- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 7
கூப்பிட்டும் திரும்பாமல் இருப்பவளை உதட்டை இறுக்கி பின் நின்று பார்த்த விஷ்ணு ஆழ மூச்சை விட்டு அவள் முன் சென்றான்.
“மேடம்க்கு காது கேட்கலையா? உன்கிட்ட தான் கேட்டேன் இங்க என்ன பண்ணுறன்னு!” மீண்டும் அழுத்தி கேட்க அழுவதை நிறுத்தி அவனை முறைத்தாள் கடுப்பாய்.
“உனக்கு என்ன பிரச்சனை இப்போ? நான் எங்க உக்காந்தா உனக்கு என்னைய்யா? உனக்கு முன்னாடியே நான் இங்க வேலைக்கு வந்தவ” பொறிந்து தள்ளிவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள முகம் மாறியது விஷ்ணுவிற்கு.
அவள் சொல்லுவது போல் அவள் இன்னும் இங்கு வேலைக்காரி இல்லையே. லைலாவிற்கு எந்தளவிற்கு உரிமை இருக்கிறதோ அதே உரிமையும் இவளுக்கும் உண்டாயிற்றே.
அதை நேரடியாக கேட்காதவன்
“அப்போ உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை?”
“இல்லை”
“நீ வேணா எனக்கு ஓகே சொல்லு. நம்ப சம்பந்தம் பண்ணிக்குலாம். எப்போ பதில் சொல்லப் போற?” என்றதும் தான் தாமதம் தேனிசைக்கு லதா பேசிய வார்த்தைகள் எல்லாம் விஷ்ணு கிளப்பிய கோவத்தில் ஆவியாய் பறந்து விட்டன.
கும்மிருட்டில் கண்களை உருட்டி ஏதோ அவள் தேட, கூர்ந்து கவனித்த விஷ்ணு
“என்ன தேடுற கண்ணம்மா?” அக்கறையில் கேட்க
மொத்தமாய் பொங்கிய தேனிசை
“உன்னை அடிக்க எதாச்சும் கிடைக்குமானு பார்க்குறேன். என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? கேட்க யாரும் இல்லைனு ஏமாத்துலாம்னு நினைக்குறியா? என்னைலாம் யாரும் ஏமாத்த முடியாது” கீச்சுக் குரலில் சீற தன்னை மீறி சிரித்த விஷ்ணு கல்லின் மேல் அமர்ந்து ரசிக்க ஆரம்பித்து விட்டான் அவளின் சம்பாஷணைகளை.
“ஆமா ஆமா மேடம் ரொம்ப உஷார் தான் என் கண்ணம்மா” இன்னும் சீண்டி அவளை சிவப்பேற செய்தான்.
“அப்படி கூப்பிடாத”
“அப்போ ஹனி ஓகே ஆஹ்?”
“ஆஆ... நாளைக்கே ஐயாக்கிட்ட சொல்லுறேன். நானுமே பாவம்னு பார்த்தா ரொம்ப பண்ணுற? இப்படியா பொண்ணுங்ககிட்ட பேசுவ?” கண்கள் சிவக்க கேட்பவளை பார்வை எடுக்காமல் பார்த்தவன்
“எல்லா பொண்ணுங்ககிட்டையும் இல்லை கண்ணம்மா. உண்மையை சொல்லனும்னா நான்லாம் இப்படி பேசுற ஆளே கிடையாது” தன்னை எண்ணி கள்வன் சிரிக்க நம்பாத பார்வையில் அவனை முறைத்தாள் தேனிசை.
“எனக்கு காது குத்தியாச்சு... எவளாச்சும் நீ சொல்லுற கதையை நம்புவா அவகிட்ட போய் சொல்லு. நீ என்கிட்ட பேசுறத பார்த்தா எல்லாரும் என்னை தான் தப்பா பேசுவாங்க. ஒழுங்கா வந்த வேலையை பாருங்க” கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட அவளை வெறித்தவன்
“பார்த்துட்டா போச்சு” சிறு முறுவலோடு அவனும் அங்கிருந்து சென்றுவிட்டான்.
