.

(ப்பா........ கல்யாண பேச்சு ஆரம்பிக்கும் போது, கண்டிப்பா அவரு என்ன பத்தி யோசிப்பாரு. ஐயோ!!! அம்மா இதோட நிறுத்திட்டாங்க. வேற ஏதாவது கேட்கலாம்ல?)

"அதுமட்டுமல்லாம இப்பவே ஏன் அதை பத்தி பேசணும்? யாருக்கு யாருன்னு எழுதி வெச்சிருக்கோ அதான் நடக்கும்"

"சரியா சொன்ன, இத பத்தி அப்புறம் பேசிக்கலாம்" (அருளின் அப்பா)

"சரிப்பா, நான் கிளம்புறேன். கிளம்புறேன்மா"

"சரிங்க அண்ணே"

என பேசி முடித்துவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பினார்.

இங்கு பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அருளுக்கு சந்தோஷமாக இருந்தது. அதை பார்த்து ரவி,

"என்ன ஆச்சு அண்ணே?"

"இப்போ வந்துட்டு போனாருல்ல ஒருத்தர்"

"ஆமா, அப்பாவோட பிரண்டுன்னு சொன்னாரு"

"அது யாருன்னு தெரியுமா?"

"யாரு?"

"அது மலரோட அப்பா தான்"

"அப்புறம் அண்ணே, இன்னைக்கு பங்க்ஷன்க்கு வந்த அந்த பொண்ணு பேரு தானே மலரு"

"ஆமாண்டா, அது எப்படி உனக்கு தெரியும்? நீயும், அவங்களும் பேசிட்டு இருந்தத பார்க்கும்போதே தெரிஞ்சுது.

"அது வந்துடா......."

"விடு அண்ணே, எனக்கு எல்லாம் புரிஞ்சுது. அப்புறம் அண்ணே, இன்னைக்கு வந்தவர் தான் அவங்க அப்பாவா"

"ஆமாம்டா, எனக்கே ஷாக்கிங்கா தான் இருந்துச்சு. என்னால நம்பவே முடியல டா அப்பாவும், அவரும் கிளோஸ் ப்ரெண்ட்ஸ்னு. அம்மாவும் கல்யாணத்த பத்தி பேசினதும் ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. ஏதோ அவருக்கு என் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு. கண்டிப்பா நான் வீடு கட்டி முடிச்சதுக்கு அப்புறம் பொண்ணு கேட்டா அவரு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரு"

"சூப்பர் அண்ணே!!! நல்ல ஐடியா. லவ் மேரேஜன்னு தெரியாம அரேஞ்ச் மேரேஜ் பண்ண போறல்ல?"

"டேய் சத்தமா சொல்லாத, அப்பா அம்மா காதுல விழுந்தா அவ்வளவுதான்"

இங்கு மலர்விழி, எப்போதும் போல் வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அருள் அந்த இடத்தில் அவளுக்காக காத்திருந்தான்.

"மலர், உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ்"

"என்ன அருள்"

"காலைல நீ போனதுக்கப்புறம் உங்க அப்பா வந்தாரு"

"அப்பாவா?!!!"

"என்ன ஆச்சு? நம்ம ரெண்டு பேத்த பத்தி எல்லாம் தெரிஞ்சுருச்சா? ஏதாவது பேச வந்தாரா? ஐயோ போச்சு!!!!! எல்லாம் முடிஞ்சிடுச்சு"

"ஏய் ஒரு நிமிஷம் இருடி, அதுக்குள்ள படபடபடன்னு வெடிக்கிற. உங்க அப்பா வந்தாரு. உங்க அப்பாவும், என் அப்பாவும் பிரெண்ட்ஸ்ஸாமா. அது மட்டும் இல்ல, ரெண்டு பேரும் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தாங்க. இடையிலே எங்க அம்மா வேற உங்க அப்பா கிட்ட சகஜமா பொண்ணு கேட்டுட்டாங்க"

"அய்யய்யோ!!!! அப்பா என்ன சொன்னாரு?"

"உங்க அப்பா ஓகேன்னும் சொல்லல, இல்லன்னும் சொல்லல. ஆனா ஃப்யூசர்ல பார்க்கலாம்னு சொல்லிருக்காரு"

"அப்போ, நமக்கு பியூச்சர்ல கல்யாணம் நடக்க வாய்ப்பிருக்கு"

"ஆமாம் மலர், கிட்டத்தட்ட உங்க அப்பாவும் அப்படித்தான் சொன்னாரு"

"கேட்கவே ஹேப்பியா இருக்கு அருள்,
சரி நான் கிளம்புறேன்"

என சொல்லிவிட்டு மலர்விழி அங்கிருந்து கிளம்பினாள். மலர்விழி எப்போதும் போல் வீட்டிற்கு சென்றாள். அங்கு அவளுடைய அப்பா பேசிக் கொண்டிருந்தார்.

"அவனோட பையன் பிசினஸ் பண்ண போறானாம். அந்த பையனுக்கு சின்ன வயசு தான் இருக்கும். இந்த வயசுலயே எவ்வளவு பொறுப்பா இருக்கான்? நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டேன். ஆனா அவன் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கானேன்னு ரொம்ப நாளா வருத்தம் இருந்துட்டே இருந்துச்சு. ஆனா பார்த்தியா அவனால முடியாதத அவன் பையன் செய்யுறான்"

"என்னங்க சொல்றீங்க?"

