- Joined
- Nov 10, 2023
- Messages
- 67
- Thread Author
- #1
அத்தியாயம் – 8
ராவணன் உறுதியாக மைதிலி வீட்டார்களை தங்களுடன் தங்க சொல்லி விடவே மறுக்க முடியாமல் மூவரும் ராவணன் வீட்டிற்கு வந்து விட்டனர்.
மிதுனிடம்அவனின் விருப்பத்தை எல்லாம் ராவணன் கேட்கவில்லை. அகிலிடம் சொல்லி மிதுனின் அனைத்து பொருட்களையும் இடம் மாற்ற சொல்லி தன்னுடனே இருக்க வைத்து கொண்டான் ராவணன்.
மதிக்கு இப்போது உடல் நிலை நன்றாகவே தேறி இருந்தது. முதல் நாள் ராவணன் வீட்டில் எல்லாரும் இரவு உணவை முடித்து உறங்கஅவரவர்கள் அறைக்குள்சென்று அடைந்து கொண்டனர்.
மைதிலி தன்னை சுத்தப்படுத்தி கொண்டுகுளியலறையில் இருந்து வெளியேறியவள்ஏதோ பைலை புரட்டி பார்க்கும் ராவணனை கண்டாள் .
சிரித்தவள் அவனின் அருகில் சென்றுராவணனின் கையில் இருந்ததை புடுங்கி மேசையில் வைத்தவள்ராவணனின் மடியில் அமர்ந்து அவனின் கழுத்தை கட்டி கொண்டாள்.
மைதிலி ராவணன் முகத்தையே பார்ப்பதை கண்டுசிரித்தவன் “ எவ்ளோ நேரம்டி இப்டியே பார்த்துட்டு இருக்க போற. எனக்கு ஒரே வெக்கமா இருக்கு “ என்று ராவணன் முகத்தை கை வைத்துமூடியதில்மைதிலி சத்தமாக சிரித்தே விட்டாள் .
“ அச்சோ என் ராவணனுக்கு வெக்கத்தை பாரு. இருந்தாலும் பார்ப்பேன். பார்த்துட்டே இருப்பேன். என் மூச்சு நிக்குற வரைக்கும் “ என்றவளை விழி விரித்து பார்த்தவன்
“ உனக்கு ஒன்னு தெரியுமா அம்மு. என்ன இந்த அளவுக்கு நேசிக்கிற ஒருத்தி கிடைப்பானு கனவுல கூட நெனச்சி பார்க்குலடி . இந்த கொஞ்சல் உன்ன அணைச்சு தூங்குறதுஅப்போ அப்போ நீ குடுக்குற முத்தம் பல நேரம் பார்வையாலே என்ன மிரட்டுறதுஇது எல்லாமே தாண்டிஎன்ன இப்போ வாழ வைக்குது . எதுமே இல்லாம அனாதையா இருந்த எனக்கு எல்லாமுமா நீ கெடச்சிருக்க. நீ மட்டும் இல்லனா நா சாகும் போது கண்ணீர் விட கூட துணை இருந்திருக்காதுஅம்மு “என்றவனின் இதழ்கள் சிரித்தாலும் கண்கள் கலங்கி போய் தான் இருந்தது.
தன்னவனின் வலியில் தானும் கண் கலங்கியவள் அவனின் கன்னத்தை தன் இரு கைகளுக்குள் அடக்கி “ என் ராவணனுக்குநா எல்லாமுமா இருப்பேன். நமக்கு குழந்தை பொறந்தாலும் நீ தான் மாமு என் முதல் குழந்தை. இனியும் இந்த மாதிரி வருத்தப்பட கூடாது.”சொல்லி சிரித்தவள் அவனின் நெற்றி கன்னம் என முத்தம் வைக்க
கெட்டப்பையன் மைதிலியின் பின்னந்தலை பிடித்து தன்முகம் அருகே இழுத்தவன் அவளின் மென்மையான சிவந்த அதரங்களை கவ்வினான்.
தன்கரங்கள் கொண்டு ராவணனை விலக்க முயன்றவள் சுத்தம் பெண்ணவளால் முடியாமல் போகவே அவனோட ஒன்றி விட அவளின் இடை இறுக்கி முத்தத்தில் வேகம் கூட்டி அவளை திணற வைத்தான் ராவணன்.
ராவணனுடன் பேசிக்கொண்டே மைதிலிஅ வனின் மடியிலே அமர்ந்து உறங்கி போக ரசித்தவன் அவளின் தூக்கம் கலையா வண்ணம் அவனின் அம்முவை கையில் ஏந்தி மெத்தையில் படுக்க வைத்த ராவணன் அறையை வெளியேறினான்.
**************************************
அறையில் உறக்கம் இல்லாமல் கண்ணீர் வடித்து கொண்டிருந்தார் வாசுகி. கதவு தட்டும் சத்தத்தில்அழுத கண்களையும் முகத்தையும்துடைத்து கொண்டவர்கதவை திறக்கராவணனை கொண்டு அதிர்ச்சியாகி தான் போனார்.
