அத்தியாயம் 9

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் 9

ஏதோ இருந்த மனநிலையில் எங்காவது ஓடிவிடலாம் என்று நினைத்தவளை இவனே அழைத்து வந்த நிம்மதியில் வந்தவளுக்கு ஒருவித குறுகுறுப்பு. அதற்கு காரணம் தூரத்திலிருந்து துளைக்கும் அவன் பார்வையாக கூட இருக்கலாம்.

தன் மீது படும் வீச்சினை தொடர்ந்து அவனை பார்த்தாள் கீதாஞ்சலி. காரிருளில் நிலவு போல். இருளில் மின்னும் மின்மினி போல் பொலிவாய் ஜொலிப்பவனை சில கணங்கள் என்ன? பல கண்கங்கள் கண் கொட்டாது ரசித்தாள் அவளையும் மீறி.

இன்னும் கூட பார்க்கலாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவன் நிற்கும் தோரணையும் நெஞ்சை இறுக்கி பிடித்திருக்கும் ஆடையின் அவஸ்தையும், அந்த சிவந்த அதரத்தில் ஓரமாய் ஒளிந்திருக்கும் குறும்பும் ரசிக்க திகட்டாது.

ஆனால்!! ஆனால் வெறும் ரசனையாக அல்லாமல் உரிமை என்று வரும்போது தன்பால் கழிவிரக்கம் உண்டாவதை அவளால் தடுக்க முடியவில்லை.

பட்டென நெருப்பு சுட்டது போல் முகத்தை திருப்பிக் கொண்டவளை கவனித்தவன் கணினியை மூடி வைத்து விட்டு அவளை நெருங்கினான் வேந்தன். லேசாய் சுருங்கிய அவள் முக அசைவிலே சகலமும் அறிந்துக் கொண்டானோ!!! எல்லாம் தெரிந்தவன் போல் நெருங்கிருந்தவன்

" என்னாச்சு அஞ்சலி? " வெறும் குரலிலே ஒட்டு மொத்த காதலை தேக்கிட தடுமாறினாள் அஞ்சலி.

" அ... அ.. து ஒன்னுமில்ல... காலையில இருந்து இதே ட்ரெஸ்ல இருக்கேன். மாத்து துணி இங்க இருக்கா? " பேச்சை மாத்தும் பொருட்டில் கேட்பவளை நம்பியது போலவே பார்த்தான். ஆனால் அவள் உடை என்று சொன்னதும் தான் உரைத்தது அவசரத்தில் அதற்கான ஏற்பாடு பண்ணவில்லை என்பது.

" சாரி அஞ்சலி. நான் அங்க நடந்த பிரச்சனையில இங்க உனக்கு மாத்து ட்ரெஸ் இல்லாதத கவனிக்கல. அரை மணி நேரம் நான் வீட்டுல இருந்து எடுத்து வர சொல்லுறேன் " போனை எடுத்துக் கொண்டு வேகமாய் நகர

" இல்ல வேண்டாம். நான் இதோட இன்னைக்கு இருந்துடுறேன் "

" அது அவ்ளோ கன்போர்டபிள்ளா இருக்காது அஞ்சலி "

" பரவால்ல. இந்த நேரத்துல வேண்டாம். ப்ளீஸ் " இறுதியான கெஞ்சல் வார்த்தையில் போனை மீண்டும் பாக்கெட்டில் போட்ட வேந்தன் உறுத்த அவளை நோக்கினான்.

" உனக்கு பிரச்சனை இல்லைனா என்னோட ட்ரெஸ் சிலது இங்க இருக்கும். யூஸ் பண்ணிக்கோ " நிதானமாய் சொல்ல, அமைதியாய் பார்த்தவள்

" வேண்டாம் " ஒரே வார்த்தையில் அவனின் பேச்சையும் நிறுத்தி படுக்கையில் படுத்து இழுத்து போர்த்திக் கொள்ள, ஆழ மூச்சை இழுத்து விட்டவன் குளியலறையில் புகுந்து கொண்டான் அவளால் உண்டான சூட்டை தணிக்க.

