உன்னில் என்னை மீட்பாயாக! 2

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் – 2

ஒருவன் போனில் எதை பற்றியோ தீவிரமாக பேசி கொண்டிருக்க.அந்த வழியாக வந்த உருவத்தின் காதில் நன்றாக அவன் பேசியது விழுந்தது. அவன் மறுமுனையில் என்ன பேசினானோ அனைத்தையும் கேட்ட உருவம் அரண்டு போனது. தான்ந்தான் இனி எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்த உருவம் யார் கண்ணிலும் சிக்காமல் அந்த அறைக்குள் நுழைந்தது.

ராவணனை தனியே விட்டு போக மனமில்லாமல் சோபாவிலே மல்லாக்க படுத்து தூங்கி கொண்டிருந்தவன் தூக்கம் கலைந்து விழிக்க ராவணன் பார்மல் உடையில் கிளம்பி கொண்டிருந்தான்.

நம்ப முடியாத மிதுன் கண்ணை தேய்த்து கொண்டுபார்க்க அது ராவணன் என உறுதியானது. பதறி எழுந்தவன் “ எங்க கிளம்பிட்ட “ என்றவனை கண்டு கொள்ளாமல் ஷர்ட் பட்டனை போட்டவன்

“ மைதிலியை பார்க்க “ என்று எந்த சலனமும் இல்லாமல் சொல்லமிதுன் தான் ராவணனின் வார்த்தையில் மிரண்டு போனான்.

“ உனக்கு என்ன பைத்தியமா அவளுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் ஆக போகுது “ என்றவனின் வார்த்தை கேட்காதவன்“ தெரியும் மிதுன். பட் கடைசி முறையா இந்த ராவணனோட மைதிலியா அவளை பார்க்க ஆசை படுறேன் ப்ளீஸ் “ என்று கெஞ்சியவன் மிதுனுக்கு புதிது.

இதற்கு மேல் மறுப்பானா என்ன “ சரி இரு நானும் பிரெஷ் அப் ஆகிட்டு வரேன் “ என்று குளியலறை புகுந்த மிதுன் அஞ்சுநிமிஷத்தில் மீண்டும் வந்தவன் ராவணனை அழைத்து கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றான்.

************** ************ ***********

மூர்த்தி மண்டபத்தின் வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் அத்தனை சந்தோசம். எல்லாம் தன் தங்கை மகனுக்கே மகளை கட்டி குடுக்கும் சந்தோசம்தான்.

மிதுன் காரை நிறுத்தியவன் ராவணன் உடன் அந்த மண்டபத்தை நோக்கி நடந்தான். மூர்த்தி வந்தவர்களைபார்த்து வியந்து போனார். “ சார் நீங்க. “ என இழுக்கராவணனுக்கு பதில்

“ என்ன மூர்த்தி வந்தவங்கள இப்டி தான் நிக்க வச்சி கேள்வி கேட்பியா. உனக்கு தெரியாதா பாஸ் அவர் கம்பெனில ஒர்க்கர்ஸ்விஷேசம்னா ஏதாச்சும் செய்வார்னு. அதுனால தான் நீ கூப்டாம கூட வந்திருக்காரு “ என்ற மிதுனின் ஆதங்க பேச்சில் பதறி போனவர்

“ அய்யோ மன்னிச்சுடுங்க சார். நீங்க உள்ள வாங்க. வாங்க சார் “ என்று உள்ளே அழைத்து சென்றவர் முதல் வரிசையில் இருவரையும் அமர வைத்தார்.ராவணனின் கண்கள் அந்த மேடையையே வெறித்து பார்த்தது. எந்த ஒரு காதலனனும் அனுபவிக்காத வலியை அனுபவித்து கொண்டிருந்தான்அவன் .

மிதுனால் எதையும் செய்ய முடியாமல் தவித்து போய் அமர்ந்திருந்தான் அமைதியாக .

விருந்தினர்கள் மண்டபத்தில் நிறைந்திரருக்க அய்யர் அவரின் கடமையை செய்வேன செய்து கொண்டிருந்தார்.

டக்கென மிதுனுக்கு ஏதோ நினைவு வர ராவணன் காதருகில் வாய் வைத்தவன் “ அஜெய் நா வேணா மாப்பிள்ளையோட சீப்பை திருடிடவா. அது இல்லனா கல்யாணம் நடக்காது “ என்றவனின் வாய் மூடி போனது ராவணனின் முறைப்பில்.