ராவணன் அவரின் முகத்தை ஆராய்ந்தவன் அவர் அழுதுள்ளார் என கண்டு கொண்டவன் “ உள்ளவரலாமா “ தன்மையாக கேட்கவேசரியென தலையாட்டினார்.
நேரடியாக மனதில்உள்ளதை கேட்டு விட்டான். “ சொல்லுங்க அம்மா எதுக்கு மேகன கொன்னிங்க “ என்றதும்வாசுகி அதிர்ந்து பார்த்தார்ராவணனை.
“ எனக்கு தெரியும்மா. நா உங்கள கவனிச்சிட்டு தான் இருக்கேன். என்னகொலைகாரன்னு போலீஸ்சொல்லும்போது உங்க முகத்தை நா பார்த்தேன். எதுக்குமா உங்க பையனையே கொன்னிங்க. சொல்லுங்க “ என்று ராவணன் கேட்டதில் இதுவரை அடக்கி வைத்த அழுகை கொட்டித்தீர்த்தார்.
ராவணன் பயந்து போய் “ அம்மா என்னாச்சு. ஏன் அழறீங்க “என்றவன் வாசுகியை மெத்தையில் அமரவைக்க அவனின் முகம் பார்த்தவர்
“ அவன் மனுஷன் இல்லப்பா. மிருகம். மனுஷன்உருவத்துல எனக்கு பிறந்த மிருகம் “ வாசுகி சொன்னதில் ஓரளவு விஷயம் இதுவென அறிந்தவன்.
“ ஏன்மா அப்டி சொல்ட்ரிங்க “ புருவம் சுருக்கி கேட்க நடந்த அனைத்தையும் கூறினார் வாசுகி.
“கல்யாணத்துக்கு முன்னாடி நாள் மேகன பார்க்க அவனோட அறைக்கு போனேன். அப்போ அவன் யார் கூடவோ போன்ல பேசிட்டு இருந்தான். அத கேட்டதும்என் ஈரக்கொலையே நடுங்கிருச்சிப்பா . அவன் மைதிலியை கல்யாணம் பண்ணி மும்பைல எவனுக்கோ வித்துருவான்னு சொன்னான். அத கேட்டதும் அந்த தாயில்லாத புள்ளைக்கு தாயா அவன் முன்னால போய் என் ஆதங்கத்தை கொட்டுனேன்.
“ டேய் மேகா என்னடா பேசுற. யாருக்குடா மைதிலியை விக்க போற. அவ உன் மாமா பொண்ணுடா. உன் மனைவி ஆகப்போறவ டா “என்று கலக்கமாக கூறிய அம்மாவை நக்கலாக பார்த்தவன்
“ அடச்சீ வாய மூடு. சும்மா அழுதுட்டு. நா அவளை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு காரணமே என் பாஸ் இவ வேணும்னு கேட்டதால தான். இவளை போய் அவர்கிட்ட ஒப்படைச்சேன் கை நிறையா அள்ளி கொடுப்பாரு “ பணவெறியில்பேசியவனைகண்டுகலங்கி போன வாசுகி
“ டேய் அம்மா சொல்றேன் இத இத்தோடுவிடு டா. மைதிலி தங்கமான பொண்ணுடா. அவளை கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கை அழகா இருக்கும்டா “ என்றவரை கண்டு கொள்ளாதவன்
“ தோ பாரு எனக்கு இந்த கல்யாணம் ப்லா ப்லா. இது எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்ல. பணம் வந்தா இவள விட அழகானவள்லாம் என் மடியில கிடைப்பாளுங்க. கல்யாணம் பண்ணி அவளை என் பாஸ்கிட்ட குடுக்க தான் போறேன். அதுக்கு அப்றம் அவளும் என் பாஸ் கூட சந்தோசமா இருப்பா “ என்று பேசிக்கொண்டே போனவனின் தலையிலே வாசுகி ஓங்கி அடிக்க மயங்கி விழுந்து போனான் மேகன்.
மயங்கியவனை யாரும் அறியா வண்ணம் இழுத்து கொண்டு அந்த தனித்து இருக்கும் வீட்டை நோக்கி சென்றார். தலையில் ரத்தம் வழிய கெஞ்சிய மகனை பாவம் பார்க்காமல் கழுத்தை அறுத்து கொலை செய்தார் வாசுகி.
