அத்தியாயம்- 8

New member
Joined
Aug 14, 2025
Messages
10
அன்று காலை உணவு மேஜையில் அமர்ந்திருந்த வசுந்திரா சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்து கொண்டிருக்கும் தனது மகனை கஷ்டப்பட்டு சாப்பிட வைத்தார்.

அவன் மறுக்க மறுக்க தானே ஊட்டியவர் அவன் ஏதோ ஐந்து வயது குழந்தை சாப்பாட்டிற்கு அடம் செய்வதுபோல் தோன்றியது அதை எண்ணி அவர் முகத்தில் புன்னகை விரிய

அதை பார்த்து கடுப்பானவன் என்னமா என் நிலைமையை பார்த்து உங்களுக்கு சிரிப்பு வருதா என்று தாயிடமும் கடிந்து கொண்டான்..

அப்படி இல்லப்பா சின்ன வயசுல என்னால இதெல்லாம் உனக்கு செய்ய முடியல .அதையெல்லாம் இப்ப நெனச்சு பார்த்தேன் அதுதான் நீ இப்போ என் கண்ணுக்கு அஞ்சு வயசு குழந்தை மாதிரி தான் தெரியுற என்றார்.

அதில் அவன் முகம் கடுமையை சற்று குறைக்க

அப்பொழுது அங்கே வந்த பணியால் அம்மா இவங்க தான் மருத்துவமனையில் இருந்து அனுப்பி இருக்கிற நர்ஸ் என்று அங்கே வந்த நான்சி என்ற பெண்ணை காண்பித்தார்.

அவளைப் பார்த்தவர் சாகித்ய குறித்த விவரங்கள் அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பும்பொழுது தானும் வருவதாக முன் வந்தால்.

அதில் எரிச்சல் அடைந்தவன் தனது தாயைப் பார்க்க

தனது மகனின் கோபப் பார்வையை புரிந்து கொண்டவர்

இல்ல நான்சிமா நீங்க வீட்ல இருங்க அவன் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் உங்களுடைய ஹெல்ப் தேவை. காலேஜ்ல அவனுக்கு பெருசா எந்த உதவியும் தேவைப்படாது அப்படியே இருந்தாலும் அங்கு ஆள் இருக்காங்க பாத்துக்குவாங்க நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ என்று மட்டும் கூறியவர் அங்கே இருந்த பணியாளை பார்த்து

நான்சிய நாங்க வர வரைக்கும் நல்லா பாத்துக்கோ அவளுக்கு தேவையானத செஞ்சு கொடுங்க அத கேட்டதை எதையும் மறுக்காதிங்க என்று மட்டும் கூறியவர் மகனை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர்கள் செல்லும் வரையிலும் அமைதியாக இருந்தவள் அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவள்

அந்த இல்லத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தவள் கொண்டையிட்டு இருந்த தனது தலையை விரித்துவிட்டவள் சட்டை பட்டன்களையும் இரண்டு கழட்டி விட்டு, அங்கு நின்று இருந்த பணியாளை சொடக்கிட்டு அழைத்தவள்,

அந்த டேபிள் எடுத்து எனக்கு முன்னாடி போடு என்றால் மரியாதை இல்லாமல்


அவர் அவளைப் பார்த்து என்னம்மா உன்ன விட வயசுல பெரியவங்க இப்பதான் வந்த உடனே நீ பாட்டுக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற எங்க முதலாளி அம்மா கிட்ட சொல்லட்டுமா என்றார்.

அதில் கோபமடைந்தவள் எழுந்த அவர் கன்னத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அறைந்து விட்டு ,

என்னையே எதிர்த்து பேசுறியா அந்த அம்மா போறப்ப என்ன சொன்னாங்க நான் கேட்கிற எதுக்கும் நோ சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு தானே போனாங்க. உனக்கு இப்போ இங்க வேலை இருக்கணும்னா அதுக்கு கூட நான் மனசு வச்சா தான் முடியும் ஒழுங்கா நான் சொல்றதை கேளுங்க என்றவள் மீண்டும் சென்று ஷோபாவில் அமர்ந்தவள் ,

அந்த டேபிளை எடுத்து எனக்கு தள்ளி போடு என்றாள் அவர் அதேபோல் செய்ய அதில் கால் மேல் கால் போட்டவள் காலை ஆட்டிக் கொண்டிருக்க என்னோட ஷூவ கழட்டி விடு என்றால் .