************************* ************

பாருங்க நா இன்னும் உங்களுக்கு ஹீரோயின காட்டவே இல்ல.ராவணன் மனச திருடிய அந்த மைதிலிய பார்க்க வேணாமா. வாங்க வாங்க மணப்பெண் அறைக்குள் புகுந்து கொள்வோம்.

எனக்கு முதலில் தெரிந்தது அவளின் மையிட்ட கண்கள் தான். ப்ப்ப்பா என்ன ஒரு காந்த சக்தி அந்த விழிகளுக்கு.

இப்படி தான் ராவணனின் மனதையும் கொல்லை அடித்தாளோ. மைதிலி என்ற பேருக்கு ஏற்றார் போல் முக லட்சணம் . இதற்கு மேல் நீங்களே ராவணனின் மைதிலியை வர்ணித்து கொள்ளுங்கள்.

“ தாரா இப்போவது இந்த கல்யாணத்துல இருந்து தப்பிச்சிரு.அந்த அயோக்கியன் உனக்கு புருஷனா வந்தா உன் வாழ்க்கை நரகமாகிரும் தாரா “ என்றாள் தாரிகாவின் தங்கைமதிவதனி தாரிகா.

தங்கை முகம் பார்த்து சிரித்தவள்“ இங்க பாரு மதி எனக்கும் இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பம் இல்ல தான்.ஆனா எனக்கு அப்பாவோட சந்தோசம் முக்கியம்.அதும் இல்லாம அத்தை நம்பள எவ்ளோ நல்லா பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்காகவாதுநா இந்த கல்யாணம் பண்ணிப்பேன் ” என்றவளை தீயாய் முறைத்தவள்

“ அவங்களுக்காகஉன் வாழக்கையையே பாழாக்க போறியா.அவன பத்தி நம்ப வீட்ல இருக்கிறவங்களுக்கு தான் தெரியாது. உனக்குமா தெரியாது அவன் எவ்ளோ பெரிய பொம்பள பொறிக்குனு.அவன் என்கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணும் போது கூட நீ தானடி வந்து காப்பாத்துன. அப்றம் எப்டிடி உன்னால அவன கல்யாணம் பன்னிக்க முடியுது” என்று ஆதங்கமாக பேசியும் தாரா முகத்தில் மாற்றம் இல்லை.

தாராவின் அத்தை வாசுகி. ரொம்ப நல்லவர். அம்மாவை போல் தன் அண்ணன் மகள்களை பார்த்துக்கொள்வார்.கணவனை இழந்த தன் தங்கையை கூடவே வைத்து பார்த்து கொண்டார், மூர்த்தி. வாசுகியின் மகன் தான் கார்மேகன். பாவம் அவன் சரியான மோக பித்தன் என்பது அண்ணன் தங்கைக்கு தெரியாது.

மும்பையில் படித்து என்ன வேலை செய்தானோபெரும் வெற்றி தான். அவன் மும்பையிலே தங்கி விடவே தாராவை கட்டிவைத்து அனுப்பிவிடமுடிவு செய்தனர் மகனின் கேடு குணம் அறியாமல். முதலில் வாசுகி சொன்னதில் எரிச்சலானமேகன்தாராவின் புகைப்படம் பார்த்ததும் பட்டென சம்மதித்து விட்டான்.

“ அக்கா உன்கிட்ட கெஞ்சி கேட்குறேன். அம்மா இல்லாத எனக்கு நீ தான்டி அம்மா. உன் வாழ்க்கை நாசமா போறத என்னால பார்க்க முடியாது. ப்ளீஸ்டி இங்க இருந்து தப்பிச்சி போயிரு “ என்று கலங்கி சொல்ல அவளின் கன்னம் தங்கியவள்

“ யாருக்கு என்ன நடக்குனுமோ அது தான் நடக்கும். உன் அக்கா உன்ன விட்டு எங்கையும் போக மாட்டேன்” என்று தங்கையை ஆறுதல் படுத்தி கொண்டிருந்தாள் தாரா.

இங்கு அந்த உருவம் ஒருவனை இழுத்து கொண்டு போய் ஒதுக்கு புறத்தில் இருந்த வீட்டில் போட்டது. அவனின் தலையில் இருந்து குருதி வழிய எதிரில் இருந்த உருவம் வன்மமாக பார்த்து. அவனின் கழுத்தில் ஒரே கிழி தான். கழுத்து அறுந்து ரத்தம் வழிய மூச்சு விட திணறி போனவன் அக்கணமே செத்தான்.

