அத்தியாயம் 7

Joined
Aug 19, 2025
Messages
13
அத்தியாயம் 7:

காலை சிவ தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ஈஸ்வர் கண்களில் விழுந்தது ஷிபி ரிதியை காரில் கடத்திக் கொண்டு செல்லும் காட்சி..

காரை பின்தொடர்ந்து ஓடிய ஈஸ்வர், கார் அதே வைத்தியசாலை ஆசிரமத்தில் நிற்பதை கண்டு புயல் வேகத்தில் உள்ளே நுழைய,

அங்கே ரிதியை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான் ஷிபி..

அவன் கைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் ரிதியின் கைகளை கண்டு சினந்தவன், ரிதியை இழுத்து தன் கைகளில் ஏந்திக் கொண்டு, ஷிபியை கண்கள் சிவக்க முறைத்துக் கொண்டிருக்க,

ஈஸ்வரின் ருத்ர அவதாரத்தை தாண்டி ரிதியை அவன் கைகளில் தாங்கி இருக்கும் நிலையை கண்டு மயங்கி சரிந்திருந்தான் அவன் பிஏ கனியாளன்... இருக்காதா பின்னே?? லிகிதா அரைகுறை ஆடையில் அடம்பிடித்து தூக்க சொன்னால் கூட ஒரு மெல்லிய சிரிப்போடு அவள் கைகளை பற்றி கொண்டு இலகுவாக அதை தவிர்த்து விட்டு செல்பவன் ஆயிற்றே அவன் முதலாளி ஈஸ்வர்.. எனவே இந்த ஈஸ்வர் அவனுக்கு முற்றிலும் புதிதாய் தெரிகிறான்...

ரிதி உடல் நடுங்க அடுத்து நடக்க போகும் அசம்பாவிதங்களை எண்ணி பயந்து ஷிபியை கலக்கமாய் பார்க்க,

அவனோ தன் விலையுயர்ந்த சிகாரை எடுத்து பற்ற வைத்து புகையை இழுத்து விட்ட படியே ஈஸ்வரை சொடக்கிட்டு அழைத்தான்..

அதில் ஈஸ்வர் கோபம் கொண்டு, " என்ன திமிரு டா உனக்கு??" என பல்லை கடித்துக் கொண்டு கோபத்தில் திட்டிக் கொண்டே ரிதியை கையில் ஏந்திக் கொண்டே அவனருகே செல்ல,

ஷிபியோ ரிதியை மேலிருந்து கீழாக ஓர் மோகப் பார்வை பார்த்து, " ஆரானடி இது?? நிண்ட புதிய காமுகனோ?? ( யாரு டி இவன்?? உன் புது காதலனோ??)" என ஏளனமாக கேட்டு அவளை எரிக்கும் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான்....

அவன் பார்வையில் உடல் கூசி நின்றவள், அவன் கேள்வியில் பதறி துடித்து ஈஸ்வர் கைகளில் இருந்து பட்டென கீழே இறங்கி,
" அல்ல சாரே.. ஞான்..." என திக்கி திணற,

அவளை தன் பின்னால் நிறுத்திக் கொண்டு ஒரு கையால் அவளை பின்னிருந்து அணையாய் பிடித்த ஈஸ்வர், அவனை நேருக்கு நேர் பார்த்து, " இதோ பார்.. நீ யாரா வேணா இருந்துட்டு போ.. ஆனா இனி உன் நிழல் கூட இவ மேல படக் கூடாது..." என விரல் நீட்டி எச்சரித்தான்..

அவனிடம் உணர்ந்த பாதுகாப்பை எண்ணி சிலிர்த்து போன பாவை அவளோ ஈஸ்வரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றாள்..

தன் தாத்தாவுக்கு பிறகு பாதுகாப்பாய் உணரும் ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளுள் ஆயிரம் உணர்வுகளை தோற்று விக்க,

தன்னை அணைத்துக் கொண்டு நின்ற அவன் கைகளில் அவளின் பார்வை ஆச்சர்யமாய் தொட்டு மீண்டது...

ஈஸ்வரை கேலியாய் பார்த்த ஷிபி ஈஸ்வரின் பேச்சில், " ஓ.. தமிழோ?? " என கொக்கரித்து சிரித்தவன், அடுத்த நொடியே முகம் மாறி, " இவளானு ஞான் விவாஹம் கழிக்காம் பொக்குன பெண்குட்டியானு... அத கொண்டே ஞான் இவளை இங்கன் தாமசிக்கான் தீர்மானிச்சு.. நீ ஆரானடா குறுக்கு வந்த கள்ளன்??"

(இவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு.. ஏற்கனவே முடிவு பண்ணி தான் இங்க தங்க வச்சிருக்கேன்.. நீ யாரு டா குறுக்க??)" என திட்டி கொண்டே ரிதியை இழுத்து நடுவே நிறுத்தி,


" நோக்கிக்கோ டி.. நாள ராவிலே ஞயானும் நீயும் விவாஹத்தெறக்கும்.. ஆரெங்கில் தடபட்டு வன்னால் ஞான் அவன ஷமிக்கி முறிச்சு களையும்.." (இங்க பாரு டி நாளைக்கு காலையில் உனக்கும் எனக்கும் கல்யாணம். குறுக்க எவன் வந்தாலும் அவன் சங்கை அறுத்து வீசிடுவேன்..) என எச்சரித்து அவள் கைகளை பற்ற போக,

அவன் வார்த்தைகள் ஈஸ்வருக்கு புரியவில்லை எனினும் அவன் அவள் கைப்பிடிப்பதை அவன் மனம் தடுக்க தூண்டிட, சட்டென அவன் கைகளை தட்டி விட்டு அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஷிபியை வன்மமாய் பார்த்துக் கொண்டு நின்றான் ஈஸ்வர்...

இருவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த மேனேஜர் மாவலி, இருவரும் ஒருவரை ஒருவர் ஆங்காரமாய் முறைத்துக் கொண்டு நிற்பதை கண்டு ஷிபியை தள்ளி நிறுத்திய மாவலி, " எந்த மோனே.. இவிடா எந்தானு பிரஷ்னம்??" என கேட்டு அவனை நாற்காலியில் அமர வைக்க,

சுற்றம் கருதி அமைதியாய் நின்றிருந்த ஈஸ்வர், வழிகாட்டியாக வந்த சஜினை அழைத்து, " இவன் என்ன சொன்னான் மலையாளத்தில??" என கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் கைகள் என்னவோ இன்னும் ரிதியை தன் அணைப்புக்குள் இருந்து விடுவித்திருக்கவில்லை..

சஜின் ஷிபி அவளை திருமணம் செய்வதாய் கூறியதை ஈஸ்வரிடம் கூறிட,

அதில் கண்களை மூடி தன்னை சமன் செய்து கொண்ட ஈஸ்வர், தான் இதுவரை செய்த செயல் சரியா என இப்போது தான் சிந்தித்தவன் ரிதியை இழுத்து தன் முன்னே நிறுத்தினான்..

ரிதி பயத்தில் உடல் நடுங்க அவன் முன் நிற்க, கருவிழிகள் சுழன்று கலங்கி கண்ணீரை சிந்த துவங்கி இருக்க,

அதையும் தன் மனதில் ஏற்றிக் கொண்டவனுக்கு அவள் அழுகை ஏனோ மனதை லேசாய் தவிக்க வைத்தது..

தன் மனம் தவிக்கும் தவிப்பை தவறென எண்ணியவன், தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்ட பின் " நீ அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறியா?? உனக்கு அவனை பிடிச்சிருக்கா??" என கேட்டு அவளின் முகம் பார்க்க,

அவளோ பதில் ஏதும் பேசாமல் அமைதியாய் நின்று கண்களால் தன் தாத்தாவை தேடிக் கொண்டிருந்தாள்..

அவளின் அமைதி ஈஸ்வருக்கு கோபத்தை கொடுக்க, அவள் கன்னத்தை அழுத்தி பிடித்து தன் முகம் பார்க்க வைத்தவன்,
" ஹே சொல்லு டி.. உனக்காக தானே பேசிட்டு இருக்கேன்.. பதில் சொல்லாம இப்படி வேடிக்கை பார்க்கிற?? திமிரா உனக்கு?? உன்னை போய் பாதுகாக்க நினைச்சேன் பாரு.. என்ன சொல்லணும் டி." என திட்டியவனோ அவளை கோபப் பார்வையால் எரிக்க,

அவன் அழுத்திய வலி தாங்க முடியாமல் கண்ணீரை சிந்தியவள் அவன் கைகளை தட்டி விட்டு அவனை ஓர் பார்வை பார்த்து விட்டு, பயத்தோடு திரும்பியவள் அங்கு கோபமாய் நின்று கொண்டிருக்கும் ஷிபியையும் பார்த்து பயந்து அங்கிருந்து ஓடி சென்றாள்...

