- Joined
- Nov 10, 2023
- Messages
- 67
- Thread Author
- #1
அத்தியாயம் – 3
எல்லாம் முடிந்து ராவணன் அருகில் மிதுன் வந்தான். அவர்களுக்கு அருகில் யாருமே இல்லை என்பதை உறுதிப்படுத்திய மதன் ராவணனிடம்“ அந்த ராவணன் சீதையை கடத்தினான். இந்த ராவணன் அவனோட மைதிலியை கட்டிக்க போறவன கடத்தினான். பலே பலே “ என்றவனை அதிர்ந்து பார்த்த ஹீரோ
“ டேய் அப்போ நீயும் நேத்து நா சொன்னதால அந்த மாப்பிள்ளையை கடத்துலையா “ என்று ராவணன் சொல்ல மிதுனின் முழி பிதுங்கியது.
“அஜெய் எனக்கென்னவோ சரியா படல. இங்க ஏதோ ஒன்னு நடந்திருக்கு “என்று அரண்டு போய் கூற அவனை பார்த்தவன்
“ விடு மிதுன் எதுவா இருந்தாலும் அப்றம் பேசிக்குலாம் “ என்று ராவணன் சொல்லவே அமைதியாக இருந்து கொண்டான் மிதுன்.
அதான் கல்யாணம் முடிந்தது அல்லவா. பெயர் ஊர் தெரியாத ஒருவனின் அருகில் அமைதியாக இருந்தாள் மைதிலி. அவளின் அமைதி ராவணனுக்கு பயத்தை தந்தது.
வழியனுப்ப மூர்த்தியும் வாசுகியும் வர ராவணன் அவர்களின் முன் சென்றவன் “உங்க கிட்ட ஒன்னு கேட்டாஎனக்கு குடுக்க சம்மதிப்பீங்களா“ என்று கேட்டவனை மைதிலி முறைத்து பார்க்க மூர்த்தியோ“ என்னால முடிஞ்சத குடுப்பேன் சார் “ என்று சொல்லியதில் மெலிதாக சிரித்தவன்
“ என்ன அஜெய்னே கூப்பிடுங்க. அப்றம் எனக்கு நீங்க எல்லாரும் நம்ப வீட்டுக்கு வரணும். இவ்ளோ நாள் நா உறவுகள் இல்லாமல் தனியா வாழ்ந்துருக்கேன். இப்போ உங்களால இந்த கிடைச்ச உறவு என் கூடவே இருக்கணும்னு ஆசை படுறேன். எனக்கும்மிதுன்க்கும் ஒரு குடும்பம் கெடச்ச சந்தோசம் கிடைக்கும். இதுக்கு சம்மதிப்பீங்களா “ என்றவனை வியந்து பார்த்தாள் அவள் .
மதிக்கு இரட்டிப்பு சந்தோசம். எங்கு அக்காவை பிரிந்து இருக்க போகிறோம் என்ற கலக்கத்தில் இருந்தவளுக்குராவணன் கூறியது சந்தோசத்தை தர . மூர்த்தி சிறிது நேரம் யோசனையாக இருந்தவர்பின் ராவணனிடம் “ நீங்க கேட்டதுலையே ரொம்ப சந்தோசம் தம்பி. இப்போ கொஞ்ச நாள் போகட்டும். நம்ப வீட்டுக்கு நாங்களும் வந்துடுறோம் “ என்று சொல்லவே “ உங்களுக்காக எப்பவும்திறந்திருக்கும் “ என்ற ராவணன்சொல்ல மகளை ஆசிர்வதித்து காரில் அமர சொல்லியவர் ராவணனிடம்“ ரொம்ப நன்றி தம்பி. வசதி வாய்ப்பு பார்க்காம என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. உங்கள போல ஒருத்தருக்கு என் பொண்ணு குடுத்துல ரொம்ப சந்தோசம். இனி என் பொண்ண பத்தி துளியும் கவலை இல்ல. நீங்க அவளை நல்லா பார்த்துப்பிங்கனுநல்லாவே தெரியும் “ என்று பூரித்து சொல்ல
சிரித்தவன் “இப்போ இந்த கல்யாண விஷயம் வெளிய தெரிய வேணாம். இங்க இருந்தவர்களுக்கு என்ன யாருன்னு தெரிஞ்சிக்க வாய்ப்பில்லை. ஆனா கம்பெனில இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சா இதால அவளுக்கு எதும் பிரச்சனை வந்திரும். அதுனால நானே இத பப்ளிக் பன்ற வரைக்கும் நா உங்க மருமகன்னு சொல்ல வேணாம் “ என்று சொல்ல ராவணன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவர் சரியென தலையசைத்தார்.
மைதிலியை இத்தனை அருகில்பார்த்தவனுக்கு மனம்படபடப்பானது.