அதையும் அவர் செய்துவிட அங்கு இருக்கிற என்னோட லக்கேஜை எடுத்துட்டு போய் கெஸ்ட் ரூமில் வை அதுவும் சாருக்கு பக்கத்துல இருக்கிற கெஸ்ட் ரூம் என்று சொன்னவுடன் அவரும் அதை செய்ய சென்றுவிட

செல்லும் அவரை பார்த்தவள் தனக்குப் பிடித்த சில உணவு ஐட்டங்களை சொல்லிவிட்டு

இது எல்லாம் இன்னும் ஒரு மணி நேரத்துல தயாராகி இருக்கணும் அது மட்டும் அல்லாமல் உள்ள பாதிப்பு இருக்கு தானே அதுல சூடா வெந்நீர் நிரப்பி வச்சிட்டு வாங்க என்றும் கட்டளை இட்டு அமர்ந்து கொண்டிருக்க

இதையெல்லாம் அடுக்கலைக்குள் நின்று கேட்டுக் கொண்டிருந்த சமையல் கார பெண் அதிர்ச்சி அடைந்தார்.

வந்து ஒரு மணி நேரம் கூட முழுதாக ஆகவில்லை அதற்குள்ளும் எந்த வீட்டை சேர்ந்தவர்களே யாரும் வேலைக்காரர்களை இப்படி இதற்கு முன்னால் நடத்தியது இல்லை ஆனால் தற்பொழுது வந்தவள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வதை எண்ணி அவர் கவலை மற்றும் அதிர்ச்சியில் இருந்தார்.

அந்த வேலைக்காரரும் இவள் பையை எடுத்துக் கொண்டு போய் மேலே வைத்து விட்டு தண்ணீரை திறந்து விட்டு கீழே வந்தவர் புலம்பிக்கொண்டே தான் அனைத்தையும் செய்து முடித்தார் அது வேறு விஷயம்.

சமையல் கட்டில் இருந்த அந்தப் பெண்மணி இடம் அனைத்து விஷயத்தையும் கூற

எல்லாத்தையும் நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். என்னய்யா இந்த பொண்ணு இப்படி இருக்கு. நர்சு தானே வீட்டுக்கு வந்து இருக்கு இவளே ஒரு வேலைக்காரி இவன் நம்மளை ஏவி விட்டு கிடக்கா இந்த அம்மா வேற போற போக்குல இவ என்ன கேட்டாலும் பண்ணி குடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க அந்த ஒரு வார்த்தை வச்சுக்கிட்டு என்ன ஆட்டம் ஆடுறா இருக்கட்டும் இன்னிக்கு வீட்டுக்கு வந்த உடனேயே அம்மா கிட்ட இவளை பத்தி சொல்லி வைக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஆ என்று கத்தினார்.

திரும்பிப் பார்க்க அரை வாசலில் இருவரையும் கோபமாக பார்த்து நின்று கொண்டு இருந்தவள், சமயக்கார பெண்மணியை எரிக்கும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருக்க

தனது உடம்பில் குத்தி இருந்த ஊசியை எடுத்தவர் அவளிடம் என்ன நினைச்சுட்டு இருக்க எதுக்கு இப்படி பண்ற என்று கத்த ஆரம்பிக்க

வெறும் இந்த ஊசிய மட்டும் தான் உன் மேல தூக்கி போட்டேன் இன்னொரு வாட்டி என்ன எதிர்த்து பேசுறதோ என்ன பத்தி தப்பா அடுத்தவங்க கிட்ட போட்டு கொடுக்குறதோ ஏதாவது ஒரு விஷயம் என் காதில் விழுந்தது, இதுல விஷ ஊசி போட்டு உங்கள கொல பண்றதுக்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது எல்லாத்தையும் மனசுல நல்லா பதிய வைத்துக்கொண்டு ஒழுங்கா நான் சொன்னதை செய்யுங்க என்றவள் அறைக்கு சென்று அந்த பாத் டப்பில் ஆடைகளை களைந்து விட்டு படுத்தாள்.