அவளை எட்டி பிடிக்க முயன்ற ஷிபியை மாவலி தடுத்து நிறுத்தி விட,

ஈஸ்வரோ அவள் தன்னை அவமதித்ததாக எண்ணி பல்லை கடித்துக் கொண்டு கோபத்தில் அங்கிருந்து சென்றான்..

தன் குடிசை வீட்டிற்குள் ஓடி வந்து நுழைந்த ரிதி, " ஆல்னா " என தன் தங்கையை கட்டியணைத்து அழ,

அங்கு நடந்த கலவரத்தை வேறொருவர் மூலம் அறிந்து கொண்ட அவளின் தாத்தா சேதுவும் அவளை தேடி ஓடி வந்தார்...

இருவரையும் கட்டிக் கொண்ட ரிதி,
" எனிக்கு விவாஹம் வேண்டா.. ஞான் ஆயாளோடு ஜீவிச்சிட்டில்லா.. எனிக்கு வையா.. அல்லங்கில் ஞான் மறிச்சு பூவாம்.." ( எனக்கு கல்யாணம் வேண்டாம்.. நான் அவர் கூட வாழ மாட்டேன்.. என்னால முடியாது.. . இல்ல நான் செத்து போயிடுவேன் தாத்தா..)" என அழுது அழுது முகம் வீங்கி போய் அமர்ந்திருந்தாள்..

ஆல்னா ஊமை பெண் ஆதலால் மௌனமாய் கண்ணீர் விட்டு தன் அக்காவின் தலை கோதி ஆறுதல் கூறிட,

அவளின் தாத்தாவோ அவளின் விதியை எண்ணி பதில் பேச முடியாமல் தவித்து போனார்...

இங்கோ ஈஸ்வர் பற்றிய விவரங்களை அறிந்து கொண்ட ஷிபி மாவலி மூலம் அவர்களை வெளியேற்ற கூறிட,

அவரோ ரிதி மீது கொண்ட கடும் கோபத்தில், " நினக்கு பிராந்தானடா மோனே?? ஆ குட்டி நம்மட குடும்பத்துக்கு ஷெரியாகாம் பாடில்லா..." ( உனக்கென்ன பைத்தியமா டா மகனே.. அவ நம்ம குடும்பத்துக்கு சரியா வரமாட்டா..)" என திட்டி மேலும் சில தகவல்களை கூறிக் கொண்டிருந்தார்...

ஈஸ்வரின் கோபத்திற்கு பயந்து வெளியே நின்றிருந்த கனியின் காதில் அவர்கள் பேசியது கேட்க,

சஜினை அழைத்து அவர்கள் பேசியதை மொழி பெயர்க்க கூறினான்..

சஜின் அவனிடம், " அந்த பொண்ணு இங்க அகதியா வந்த பொண்ணாம்... ரிதி அம்மா ஷிபி பாட்டியை காட்டு யானை துரத்திட்டு வந்தப்போ அவங்களை காப்பாற்றி, யானை மிதிச்சி இறங்கு போயிட்டாங்களாம்... அதனால அவங்க பாட்டி சொன்னதால கடமைக்காக தான் இங்கேயே தங்கி தோட்ட வேலை பார்க்க ரிதி, அவங்க தாத்தா, அவ தங்கச்சி மூணு பேரையும் இங்க தங்க வச்சிருக்காங்களாம்...

அப்பா அம்மா இல்லாத வயசு பிள்ளைங்களை வச்சிக்கிட்டு பாதுகாப்பா இருக்க வழி தெரியாம தான் ரிதி தாத்தா குடும்பமா இங்க தங்கிட்டு இருக்காங்களாம்.. குலம் கோத்திரம் இல்ல, ஏழையான நம்ம ஹாஸ்பிடல் வேலைக்கார பொண்ணு அவளையா காதலிக்கிற?? அவளா நம்ம குடும்பத்து மருமக?? நான் ஒத்துக்க மாட்டேன்... அப்படின்னு மாவலி திட்டுறார்" என கனியிடம் கூறினான் சஜின்...