நீர் கொட்டும் சத்தத்தில் எட்டி பார்த்து அறையில் வேந்தன் இல்லை என்பதை உறுதி செய்த கீதா போர்வை விலக்கி அறையிலே உள்ள பால்கனியில் போய் நின்றுக் கொண்டாள் மனம் ஆறுதலை தேடி.

இலக்கே இல்லாமல் வெறித்தவள் கடந்த ஆண்டு இதே நாள் தன் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்தது என்றெல்லாம் யோசித்தவளுக்கு மாமியார் பேசிய சுடு சொற்கள் ரணமாய் குத்தியது.

பாட்டி, தனக்கான வீடென வாழ்க்கை சுவாரஷ்யமாக இல்லாத போதும் சொல்லும் அளவிற்கு நிம்மதியாக தான் வாழ்ந்தாள். ஆனால் இன்று நாயை விட கேவலமாக தன்னை நடத்தும் வீட்டாட்களையும், சுவாசம் போல் தன்னையே நாடிருக்கும் வேந்தனையும் நினைக்கையில் பயம் தான் எழுகிறது.

வெளிப்படையாய் வெறுப்பவர்களை கூட கடந்து விடலாம். ஆனால் தேன் போல் இனிக்க இனிக்க காதல் தரும் வேந்தனை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் பெண்மனம் படும்பாட்டை பாவி அவன் அறிந்திருக்கவே மாட்டான்.

" தூங்கிட்டேன்னு நினைச்சேன். இங்க என்னடி பண்ணுற? " காதை உரசி வந்த காந்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் சரியாய் துவட்டாமல் ட்ராக் பேண்ட் மட்டும் அணிந்து வெற்றுடம்பில் நிற்பவனை வெளிறிப் போய் பார்த்தாள் கீதாஞ்சலி.

" நீங்க எப்போ வந்திங்க? "

" நீ அதி தீவிரமா யோசிக்கும் போதே பொண்டாட்டி " ஆழமான குரல் அழுத்தமாய் விழ எச்சில் விழுங்கியவள் தடுமாறினாள் அவன் நெருக்கத்திலும், அவனிடமிருந்து வரும் வாசனையிலும்.

நெஞ்சு உயரமே இருந்தவள் பார்வையை தாழ்த்திக் கொள்ள, வலது கன்னத்தில் கரம் பதித்து வேண்டிய கதகதப்பை அவள் உடம்பிற்கு கடத்தி உணர்வுகளை கிளற செய்தான் வேந்தன்.

முகம் உயர்த்தி அவள் இதழ் நோக்கி நெருங்கி மோவை விரலால் தொட்டு தன்னை பார்க்க செய்தவன் " நான் எந்த விதத்திலும் என்னை நம்பியே ஆகணும்னு போர்ஸ் பண்ண மாட்டேன். காதல் அதுவா வரணும். வலுக்கட்டாயமா இல்லை. எனக்கு நீ என்னை நேசிக்குலனாலும் பரவால்ல அஞ்சலி. என்கூட கடைசி வரை இருந்தா மட்டும் போதும் " அவள் முகத்தை தன் நெஞ்சில் புதைத்து சொல்லிட இதமாய் உணர்ந்தாள் அந்த அணைப்பில்.
கோழி குஞ்சை அடைக்காப்பது போல் அவளை அணைத்துக் கொண்டான் இறுக்கமாய்.

ஆரம்பித்தில் அவன் மேல் இது போலான உணர்வோ, ஏக்கமோ, தவிப்போ வந்ததில்லை. ஆனால் இப்போது நிலைமையே வேறு. வெறும் சலனம் என்று தப்பிக்க முடியாத அளவிற்கு அவன் மேல் காதல் வேரூன்றி நிற்கிறது.

