எபிசோட் 13

New member
Joined
Aug 21, 2025
Messages
22
ராகவன் மலர்விழியை பார்த்துவிட்டு,

"இப்போ ஏம்மா இதை பத்தி பேசிட்டு? எல்லார் காலத்துலயும் நடக்கிறது தானே? காலம் மாற, மாற கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே மாறுது. வேற என்ன சொல்றதுக்கு இருக்கு இதை பத்தி?"

என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

"என்ன அண்ணா, பட்டும் படாமா பேசிட்டு போறாரு? ஒன்னு இதெல்லாம் சரின்னு சொல்லணும். இல்ல, இதெல்லாம் தப்புன்னு சொல்லணும். என்ன ஆச்சு இவருக்கு?"

என சாவித்திரி புலம்பி விட்டு, மீண்டும் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். மலர்விழிக்கும் குழப்பமாகத்தான் இருந்தது.

(என்ன ஆச்சு அப்பாவுக்கு? ஏதாவது சொல்லுவார்னு எதிர்பார்த்தேன். ஆனா, சம்பந்தமே இல்லாம என்னமோ சொல்லிட்டு போறாரே? அருள் இப்போ என்ன பண்ணிட்டு இருப்பான்? வீட்ல தானே இருப்பான்? பர்ஸ்ட் எல்லாம் அவனை எப்போ பார்ப்பேன்னு தான் இருக்கும். ஆனா இப்போ எல்லாம் அவனை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு)

என அவள் நினைத்துக் கொண்டு சிரிக்க, அதை பார்த்து சாவித்திரி,

"என்னாச்சு மலர்விழி?"

(ஐயோ!!! அத்தை கிட்ட மாட்டிகிட்டனே)

என நினைத்துக் கொண்டு டீவியை பார்த்து,

"அத்தை அங்க பாருங்க, அதுக்கு தான் சிரிச்சிட்டு இருந்தேன்"

"அதுக்கா? நான் தான் சொன்னேன்ல? இந்த சீரியல் நல்லா இருக்கும்னு?"

"ஆமாங்க அத்தை"

(நல்ல வேளை தப்பிச்சேன். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இங்க மாட்டிக்குவேன்)

என அவள் எழுந்திருக்க, அதற்குள் மீனாட்சி பலகாரங்களை தட்டில் கொண்டு வந்தாள்.

"எங்க மலர் போற? இங்கே உட்கார்ந்து சாப்பிடு"

"சரிம்மா"

என சொல்லி எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்போதுதான் மதன் வந்தான்.

"அண்ணா, மதியமே வீட்டுக்கு வந்துட்டியா?

"இல்ல மலர், இன்டர்வியூ முடிச்சிட்டு, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன். ரெண்டு மூணு ரவுண்டு இருந்துச்சு. அதெல்லாம் முடியவே லேட் ஆயிடுச்சு. வந்ததும் ஒரு வேலையா வெளியே போயிருந்தேன்"

"இன்டர்வியூ என்ன ஆச்சு அண்ணே?"

"என்ன சொல்றது? நான் வாழ்றதே வேஸ்ட்னு நினைக்கிறேன். வாழ்க்கையே வெறுப்பா இருக்கு"

"ஏன் அண்ணா இப்படி எல்லாம் பேசுற?"

"நான் எல்லாம் உயிரோடு இருக்கிறதே வேஸ்ட் மலர்"

"அண்ணா, ஏன் இப்படி பேசுற? வேலை கிடைக்கலன்னா என்ன? இன்னொரு வேலைக்கு போயிக்கலாம். விடு பரவாயில்ல"

என அவள் சொல்ல,

"நான் ஏன் இன்னொரு வேலைக்கு போகணும்?"

"என்ன சொல்ற அண்ணா?"

"எனக்கு இந்த வேலையே கிடைச்சிடுச்சு"

என அவன் சொல்ல,

"அண்ணா உண்மையாவா சொல்ற?"