பிறந்த வீட்டை விட்டு வருகிறோம் என்ற கவலை சிறிதும் இல்லாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தவளை மேலிருந்து கீழாக பார்த்தான் இராவணன் . மூச்சு முட்டி தான் போனான் அவளின் இத்தனை நெருக்கத்தில் .
**************** ************************
மிதுன் முன்னமே போன் செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைக்க சொல்லவே மணமக்களை சுமந்த கார் வீட்டின் முன் நின்றது.
மைதிலி ராவணனின் வீட்டை நிமிர்ந்து பார்த்தவள் மிரண்டு போனாள் வீட்டின் பிராமண்டத்தில் .ஒரு ஊரையே வளைத்து போட்டு கட்டிய வீட்டைவிழி விரித்து பார்த்தாள் . ராவணன்
கொஞ்சம் தைரியத்தோடு மைதிலி கையோடு கை கோர்க்க முதலில் அதிர்ச்சியானவள் பின் நாணம் கொண்டு குனிந்து கொண்டாள்.
ஆரத்தி எடுத்து உள்ளே செல்லவேலையாள் ஒருவன் ராவணன் முன் நின்றான். “ கார்ல இருக்குற லக்கேஜ் எல்லாம் என் ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடு “ என்று சொல்ல. மிதுனும் ராவணனிடம் ஓய்வெடுக்க சொல்லி விட்டு வெளியேறினான்.
ஒரு நாளில் தன் வாழக்கை இப்டி மாறும் என்று ஒரு நாளும் ராவணன் நினைத்தது இல்லை.
“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு “ என்று மைதிலி சொல்ல பதறி போனவன்அவனின் அறைக்கு அழைத்து சென்றான்.
அவளின் வீட்டை விட பத்து மடங்கு பெரியதான அந்த அறையை பிரமித்து பார்த்தவளை கலக்கமாக பார்த்தவன் அவன் முகம் தன்னுடையடெஸ்ட் பேப்பரை திருத்தும் போது இருக்கும் குழந்தையின் முகம் போல் இருந்தது.
அவள் அருகில் வந்தவன் “ உங்களுக்கு பிடிச்சிருக்கா “ என்று மெதுவாக கேட்க அவன் முகம் பார்த்து புன்னகைத்தவள் “ ரொம்ப அழகாஇருக்கு. அப்றம் என் நேம் மைதிலி தாரிகா. உங்க நேம் “ என்று கை நீட்டஅவளின் மென்மையான கரம் பற்றி குலுக்கியவன் “ ராவணன் அஜெயன் “ என்றான்.
“ உங்களுக்கும் என்ன தெரியாது. எனக்கும் உங்கள தெரியாது. இந்த எதிர் பாராத கல்யாணம் எனக்கு புடிக்குலனுலாம் சொல்ல மாட்டேன். பிடித்து போக கொஞ்சம் டைம் மட்டும் வேனும் “ என்று வெளிப்படையாக பேசியதில் சிரித்தவன்
“ நா எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணுவேன். அண்ட் ஒரு கண்டிஷன் “ என்று ராவணன் சொல்ல அவன் முகம் பார்த்தவள்
“ என்ன கண்டிஷன் “ என்று கேட்க
“ நீ என் மனைவின்னுவெளிய தெரிய கூடாது. எதுக்கு சொல்ல வறேனா. எனக்கு பிசினஸ்ல நெறைய கண்ணுக்கு தெரியாத எதிரிகள் இருப்பாங்க. இதுவரை எனக்குன்னு சொல்லிக்க உறவு இல்லாம இருந்ததால அவங்க என்னநெருங்கள. ஆனா இப்போ எனக்காக நீ இருக்க. உனக்கு ஆபத்து வர விஷயத்தை நா செய்ய விரும்பல. சோ “ என்றுஅவளின் முகத்தை தயக்கமாக பார்க்க சிரித்தவள்
“ ராவணன் அஜெயன் பொண்டாட்டினு தானே சொல்ல கூடாது. நா ராவணன் பொண்டாட்டி சொல்லிக்கிறேன். இப்போ நா தூங்குறேன்” என்றவள் எந்த சலனம் தயக்கம் இன்றி மெத்தையில் படுத்து கொள்ள அடுத்த கணமே இருந்த களைப்பில் உறங்கி போனாள்.
இதுதான் மைதிலி. அவள் நடந்ததை நினைத்து வருந்தும் குணமுடையவள் இல்லை. நடந்ததை ஏற்றுக்கொள்ளும் குணம். அந்த கார்மேகன் கையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக வேண்டியவள் யாரின் செயலோ பூ மாதிரி பார்த்து கொள்ளும் ராவணனிடம் தஞ்சம் புகுந்து கொண்டாள்.
இவளின் நகத்தை தொட நினைத்தாலும்அது சிங்கத்தின் குகையில் சிக்கிய கதை தான்.