" நீங்க இப்படி சொல்லும் போது தான் என்னால உங்கள விட்டு எங்கையும் போக முடியல. என்னை விட்டிட மாட்டிங்கள்ல?" பயமும் பரிதவிப்பும் உடன் சேர்த்து அண்ணாந்து கேட்பவளின் கன்னத்தை கையில தாங்கியவன்

" என் உயிர் என்கிட்ட இருக்குற வரை உன்னை விட்டு எங்கையும் போக மாட்டேன். நீயே என்னை போக சொன்னாலும் உன்கூடவே தான் இருப்பேன் "

" பழசெல்லாம் நினைவு வந்தா திரும்ப உங்களுக்கு என்ன பிடிக்காமல் போகுமே... என்மேல இந்த பாசத்துக்கு பதில் வெறுப்பு இருக்கும் "

" என்னை பாரு அஞ்சலி... நிமிர்ந்து பாருடி. பாஸ்ட்ல நான் எப்படி இருந்தேன் உன்னை எப்படி ட்ரீட் பண்ணேன் எதுவும் எனக்கு முக்கியமல்ல. அது எனக்கு தேவையும் இல்லை. உன்கூட நான் வாழுற, வாழ்ந்துட்டு இருக்குற காலம் போதும். நீ பயப்புடற மாதிரி நான் மாறப் போறதும் இல்லை. உன்னை வெறுக்க போறதும் இல்ல " உறுதியாய் அவள் ஆழ்மனதிலே ஆழ பதியும் அளவிற்கு சொன்னவனை அப்பாவி போல் பார்த்து நின்றாள் கீதாஞ்சலி.

அவள் முழிப்பால் எழும் சிரிப்பை அடக்கியவன் " என்னடி இன்னுமா என்னை நம்ப முடியல. போதும். விட்டா நீ ரொம்ப யோசிப்பா. வா தூங்குலாம் "

" தூங்கவா!! " இழுத்து சென்றவன் அவள் கேள்வியில் கொக்கி போட்டது போல் நின்று விட்டான்.

நாவை சுழட்டி குறும்பாய் பார்த்தவன் " தூங்க வேண்டாமா? " லேசான பிடி உடும்பாய் இறுக திடுகிட்டவள் அவனைத் தாண்டி அறைக்கு சென்று போர்வைக்குள் புதைந்தவளை தன்னுள் புதைத்தே உறக்கத்தை தழுவினான் வேந்தன்.

நிலவின் ஈர்ப்பால் அலைக்கழித்த அலைகள் விடியலிலே பகலவன் வெளிச்சத்தில் நிதானம் கண்டு ஜொலிக்க , உறக்கம் கலைந்து புரண்டவள் விடிந்ததை உணர்ந்து அவசரமாய் எழுந்தமர்ந்தாள் கீதாஞ்சலி.

மேனியை மூடிருக்கும் போர்வையை கவனித்த கீதா போர்த்தி விட்டவன் எங்கே என தேடிட, " நான் இங்க தான் பொண்டாட்டி இருக்கேன் " இரண்டு கப்பு காபியோடு வந்தவனை கண்டதும் முழியை மாற்றிக் கொண்டாள் ராங்கி.

" பெட் காபி "

"நீங்க ஏன் இதெல்லாம் செய்யிறீங்க? அதும் இல்லாம நான் குளிக்காம எதும் சாப்பிட மாட்டேன். எனக்கு மாத்து... "

" உனக்கான ட்ரெஸ் உள்ள இருக்கும். காலையில இங்க எடுத்து வர சொல்லிட்டேன் அஞ்சலி. நீயா போறியா? இல்ல நான் உதவி பண்ணவா? " நல்லவன் போல் கேட்டவன் அவளை பருகுவது போல் நினைத்து காபியை ருசிக்க முறைத்த கீதா பதில் பேசாமல் சென்று விட்டாள்.

அவள் குளித்து வருவதற்கும் காலை உணவையும் தயார் செய்து வைத்தவன் சங்கடமாய் தயங்கி நிற்பவளை இழுத்து அமர வைத்து உண்ண வைத்து அவனும் உண்டு முடித்து அலுவலகம் சென்று விட அவள் மட்டும் தனிமையில் அந்த வீட்டை உழன்றாள்.

" வெளிய ஒரு வாட்ச்மேன் இருப்பாரு. சுத்தி எல்லா இடத்திலும் செக்யூரிட்டி கேமராஸ் இருக்கு. நான் மீட்டிங் முடிஞ்சதும் உடனே வந்துருவேன் " சொன்னதோடு நில்லாமல் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தே போனவனை வாசலில் நின்று காதலாய் அனுப்பி வைத்தாள் கீதாஞ்சலி.

