எனை தகிக்கும் காதல் தீயே 38

  • Thread Author
அத்தியாயம் 38

வறண்ட தொண்டை தண்ணீருக்கு ஏங்கிட உறக்கம் கலைத்த மேகா மெல்ல தன் உடைகளை மாற்றி கொண்டு கிட்சன் சென்றாள். அக்னி வருகையில் தேவையான அனைத்தும் வீட்டில் தயாராய் இருந்ததால் தனக்கு வேண்டிய தண்ணீரை மட்டும் குடித்தவள் பாத்திரத்தை திரும்ப வைத்து விட்டு திரும்ப முகத்தை மூடிய உருவம் முன்னால் நின்றதில் அரண்டு போனாள் பாவை .

"ஏய் யாரு நீ .. அக்னி " என அவள் கத்த வரும் முன் துப்பாக்கியை தூக்க அதற்குள் பின்னால் இன்னொரு உருவம் முகமூடி போட்டவனின் தலையை குறி பார்த்து சுட்டதில் ரத்தம் மேகா முகத்திலே தெறித்தது.

சூடான மனித ரத்தம் முதல் முறையாக முகத்தில் பட்டதில் மிரண்டு போய் மேகா நிற்க , வேட்டை மிருகம் போல் நின்ற அக்னி வேக எட்டில் நெருங்கினான் மனைவியை .

" அம்மு ஒன்னும் இல்ல.. நான் வந்துட்டேன்.. ஒன்னும் ஆகாது .. பயப்புடாதடி " அவன் அந்த வார்த்தையை முடிக்கும் முன்னே நாளா பக்கமும் சரவெடி போல் துப்பாக்கி குண்டுகள் வீட்டை துளைக்க ஆரம்பித்தது. படையாக வந்திருந்தால் இந்நேரம் வெளியே இருப்பவர்களை பஸ்பம் செய்திருப்பான். இவனோ மனைவியோட அல்லவா வந்திருக்கிறான்.

மேகாவை அணைத்து கொண்டு தரையில் சரிந்திட அரண்டு விட்டாள் பயத்தில். " அக்னி எனக்கு பயமா இருக்கு " நெஞ்சில் முகம் புதைத்து கதறியவளை தன் அணைப்பு குள்ளே வைத்திருந்த அக்னி

" ஒன்னும் இல்ல... அம்மு நான் இருக்கேன் " சொல்லும் போதே பாய்ந்து வந்த தோட்டா அக்னியின் தோல்பட்டையை கிழித்து கொண்டு போக சூடான குருதி மேனியில் பட்டதும் அதிர்ந்து விட்டாள்.

" அக்னி..அக்னி... " அவனை தன் மேல் இருந்து தள்ள முயன்றாள். பலம் கொண்டு விலக்க போராடினாள். ஆனால் அவனோ இரும்பு கவசம் போல் கொஞ்சமும் பெண்ணை விடாமல் அணைத்திருக்க அடுத்த ஐந்து நிமிடம் தொடர் துப்பாக்கி சூட்டிற்கு பின்பு சத்தம் ஓய்ந்தது.

இந்நேரம் அக்னி செத்திருப்பான் என்ற முடிவில் கதவை உதைத்து தள்ளி விட்டு உள்ளே வந்த ஒவ்வொருவரையும் அசராமல் நின்று சுட்டு தள்ளிய அக்னி அவனின் கையில் இருந்து வழியும் ரத்தத்தை அலட்சியம் செய்து விட்டான்.

இப்போதைக்கு அவனுள் இருக்கும் ஒரே எண்ணம் மனைவியை பத்திரமாக இங்கிருந்து அழைத்து செல்ல வேண்டும் என்பதே.

மனைவியை கிட்சனிலே பதுக்கி விட்டு ஹாலிற்கு வந்த அக்னி உள்ளே வருவபர்களை பாவம் பார்க்காமல் சுட்டான் மனைவி பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையில்.

ஆனால் விதி விளையாட வேண்டும் என நினைத்து விட்டதோ. வீட்டின் பின் பக்கம் வந்த குணா கிட்சனுள் பதுங்கி இருந்தவளின் முடியை கொத்தாக பற்றி பிடித்து விட்டான்.

" ஏய்... இன்னும் ஒருத்தர கொன்னாலும் உன் பொண்டாட்டி கழுத்துல இந்த கத்தி இறங்கும் " திடீரென பின்னால் கேட்ட கணீர் குரலில் திரும்பிய அக்னி அதிர்ந்து போனான் குணாவை கண்டு.