"ஆமா, நான் உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு பேசிட்டு இருந்தேன். இந்த டைம் அண்ணனுக்கு வேலை கிடைக்கும்னு சொன்னேன்ல? அதே மாதிரி வேலை கிடைச்சிருச்சு பார்த்தியா?"

"சூப்பர் அண்ணா"

"அதுக்கு தான் ஸ்வீட் வாங்கிட்டு வர போனேன். சும்மா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் இப்படி காமெடி பண்ணேன்"

"ஏன் அண்ணே இப்படி பண்ண? நான் கொஞ்ச நேரத்துல பயந்துட்ட"

"வேலை கிடைக்கலன்னா?"

"இல்ல அண்ணே, நீ ஃபீல் பண்றது பார்த்து தான்"

"அதான பார்த்தேன்? என் தங்கச்சி ஆச்சே நீ. என்ன பத்தி தானே யோசிப்ப?"

"ஆமா அண்ணா"

"இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ"

"என்னடா மதன் உண்மையாவா சொல்ற? இல்ல, பொய் சொல்றியாடா?"

"என்னப்பா இப்படி கேட்குறீங்க?"

"ஏங்க அவன் உண்மை பேசினா கூட பொய் சொல்லறான்னு சொல்றீங்க? அவனே கஷ்டப்பட்டு இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி, வேலை வாங்கிருக்கான். இப்போ கூட இப்படி பேசணுமாங்க?"

"இல்லம்மா, அவன் எப்படி என் பொண்ண கிண்டல் பண்ணான்? அதுக்கு தான் பதிலுக்கு நானும் கிண்டல் பண்ணேன்"

"சரிதான் போங்க, நல்ல அப்பா, பொண்ணு. இங்க வாடா மதன்"

"இவன் குழந்தை, கூப்பிட்டு தொட்டில போட்டு ஆட்டு"

"அவன் எப்பவுமே எனக்கு குழந்தை தாங்க. இன்னைக்கு இன்டர்வியூ நல்ல அட்டென்ட் பண்ணியா?"

"ஆமாம்மா, நான் இன்னைக்கு இன்டர்வியூல செலக்ட் ஆவன்னு நினைச்சு கூட பார்க்கல"

"நீ செலக்ட் ஆகாம எங்கடா போகப் போற? நீ எந்த அளவுக்கு ப்ரிப்பேர் பண்ணன்னு அம்மா தான் பார்த்தேனே? அப்புறம் எப்போ வேலைக்கு வர சொல்லி இருக்காங்க?"

"அம்மா நாளைக்கே ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க"

"சூப்பர்டா மதன், அப்போ நாளைல இருந்து, நீயும் வேலைக்கு போக போறேன்னு சொல்லு"

"அண்ணா எனக்கு ட்ரீட் கொடுக்கணும்"

"கண்டிப்பா சேலரி வந்ததும் உனக்கு ட்ரீட் கொடுக்கிறேன்"

"இந்த அத்தைக்கு ஒன்னும் வாங்கி தர மாட்டியாடா?"

"என்ன அத்தை இப்படி கேட்குறீங்க? உங்களுக்கு என்ன வேணும்? சொல்லுங்க, நான் வாங்கி தரேன். மொத மாசம் சம்பளத்துல எல்லாத்துக்கும் என்ன வேணுமோ? வாங்கி கொடுக்குறேன். அடுத்த மாசம் சம்பளத்திலிருந்து அம்மாகிட்ட கொடுத்துடுவேன். அம்மா உங்களுக்கு ஓகே தானே?"

"பார்த்தீங்களா என் கையில சம்பளத்தை கொடுப்பேன்னு சொன்னானே? அப்போவே தெரிஞ்சுக்கோங்க. என் பையன் எவ்வளவு பொறுப்பாளின்னு?"

"சரி, சரி உன் பையன் பொறுப்பாளி தான். வாழ்த்துக்கள் மதன். நீ இன்டர்வியூல செலக்ட் ஆவன்னு எனக்கு தெரியும்டா. நீ என் பையன் ஆச்சே? இவ்வளவு நாள் உனக்கு இந்த வேலை கிடைக்கணுங்கறதுக்காக தான் மத்த வேலையெல்லாம் கிடைக்கல போல?"

