- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 9
எழில் ஆத்மி புறம் திரும்பியவன் " ஆத்மி உடனே அவனுங்கள இங்க வர சொல்லு..... இவங்கள சீக்கிரம் காப்பாத்தணும் " என சொல்லி முடித்து திரும்ப அங்கு கார் இல்லை.ஆத்மிக்கு பயத்தில் இதயமே நின்று விட்டது போல் ஆக எழிலுக்கு ஏதோ ஒன்று எச்சரிக்கை செய்தது. சரியாக ஆரவ் கணபதியின் அலறல் சத்தம் கேட்டு இருவரும் காரை நோக்கி சென்றவர்கள் அங்கு கண்ட கட்சியில் உறைந்து போனார்கள்.
எழில் ஆத்மி வெளியில் இருப்பதை பார்த்து கொண்டிருந்த ஆரவ் கணபதியும் காரை விட்டு இறங்கவில்லை . ஏதோ ஒரு பாரம் காரில் மேல் இருப்பது போல் தோன்றியது இருவருக்கும்.
" டேய் மச்சி கார் மேல மரம் விழுந்துருச்சோ " என்று சாந்தேகமாக கணபதி கேட்டதில் ஜன்னல் புறம் திரும்ப சடாரென மேலிருந்து ஒரு உருவம் தலை கீழாக தொங்கியது.கண் முழி கருகருவென இருக்க அந்த கோரமான உருவம் " ஆஆஆஆர்ர்ர்ர் " என கத்தியதில் அதை அருகில் பார்த்து
அரண்டு போன ஆரவ் கத்த கணபதியும் பயந்து போக இருவரும் கத்திய கத்தலில் திரும்பி பார்த்த எழிலும் ஆத்மியும் உறைந்து போனார்கள்.
ஆத்மியை கையை இறுக்க பிடித்து கொண்ட எழில் அவனின் சட்டைபையில் முனிவர் குடுத்த சாம்பலை எடுத்து கொண்டு காரை நோக்கி ஓடினான்.
கழுத்து வெட்ட பட்டு ரத்தம் சொட்ட ஆங்காங்கே தோள்கள் பிய்ந்து தொங்கி இருந்த உருவம் மீது கையில் இருந்த சாம்பலை எழில் எறிய அலறி கொண்டு மறைந்து போனது அந்த உருவம்.
தாமதிக்காத எழில் உடனடியாக அந்த இடத்தை விட்டு சீறி பாய்ந்தான்.
ஆரவ் பயத்தில் வாய் தானாக முனுமுனுத்தது. கணபதி அவன் வாயருகே குனிந்து கேட்க " அப்பாலே போ சாத்தானே.... அப்பாலே போ சாத்தானே " என்றதை கேட்ட கணபதி.
" மச்சி அது அப்போவே போயிருச்சு " என எதுவும் நடவாது போல் பேசியதில் கடுப்பான ஆரவ் " டேய் நா இருக்குற கடுப்புல பீப் போடாம பேசிருவேன் கம்முனு இரு " என்றதில் முறைத்து கொண்ட கணபதி திரும்பி அமர்ந்து கொண்டான்.
மீண்டும் எதையோ தீவிரமாக யோசித்த கணபதி நடுங்கி கொண்டிருந்த ஆரவிடம் " டேய் அந்த பேய் உன்ன பார்த்த பார்வை இருக்கே.... எனக்கு என்னவோ பேய்களுக்கு உன் மேல ஒரு க்ரஷ்னு நெனைக்கிறேன் "என கணபதி கூற அடக்கப்பட்ட கோவத்தில் ஸ்லோ மோஷனில் திரும்பிய ஆரவ் கணபதி வாயிலே ஒரு குத்து விட்டு அமர்ந்து கொண்டான்.
" அந்த முனிவருக்கு இங்க இருக்கிற ஆபத்து தெரிஞ்சு தான் கையோட எனக்கு இந்த சாம்பலையும் குடுத்துருக்காரு...... நல்லவேள யாருக்கும் எதும் ஆகுல " என மனதில் நினைத்த எழில் ஆத்மியை பார்க்க அவள் உடல் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது.