அதற்கு முன்பு அங்கே இருந்த முழு நீள கண்ணாடியில் தனது உடம்பை அதன் வனப்பையும் பார்த்தவள் இந்த அழகை வைத்து அவனை எப்படியாவது உன் வழியில விழ வச்சிடு. அதுக்கப்புறம் நீ சொன்னது தான் இந்த வீட்ல நடக்கணும் என்று தன்னை தானே பார்த்து பேசியவள்


🛁 பாத் டப்பில் நன்கு குளித்து முடித்தவள் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வந்தவள் தளர்வான ஒரு உடை அணிந்து கொண்டு கீழே வர

டைனிங் டேபிளில் அனைத்து உணவும் அடுக்கப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்தவள் வெற்றி சிரிப்பன்றை உதிர்த்துவிட்டு வந்த அமர அவள் முன்பு வைத்திருந்த தட்டு ஒன்று கிச்சன் நோக்கி பறந்து விழுந்து உடைந்தது.

அதில் பயந்த சமையல்காரர் பின் அறையை விட்டு அதை மிதிக்காமல் தாண்டி வெளியே வர

இங்க கொண்டு வந்து ஃபுட்டெல்லாம் வச்சுட்டா நானா எடுத்து போட்டுக்குவேன் ஒழுங்கா என் பக்கத்துலயே நின்னு எனக்கு பரிமாறுங்க என்றவள் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு திமிருடன் அவரை பார்த்தால்.

அவரும் மறுபடியும் ஒரு தட்டை அவள் முன்பு வைத்து அனைத்தையும் பரிமாற நன்கு சாப்பிட்டு முடித்தாள்.

மீண்டும் அறைக்கு வந்தவள் தன்னுடைய மொபைலை எடுத்து ஒருவரிடம் பேசி முடித்துவிட்டு வெற்றி சிரிப்பன்றே சிரித்தவள் நன்கு படுத்து உறங்கினாள்...

கல்லூரிக்கு வந்திருந்தவன் அனைத்து வேலைகளையும் கடுமையான முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க

தினமும் ரவுண்ட்ஸ் செல்வது போல் இன்றும் சென்று கொண்டிருந்தவன் அவன் கண்காணிப்பின் கீழ் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை உணர்ந்து கொண்டு அதில் அவன் மனம் சற்று நிம்மதி அடைந்தது.


அவன் வந்து கொண்டிருக்க அந்த இடத்தில் வழக்கம் போல் ஆராதனா தனது நண்பர்களுடன் கேண்டினில் உணவைக் கொரித்து விட்டு வந்தவள்,

அவர்களை தாண்டி செல்லும் பொழுது ஒரு மாணவன் அவளை இடித்து விட அவனிடம் சாரி என்று சொல்ல நிமிர்ந்தவள்

அந்த மாணவன் அவளை ஒரு மார்க்கமாக பார்ப்பதை பார்த்துவிட்டு இடியட் உனக்கு இப்படி தான் இடிச்சிட்டு போவியா என்று கேட்டால் அதற்கு அவன் தெரியாமல் இடிக்கெல்லாம் வேணும்னேதான் இடிச்சேன் செம டக்கரா இருக்குடி எல்லா இடத்திலும் அது அது அளவா இருக்கு என்று அசிங்கமாக பேச

நம்ம படிக்க வந்திருக்கோம் அதனால கொஞ்சம் பார்த்து பேசு என்றாள்.

அப்படியா அப்போ வெளியே இருந்தா உன்கிட்ட எப்படி வேணும்னாலும் பேசலாமா என்று கேட்டவன், முறை தவறி பார்ப்பதில் கோபமடைந்தவள் கன்னத்தில் அறைந்து விட்டு இன்னொரு வாட்டி இது மாதிரி வேற யார்கிட்டயும் பேசாத அந்த இடத்திலேயே உன்னை கொன்று போடுவேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்த பார்த்த சாகி வழக்கம்போல்

அவள் மீது தவறாக புரிந்து கொண்டு சென்றவன் இவளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்...

இரவு வந்தவன் வீடு அமைதியாக இருப்பதே பார்த்துவிட்டு, அம்மாவை பார்த்தவன் அம்மா ரெஃபரஸ் ஆயிட்டு வாங்க சாப்பிடலாம் என்று கூறியவன்

அவனும் அறைக்கு சென்று ரெப்ரஷ் ஆகி வெளியே வந்தவன் கண்களில் பட்டால் நான்சி தளர்வான உடையில்.

அவன் வந்ததை கவனிக்காதவள் அறையில் இருந்து வெளியே வந்தவள் அவனை பார்த்து விட்டு சார் வந்துட்டீங்களா நான் உங்களுக்கு ஏதாவது உதவி பண்ணட்டுமா என்று கேட்டவள்

திடீர் என்று தன்னை குனிந்து பார்த்துக் கொண்டு அய்யய்யோ சாரி சார் என்று திரும்பி நின்று கூறியவள்
முகத்தில் புன்னகை இருந்தது.