வெளிநாட்டில் இருந்து குடும்பங்கள் மீண்டும் கூடிய பின்பு ஒவ்வொரு நாளும் விழாவாக தான் மாறியது. அறுசுவை உணவு, பேச்சு சத்தங்கள், பெண்களின் சிரிப்பு என பழையப்படி வீடே பூஞ்சோலை போல் உணர்வை தர , தன் வேலையை மறந்து ரசிக்கும் ஆறுமுகத்தை மேலிருந்து கவனித்தான் சத்தியா.
இதை தான் அவன் விரும்பிருந்தான். அவனின் மாமாவின் புன்னகையை பார்க்க நினைத்தான். இப்போது எல்லாம் நடந்து விட்டதே என்ற சந்தோஷம் அவன் முகத்தில் துளியும் இல்லை.
ஆசைப்பட்டது நடந்தும் அதை முழுமையாக ஏற்க முடியாமல் கண்மணியின் முகம் தடுத்தது ஆடவனை. அவள் முழு காதலோடு தான் இந்த கல்யாணத்தை ஏற்கிறாள். இவனும் அதே விருப்பத்தில் இருக்கிறானா என்றால் நிச்சயம் இல்லை.
அவனால் ஏனோ எவ்ளோ முயன்றும் கண்மணியை காதலியாய் பார்க்க முடியவில்லை. சிறு வயதிலிருந்து விஷ்ணுவோடு வளர்ந்தவனுக்கு கண்மணியை மனைவி என்ற ஸ்தானத்தில் பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் அவன் குடும்பம் ஒன்று சேர இது ஒன்றே வழி என்பதை அறிந்தவன் அவனையும் ஏமாற்றி சுற்றி இருப்பவர்களையும் ஏமாற்றி வருகிறான்.
இங்கு மற்றவர்கள் ஏமாறுவது கூட அவனுக்கு வலிக்கவில்லை. அவன் வருத்தமும் கவலையும் தன் மனதை கண்மணி அறிந்தால் என்னாகும் என்பதே.
பெருமூச்சை அவன் விடும் போதே கீழே அம்மாவோடு பேசிக் கொண்டிருந்த கண்மணி எதர்சையாய் நிமிர்ந்து சத்தியாவின் திசையில் பார்த்தாள்.
அவள் தன்னை பார்ப்பாள் என்று எதிர்பார்க்காதவன் திடுக்கிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட, மாமா வெட்கத்தில் போகிறார் என நினைத்தவளும் சிறு புன்னைகையோடு விட்டுவிட்டாள்.
“குடும்ப ஜோசியர் கிட்ட பேசிட்டேன். இந்த வாரமே நல்ல நாள் தானாம். அப்போவே இவங்களுக்கு நிச்சயம் முடிச்சிருவோம். என்ன சொல்லுறிங்க?” என்ற குணசீலன் குரலில் மனைவியை பார்த்திருந்தவர் கனவில் இருந்து தெளிந்தது போல் குணசீலனை பார்த்தார்.
“அதான் மாமா, ஜோசியர் இந்த வாரமே நிச்சயம் வைக்க நல்ல நாள்னு சொல்லிட்டாரு. ஏற்பாடு பண்ணிடலாமா?”
“அதை ஏன்டா என்ன கேட்குற? கல்யாணம் பண்ணிக்க போற பிள்ளைங்க கிட்டல்ல கேட்கணும்”
“அவங்க என்ன சொல்லிட போறாங்க. அவங்க சொல்லி தானே நாம இதை செய்யிறோம்”
“இருந்தாலும் ஒரு வார்த்தை கேட்டு செய்யிறது தான் பெரிய மனுஷத்தனம். எல்லாரையும் வர வச்சி கேளு. அப்புறம் மற்ற வேலைகளை ஆரம்பிப்போம்” உறுதியாய் பெரியவர் சொல்லிட அவரின் சொல்லை தட்ட முடியாமல் குணசீலனும் குடும்பத்தை மீண்டும் வரவேற்பறையில் கூட்ட விஷ்ணு மட்டும் அங்கு இருக்கவில்லை.
அவனுக்கு பிடிக்கவில்லை என்றதும் யாரும் வற்புறுத்தவும் இல்லை. அவன் இவ்ளோ தூரம் வந்ததே பெரிய விஷயம் என்று விட்டு விட்டனர் போலும்.
