- Thread Author
- #1
"அதுக்கப்புறம் உங்க வீட்டுக்கு வந்து......."
"என் வீட்டுக்கு வந்து.......?"
"உன்னை பொண்ணு கேட்பேன். அப்புறம் உங்க அப்பா பொண்ணு தர முடியாதுன்னு சொல்ல முடியாது பார்த்துக்கோ. இப்படி ஒரு தொழில் அதிபருக்கு உங்க அப்பா பொண்ணு தந்து தான் ஆகணும்"
"சூப்பர்டா அருள், நீ சொன்ன எல்லாமே அப்படியே நடக்கணும். அப்போ நாளைலயிருந்து வேலைக்கு போயிடுவல்ல?"
"ஆமா........."
அதை கேட்டு அவளுடைய முகம் அப்படியே மாறியது.
"என்ன ஆச்சு?"
"ஒன்னும் இல்ல"
"இப்போ ஏன் உன் ஃபேஸ் மாறிடுச்சு?"
"அது........."
"எனக்கு புரியுது மலர். உன்ன பார்க்காம, உன் கூட பேசாம என்னால மட்டும் எப்படி இருக்க முடியும்? நம்ம கண்டிப்பா மீட் பண்ணிக்குவோம். ஈவினிங் எப்போ வருவன்னு தெரியல. நாளைக்கு போயிட்டு டைம் பார்த்துட்டு உன்கிட்ட சொல்றேன். உன் கிட்ட ஃபோன் இல்லயா?"
"ஃபோன் எங்கடா வாங்குறது? நான் வேலைக்கு போய் கொஞ்ச நாள் தான் ஆகுது. அதுக்குள்ள எங்க ஃபோன் வாங்குறது?"
"என்கிட்டயும் சின்ன ஃபோன் தான் இருக்கு"
"ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோம்ல?"
"ஆமா, என்ன மாதிரி யோசிக்கிற ஒரு பொண்ண பார்க்கும்போது தான் இப்படியெல்லாங்கூட இருப்பாங்களான்னு தோணுது"
"உண்மையாலுமே நம்ம ரெண்டு பேரும் லக்கி தெரியுமா?"
"ஏன்?"
"ஆமா, வீட்ட பத்தி யோசிக்கிறவங்க, ரொம்பவே பொறுப்பா இருப்பாங்க. என்னைக்கும் பெத்தவங்கள கஷ்டப்படுத்தணும்னு நினைக்க மாட்டாங்க. தனக்காக யோசிக்காம, தன்னை சுத்தி இருக்கறவங்களை பத்திதான் அதிகம் யோசிப்பாங்க. அதுல என்னோட மலர்விழி எனக்கு கிடைச்ச பொக்கிஷம். என்ன மாதிரி அவளோட வீடுதான் அவளுக்கு ரொம்ப முக்கியம்"
"அப்புறம் எனக்கு மட்டும் என்னவாம்? என்னோட அருளும் எனக்கு பொக்கிஷம் தான். இந்த வயசுல இவ்வளவு பொறுப்பான பையன பார்க்க முடியுமா? பொறுப்பா வேலைக்கு போறான். பிசினஸ் பண்ணனும்னு நினைக்கிறான். அப்பா, அம்மா பார்த்துக்கணும், அப்பா, அம்மாக்கு வீடு கட்டி கொடுக்கணும்னு நினைக்கிறான். அவனுக்குன்னு எதைப் பத்தியும் யோசிக்க மாட்டேங்குறான். உன்னைவிட ஒரு நல்ல பையனயா எங்க அப்பா பார்த்துடப் போறாரு?"
"அப்போ இன்னைக்கே பொண்ணு பார்க்க வந்துடட்டுமா?"
"அடி வாங்குவ, நீ நல்ல பையன்னு தான் சொன்னேன். ஆனா, கல்யாணத்துக்கு இது மட்டும் போதாதுல்ல அருள்?"