ஆனால் அதை மறைத்துக் கொண்டு சார் நான் தெரியாம உங்க முன்னாடி இப்படி வந்துட்டேன் மன்னிச்சிடுங்க என்றவள் மீண்டும் அறைக்குள் நுழைந்து கொள்ள

உள்ளிருந்தவள் கண்டிப்பா அவன் இந்த கோலத்தில் என்னை பார்த்து மயங்கி இருப்பான் என்ற நினைப்பில் வேறு ஒரு உடைக்கு மாறியவள் வெளியே வந்தால் அப்பொழுது அவன் இல்லாமல் இருப்பதை பார்த்துவிட்டு உடனடியாக கீழே வந்தவள் அங்கே இருந்த வேலையாட்களை பார்த்து

யாராவது என்ன பத்தி முதலாளி கிட்ட சொல்லனும்னு நினைச்சீங்க சமையல்கார பெண்மணிக்கு ஆனது தான் . உங்க எல்லாத்துக்கும் என்று மிரட்டி விட்டு எதுவும் தெரியாத நல்லவள் போல் ஹாலில் வந்து அனைத்தையும் தான் செய்வது போல் பாவலா காட்டிக் கொண்டு

அவர்கள் கொண்டு வந்த உணவை இவள் பிடுங்கி டேபிளில் வைத்துக் கொண்டு இருந்தாள்.

அப்பொழுது அங்கே வந்த வசுந்தராவை பார்த்தவள் அவர் அருகில் சென்று கைப்பிடித்து அழைத்து வர

நான் சேர்ப்பது சிரித்தவர் என நன்றிமா வீடு உனக்கு கம்ப்யூட்டபிலா இருந்ததா நீ கேக்குறது எல்லாம் பண்ணி கொடுத்தாங்களா? ஹாஸ்பிடல் ராப்பகலா வேலை பார்த்துட்டு இருப்ப இங்கே நீ நல்ல ரெஸ்ட் எடுத்தியா என்று கேட்டார்.

ஆமாம் மேடம் ரொம்ப நல்லா இருந்தது ஆனா என்னால சாருக்கு எந்த உதவியும் செய்யாமல் இப்படி நாள் முழுக்க சும்மா உக்காந்துட்டு எந்த வேலையும் பாக்காம இருக்க முடியல. அதனால எனக்கு தேவையானதை நானே செஞ்சுகிட்டேன். வேலைக்காரங்களை டிஸ்டர்ப் செய்ய விடல என்று சொன்னதை கேட்டு அவளை ஆச்சரியமாக பார்த்தவர்

நீ என் மகனை பார்த்துக்க வந்திருக்க இனிமே அவன் வேலைக்கு வராமல் நான் பார்த்துக்கிறேன் அவன் நடக்குறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுமா என்று கூறினார்.

அதைக் கேட்டு நான்சி மனதிற்குள் சந்தோஷப்பட்டு கொண்டு வெளியே,

கண்டிப்பா மேடம் அதுக்குத்தானே வந்திருக்கேன் கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல சார் நடக்க ஆரம்பிச்சிடுவார் நீங்க கவலைப்படாதீங்க என்று தேனொழுக பேசியவளை அங்கே இருந்த பணியாட்கள் காலையில் தங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டவள் இவள் தானா

அதுவும் அவள் அப்பொழுது அணிந்திருந்த உடை பாவனை என்று அனைத்தும் தற்பொழுது வேற மாதிரியாக மாறி இருக்க என்ன வகையான பெண் இவள் எப்படி இவளுடைய நரி தந்திரத்தை இவர்களுக்கு படம் பிடித்து காட்டுவது என்று மனதிற்குள் நினைக்காமல் யாரும் இல்லை....

அப்பொழுது அவள் பார்வை லிஃப்டில் இருந்து இறங்கி வரும் சாகித்யாவை பார்த்தது.

முகம் சாதாரணமாக இருந்தாலும் அந்த கண்கள் அவனை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருக்க உடனே தன்னை சுதாரித்துக் கொண்டவள்

அவன் வீழ்ச்சாரை தள்ளிக் கொண்டு வந்து டேபிளில் அருகில் நிறுத்தினாள்.


இதன் தொடர்ச்சி அடுத்த அத்தியாயத்தில்....
 

Author: kadhaa
Article Title: அத்தியாயம்- 8
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top