ராவணனுக்கு உறக்கமோ சோர்வோ எதுவும் இல்லை. மனம் முழுக்க சந்தோசம் தான் இருந்தது. இருக்காதே பின்னே அவன் உயிருக்கு உயிராக நேசித்தவள் அல்லவா. எங்கு தன்னை விட்டு தன் வாழ்வை விட்டு நிரந்தரமாக போகப்போகிறாள் என்றிருந்தவனுக்கு திரும்பி கிடைத்து விட்டது அவனின் உலகம்.
சொல்ல முடியா மகிழ்ச்சியில் திளைத்திருந்தவன் குஷனில் அமர்ந்து உறங்கும் தன் உயிரானவளையே பார்த்து கொண்டிருந்தான். பார்க்க பார்க்க திகட்டாத அவளின் முகம் இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான். சில உணர்வுகளை வார்த்தைகளால் கூட விவரிக்க முடியாது. அந்த மாதிரி உணர்வில் தான் சிக்கி தவித்தான் ராவணன்.
***********************************
நீண்ட நேரம் தூக்கம் கலைந்து எழுந்தவள் எதிரில்ராவணன் இருப்பதை கண்டு பயந்து போனாள். “ ஏய் என்னாச்சு ஏன் பயந்து எழுந்த “ என்று பதறி கேட்டவனை முறைத்தவள்
“ உன்ன யாரு இப்டி முன்னாடி வந்து உக்கார சொன்னா. தூங்கி எழுந்த எனக்கு காலைல நடந்த எதுவும் டக்குனு நியாபகம் இல்ல. அதான் “ என்று சொல்ல ராவணனின் முகம் வாடி போனது.
அதை கவனித்தவள் “ சாரி ராவணா ஏதோ சொல்லிட்டேன். சரி காபி சாப்பிடுறியா “ என்றவளைபார்த்தவன்
“ உனக்கும் சேர்த்து எடுத்து வர சொல்ட்றேன் “ என்றவன் போனை எடுக்க போக தடுத்தவள்
“ எனக்கும் சில கண்டிஷன் இருக்கு. நமக்கு தேவையான சாப்பாடு நா தான் சமைப்பேன். காபி கூட” என்று சொல்ல வேதனையாக பார்த்தவன்
“ ஆனா இதுலாம் எதுக்கு நீ பன்ற. இங்க வேலை செய்ய நெறைய பேர் இருக்காங்க “ என்றவன் பேச்சை கேட்காமல் மெத்தை விட்டு எழுந்தவள்
“ அவங்க இருக்கட்டும். நா யார் உனக்கு. மனைவி தானே. அப்போ நா செய்யாம வேற யாரு செய்வா. இந்த விஷயத்துல நா யார் பேச்சும் கேட்க மாட்டேன் “ என்றவள்தன்னுடைய மாற்றுடையை எடுத்து கொண்டு குளியலறை புகுந்து கொள்ள மைதிலியின் படபட பேச்சு கேட்க ராவணனுக்கு தான் தலைசுத்தி போனது.
************** *********** ************
மும்பை மாநகரம் பெரும் பரபரப்போடு இருக்க அந்த கண்ணாடி வீட்டில் இருந்தவன் முகமும் பரப்பாகவும் கோபமாகவும் இருந்தது. யாருக்கோ விடாமல் அழைக்க கணினி பெண்ணின் குரல்மட்டுமே கேட்க கோவத்தில் போனை தூக்கி எறிந்தான்.
நினைத்ததை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி அவனின் முகத்தில் குடி இருந்தது.அவளை எப்படி எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று ஆசை பட்டான். அது எல்லாம் இல்லாமல் ஏமாற்றம் என்று நினைக்கும் போதே ஆத்திரம் வந்தது.
அவளின் வசீகர முகம் வேறு கண் முன்னாள் வர வெறியானான். வேகமாக தன் முன்னால் இருந்த மேசை நோக்கி சென்றுஅதில் பரப்பி இருந்த வெள்ளை பொடியை மூக்கில் இழுத்தான். போதை நெடி மூளையை அடைய சுகமாக சாய்ந்து கொண்டவன் எதையோ உளறி கொண்டிருந்தான்.
************** ************* *************
தன் நெத்தியில் இருக்கும் தழும்பை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். அதைபார்க்க பார்க்க அதற்கு காரணமானவனை கொல்லும் வெறி அதிகமானது.
“ டேய் ராவணா உன்ன விட மாட்டேன்டா. உன்ன கொல்லுவேன். என்ன அடிச்ச உன் கையை வெட்டுவேன் . உன்னால நா பட்ட அசிங்கம் அவமானம் எல்லாத்துக்கும் சேர்த்து உன்ன கொன்னு பழி தீர்ப்பேன்டா இந்த தீரன்.