எபிசோட் 14

New member
Joined
Aug 21, 2025
Messages
22
"என்ன மலர்? நான் உன்னை இன்னிக்கு பஸ் ஸ்டாப்ல கூட்டிட்டு போய் விடலாம்னு நினைச்சேன். நீயே கிளம்பிட்டன்னு அம்மா சொன்னாள்"

"சரி, நீங்க ரெண்டு பேரும் வண்டியில் ஏறுங்க. பஸ் ஸ்டாப்ல கொண்டு போய் விடுறேன்"

"அது வந்து மாமா....... நான் நடந்தே வந்துக்கறேன். அக்காவ வேணா கூட்டிட்டு போங்க" (ரேவதி)

"அப்பா நானும் நடந்தே வரேன்" (மலர்விழி)

"என்ன ரெண்டு பேரும் இப்படி பேசுறீங்க? பாவம் புள்ளைங்க நடந்து போவாங்கன்னு கூட்டிட்டு போலாம்னு வந்தா........ இப்படி சொல்றீங்க?"

(சரி, அருள் ஆப்போசிட்ல வந்தாலும் நான் இப்போ மாட்டிக்குவேன். ரேவதி வேற கூட இருக்காள். அப்பா கூட போறது தான் கரெக்டா இருக்கும்)

என மலர்விழி யோசித்துக் கொண்டிருக்க, ரேவதி ஒரு பக்கம்,

(சரி மாமாவ, கூட்டிட்டு போய் விடுகிறேங்கிறாரு. மாமா கூடவே போயிடலாம். சீக்கிரமா போயிட்டா...... அவனை பார்க்குறதுக்கு சான்ஸ் கிடைக்கும்ல? நம்ம நடந்து போய் லேட் ஆயிடுச்சுன்னா......?)

என யோசித்து விட்டு,

"சரி மாமா, நான் வரேன்"

என ரேவதி சொல்ல, அதே நேரத்தில் மலர்விழியும்,

"சரிங்கப்பா, நான் வரேன்"

என சொல்ல,

"சரி வாங்க, போலாம்"

என கூட்டிக்கொண்டு போய் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டார்.

"சரிம்மா, ரெண்டு பேரும் பார்த்து போங்க. மலர் சாயந்திரம் வந்து நான் உன்னை கூட்டிட்டு போகட்டுமா?"

"இல்லப்பா, சாயந்திரம் எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு. நான் முடிச்சிட்டு வர லேட் ஆகும். நானே வந்துக்குறேன்பா"

"சரிம்மா மலர், சரி ரேவதி நான் வரேன்"

என சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து கிளம்பினார். அவர் கிளம்பியவுடன், கொஞ்ச நேரம் கழித்து பைக் சத்தம் கேட்டது.

(இது அருளோட பைக் சத்தம் தான...... ஆமா......)

என மலர்விழி நிமிர்ந்து பார்க்க, அருள் எதிரில் பைக்கை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவளால் எதுவும் பேச முடியாமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் புரிந்து கொண்டு கொஞ்ச நேரம் அங்கிருந்து விட்டு அவளை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

(நடந்து வந்திருந்துருந்தா அவன்கிட்ட ஏதாவது பேசிருக்கலாம். அவன்கிட்ட அண்ணனுக்கு ஜாப் கிடைச்சிருச்சின்னு சொல்லிருக்கலாம். அப்படியே அவனுக்கும் சீக்கிரம் ஜாப் கிடைச்சிடும்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசலாம்னு நினைச்சேன். சரி, இன்னைக்கு ஈவினிங் வேலை வேலைய முடிச்சிட்டு வரப்ப அருள பார்த்தா பேசலாம்)

என மலர்விழி நினைத்துக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த ரேவதி,

(ஒரு வழியா, அவனை பார்த்தாச்சு. இப்போதான் சந்தோஷமா இருக்கு. நேரமா கிளம்பி வந்தது நல்லதா போச்சு. அக்கா தான் மாமா கூட பைக்ல வர மாட்டேங்குறால்ல? இனிமேல் மாமா கிட்ட சொல்லி நம்மள கூட்டிட்டு வந்து பஸ் ஸ்டாப்ல விட சொல்லிடலாம். இதே டைமுக்கு வந்துடலாம்)

என அவள் நினைத்துக் கொண்டிருக்க, இருவருக்கும் கொஞ்ச நேரத்தில் பஸ் வர, இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். அருள் அங்கிருந்து நேராக வீட்டிற்கு சென்றான். ரவியைப் பார்த்தான்.