குணசீலன் விஷயத்தை சொல்ல கண்மணி சம்மதம் சொல்லிட, ‘ஏன் இவ்ளோ அவசரம்’ சங்கடமாய் ஆரம்பித்த சத்தியா குடும்பமே சாக்கு சொல்லவும் மேலும் வாதிக்காமல் சம்மதம் சொல்லிவிட்டான்.
“அப்புறம் என்ன எல்லாரும் நிச்சயதார்த்த வேலையை பாருங்க. கண்மணிம்மா அத்தை நாளைக்கு நகைக்கடைக்கு கூட்டிட்டு போவா. அங்க உனக்கு பிடிச்சதை வாங்கிக்கோ. சரியா” தலைவருடிட ஆமோதித்த கண்மணி கூச்சத்தில் அங்கு இருக்க முடியாமல் ஓடி விட்டாள்.
ஆயிரம் தான் வெளிநாட்டில் படித்த பெண்ணாக இருந்தாலும் கனவு கற்பனை எல்லாம் இது போல் தான் ஆசை வளர்த்திருந்தது.
பெரியவர் ஓடும் மகளை சிரித்தப்படி பார்க்க, துளசி கணவனிடம் ஏதோ சொல்ல தயங்கி நின்றவள் பேச முடியாமல் தொண்டவரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொள்ள ஆறுமுகமும் குணசீலனை அழைத்துக் கொண்டு வேலையாக வெளியேறிவிட்டார்.
ஆறுமுகத்திற்கு குடும்பத்தொழிலே இங்கு ஏராளம். இடம் லீசு, டிரான்ஸ்போர்ட், விவாசயம் என பல உண்டு. அதில் பாதியை பார்த்துக் கொள்வது குணசீலன் தான்.
என்னதான் வரும் லாபத்தில் கணக்கு வழக்கில் மறைத்து பாதியை லவட்டிக் கொண்டாலும் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் அது பொறுக்கவில்லை.
இப்போது கண்மணி மகனை கட்டிக்கொள்வதால் ஒரு பங்கு சொத்து கிடைக்க போகிறது சந்தோஷம். இன்னும் விஷ்ணுவை தன் மகளுக்கு கட்டிக் கொடுத்து விட்டாள் அவள் மூலம் மற்றொரு பங்கையும் லவட்டி விடலாம் என்ற நினைப்பு.
கண்மணி உடை கொஞ்சம் வாங்க வேண்டும் என்று நினைத்தவள் அம்மாவிடம் சொல்ல “அதான் நிச்சயதார்த்துக்கு வாங்க போறோமே. அப்போ வாங்கிக்குலாம்”
“அம்மா அதுவரை என்ன பண்ணுவேன்? நான் எடுத்துட்டு வந்த ட்ரெஸ் எல்லாம் இங்க போட முடியாதுனு இருக்குறதுல நல்ல ட்ரெஸ் மட்டும் பொறுக்கி எடுத்துட்டு வந்துட்டேன்”
“சரி, லைலா கூட போய்ட்டு வா”
“ஓகே மம்மி” என்றவள் லைலா அறைக்கு செல்ல அவள் எங்கோ கிளம்ப அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.
“லைலா என்ன வெளிய கிளம்பிட்டிங்களா?”
“பார்த்தா அப்புறம் எப்படி தெரியுது?”
“எங்க?”
“ம்ச், ப்ரெண்ட்ஸ பார்க்க போறேன்” சற்றே எரிச்சல் எட்டி பார்த்தது.
அதில் சங்கடமாய் நின்ற கண்மணி வேறு துணை யாரும் இல்லாததில் “நானும் உன்கூட வரவா? எனக்கு கொஞ்சம் பர்சஸ் பண்ணனும். அதான்” தயங்கி கேட்க சலிப்பாய் மூச்சை விட்டவள்
“நான் போறது என் ப்ரெண்ட்ஸ பார்க்க. அங்க வந்து என்ன பண்ண போறிங்க?”