அந்த வீட்டில் அத்தனை பேர் இருந்தும் தனிமையில் கைதி போல் அறைக்குள் அடைந்து கிடப்பதற்கு, இந்த இடமும் சுற்றி இருக்கும் சூழலும் காயப்பட்டிருப்பவளுக்கு மருந்தாகவே மாறிப் போனது.

கீழ் தளம், மேல் தளம் என இரண்டு அடுக்கு மாடிக் கொண்ட பீச் ஹவுஸ். காற்றின் சத்தமும் அலையின் ஓசையும் காதில் கேட்க ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டே வந்த கீதா ஒரு அறையின் கதவை மட்டும் திறக்க முடியாமல் சிரமப்பட்டு நின்றாள்.

" வீட்டுல எல்லாமே திறந்திருக்கு. இது மட்டும் ஏன் திறக்க முடியல " மீண்டும் கைபிடியை திருக பலனில்லை.

" ஏமாத்துக்காரன் " முனகிய கீதா தூரத்தில் கேட்கும் அலைபேசி சத்தத்தில் திசை நோக்கி ஓடியவள் போனை எடுக்க, மறுமுனையில் இதமாய் விழுந்தது அவன் குரல்.

" என்ன பன்ற அஞ்சலி? சாப்பிட்டியா? "

" விளையாடுறீங்களா? உங்க கூட தானே சாப்பிட்டேன். நான் போனை வைக்கிறேன் "

" ஏய்!! வைக்காதடி. நேருல தான் பேச மாட்டேங்குற. போன்ல கூடவா? என்னை பார்த்தா உனக்கு பாவமா தெரியலையா அஞ்சலி " அதி தீவிரமாய் அவன் கேட்க வேக மூச்சை விட்டவள்

" உங்க முகத்தை கண்ணாடியில பாருங்க உங்களுக்கே தெரியும். நான் போனை வைக்கிறேன் "

" நீ இப்போ வச்சா அடுத்த நிமிஷம் நான் அங்க வீட்டுல இருப்பேன். பரவால்லயா " நக்கலாய் கேட்டிட கோவமாக வேண்டியவளோ மாறாக வெட்கம் கொண்டாள் அவன் பேச்சில்.

" என்ன தான் உங்களுக்கு வேணும் இப்போ? " செல்ல அவஸ்தையாய் அவள் ரசிக்க

" நீதான். எப்போ கிடைக்கும்? " கொக்கி போல் அவன் தவிப்பு குத்தி இழுக்க தடுமாறியவள்

" கிடைக்குறதுக்கு நான் ஒன்னும் பொருள் இல்ல. உயிருள்ள மனுஷி " என்றாள் பொறுமையாய். அவன் எதிர்பார்த்த பதில் தானோ எதிர்முனையில் அவன் சிரிப்பதை குரல் வழியே உணர்ந்தாள் கீதாஞ்சலி.

" அதுனால தான்டி இன்னும் அனுமதி கேட்டு நிற்கிறேன். மீட்டிங் ஆரம்பிக்க போகுது. நான் முடிஞ்சதும் கிளம்பிருவேன். லன்ச் டைம்க்கு சாப்பிட்டு பத்திரமா இரு " அவசரமாய் அழைப்பை துண்டித்திட அவஸ்தையாய் போனை நெற்றியில் முட்டிக்கொண்டவளும் அவளுக்கான அறைக்கு போவதை தன் அலுவலக அறையில் அமர்ந்தப்படி திரையில் பார்த்துக் கொண்டிருந்த வேந்தனியின் முகம் பாறையாய் இறுகிருந்தது.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 9
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
23
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
New member
Joined
Mar 6, 2025
Messages
4

நல்லா தானே போய்ட்டு இருக்கு ஆனா கடைசில இவன் ஏன் இப்படி முகத்தை மாத்துறான் 🧐🧐🧐
 
New member
Joined
Jan 1, 2025
Messages
6
Ayyayyo. Enna ellame veshama? Pavam geetha. Waiting for next ud eagerly.👌👌👌👌👌👏👏👏👏👏🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰😍😍😍
 
Top