நடந்ததை எல்லாம் கேட்ட ராவணன் அதிர்ச்சியோடு “ ஆனா அம்மா அவன போலீஸ்ல பிடிச்சி குடுத்துருக்கலாமே. நீங்க ஏன்மா இப்டி பன்னிங்க “கேட்ட ராவணனின் முகம் பார்த்த வாசுகி
“ என்ன பண்ண என் வயித்துல பொறந்து தொலைச்சிட்டானே. வேற யார் கையிலயாவது சாகட்டும்னு விட முடியலப்பா. அதான் அந்த பாவிய என் கையாலயே கொன்னேன். எத்தனை பெண்கள பெத்த அம்மா இவன் இந்த வேலையை பண்ணதுல கதறி இருப்பாங்க. அவங்க சாபம் தான் பெத்தவ கையாலையேசாக வச்சிருச்சி “ என்று தரையில் மண்டியிட்டுகதறி அழ அவரை அணைத்து கொண்ட ராவணன்
“ அம்மா அழாதிங்கமா. எந்த அம்மாவும் செய்ய முடியாத காரியத்தை நீங்க செஞ்சிருக்கீங்க. முடிஞ்சத இனி நினைக்காதீங்கமா “ என்ற ராவணனின் ஆறுதலில் கொஞ்சம் தெளிந்தவர்
“ அவன் சாக வேண்டியவன் தான் கண்ணா. எனக்கு தான் புள்ளையா நீ இருக்கியே. நீ வார்த்தையா கூப்பிடுறியான்னு தெரியாது. ஆனா நா உன்ன புள்ளையா தான் கண்ணு பாக்குறேன்”வாசுகி சொன்ன வார்த்தையில் உடல் சிலிர்த்தவன்
“ அம்மா “ என்று குரல் தழுதழுக்க கூறவாசுகி அவனின் உச்சி முகர்ந்து முத்தம் வைத்தவர்“ நா உன் அம்மா தான்டா கண்ணு “வாசுகி வார்த்தையில் ராவணன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை.
*************** ************************
எல்லாரும் காலை உணவை சாப்பிட்டு கொண்டிருக்க குரல்செருமிய ராவணன்‘’ மாமா. நா கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க.மிதுனுக்கு உறவுன்னா அது நா மட்டும் தான். அதான் நா இந்த விஷயத்தை கேக்குறேன். மிதுனுக்குநம்ப மதியை கல்யாணம் பண்ணி குடுப்பீங்களா “ என்று கேட்க மூர்த்தி பேசுவதற்குமுன் வாசுகி
“ அது என்ன அவனுக்கு நீ மட்டும் தான் உறவா நா உனக்கு அம்மான்னா அவனுக்கும் நா அம்மா தான். அண்ணா என் ரெண்டாவது புள்ளைக்கு உங்க பொண்ண கட்டிகுடுப்பீங்களா மாட்டிங்களா “ வாசுகி கேட்க சிரித்த மூர்த்தி
“ எனக்கு முழு சம்மதம். ஆனா மதிக்கு இதுல விருப்பமானு கேக்கணும்ல “ என்று மூர்த்தி சொல்ல அதுவரை மிதுனை பார்த்து காதல் மொழி பேசிய மதி பட்டென தலை குனிந்து கொண்டாள்.
தங்கையின் செயலில் மைதிலி சிரித்து விடஓரப்பார்வையில்அக்காவை முறைத்து கொண்டிருந்தாள் மதி.
ராவணன் மதியை கவனித்தவன் “ சொல்லு மதி உனக்கு இதுல சம்மதமா “ என்று கேட்கவெட்கத்தில் நெளிந்தவள்
“ எனக்கு சம்மதம் மாமா “ சொல்லியவள் அவளறைக்கு ஓடி விடஅடுத்து நம்ப தான் என்று நினைத்த மிதுன் “ அஜெய் ஒரு முக்கியமான மீட்டிங். நாமுதல்ல போறேன் நீ பொறுமையா வா“ சொன்னவன்நில்லாமல் ஓடியே விட்டான்.
சிரித்த வாசுகி “ அட ரெண்டு என்னமா வேலை பார்துருக்குங்க. மகனே சீக்கிரம் இவங்களுக்குகல்யாணத்த முடிச்சிரு” என்றவர் மேலே செல்ல
மூர்த்தியும் ஒரு சிரிப்போடு எழுந்து அவர் அறைக்கு சென்று விட்டார்.
ராவணன் கண்ணை காட்டியதில் செஃப் கேசவ் உள்ளே சென்று விட எழுந்து செல்ல போன அவனின் அம்முவை இழுத்து அணைத்து இதழ் முத்தம் வைத்த பின்பே விடுவித்தான் ராவணன்.
அவனின் செயலில் கோவமானமைதிலி “ நீ ரொம்பகெட்டவன்டா மாமு. முதல்ல ஆபிஸ் கெளம்பு “ என்று விரட்டாத குறையாக தள்ள சிரித்து கொண்டே வெளியேறினான் ராவணன்.
************* ************ ************
‘’ அவன் காணாமல் போய் முழுசா ஒருவாரம் ஆகிருச்சி. இன்னும் அவன் எங்க இருக்கான்னு உங்களுக்கு தெர்லயா. ஒழுங்கா எண்ணி ஒரே நாள்லஅவன் எங்க இருக்கானு கண்டு புடிச்சி சொல்லுல நீங்க யாரும் உயிரோட இருக்க மாட்டிங்க. காட் இட் “ பல்லைக்கடித்து அடிக்குரலில் கூறினான் அவன்.