"டேய் இன்னும் நீ காலேஜ் போகலயா?"

"இல்ல அண்ணா, நான் இனிமேல் தான் போகணும்"

"என்னடா இப்படி சொல்ற?"

"ஆமா, நீ இன்டர்வியூக்கு போகல?"

"நான் போக லேட் ஆகும் டா. சரி வா, உன்ன பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு நான் கிளம்புறேன்"

"இல்ல அண்ணே, உனக்கு இன்டர்வியூ இருக்குல்ல? நீ கிளம்பு, நான் போயிக்கிறேன்"

"சரிடா"

அன்று அருள், அந்த இன்டர்வியூக்கு நன்றாக பிரிப்பேர் செய்திருந்தான் அதற்கேற்றார் போலவே அங்கு கேள்விகளும் கேட்க, அதற்கேற்ற பதிலும் அருள் சொல்ல, இன்டர்வியூ நன்றாக முடிந்தது.

"சார் இன்னும் இன்டர்வியூ ரிசல்ட் சொல்லல?"

"இன்டர்வியூ ரிசல்ட் அலோன்ஸ் பண்ண டைம் ஆகும் பா. நீங்க கிளம்புங்க. நீங்க செலக்ட் ஆயிருந்தா ஃபோன் பண்ணி சொல்லுவாங்க"

என சொல்ல, அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான்.

"எல்லா இடத்திலும் இதையேதான் சொல்றாங்க? செலக்ட் ஆகறனோ? இல்லயோ? அப்போவே சொல்லிட வேண்டியதுதான? நம்மள காக்க வைக்கிறதுல அப்படி என்னதான் சந்தோஷமோ இவங்களுக்கு?"

என புலம்பிக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான். எப்போதும் போல் கம்பெனி தொடங்குவதற்கான வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு பஸ் ஸ்டாப்பிற்கு சென்றான். எப்போதும் மலர்விழி வேலையை முடித்துவிட்டு வரும் நேரமும் வந்தது‌. ஆனால் அவள் இன்னும் வரவில்லை.

"என்ன இது மலர்க்கிட்டயாவது பேசலாம்னு நினைச்சா அவளையும் இன்னும் காணோம்?"

என அவன் அங்கு பார்த்து விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அப்போது தான் ஃபோன் வந்தது.

"மார்னிங் எங்க கம்பெனில இன்டர்வியூ அட்டென்ட் பண்ணீங்கல்ல? அந்த அருள் தானா நீங்க?"

"ஆமா சார், சொல்லுங்க"

"நீங்க இன்டர்வியூ செலக்ட் ஆயிட்டீங்க. அப்புறம், நீங்க நாளைக்கே வேலைக்கு ஜாயின் பண்ணிடுங்க"

"சரிங்க சார்"

"ஒரு வழியா வேலை கிடைச்சிருச்சு. இனி அப்பா, அம்மாவ நல்லா பார்த்துக்கலாம். கம்பெனி வேலையும் சீக்கிரம் முடிஞ்சிடும். ஒரு வேளை கம்பெனி......"

என யோசித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு ஃபோன் கால் வந்தது.

"ஹலோ அருள்"

"சொல்லுங்க சார்"

"நான் பேங்க்ல இருந்து பேசுறேன். உங்க லோன் அமௌன்ட் வந்துடுச்சு. நாளைக்கு வந்து அமௌன்ட் நீங்க வாங்கிக்கலாம்"

"ரொம்பவே சந்தோஷமா இருக்கு சார். தேங்க்யூ சார்"

"பரவால்லப்பா, இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு?"