" நீயா... நீ எப்டி... ஒழுங்கா அவளை விட்டிரு குணா" எச்சரித்தான்.

குணா ஈஸ்வரின் கையால் என்பது அண்ணன் தம்பிகளுக்கு தெரியும். ஆனால் தெரியாதது அந்த ஈஸ்வர் யார் என்பது தான். ஏன் இருவரையும் இந்த அளவிற்கு கொண்டு வந்ததே குணா தானே.

" அவளை விட்டிரு... என்னை என்ன வேணாலும் பண்ணிக்கோ " கையில் இருக்கும் துப்பாக்கியையும் தூக்கி போட்டு விட்டான் மனைவி மீதான பாசத்தில்.

வாய் மூடப்பட்டவள் கதறி அழுதாள். வேணாம் அக்னி.. இங்கிருந்து போயிடு என்ற சொல்ல துடித்தாள்.தன் உயிர் போனாலும் கணவனுக்கு எதுவும் ஆக கூடாது என அவள் நினைக்க அக்னியும் அவளை விட்டிரு குணா என முன்னோக்கி வந்தவன் தலையிலே பலமாய் யாரோ அடித்திட சுருண்டு விழுந்து விட்டான் அதே இடத்தில்.

வெறுப்பாய் விழுந்து கிடக்கும் அக்னியை பார்த்த குணா " உன்ன எப்படியெல்லாம் பார்க்க நினைச்சேன். கேவலம் பெண்ணுக்காக ரெண்டு பேரும் கோழையா வந்து நிற்குரிங்க. உங்கள வளர்த்ததுக்கு அப்போவே கொன்னு போட்ருக்குலாம்.. செத்து தொலை.எனக்கு உன் பொண்டாட்டி தான் தேவை " வன்மமாய் சொல்லியவன் அக்னியை கடந்து கதறும் மேகாவை விடாப்பிடியாக இழுத்து சென்று விட்டனர்.

தலையில் இருந்த ரத்தம் தரையில் படர கண்கள் இருட்டி கொண்ட நிலையில் மேகாவை பார்த்தப்படியே மயங்கி போனான் அக்னி.

******** ********** ***********

"ஏதாச்சும் பண்ணு கௌரவ் .. எவ்ளோ பணம் செலவானாலும் போகட்டும் . என் சொத்தே அழிஞ்சி போகட்டும் . அவளை மட்டும்... அவளை மட்டும் எனக்கு திருப்பி கொடுத்திருடா . அவளை இனிமேல் பத்திரமா பார்த்துப்பேன் மச்சான் . அவளை யாரும் நெருங்க கூட நான் விட மாட்டேன்..சின்ன துரும்பு கூட பட விடாம பார்த்துக்குறேன்.. கெஞ்சி கேட்குறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் கௌரவ் " தன் இயல்பையும் மீறி காலை பிடித்து கதறியவனை பதறி விலக்கி விட்டான் கௌரவ்.

அவனால் முடிந்தால் இந்நேரம் செய்திருப்பானே . மௌலியை கலங்க விட்டிருப்பானா?. தன் கண்ணீரை வேகமாக துடைத்து விட்ட கௌரவ் "என்ன மன்னிச்சிரு மௌலி . நான் இல்ல இனி யாராலும் அவளை காப்பாத்த முடியாது . எனக்கு என்ன பண்றதுனு தெரியலடா..மௌலி ..மௌலி அழாதடா" கன்னம் தாங்கி சமாதானம் செய்ய முயன்றான் .

" இத யாரு பண்ணிருப்பாங்கனு யோசி மௌலி . அடுத்து அவங்க அக்னியை ஏதாவது பண்ணுறதுக்குள்ள காப்பாத்தனும் .. இல்லனா மேகாவை ஏதாச்சும் பண்ணிருவாங்க மௌலி . நீ இப்டி உடைஞ்சு போனா அவனை யாரு காப்பாத்துவா " பிடித்து உலுக்க தன்னிலை திரும்பவில்லை மௌலி .

கௌரவ்க்கும் தெய்வா இழப்பு கவலை தான். ஆனால் அதையும் கடந்து நண்பன் ஒருவன் இருக்கிறானே மனைவியோடு. மௌலியை குறி வைத்திருக்கிறார்கள் என்றால் அடுத்த குறி அக்னி தானே. மேகாவின் குழந்தை முகம் வேறு கண் முன் வந்து செய்வதரியாது கலங்கியவனுக்கு வழி தெரியவில்லை.

"எழுந்து வந்து அவ முகத்தையாச்சும் கடைசியா பாரு மௌலி " பொறுமை இழந்து கத்த , கௌரவ் சொன்ன வார்த்தையில் அவனை பிடித்து கோவமாக தள்ளி விட்டான் மௌலி .