*********** ********** ************

நேரமாயிடுத்து பொண்ண அழைத்துட்டு வாங்க என்று அய்யர் சொல்ல மதி உடல் நடுங்கியது. ஆனால் தாராவோ எந்த கவலையும் இன்றி அறையை விட்டு வெளியேற சில பெண்கள் உடன் சேர்ந்து அவளை மணமேடையில் அமர வைத்து பின்னால் நின்று கொண்டனர்.

மணமேடையில் அமர்ந்தவள்அருகில் இருந்தவனை துளியும் திரும்பி பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை தாரா. அய்யர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்ல இனி தன் வாழ்க்கை முடிந்து விட்டது என கண்ணை மூடி அவனின் கையால் மாங்கல்யத்தை வாங்கி கொண்டவள் அறியவில்லை அவளின் வாழ்க்கையே இனி தான் அவன் காதலி ஆரம்பிக்க போவதை.

கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் விழ நிமிர்ந்து பார்த்தவள்

தங்கையின் ஆனந்த அதிர்ச்சி முகம் கண்டு குழம்பி போனாள். அருகில் ஒரு புதியவன் பேரானந்தத்தில் இருக்க தனது அப்பாவையும் அத்தையும் தேடநிம்மதி முகத்துடன் இருவரும் இருக்க இப்போது தான் தன் அருகில் இருந்தவனை பார்த்தவள் மிரண்டு போனாள்.

“ இவன் யார். அய்யோ இவன் தான் எனக்கு தாலி கட்டினானா. என்ன நடந்தது. அந்த கேடுகெட்ட மேகன் எங்கே. அய்யோ எனக்கு தலை சுத்துகிறது “ என மனதில் நினைத்தவளின் நெற்றி வகுட்டில்ராவணன் குங்குமம் வைக்க ஒரு நொடி இருவரும் பார்வையை விலக்கவில்லை.

ஆசீர்வாதம் வாங்க அப்பா அத்தையை நோக்கி வர மகளின் கன்னம் பற்றியமூர்த்தி “ அப்பா உனக்கு யாரையோ கட்டிக்குடுத்துட்டேன்னு நெனைக்காதமா. இவர் ரொம்ப நல்லவர் உன்ன நல்லா பார்த்துப்பாங்க “ என்றவர் ராவணன் புறம் திரும்பி “ சார் உங்கதியாகத்த நா உயிருள்ள வரைக்கும் நன்றி மறக்க மாட்டேன் “ என கையெடுத்து கும்பிட பதறி தடுத்தவன்

“ என்ன இது. நா உங்கள விட வயசுல சின்னவன். அப்றம் என்ன ராவணன்னே கூப்பிடுங்க. சார் வேணாம் “ என்று சொல்ல சிரித்தவர் இருவரையும் ஆசிர்வதித்தார்.

தன் மருமகளை பார்த்த வாசுகிகலங்கி போனவர் “ என்ன மன்னிச்சிருமா அந்த பாவி பையன் கல்யாணத்துக்கு சரி சரினு சொல்லிட்டு நேத்து நைட்டோட நைட்டா

மண்டபத்த விட்டு போய்ட்டான். எல்லாம் என்னால தான் “ என்று அழ தாரா அவரை சமாதான படுத்தி கொண்டிருக்க அது எல்லாம் கேட்டு கொண்டிருந்த மதி அப்பாடி என சத்தமாக சொல்லியது அருகில் இருந்த மிதுனுக்கு கேட்டு விட்டது.

“ என்னங்க மாப்பிள்ளை ஓடி போனதுல உங்களுக்கு ரொம்ப சந்தோசம் போல “ என்றவனை மேலும் கீழுமாக பார்த்தவள்

‘’ யாருய்யா நீ “ என்றவளை முறைத்தவன் “நான் மாப்பிள்ளை வீட்டு சொந்தம். ராவணன்க்கு நா தான் எல்லாம் “ என்று சொல்ல பார்வை மாற்றியவள் “ சாரி பாஸ். அவன் சரியான பொறுக்கி . அதான் அவன் ஓடி போனதுல பேரானந்தத்தில் இருக்கேன். இப்போ நா இருக்குற சந்தோஷத்துக்கு அளவே இல்ல “ என்றவளை சிரிப்போடு பார்த்து கொண்டிருந்தான் மிதுன்.

“ அது சரி இங்க என்ன நடந்துச்சு இவர் எப்டி மாப்பிள்ளை ஆனாரு “ என்று மதி கேட்க அவளிடம் நடந்ததை கூற தொடங்கினான் மிதுன்.