"என்னங்க, இப்ப மட்டும் உங்க பையன்னு சொல்றீங்க?"

"என்னைக்கு இருந்தாலும் அவன் என் பையன் தான்"

என அவர்கள் பேசிக் கொண்டிருக்க, ரேவதி அப்போதுதான் வீட்டிற்குள் வந்தாள்.

"வா ரேவதி, இன்டர்வியூல நான் செலக்ட் ஆயிட்டேன். எனக்கு வேலை கிடைச்சிருச்சு"

"அப்படியா மாமா? சூப்பர்......"

என சொல்லிவிட்டு ஸ்வீட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

"இன்டர்வியூல பாஸ் ஆயிட்டேன்னு சொல்றேன். கொஞ்சம் கூட எந்த எக்ஸ்பிரஷனும் இல்லாம போறாள்?" (மதன்)

"இருப்பா மதன், நான் வரேன்"

என சொல்லிவிட்டு சாவித்திரி அங்கிருந்து கிளம்பினாள்.

"என்ன ஆச்சுடி? மதன் அங்க எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கான். நீ ஒண்ணுமே சொல்லாம வந்துட்ட"

"அதான் சூப்பர்னு சொன்னேன்ல அம்மா?"

"அது சரிடி, அவன் எவ்வளவு நாள் போராடி, ஒரு வேலை கிடைச்சிருக்கு. எவ்ளோ சந்தோஷமான விஷயம். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட நல்லா தானே இருந்த? இன்னைக்கு என்ன மூஞ்ச தூக்கி வெச்சிட்டு இருக்க?"

"அம்மா, எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. என்ன ஃப்ரீயா விடும்மா"

"சரி, என்னமோ பண்ணி தொல"

என சொல்லிவிட்டு சாவித்திரி அங்கிருந்து வந்தாள்.

"என்ன ஆச்சுன்னே தெரியல? அவன் ஏன் ரெண்டு மூணு நாளா பஸ் ஸ்டாப் வரலன்னு கூட தெரியல? நானும், சீக்கிரம் போய் பார்க்கிறேன். அப்பவும் அவன் வரல. நானே அவன பார்க்க முடியலன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். இவங்க வேற?" (ரேவதி)

என ரேவதி மன வருத்தத்தில் இருந்தாள்.

"சரிம்மா, நான் கொஞ்ச நேரம் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்குறேன்" (மலர்விழி)

"சரிடி, நான் சாப்பாடு செஞ்சுட்டு உன்னை கூப்பிடுறேன்"

என சொல்ல, மலர்விழி அங்கிருந்து ரூமுக்கு கிளம்பினாள்.

(அருள் இப்போ என்ன பண்ணிட்டு இருப்பான்? பிசினஸ் சம்பந்தமாக வேலை இருக்குன்னு சொன்னான். அதுக்கு ஏதாவது வேலை செஞ்சுட்டு இருப்பான்னு நினைக்கிறேன். அவனுக்கும் இந்த மாதிரி வேலை கிடைச்சா நல்லா இருக்கும்ல? அவன் கூட என்கிட்ட ஹாப்பியா இந்த மாதிரி வேலை கிடைச்சிருச்சுன்னு வந்து சொல்லுவான்ல? அவனுக்கும் சீக்கிரம் வேலை கிடைக்கணும். பாவம் அவன் நிறைய முயற்சி பண்றான். ஆனால் அந்த முயற்சி எல்லாம் அவனுக்கு தோல்வியாதான் வருது. கடவுளே!!!! சீக்கிரமா அருளுக்கு வேலை கிடைச்சிடணும். அவன் டெய்லியும் இன்டர்வியூ போறதும், அட்டென்ட் பண்றதும், வேலை கிடைக்காமல் போறதும் அவனுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்ல? அண்ணனே எவ்ளோ ஃபீல் பண்ணிருக்கான். நான் வேலைக்கு போறேன், அதனால அண்ணனுக்கு கூட பிரச்சனை இல்ல. ஆனா, அருள் வீட்ல அவன் தான் இப்ப படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போற பொறுப்புல இருக்கிறான். அப்போ அவனுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்ல?)