என சொல்லி விட்டு அவர் ஃபோனை வைக்க, அருளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

"இந்த சந்தோஷத்த எப்படி கொண்டாடுறதுன்னே தெரியலயே?"

என ஃபோனை வைத்துவிட்டு பைக்கை வேகமாக ஓட்டிக்கொண்டு போனான். அப்போது மலர்விழி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அவனுடைய பைக் வேகமாக மலர்விழியை கடந்து சென்றது.

"எப்படி போறான் பாரு இவன்?...... ஐயோ!!! ஒரு நிமிஷம்,.......இது,....... அருள் தான? எதுக்கு இவன் இப்படி போறான்? நம்ம வர்றது கூடவா இவனுக்கு தெரியல?"

என அவள் திட்டிக்கொண்டே நடந்து வந்தாள். அவன் கொஞ்ச தூரம் சென்றதும் தான்,: மலர்விழி அங்கு நடந்து வருவதை கவனித்தான்.

"ஐயா!!! என்ன அவள் பார்த்துருப்பாளா? பார்த்திருந்தா கண்டிப்பா திட்டுவாளே..... இல்ல, இல்ல நம்ம தான் ஃபாஸ்டா வந்துட்டோமே? நம்ம ஃபாஸ்டா வந்தது அவளுக்கு தெரியாது. அதனால பிரச்சனை இல்ல"

என சொல்லிவிட்டு பைக்கை திருப்பிக் கொண்டு கேஷுவலாக வருவதைப் போல் அங்கிருந்து வந்தான்.

மலர்விழியின் பக்கத்தில் வந்து பைக்கை நிறுத்தினான்.

"ஹாய் மலர்......இப்பதான் வரியா? நான் கூட இப்பதான் உன்னை பார்க்கலாம்னு வந்தேன்"

மலர்விழி கைகளை கட்டிக்கொண்டு நின்றவாறு அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

"உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு தான் வந்தேன்"

"ஒரு நிமிஷம் இரு, அதுக்கு முன்னாடி உன் கிட்ட பேசணும்"

(ஐயோ!!! போச்சு இவள் திட்ட போறாள்)

என அவன் மனதிற்குள் பயந்து கொண்டிருக்க,

"சொல்லு"

"இப்போ பைக்ல ஃபாஸ்டா போனது நீதான?"

"பைக்லயா? ஃபாஸ்டா யாரு போனது? நீ சொன்னதுக்கப்புறம் ஃபாஸ்டா போறது எவ்வளவு தப்புன்னு எனக்கு புரிஞ்சிருச்சு மலர்"

"டேய் நடிக்காதடா, இப்பதான் இந்த வழியா உன் பைக் கிராஸ் ஆச்சு"

"என் பைக்க தான பார்த்த? அப்போ என்ன பார்க்கல தான? என் பைக் மாதிரி வேற யாருமே வச்சிருக்க மாட்டாங்களா?"

"அருள் உண்மைய ஒத்துக்கிட்டேனா கம்மியா தான் திட்டுவேன். பொய் சொன்ன ரொம்ப திட்டு வாங்குவ"

(ஐயோ!!! மாட்டிக்கிட்டனே..... இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது?)

"அது வந்து மலர்...... ரொம்ப ஹேப்பியா இருந்தனா அதான்......"

"சந்தோஷமா இருந்தா? அந்த சந்தோஷத்த இப்படித்தான் வெளிப்படுத்துவியா? எத்தனை தடவை சொன்னாலும், திருந்தமாட்டல்ல? என்கிட்ட பேசாத போ"

என சொல்லிவிட்டு மலர்விழி வேகமாக நடந்து செல்ல, அவன் பின்னாடியே ஓடினான்.

"ஏய் மலர் நில்லு, ஒரே நிமிஷம் நில்லு மலர், சாரிடி.... புரிஞ்சுக்கோ..... அது என்ன சந்தோஷமான விஷயம்னு கேட்க மாட்டியா?"