"அந்த பையன நீ பார்க்கணுமே பெரியவங்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்குறான் தெரியுமா? அது மட்டும் இல்லாம, இந்த வயசிலேயே பிசினஸ் பண்றான், வீடு கட்டணும்னு சொல்றான்"

"சரிங்க, வேற என்ன பேசினீங்க?"

"அது வந்தும்மா....."

என அவர் சொல்ல‌ வருவதற்குள்,
சாவித்திரி,

"அண்ணே, நான்தான் உங்ககிட்ட சொல்லி இருந்தனே? ப்ரோக்கர் கிட்ட நம்ம மலர்விழி ஜாதகத்தை கொடுக்கலாம்னு?"

"மீனாட்சி, நீ கேட்டல்ல? அப்புறம் அவனோட பொண்டாட்டி நம்ம பொண்ண கட்டிக்கொடுக்க முடியுமான்னு சும்மா விளையாட்டா கேட்டாங்க. நான் எதுவும் சரியா பதில் சொல்லல. ஆனா நல்ல பையனா தான் இருக்கான். இருந்தாலும் பியூச்சர்ல என்ன நடக்கும்னு நமக்கு தெரியாதுல்ல? அதனால தான் எதுவும் உறுதியா நான் பேசாம வந்துட்டேன்.‌

"அண்ணே புரோக்கர் கிட்ட ஜாதகத்தை கொடுக்கலாம்னு சொல்லி கேட்கிறேன். நீங்க எதுவும் பேச மாட்டேங்கிறீங்களே?"

"இல்ல சாவித்திரி, நான் யோசிச்சிட்டு சொல்றேன்"

என சொல்ல, மலர்விழிக்கு அருளைப் பற்றி பேசுவது சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் சாவித்திரி இப்படி அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருப்பது கஷ்டமாக இருந்தது.

(அத்தை வேற இப்படி பண்ணிட்டு இருக்காங்க. என்ன நடக்க போகுதுன்னு தெரியல?)

என யோசித்துக் கொண்டே படுத்து தூங்கினாள். அடுத்த நாள் காலையில் எப்போதும் போல் வேலைக்கு கிளம்பினாள். போகும் வழியில் அருள் நின்று கொண்டிருந்தான்.

"ஏய் என்னாச்சு மலர் சோகமா இருக்க?"

"என்ன சொல்றது? அப்பா, உன்ன பத்தி தான் நைட் ஃபுல்லா பேசிட்டு இருந்தாரு"

"அப்படியா? நம்மள பத்தி சொல்லிட்டியா?"

"இல்ல, அதெல்லாம் எதுவும் சொல்லல. காலைல பங்க்ஷன்க்கு வந்ததை பத்தி பேசிட்டு இருந்தாரு. உன்ன பத்தி நல்ல விதமா தான் சொன்னாரு. ஆனா என்ன? அத்தை வேற என்னோட ஜாதகத்த புரோக்கர் கிட்ட குடுக்கணும்னு சொல்லிட்டே இருக்காங்க. அதை பத்தி யோசிக்கிறேன்னு அப்பா சொல்லிட்டு போயிட்டாரு. என்ன சொல்லுவாருன்னு தெரியல?"

"இதுலயே தெரியல? அவர் தட்டி களிக்கிறார்னு? நீ எதுவும் நினைச்சு கவலைப்படாத. உங்க அப்பா வேணாம்னு சொல்லிடுவாரு. அப்புறம் ஃபியூச்சர்ல நான் உங்க அப்பா கிட்ட வந்து பொண்ணு கேட்கும்போது, உங்க அப்பாவும் ஓகே சொல்லுவாரு. நமக்கு எல்லாரோட சம்மதத்தோடவும் கல்யாணமும் நடக்கும்.

"இதெல்லாம் கேட்க நல்லா தான் இருக்கு. ஆனா நடக்குமான்னு தெரியல?"

"சரி, நீ டென்ஷனா இருக்க, உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்றேன். எனக்கு ஒரு ஆர்டர் கிடைச்சிருக்கு. ஆனா அது கன்ஃபார்ம்மானு தெரியல? குடுக்கறேன்னு சொல்லிருக்காங்க. ஆனா கிடைக்குமான்னு தெரியல?"

"இந்த ஆர்டர் இல்லன்னா, இன்னொரு ஆர்டர் கிடைக்கும். இல்ல, இந்த ஆர்டர் கூட உனக்கு கண்டிப்பா கிடைக்கலாம். என்ன கொஞ்சம் லேட்டா கிடைக்குதுன்னு நினைச்சுக்கோ. இதுக்கு ஏன் கவலைப்படுற? நல்லதெல்லாம் லேட்டா தான் நடக்கும். பட் கண்டிப்பா நடக்கும்"

என அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனுக்கு ஃபோன் வந்தது.

"ஹலோ அருள், என் பிரண்டு கூட சொன்னான், உங்க கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கலாம்னு. சரி, இன்னைக்கு
ஆர்டர் கொடுக்க நாங்க உங்க கம்பெனிக்கு வரோம்"

"சரிங்க சார், ரொம்பவே சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா வாங்க, நான் உங்களுக்கு லொகேஷன் ஷேர் பண்றேன்"

"என்ன ஆச்சு அருள்?"


தொடரும்.......

படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 

Author: Anu1997
Article Title: எபிசோட் 17
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top