என அவள் யோசித்துக் கொண்டிருக்க, நேரம் வேகமாக ஓடியது. இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்கச் சென்றார்கள். காலை விடிந்தது. எப்போதும் போல் எழுந்து, மலர்விழி வேகமாக குளித்து கிளம்பி விட்டு வெளியில் சென்றாள். அன்று பார்த்து ரேவதியும் அவளுடன் வருவதாக கூறினாள்.

"என்னாச்சு ரேவதி? என்கூடவே வரேன்னு சொல்ற? எப்பவும் கொஞ்சம் லேட்டா தான போவ?"

"ஆமாக்கா, லேட்டா தான் போவேன். ஆனா, கொஞ்சம் சீக்கிரம் போய் நிற்கிறது நல்லது தான? பஸ் ஒரு சில நாள் சீக்கிரமா வந்துடுதுக்கா. அதனால அவசர, அவசரமா போக வேண்டிதா இருக்கு.

"இருந்தாலும், உன் பஸ் வர டைமுக்கு போலாம்ல? சீக்கிரமா போய் ரொம்ப நேரம் நிற்கணும்"

"என்னக்கா, உன் கூட வரலாம்னு ஆசையா வந்தா. நீ என்னன்னா இப்படி பேசுற?"

"சரிடி, நான் உனக்காக தான் சொன்னேன். சரி வா போலாம்"

(கடவுளே!!!! அருள் மட்டும் இப்போ எதிர்ல வந்து என்கிட்ட பேச வந்தான்....... அதை இவள் பார்த்தா...... அவ்வளவுதான். அருள் வரக்கூடாது. கடவுளே!!!! ப்ளீஸ்......)

என மலர்விழி வேண்டிக் கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த ரேவதி,

(இன்னைக்காவது சீக்கிரமா அவனை பார்க்கணும். இந்த டைமுக்கு போனா கண்டிப்பா அவன பார்க்க முடியும். பஸ் வர வரைக்கும் அவனுக்காக வெயிட் பண்ணலாம். இந்த டைம்குள்ள தானே எப்பவும் வருவான்? நம்ம லேட்டா போறதுனால அவன் முன்னாடியே போயிடுறான் போல? அதனால தான் அவன பார்க்க முடியல. நம்ம முன்னாடியே போலான்னு பார்த்தா..... இந்த அக்கா வேற இந்த நேரத்துல கிளம்புவான்னு தெரியல. நான் தனியா போறேன்னு சொன்னா, ஏதாவது கேட்பான்னு இவள் கூட வர வேண்டியதா போச்சு. சரி, இவளுக்கு நம்ம சொன்னாதானே தெரியப்போகுது?)

என ரேவதியும் மனதிற்குள் யோசித்துக் கொண்டே வந்தாள். அருளும், மலர்விழியும் சந்தித்து பேசும் அந்த இடமும் வந்தது. அருள் இன்னும் வரவில்லை. ஆனால் மலர்விழியின் மனதிற்குள் பயம் ஓடிக்கொண்டே இருந்தது.

(ஐயோ!!! அருள் இன்னும் காணோம்? ஒருவேளை வந்தானா? இவள் பார்த்தா....... என்ன நினைப்பாள்? அவன்கிட்ட பேசவும் முடியாது. அவன் இந்த சூழ்நிலைய புரிஞ்சிக்குவானா?)

என யோசித்துக் கொண்டிருக்க, அங்கிருந்து ஒரு பைக் வந்தது.

(அய்யய்யோ!!!!! பைக் சத்தம் கேட்குது. அருளா தான் இருக்கும்)

என நினைத்துக் கொண்டிருக்க, அந்த பைக் பக்கத்தில் வந்து நின்றது. நிமிர்ந்து பார்த்தால் மலர்விழி.

தொடரும்......

படித்து விட்டு கமெண்ட் செய்யுங்கள்.
 

Author: Anu1997
Article Title: எபிசோட் 13
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top