"எனக்கு ஒன்னும் தெரிஞ்சுக்க வேணாம். இப்படி ஃபாஸ்ட்டா ஓட்டி ஏதாவது ஆயிடுச்சின்னா நான் என்னடா பண்ணுவேன்?"

"நீ அதுக்கு தான் கோபப்படுறியா?"

"வேற எதுக்கு கோவப்படுறேன்? என்ன பத்தி யோசிச்சு பார்த்தியாடா? நான் சொன்னதுக்கு அப்புறமும் நீ இப்படி பண்றல்ல?"

"சாரி டி, சாரி........"

என சொல்லி கொண்டு அவன் காதைப் பிடித்துக் கொண்டு அவள் முன் கெஞ்சி கொண்டிருக்க,

"என்னால முடியாது"

என முகத்தை திரும்பி கொண்டாள்.

"சரி என்ன பண்ணா உன் கோபம் போகணும்னு சொல்லு"

"நீ ஒன்னும் பண்ண வேண்டாம். வழியை விடு, நான் போகணும்"

"நான் வேணா தோப்புகரணம் போடட்டுமா?"

"நீ என்னமோ பண்ணு, ஆனா என்கிட்ட பேசாத"

"ஏய் சாரிடி, நான் பண்ணது தப்புதான். சாரி, ஒரு நிமிஷம் நில்லு"

என சொல்லிவிட்டு அவன் காதை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட,

(ஐயோ!!! பார்க்கவே பாவமா இருக்கு. ஆனாலும் சொன்னா கேட்க மாட்டேங்கிறான். இவனுக்கு இது தேவைதான்)

"ஏய் என்னடி மன்னிக்க மாட்டியா? ஏய் மலர் கால் வலிக்குதுடி"

"நான் சொல்றத கேட்கலல்ல? தோப்புக்கரணம் போடு"

"இன்னும் எவ்வளவு போடுறது?"

"சரி, போதும் நிறுத்து"

"உன்னை சமாதானப்படுத்துறதுக்குள்ள......"

"தெரியுதுல? அப்புறம் ஏன் என்னை கோபப்படுத்துற? நான் கோபப்படுற மாதிரி ஏன் நடந்துக்குற?"

"சரி, சாரி......நான் இனிமேல் பைக் ஃபாஸ்ட்டா ஓட்ட மாட்டேன். ஓகே வா? கால் எல்லாம் வலிக்குது"

"உனக்கு இதெல்லாம் வேணும்டா"

"இப்பயாவது கேட்பியா?"

"என்னன்னு சொல்லி தொலை"

"ஏய் மலர்...... அது....... எனக்கு வேலை கிடைச்சிருச்சு"

"சூப்பர்டா"

"ஸ்வீட் எதுவும் இல்லயே? இதா, இந்த சாக்லேட் தான் இருக்கு"

"ரொம்ப ஹாப்பியா இருக்கு அருள்"

"அது மட்டும் இல்ல, லோன் அமௌன்ட் நாளைக்கு கொடுத்துடறேன்னு சொல்லிருக்காங்க"

"அப்போ சீக்கிரம் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிடுவன்னு சொல்லு"

"ஆமா, அதுக்கப்புறம் என்ன?"

"பிசினஸ் பண்ணுவேன், பிசினஸ்ல அடுத்தடுத்த லெவல்கு போவேன். அதுக்கப்புறம் அப்பா, அம்மாக்கு ஒரு வீடு கட்டணும். தம்பிய நல்லா படிக்க வைக்கணும்"

"அப்புறம்........?"

"அப்புறம் என்ன.....?!!!"

"என்னடா? உன் தம்பிய படிக்க வைக்கணும்னு சொன்ன ஓகே, உன் அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டி கொடுக்கணும்னு சொன்ன, ஓகே. என்ன பத்தி யோசிக்கவே மாட்டியா அருள்?"

"ஏய், சும்மா நான் விளையாட்டுக்கு சொன்னேன்டி. உன்ன பத்தி யோசிக்காம எப்படி இருப்ப?"

தொடரும்....‌....

படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 

Author: Anu1997
Article Title: எபிசோட் 14
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top