“இல்லை லைலா இங்க இடம் புதுசு, ஒரு துணைக்கு”
“ரொம்ப தான் சீன் போடுறிங்க. என்னவோ பிறந்ததுல இருந்து ஃபாரின் மாதிரில பேசுறிங்க. யாரையாச்சும் கூட்டிட்டு போங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு” அவசரமாக உதட்டு சாயத்தை கண்ணை கூசும் அளவிற்கு அப்பியவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட சோகமாகிய கண்மணி அண்ணன் அறைக் கதவு முன் தட்டலாமா வேண்டாமா என்பது போல் நின்றாள்.
சத்தியாவைக் கூப்பிட்டால் அவனே வருவான் தான். ஆனால் அவனும் சற்று நேரத்திற்கு முன்பு தான் நண்பன் ஒருவனை பார்க்க சென்று விட்டான். இப்போது அண்ணன் ஒருவன் தான் வழி. ஆனால் வருவானா என்ற சந்தேகத்தில் அவன் அறையின் கதவை தட்டாமல் நிற்க, கதவு உள்ளிருந்து திறந்தது.
திடீரென விஷ்ணு முன் வந்ததில் ஓட முடியாமல் பம்மி நின்ற கண்மணி “அண்ணா அது கொஞ்சம் டிரஸ் பர்ச்சஸ் பண்ணனும். எல்லாரும் வெளிய போகிருக்காங்க. உங்களுக்கு வேலை " தயங்கி தயங்கி சொல்ல தங்கையின் முகத்தை உற்று பார்த்த விஷ்ணு
" எந்த வேலையும் இல்லை. போலாம் " சட்டென சொல்லியதில் கண்கள் மின்ன பார்த்தாள் கண்மணி.
உண்மையில் அவனுக்கு ஒரு முக்கியமான விர்ச்வல் மீட்டிங் உள்ளது. யாருமே இல்லாத நிலையில் தானும் முடியாது என்றால் வாடி விடுவாளே என்று தான் சம்மதம் சொல்லிவிட்டான்.
அவன் எதிர்பார்த்தது போல் குஷியாகியவள் " அப்போ 5 மினிட்ஸ்ல கிளம்பி வரேன்ண்ணா " சிட்டாய் பறந்தவள் தயாராகி கீழே வர விஷ்ணுவும் அவளுக்காக காத்திருக்க சடன் பிரேக் போட்டு நின்றாள் கண்மணி.
அவள் நின்று விட்டதில் கேள்வியாய் விஷ்ணு பார்க்க " இல்லைண்ணா. நமக்கு இந்த ஊர் புதுசு. எவ்ளோவோ மாறிருக்கும். இதுல எனக்கு பிடிச்ச மாதிரி எந்த கடையில இருக்கும்னு எப்படி தெரியும்? யாராச்சும் இங்க பழக்கமானவங்க இருந்தா நல்லாருக்குமே " கண்மணி யோசனையில் நகைத்த கடிக்க அவளின் பின்னால் தான் கடந்து போனாள் தேனிசை.
காலை உணவு முடித்த டேபிளை சுத்தம் செய்து வேறு வேலை பார்க்க சென்றவள் விஷ்ணு கண்ணில் பட்டிடவே, மின்னல் வெட்டியதில்
" போய் அந்த மேடம்ம கூப்பிட்டு வா " விஷ்ணுவின் பார்வையை தொடர்ந்து பார்த்த கண்மணிக்கும் தேனிசையை கண்டு முகம் மலர்ந்தது.
" அவங்க வரலைன்னு சொல்லிட்டா? "
" அப்பா தான் போக சொன்னாருன்னு சொல்லு வந்துருவா " நக்கலாக சொல்ல ஒன்றும் புரியாத கண்மணி விஷ்ணு சொல்லிக்கொடுத்தது போல் தேனிசையிடம் சொல்ல அவளுக்கே அதிர்ச்சி தேனிசை சரியென ஒப்புக்கொண்டதில்.
" சீக்கிரம் வந்துடலாம்ல. இங்க எனக்கு நிறைய வேலை இருக்கு "
" அதுலாம் நான் டக் டக் டக்குனு டிரஸ் எடுத்துருவேன். வா தேனு போவோம் " தேனின் கையை பற்றியப்படி வெளியே வர, உடன்சேர்ந்து வந்த தேனிற்கு முகம் மாறியது மீண்டும் டிரைவர் முகத்தை பார்த்ததில்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 7
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.