காரணம் ஆத்மி அந்த காரில் இருந்த உருவத்தை கண்டு மிரண்டு போக அந்த உருவம் ஆத்மீயை பார்த்து விட்டது. இவளையே வெறித்து பார்த்த பார்வை இப்போதும் நடுங்க வைக்க எழில் அவளின் கையை பிடித்து கொள்ளவே நிகழ்வுக்கு வந்தாள் ஆத்மி.
மலையின் அடிவாரம் வந்து விட்டனர் நால்வரும். நடு இரவை தாண்டி இருக்க ஒரு தேநீர் கடை முன் வண்டியை நிறுத்தினான் எழில்.
" ஆரவ் ஆர் யூ ஓகே " என்ற எழிலை வெறிகொண்டு முறைத்தவன்
" உயிரு போய் வந்துருக்குடா. ஏன்டா இந்த பேய்க என்கிட்ட சரசம் பண்ணவே வராலுகளா. இனி என்ன எதுக்கும் கூப்பிடாதிங்க. அப்றம் அல்பாய்சுலா கொன்ன பாவம் உங்களுக்கு வேணாம் சொல்லிட்டேன் " என்று கோவமாக ஒரு மேசையில் அமர்ந்து கொள்ள சிரித்த எழில்
" சரி விடு மச்சி. உன்ன அந்த தாய்க்கிழவிகிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முடியாது. நீயே சமாளிச்சிக்கோ ராசா " என்று எதிரில் எழில் அமர்ந்து கொள்ள பதறி பார்த்தவன்
" டேய் இப்டி என் உசுரோட விளையாடாதீங்கடா. என்னால முடியல. இதுக்கு ஆரம்பமே அந்த தாய்க்கிழவி தான். அவளை மொதல்ல போட்டு தள்ளுங்க டா " என்று சொல்லியதில் சிரித்தவர்கள் ஆளுக்கு ஒரு டீ சொல்லிவிட்டு காத்திருந்தனர்.
ஒரு நடுத்தர வயது கொண்டவர் நால்வருக்கும் தேநீர் குடுக்க எழில் அவரிடம் " ஐயா நாங்க வந்த வழில ஒரு ஆஸிடெண்ட் ஆச்சு. ஆனா நாங்க போய் பார்த்த கொஞ்ச நேரத்துல அங்க எதும் இல்ல. உங்களுக்கு எதாவது தெரியுமா " என்று எழில் சொல்ல சொல்ல அவர் முகம் வெளிறி போனது.
" டேய் இவரு வாய திறந்து சொன்னா கூட பயம் இருக்காது போல. இதுல முட்டையை முழுங்குன மாதிரி முழிப்பு வேற. இவர் ரியாக்சன பார்த்தாலே அல்லுவுடுது மச்சி " ஆரவ் கணபதி காதில் முனுமுனுக்க
" டேய் கம்முனு இரு ஆளு பாக்க டெரர்ரா இருக்காப்ல. கூட்டிட்டு போய் சூன்யம் வச்சிட போறாரு " என கணபதி வார்த்தையில் உண்மையிலே மிரண்டு தான் போனான் ஆரவ்.
" ஐயா என்னாச்சு? ஏன் இப்டி பாக்குறீங்க " என்று கேட்க சுற்றி முற்றி பார்த்தவர்
" தம்பி இந்த மாதிரி இருட்டான நேரத்துல எந்த சத்தம் கேட்டாலும் வண்டிய நிறுத்த கூடாதுனு தெரியாத உங்களுக்கு. நீங்க ஊருக்கு புதுசா " என்று கேட்க எழில் ஆமாம் என்கவும் இன்னும் பதறி போனவர்
" தம்பி இந்த மாதிரி நீங்க பண்ணிருக்க கூடாது. அதுங்க ஆவிங்க தம்பி. அதுங்களோட வேலை தான் அது " என அவர் கூறியதை கேட்டு இப்போது ஆரவ் கணபதி முழி பிதுங்கி போனார்கள்.
" ஐயா என்ன சொல்லுறிங்க? அவங்க காப்பாத்துங்கனு கத்துனாங்களே " என்று எழில் சொல்லவே உண்மையில் அங்கு இதற்கு முன்னால் நடந்ததை கூறினார்.
" ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கணவன் மனைவி ஹனிமூன்க்கு கொல்லிமலை வந்திருக்காங்க கார்ல. அந்த நேரம் பார்த்து ஒரு லாரி காரன் வர சரியான விபத்து. பையன் ஸ்பாட் அவுட். பொண்ண ஹாஸ்பிடல்ல போய் காப்பாத்த முடியாம செத்துருச்சி. அந்த பொண்ணு தான் இப்போ வரைக்கும் இரவு டைம்ல என்ன காப்பாத்துங்கனு கத்தும் யாராச்சும் போனோம் பாவம் பாக்காம கொன்றும். தப்பிச்சு வந்த வரைக்கும் நல்லதுன்னு போய்டுங்க. ஆனா நேரா வீட்டுக்கு போகாம வேற எங்கயாவது போய்ட்டு போங்க " என்றவர் சொல்ல வேண்டியதை சொல்லி விட ஆரவ் முகத்தில் ஈ ஆடவில்லை.
கணபதி ஆரவ் சிலையாக இருப்பதை கவனித்தவன் எழிலிடம் " மச்சி நாம ஆரவ் வீட்டுக்கு பொய்ட்டு போலாம் " என்றதும் வெறியான ஆரவ்
" டேய் நா என்ன கோஸ்ட் ஹவுஸ்ஸா வச்சிருக்க. மொதல்ல இங்க இருந்து கிளம்புங்கடா " என ஆரவ் சொல்லவும் நால்வரும் கிளம்பினார்கள்.
எழில் அவர்கள் ஊரை வந்தடையும் எழிலின் டிரைவர் ஒருவர் புது காருடன் எழில் சொன்ன இடத்தில் காத்திருந்தார். அவரிடம் தன்னுடைய காரை குடுத்து சர்வீஸ்க்கு விட சொல்லியவன் புது காரில் ஏறி நால்வரும் சென்றனர்.
ஆத்மியை அவளின் வீட்டிற்கு செல்லும் வழியில் இறக்கியவன் தானும் காரை விட்டு இறங்கினான்.
" ஆத்மி பார்த்து இரு. எக்காரணம் கொண்டும் இந்த தாயத்து உன் கையில இருந்து கழல கூடாது. ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா ஹாஸ்பிடல் வா " என்று சொல்ல சிரித்தவள் மூவரிடம் இருந்தும் விடை பெற்றாள்.
ஆத்மியின் முகம் ஏதோ ஒன்று எழிலுக்கு நினைவு படுத்த அதை முழுதாக அறியமுடியவில்லை. எழிலின் ஆழ் மனம் அடித்து சொல்லியது இதற்கு முன் ஆத்மியை பார்த்திருக்கிறான் என. அப்டி இருக்கையில் ஆத்மி ஏன் இல்லை என சொல்ல வேண்டும். எனக்கு தான் தலையில் அடிப்பட்டு சில காலம் பைத்தியமாக இருந்ததில் ஒரு சில விஷயங்கள் மறந்து போய் விட்டது. ஹான் இலா அவளுக்கு நியாபகம் இருக்கும். இலாவிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் " என்று மனதோடு பேசியவன் அந்த இடம் விட்டு கிளம்பினான்.
ஆரவ்க்கு அவனின் வீடு வந்த பின் தான் உயிரே வந்தது. வீதி என்று கூட பார்க்காதவன் காரில் இருந்த எழிலுக்கும் கணபதிக்கும் பெரிய கும்புடை போட்டு " டேய் இன்னையோட நம்ப சகவாசம் எல்லாம் முடிஞ்சு போச்சு. வீட்டு பக்கம் வந்திங்க தற்கொலை பண்ணிப்பேன் அதும் உங்க பேர எழுதி வச்சிட்டு. அதையும் மீறி வாசல் படி மிதிச்சிங்க இந்த ஆரவ் மூச்சு நின்னு போச்சுடா. ஆள விடுங்கடா எப்பா " உள்ளே ஓடி விட இவ்ளோ நேரம் ஆரவ் செயலை விசித்திரமாக பார்த்த கணபதி
" என்னடா இவன் சினிமா டயலாக்க சீரியஸா சொல்லிட்டு போறான் " என எழிலிடம் கூற காரை கிளப்பியவன்
" விடுடா வாசல் பக்கம் போனா தானே, எகிறி குத்துச்சுக்குலாம் " என்றவனோடு ஐ பை போட்டு கொண்டான் கணபதி.