"எனக்கு புரியுது மலர், நானும் அப்படி ஒரு ஃபேமிலில இருந்து தானே வந்தவன்? ஒரு லைஃப்ல வாழ்றதுக்கு புடிச்சவங்க கூட வாழ்றது மட்டும் பத்தாது. அவங்கள நல்லா பார்த்துக்க முடியணும். நமக்கு அவங்களை எவ்வளவு பிடிக்குங்கிறத நம்ம அவங்கள பார்த்துக்கற விதத்துல தான் தெரியும். அவங்கள நல்லா பார்த்துக்கிற அளவுக்கு நம்ம, நம்ம தகுதிய வளர்த்துக்கணும். அதுக்கப்புறம் அவங்கள கல்யாணம் பண்ணி நல்லா பார்த்துக்கணும். சும்மா எனக்கு உன்ன புடிக்கும், லவ் பண்றேன், உன்ன நல்லா பார்த்துக்கவேன்னு வார்த்தையில சொல்றதுல என்ன இருக்கு? அதை உண்மையாக செஞ்சு காட்டணும்"
"ஆமா அருள், நானும் ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன்"
"என்ன மலர்?"
"அது....... எங்க அண்ணனுக்கும் வேலை கிடைச்சிருச்சு"
"ஏய் சூப்பர் மலர்!!!! பார்த்தியா? கஷ்டம் வந்தாலும், சந்தோஷம் வந்தாலும் ரெண்டு பேருக்கும் ஒண்ணா தான் வருது. இதுல கூட நம்ம ஒற்றுமையா இருக்கோம்ல?"
"ஆமா அருள்"
"அப்புறம் மலர்......உனக்கு உங்க வீட்டுக்கு தெரியாம லவ் பண்றது நினைச்சு கஷ்டமா இல்ல?"
"எனக்கு இதை பத்தி யோசிச்சு கஷ்டமாலா இல்ல. ஏன்னா நீ ரொம்ப நல்ல பையன் அருள். லவ் பண்ணி ஊர் சுத்தணும், ஜாலியா இருக்கணும், இப்படி எல்லாம் நினைக்கிற பசங்களுக்கு மத்தியில, பொறுப்பா உங்க வீட்டை பற்றி யோசிக்கிற பையன். உன்ன விட நல்ல பையன் எனக்கு கிடைக்க மாட்டான். அதனால என்னோட இந்த முடிவு தப்பான முடிவு இல்ல. அதனால இன்னைக்கு நான் அப்பா, அம்மாவை ஏமாத்தறது தப்புன்னு அவங்க நினைச்சா கூட, பின்னாடி அவங்க இதெல்லாம் புரிஞ்சிக்குவாங்கன்னு நம்புறேன். கண்டிப்பா உன்ன அவங்களுக்கு பிடிக்கும் அருள். அப்புறம் அருள், நான் கூட வேற ஏதாவது ஜாப் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்"
"என்ன ஆச்சு?"
"நான் படிச்சதுக்கான வேலையா நான் பார்த்துட்டு இருக்கேன்? ஏதோ வீட்டு சூழ்நிலைக்காக தான் இந்த வேலைக்கு போயிட்டு இருக்கேன். அண்ணாவுக்கு அந்த வேலை நிரந்தரம்னு தெரிஞ்சா, அதுக்கப்புறம் நான் எனக்கு புடிச்ச ஜாப்பல ஒர்க் பண்ணலாம்னு இருக்கேன். நல்ல சேலரியும் வரும். எனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் ஆகும்"
"ஆமா, நீ சொல்றதும் சரிதான். அப்போ நீயும் நல்ல ஒர்க்குக்கு போ. நீயும் நல்லா சம்பாதி. அதனால உன் குடும்பமும் நல்ல நிலமைக்கு வரும். அப்புறம் நானும் நல்ல நிலமைக்கு வந்துடுவேன். அப்புறம் நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கும்போது, எந்த பிராப்ளமும் இருக்காதுல்ல?"
"ஆமா அருள், உன் வீட்டிலும் ஓகே சொல்லுவாங்க. என் வீட்லயும் ஓகே சொல்லுவாங்க. ஏன்னா நம்மள பத்தி கவலைப்பட மாட்டாங்க. நம்ம ஃபினான்ஸியல்லா இன்டிபென்ட்டன்டா இருக்கோம்னு புரிஞ்சிக்குவாங்க. அது மட்டும் இல்லாம, நம்ம மெச்சூர்டா முடிவெடுத்து இருக்கோம்னு புரிஞ்சுக்குவாங்க. ஆனாலும் நம்ம லவ் கொஞ்சம் வித்தியாசமா இருக்குல்ல?"