"என் தெய்வா என்னை விட்டு போக மாட்டா .. இன்னொரு முறை கடைசி அது இதுன்னு சொல்லிட்டு இருந்த கொன்னுருவேன் . என் தெய்வா என்னை விட்டு போகல . புரிஞ்சிதா " கண்ணை உருட்டி அவன் கர்ஜிக்கும் போதே அலைப்பேசி சினுங்க யார் என தெரிந்தே அட்டென்ட் செய்தான் மௌலி .

"என்ன கண்ணுங்களா ரெண்டு பேரும் அழுதுட்டு இருக்கீங்க போல " எதிர்முனையில் கேட்ட வார்த்தையில் தான் தன்னிலை வந்த மௌலி தம்பி அக்னியை பற்றி யோசித்தான் .

" ஏய் ஏய் .. ஓ ** *&^*&^ .. ஒழுங்கா அவனை விட்டிரு .. அவனுக்கு ஏதாச்சும் ஆச்சு உன்ன கொன்னுருவேன் பார்டு.. ஒழுங்கா என் தம்பியை விட்டிரு "

"மௌலி மௌலி .. ஏன் கத்துற உன்ன மாதிரி தான் உன் தம்பியும் அவன் பொண்டாட்டியை தொலைச்சிட்டு கதறிட்டு இருக்கான்.என்னவோ அந்த குட்டியை பார்க்கும் போது எனக்கு உங்க அம்மா நியாபகம் தான்டா வருது " சிலாகித்து அவன் சொல்லும் போதே வெறியாகி விட்டான் மௌலி . முதல் முறையாய் நேரடியாக தன் அம்மாவை கெடுத்தவனின் குரலை கேட்கிறான் மௌலி .

இவனை பார்க்காமல் தானே உயிரோட விட்டு வைத்திருக்கிறான் . ஈஸ்வர் மட்டும் முன்னவே மௌலி அக்னி முன் வந்திருந்தால் அன்றே கொன்று புதைத்திருப்பார்கள் .

இவ்ளோ இழப்பும் நடந்திருக்காதே. தம்பியின் மனைவியின் நிலையை நினைத்தவனுக்கு இதயமே ஒரு நொடி துடிப்பை நிறுத்தி விட உறைந்து நின்று விட்டான்.

" என்ன கண்ணு பேச்சை காணும்... நீ நினைக்கிற மாதிரி அந்த குட்டியை நான் எதும் பண்ண மாட்டேன். என்ன பண்ண வயசாகிருச்சுல அப்பாவுக்கு " நக்கலாய் சொல்ல சுள்ளென சூடாகி விட்டான் மௌலி.

உண்மையில் இந்த வார்த்தையை ஈஸ்வர் மட்டும் நேரில் நின்று சொல்லிருந்தால் கடித்தே குதறி கொன்றிருப்பான். அந்த அளவிற்கு வெறி.

" யாருக்கு யாரு அப்பா... எச்ச பொறுக்கி நாயே... உன்னால அவள ஒன்னும் பண்ண முடியாது " அடிக்குரலில் சொல்லியவன்

" என் அம்மாவை தான் இழந்தேன். ஆனா இவள நாங்க இழக்க போறது இல்ல... அவளால நீ தான் இன்னைக்கு உன் உயிரை இழக்க போற " வார்த்தைகளை அனலாய் வீசியவன் எதிர்முனையில் இருந்து வரும் குரலை கேட்க பிடிக்காது போனை சுவரை நோக்கி எறிய சுக்கு நூறாய் உடைந்து நொறுங்கியது.

" டேய் என்னாச்சு மௌலி... யாரு பேசுனது.. யாருடா " கேட்டு கொண்டிருக்கும் போதே ஹாஸ்பிடலுக்குள் பதட்டமாய் ஓடி வந்தான் ஜேம்ஸ்.

அழுத்திருக்கிறான் போல. முகம் சிவந்து வீங்கி போய் இருந்தது. " பாஸ் அதே பீச்ல செக் பண்ணதுலயும்
நம்ப ஆளுங்கள வச்சி விசாரிச்சதுலயும் குணா தான் பாஸ் இத பண்ணிருக்கான். அவன் தான் ஆள் வச்சி ஸ்னைப்பர்ல தெய்வா ஷூட் பண்ணிருக்காங்க.. அடுத்து அவங்க டார்கெட் மேகா. மேகாவை லைவ்ல " முழுதாக சொல்ல முடியாமல் அவன் அழுகையை அடக்க மௌலி மெல்ல திரும்பி அறையை பார்த்தான்.