எழில் வீட்டுக்கு வந்தவன் நேராக அவனரைக்கு சென்று குளித்து வர எதிரில் வந்த இலா " டேய் எரும எங்க போற எப்போ வர எதையும் சொல்ல மாட்டியா? உன் மனசுல என்ன தான்டா நெனச்சிட்டு இருக்க " என்று தன் தோழி அண்ணியாக அன்னை போல் கண்டிப்பதை பார்த்து சிரித்தவன்
" பேபி உன்கிட்ட சொல்ல நெறையா இருக்கு. ஆமா எங்க என் அண்ணன்? " என கேட்க கிடச்சனுள் சென்று எழிலுக்கு டீ எடுத்து வந்தவள்
" அவரும் மாமாவும் ஒரு முக்கியமான மீட்டிங்னு ஆபீஸ் போயிருக்காங்க. பாப்பா தூங்குறா. சரி இந்த டீ குடி சாப்பாடு போடுறேன் " என சமைக்க போனவளை இழுத்து சோபாவில் அமர வைத்த எழில் அவளுக்கு எதிரில் அமர்ந்து
" சமச்சிக்குலாம் பேபி. உன்கிட்ட சொல்ல வேண்டிய அப்றம் கேட்க வேண்டிய விஷயம் நெறைய இருக்கு " என எழிலின் புதிரில் புரியாதவள்
" என்னானு சொல்லு டா. சஸ்பென்ஸ் வைக்காத " என்ற இலாவை பார்த்து சிரித்த எழில் ஆரம்பத்தில் இருந்து கொல்லிமலையில் நடந்த வரை அனைத்தையும் கூற மிரண்டு போனாள் இலா.
" எவ்ளோ பெரிய விஷயத்தை மறச்சிட்டு அந்த வீனா போன ஆரவ் கணபதி கூட ஊரு சுத்துறேன்னு பொய் சொல்லிருக்க. அந்த கணபதியும் ஒரு வார்த்தை சொல்லுல. உன் மனசுல என்ன ஹீரோனு நெனப்பா? எதுக்கு தேவ இல்லாதத பண்ணிட்டு இருக்க? "என்று இலா பட்டாசு போல் வெடிக்க ஆரம்பித்து விட்டாள்.
மீட்டிங் முடிந்த கணமே இலாவை பார்க்க வீடு வந்தவன் மனைவி தம்பியை கரிந்து கொட்டுவதை கண்டான். ருத்ரா பார்வையால் எழிலிடம் என்ன என கேட்க அவனோ காப்பாத்து என்பது போல் சொல்ல சிரித்த ருத்ரா நான் பாத்துக்குறேன் என பார்வையால் சொல்லவே எழிலுக்கு அப்பாடா என்றிருந்தது.
" இலா என்னாச்சு? எதுக்கு எழில திட்டிட்டு இருக்க? " என்ற கணவனை திரும்பி பார்த்தவள்
" உன் தம்பி பண்ண காரணத்துக்கு திட்டாம கொஞ்ச சொல்லுறிங்களா? ஆளு தான் ஆறடி வளந்துருக்கான். கொஞ்சம் கூட மூளையே இல்லை " என்ற இலா திட்டியதில் பாவமாக முகத்தை வைத்து கொண்டான் எழில்.
" அடியே போதும்டி. அங்க பாரு அவன் மூஞ்சு எப்டி இருக்குனு" என ருத்ரா சொல்லவே கோவம் குறைத்தவள்
" இங்க பாரு எழில். ஆல்ரெடி உன்ன தவற விட்டு நா பட்ட கஷ்டம் போதும். உனக்கு எதாவது ஆச்சு அப்றம் என்னால தாங்க முடியாது " என கண் கலங்கி விட்டாள் இலா.
" அச்சோ பேபி. எனக்கு எதும் ஆகாது. அதும் நீ இருக்கும் போது எதாவது ஆகிருமா? " எழில் அவளின் தலை வருடி சமாதானம் செய்ய பிரச்சனை என்ன என கேட்ட ருத்ராவிடம் அனைத்தும் கூறியவன் முனிவர் கூறியதையும் கூறினான் எழில்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 9
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.