கனிக்கு சட்டென ரிதியை எண்ணி கலக்கம் தோன்ற,

" சரி அவளை எப்படி இந்த கல்யாணத்தில் இருந்து காப்பாற்ற முடியும்??" என சஜினிடம் கேட்டான் கனி...

நெற்றியை கீறி சிந்தித்த சஜின், " இதுல மாவலி மட்டும் உறுதியா இருந்தா போதும்.. அவருக்கு தான் ரிதி அவங்க வீட்டு மருமகளா வரது பிடிக்கல.. சோ அவரே இதை தடுக்க வாய்ப்பு இருக்கு..." என கூறி,
" ஆமா அடுத்தவங்க குடும்ப விஷயம் நமக்கு எதுக்கு?? நம்ம வந்தது ஈஸ்வர் சாருக்கு உதவ தானே? வா அவரை போய் பார்க்கலாம்..." என கனியனையும் அழைத்து சென்றான் சஜின்...

ரிதியின் வாழ்வை எண்ணிய கலக்கத்தோடு பாவமாக உள்ளே நுழைந்தான் கனி...

இங்கோ மாவலி கழுத்தை பிடித்து நெறித்து சுவட்டில் தூக்கி நிற்க வைத்த ஷிபி,
" எனிக்கு ரிதி மாத்திரமே இஷ்டமான பெண்ணானு.. அவளை மாத்திரமே ஞான் விவாஹம் செய்யு.. ஏதேங்கில் குழப்பம் ஆகி மாறி போயி நின்னை அச்சன்டு கூட ஞான் நோக்காம் பட்டில்லா... கொன்னு களையும் நின்னை.. அவ.. எனிக்கு தான்.. எனிக்கு மாத்திரமே எண்ட சுந்தரி ரிதி... " ( எனக்கு ரிதியை மட்டும் தான் பிடிக்கும்.. அவளை மட்டுமே தான் கல்யாணம் பண்ணுவேன்... இதுல ஏதாச்சு குழப்பம் வந்தா அப்புறம் அப்பான்னு கூட பார்க்காம உன்னை கொன்னு போட்டுடுவேன்.. அவ எனக்கு தான்.. எனக்கு மட்டும் தான்.. என் அழகி ரிதி.)" என கர்ஜனையாய் முழங்கியவன் வெறி கொண்டு அங்குள்ள பொருட்களை உடைத்து விட்டு அங்கிருந்து சென்றான்..

இங்கோ தன் அறைக்குள் நுழைந்த ஈஸ்வர் அவள் மேல் உள்ள கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக பால்கனி அறையில் நடந்து கொண்டிருக்க, கட்டுக்கடங்கா கோபத்தில் நடந்தவன் விழிகள் அவ்வப்போது ரிதியின் குடிசையை கோபமாய் தீண்டிட,

அங்கோ அவன் கோபத்தை இன்னும் தூண்டும் விதமாய் ரிதி தன் தாயின் பட்டுப் புடவையை எடுத்து சிரித்த முகத்தோடு அதை வருடி கொடுத்துக் கொண்டிருந்தாள்..

அதை கண்டவன், " ஆக இவளுக்கும் அவனை கட்டிக்க விருப்பம் இருக்கு... அப்படி இருக்கவ எதுக்கு டி என் முன்னாடி அவனை பிடிக்காத மாதிரி நடிக்கணும்?? ச்ச எல்லா பொண்ணுங்களும் இப்படி தான் இல்ல?? தன்னோட சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி எப்படி வேணா மாறிப்பாங்க..." என திட்டிக் கொண்டே விழிகள் சிவக்க அவளை முறைத்துக் கொண்டிருந்தவன் மனமோ இனம் புரியா ஓர் உணர்வோடு கொதிக்கலனாய் கொதித்துக் கொண்டிருந்தது....

அதிகாலை நேரம் இங்கோ ஷிபி ரிதியை மணப்பெண் கோலத்தில் கண்டு இன்ப அதிர்ச்சியோடு அவளை அவளுக்குப் பிடித்த குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு அழைத்து சென்றான்..

தூரத்தில் நின்று அவர்களை கண்ட ஈஸ்வர் கைகளை சுவற்றில் குத்தி கோபத்தில் காரை எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் அந்த சிவன் கோவிலை அடைந்தான்...

ஈஸ்வர் ரிதியின் விதி என்ன???
 

Author: நீல தூரிகை
Article Title: அத்தியாயம் 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
55
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top