என்ன நினைத்தான். என்ன முடிவு செய்தான் தெரியவில்லை. அமைதியாக அறையின் கதவை திறந்து உள்ளே சென்ற மௌலி கதவை மூடி விட்டான் யாரும் வராவண்ணம்.

அனுமதியே இல்லாமல் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்ட வாழ வேண்டும் வாழ ஆசை என கண்கள் மின்ன சொல்லியவள் கண்கள் மூடி கிடைப்பதை இதயம் இறுகி போய் பார்த்தான் ஆடவன்.

மானிட்டர்களின் சத்தமும் அவளின் மூச்சோடு சேர்ந்து மறைந்து விட்டது போல. மயான அமைதி அவனை இன்னும் நிலைக்குலைய செய்ய மிக மென்மையாக தெய்வாவின் கையை பிடித்து கொண்டு அருகில் அமர்ந்தான்.

உடல் ஜில்லிட்டதை அவனின் சூடான கரம் உணர சத்தமில்லாமல் கதறிய மௌலி நடுங்கும் கரத்தால் தன் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்தான்.

ஒரு சிவப்பு பெட்டி. " நாம இன்னும் முழுசா வாழல தெய்வா... என்னால நீ இல்லாமல் இருக்க முடியாதுனு தெரிஞ்சும் ஏன்டி என்ன அழ வைக்கிற... என்ன அழ வச்சி பார்க்குறதுல அப்டி என்னடி சந்தோசம். முடியல தெய்வா... எனக்கு மூச்சு முட்டுதுடி.. நீ இல்லாத இந்த ஒவ்வொரு நொடியும் விஷத்தை சுவாசிக்கிற மாதிரி வலிக்குதுடி. உன்கிட்ட இன்னைக்கு என் காதலை சொல்ல நினைச்சேன். அதும் இந்த தாலியை காட்டி " தழுதழுத்த குரலில் சொல்லியவன் பெட்டியை திறக்க தங்க தாலி மின்னியது.

ஆம். அவளிடம் இந்த தாலியை காட்டி என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா என்ற ஆசையில் தான் அழைத்து சென்றான். ஆனால் விதி. அவன் காதலை கூட அவள் கேட்காமல் செய்து விட்டதே.

சட்டையில் தன் கண்ணீரை துடைத்த மௌலி கைகள் நடுக்கம் கொள்ள அந்த தாலியை சடலமாய் இருந்தவளின் கழுத்தில் கட்டியவன் நெற்றியில் முத்தம் பதித்து " ஐ லவ் யூ தெய்வா " நெற்றி முட்டி சொல்லியவன் வெடித்து அழுது விட்டான்.
 
Member
Joined
Nov 10, 2023
Messages
4

Ei... Enna pa ippadi pantringalae......
 
New member
Joined
Nov 19, 2023
Messages
2
No babs mega deiva rendu perum pavam ,adha vida agni mouli ,eppo mega vera andha katerumai kita sikita sikiram avala kapatha ponga da bayama eruku
 
Member
Joined
Nov 16, 2023
Messages
6
எம்மா ஏன் இப்படி!!!??? எல்லா கதைலயும் அழுகாச்சியா இருக்கு 🤧🤧🤧🤧😤😤😤😤 நோ!!! நோ!!! மௌலி பையா அழ கூடாது 😭😭😭😭

ஒருத்திய மொத்தமா போட்டு தள்ளியாச்சு.. இன்னொருத்திக்கு சாவ விட கொடூரத்தை தர முயற்சி வேறையா..??😵😵😵 இப்பிடி பண்ணிங்கனா நான் உங்களை அரக்கஸ் டார்ல்ஸ் கிட்ட தூக்கி கொடுத்திடுவன் ரைட்டர் பாப்ஸ் 😏😏😏😏

வாசம் ஓசை!!! இவைதானே…
எந்தன் உறவே..
உலகில் நீண்ட இரவென்றால்
எந்தன் இரவே..!!!!

கண்ணே உன்னால்.. என்னைக் கண்டேன்!!
கண்ணை மூடி.. காதல் கொண்டேன்!!

பார்வை போனாலும் பாதை நீதானே!!
காதல் தவிர! உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை..!!!????
மௌலி💔 தெய்வா
 
New member
Joined
Nov 14, 2023
Messages
3
Oru than love kku than end card pottutinga.

Akni pavam ma avanoda love mattumavathu continue agattume.

Please saki megha kku ethuvum agama kapathuma unakku thousand times thanks soldren deivame
 
Top