"ஏன் அப்படி சொல்ற?"
"ஆமா எங்கயும் ஊர் சுத்தாம, ஒழுக்கமா வேலைக்கு போயிட்டு, கிடைக்குற டைம்ல பேசிட்டு, எந்த சண்டையும் போடாம, இப்படி யாரும் இருக்க மாட்டாங்கல்ல?"
"நீ என்ன புரிஞ்சு வச்சிருக்க., நானும் உன்னை புரிஞ்சு வச்சிருக்கேன். அது மட்டும் இல்லாத, ஒருத்தருக்கொருத்தர் அங்கிருக்க சூழ்நிலைகள புரிஞ்சுக்குறோம். அதனால தான் இப்படி இருக்கோம்னு நினைக்கிறேன்"
"அப்புறம் அருள், இனிமேல் நீ பைக்க வேகமா ஓட்டாத. ப்ளீஸ் அருள்...... உனக்கு இன்னும் கொஞ்சம் பொறுப்ப கூடிருக்கு. உனக்கு புரியுதா நான் சொல்றது? உனக்கு இப்போ வேலை கிடைச்சிருக்கு. அதுக்கப்புறம் லோன் அமௌன்ட் கூட கிடைச்சிருக்கு, நீ இனிமேல் பிசினஸ் பண்ணனும், அடுத்தடுத்து எல்லாமே ஸ்டார்ட் பண்ணனும். நம்மளோட லைஃப் ரொம்ப டிபிகல்ட்டான லைஃப். நம்மளா ஒரு, ஒரு ஸ்டெப்பா எடுத்து வச்சு, நம்ம லைஃபை மாத்திட்டு இருக்கோம். அந்த நேரத்துல நம்ம பண்ற சின்ன மிஸ்டேக், கூட நம்ம வாழ்க்கையவே ரிஸ்க்கா மாத்திடும். அதுக்கு தான் சொல்றேன். புரிஞ்சுக்கோ, பேரெண்ட்ஸ் ரொம்ப பாவம். அவங்களுக்குன்னு நம்ம தான் இருக்கோம்"
"எனக்கு புரியுது மலர், நான் இல்லன்னா என் பேமிலி அவ்ளோ தான். நீ இவ்ளோ சீரியஸா சொல்லும் போது தான் எனக்கு இந்த விஷயம் புரியுது. நான் இல்லன்னா.......என் தம்பி என்ன பண்ணுவான்னு தெரியல? என் அப்பா, அம்மாக்கு நான் மட்டும்தான் இருக்கேன். சொந்த பந்தம் யாரும் ஹெல்ப் கூட பண்ண மாட்டாங்க மலர். நான் இனிமேல் அந்த மாதிரி ஃபாஸ்டா போக மாட்டேன் மலர்"
"சரி, நான் கிளம்புறேன் அருள். ரொம்ப நேரம் ஆயிடுச்சு"
"சரி மலர், நீ கிளம்பு. பார்த்து போ"
அன்றும், மலர்விழி சந்தோஷமாக வீட்டிற்கு வந்தாள்.
(எது எப்படியோ அருளுக்கும் வேலை கிடைச்சிருச்சு. அதுமட்டுமில்லாம, லோன் அமௌன்ட் கூட கிடைச்சிருச்சுன்னு சொல்றான். எவ்ளோ நாள் கஷ்டப்பட்டு இருப்பான்ல இந்த லோனுக்காக? இப்போ எல்லாமே கூடி வந்திருக்கு. இது எல்லாமே ஏதோ ஒரு பெரிய நல்லதுக்கான தொடக்கம்னு தான் நினைக்கிறேன். அண்ணனுக்கும் வேலை கிடைச்சிருக்கு. அண்ணோட ஃபர்ஸ்ட் நாள் இது. எப்படி போச்சுன்னு கேக்கணும்?)
"அண்ணா....."
என சத்தம் போட்டு கொண்டே வந்தாள். சத்தம் கேட்டு மதன் வெளியில் வந்தான்.
"என்ன மலர் இப்பதான் வரியா?"
"ஆமா அண்ணா, இன்னைக்கு கொஞ்சம் ஒர்க் அதிகம். இன்னைக்கு ஃபர்ஸ்ட் டேல்ல? எப்படி போச்சு?"