அய்யர் மாப்பிள்ளையை வர சொல்லவே போய் பார்த்ததில் வெறும் அறை தான் இருந்தது. பதறி போய் விட்டனர் வாசுகியும் மூர்த்தியும். அறையில் ஒரு லெட்டர் இருக்க அதை எடுத்து வந்து மூர்த்தி கையில் குடுக்க படித்து பார்த்தவர் இடிந்து போனார்.

அதில் எனக்கு இந்த கல்யாணத்தில் துளியும் விருப்பம் இல்லை. நான் மும்பைக்கே செல்கிறேன். என்னை யாரும் தேடி வரவேண்டாம் என எழுதி இருந்தது.

மிதுனும் ராவணனும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் பிரச்சனை என்ன என்பதை ஊகித்து கொண்டனர்.

வாசுகி அழ ஆரம்பித்து விட்டார். “ பாவி மகன் தலையை தலையை ஆட்டிட்டு இப்போ கழுத்தறுத்துட்டு போய்ட்டானே. என்ன மன்னிச்சிருங்கண்ணா “ என்று காலில் விழ போக ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவர் தங்கை செயலில் பதறி போய் விட்டார்.

வந்தவர்கள் வாயிக்கு வந்ததை பேச கூனி குறுகி போய் நின்றிருந்தார் மூர்த்தி. ஆனால் வாசுகியோ கண்ணை துடைத்தவர் நேராக நின்றது ராவணன் முன் தான். குழப்பமாக பார்த்தவனின் முன் “ தம்பி உன்னையும் என் புள்ளை மாதிரி நினைச்சி கேக்குறேன். நீ என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறியா “ என்றதில் ராவணனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

வாசுகி அறியாமல் ஒன்றும் கேட்கவில்லை. ஆசிரமம் செல்லும் போது ராவணனை கண்டுள்ளார். அவன் தாரா பார்க்கும் பார்வையின் நோக்கம் அறிந்தவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாம் வாலிப மனம் என விட்டுவிட்டார். ஆனால் இன்று கல்யாணத்திற்கே வந்து விட ராவணன் மைதிலி மேல் கொண்ட காதலை அவனின் வலி நிறைந்த பார்வையில் கண்டு கொண்டார். ஆனால் என்ன செய்வது அவர் மகனுடன் நடக்க போகும் கல்யாணமே அதனால் எதுவும் பண்ண முடியாமல் விட்டுவிட. ஆனால் தன் மகன் செய்த துரோகத்தில் அண்ணனை அவமான படுத்த விரும்பாத வாசுகி ராவணனிடம் பிச்சை கேட்டு நின்றார்.

மிதுனுக்கோ கால் தரையில் இல்லை.

ராவணன் வாசுகி முகம் பார்த்தவன் “ எனக்குன்னு சொந்தம் யாரும் இல்ல. என் பக்கத்துல இருக்கானே இவன் மட்டும் தான் என் சொந்தம். அப்டி இருக்கும் போது. “என்றவன் தயங்க

“உன்கிட்ட பிச்சை கேக்குறேன் என் பொண்ண கட்டிக்கோபா “ என்று கெஞ்ச பதறி போனவன் மிதுனின் வற்புறுத்தலிலும் சரியென ஒப்புக்கொண்டான். மூர்த்திக்கு சொல்லவே வேணாம் சந்தோசம் தான் ராவணன் தன் மகளை கட்டிக்க போறதில்.

************ *********** ***********
“இது தான் நடந்துச்சு“ என்றுமிதுன் சொல்லி முடிக்க தன் அத்தையை கட்டிக்கொண்டாள் மதி.

“ இவ்ளோ நேரம் கதை சொன்ன என்ன கட்டி பிடிக்காமல். போறா பாரு “ என்றவன் மனதில் நினைத்தது மட்டும் மதிக்கு தெரிந்தது மிதுனுக்கு மிதி தான்.

எல்லாம் முடிந்து ராவணன் அருகில் மிதுன் வந்தான். அவர்களுக்கு அருகில் யாருமே இல்லை. ராவணன் முன் வந்தவன் “ அந்த ராவணன் சீதையை கடத்தினான். இந்த ராவணன் அவனோட மைதிலியை கட்டிக்க போறவன கடத்தினான். பலே பலே “ என்றவனை அதிர்ந்து பார்த்த ராவணன்

“ டேய் அப்போ நீயும் நேத்து நா சொன்னதால அந்த மாப்பிள்ளையை கடத்துலையா “ என்று ராவணன் சொல்ல மிதுனின் முழி பிதுங்கியது.
 
Joined
Jan 2, 2025
Messages
3

செம.... நினைச்சது கிடைத்தது.... இனி என்ன 🥰
 
Top