"அதெல்லாம் சூப்பரா போச்சு மலர். செம ஹேப்பியா இருந்துச்சு. அது மட்டும் இல்ல, இன்னைக்கு எனக்கு பிரண்ட்ஸ் கூட கிடைச்சிட்டாங்க"
"முதல் நாளே ப்ரெண்ட்ஸ் கிடைச்சிட்டாங்களா?!!! சூப்பர் அண்ணா!!!"
சத்தம் கேட்டு வெளியில் வந்த மீனாட்சி,
"என்னடி, எப்பவும் அம்மான்னு, கூப்பிட்டு தான வருவ? இப்போ என்ன அண்ணனான்னு கூப்பிட்டு வர?"
"அது ஒன்னும் இல்லம்மா, அண்ணனுக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் டேல்ல? அதான் சந்தோஷத்துல அண்ணான்னு கூப்பிட்டு வந்தேன்"
"சரிடி, நீ போய் கை, கால், முகமெல்லாம் கழுவிட்டு வா"
"சரிம்மா".
பிறகு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அடுத்த நாள் காலை, மலர்விழி எப்போதும் போல் வேலைக்கு சென்றாள். தினமும் வேலை முடித்து வரும் வேளையில், அருளும் அந்த வழியாக வருவான். எப்போதும் அருளும், மலர்விழியும் பேசுவது வாடிக்கையாக இருந்தது. அன்றும் மலர்விழி, அருளிடம்
"அருள்......."
"சொல்லு மலர்"
"நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. ஆனா இப்படி ஒரு சூழ்நிலையில வரும்னு நான் நினைச்சு கூட பார்க்கல"
"என்ன ஆச்சு மலர்?"
"அது வந்து....... என்னால உனக்கு எந்த பிரஷரும் வரக்கூடாதுன்னு தான் யோசிக்கிறேன். ஆனாலும்......"
"சொல்லு மலர், ஏன் இப்படி தயங்கி, தயங்கி சொல்ற? முழுசா என்னன்னு சொல்லு"
"எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்கலாம்னு ஒரு பேச்சு ஓடிட்டு இருக்கு"
"என்ன சொல்ற மலர்?"
"ஆமா, நான் வேலைக்கு போயிட்டு இருக்கும்போதே, என் அத்தை தான் இந்த பேச்ச ஆரம்பிச்சாங்க. அப்போவே அப்பா அதெல்லாம் எதுவும் வேணாம்னு சொல்லிட்டாரு. அம்மா கூட வேணாம்னு தான் சொன்னாங்க. ஆனா, இப்போ என்னமோ தெரியல? அத்தை மறுபடியும் அதையே பேசுறாங்க. அப்பாவும் அமைதியா இருக்காரு. எதுவும் பேச மாட்டேங்குறாரு. ஒருவேளை அப்பா மனசுக்குள்ள பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு யோசிக்கறாரோன்னு தோணுது. உன்கிட்ட இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா, என்ன பண்றதுன்னு தெரியல? உன் கிட்ட தான எல்லாமே ஷேர் பண்ணிக்குவேன்?"
"இதுக்கு ஏன் இவ்வளவு தூரம் யோசிக்கிற? என்கிட்ட சொல்ல வேண்டியது தான?"
"இல்ல, நீ இப்போதான் பிசினஸ் ஸ்டார்ட் பண்றதுக்கான வேலைல பிஸியா இருக்க. இன்னும் ரெண்டு, மூணு நாள்ல உன் பிசினஸ் தொடங்க போறதா சொல்லிட்டு இருந்த. இந்த நேரத்துல நான் உனக்கு பிரஷர் கொடுக்கக் கூடாதுல்ல? ஆனா, அப்பா ஏதாவது பேசினா அதை வெச்சு ஏதாவது பண்ணலாம்.
அப்பா மனசுக்குள்ள என்ன ஓடிட்டு இருக்குன்னே தெரியல"
"நான் வேணா....."
"என்ன சொல்ற? இந்த நேரத்துல இதெல்லாம் சரியா வராது அருள்"
தொடரும்.......
படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.

Author: Anu1997
Article Title: எபிசோட் 15
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.