- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 6
" என்ன சொல்லுறீங்க? " அதிர்ச்சியாய் லதா கேட்டிட மீண்டும் லைலாவின் ஜாதகத்தினை பார்த்தவர்
" ஆமாம் ம்மா. இந்த ஜாதகத்துக்கு இப்போதைக்கு கல்யாண யோகம் இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த உறவு நீடிக்காது. இரண்டு வருஷம் கழித்து அந்த பேச்சை எடுக்குறது தான் எல்லாருக்கும் நல்லது " உறுதியாய் சொல்லிட பெண்ணை பெற்றவர்கள் முகமே இருண்டு போனது.
எத்தனை கனவில் இருந்தன. மகளை கொடுத்து மருமகள் வாங்கலாம் என்று நினைத்தார்கள். மகளை அங்கு ஆட்சி செய்ய வைத்து இரண்டு வீட்டையும் கைக்குள் போட நினைத்தார்கள். அசையும் சொத்து அசையா சொத்தென எல்லாம் நம்மிடமே வர போகுதே என்ற குஷியில் இருந்தவர்களின் சந்தோஷத்தில் பெரிய பாறாங்கல்லையே போட்டுவிட்டார்.
குணசீலன் வாயை அடக்காது " எதும் பரிகாரம் பண்ணுறதா இருந்தாலும் பண்ணிடலாம். ரெண்டு பிள்ளைகளுக்கும் ஒண்ணா பண்ணலாம்னு இருந்தோம் " எடுத்து கொடுக்க முடியாது என முடிவாய் சொல்லி விட்டார் அவர்.
" அதான் முடிவாய் சொல்லிட்டாரே. இப்போதைக்கு சத்தியா கண்மணி கல்யாணத்தை பார்ப்போம். அப்றம் இதை பற்றி பேசுவோம் " ஆறுமுகமும் இறுதியாய் சொல்லிட துளசி தான் நாத்தனார் கையை ஆதரவாய் பற்றியவள் " கவலைப்படாதீங்க. என்னைக்கா இருந்தாலும் உங்க வீட்டு பொண்ணு தான் என் மருமகள் " எந்த அர்த்தத்தில் சொன்னாரோ லதா புன்னகைக்க சூழ்நிலை இயல்பாய் மாறியது.
கோவில் சன்னதியில் அமர்ந்து குடும்பமே கூட்டமாய் கண்மணி பேசுவதை ரசித்து கேட்க, ஆறுமுகம் பார்வை அவ்வப்போது ஓரமாய் போனை பார்த்துக் கொண்டிருக்கும் மகன் மேல் பட்டு மீண்டது.
பேசவில்லை தான் அவன். ஆனால் உடனிருக்கிறானே என்ற சந்தோஷமே அவர் மனதை நிறைக்க பல வருடங்களுக்கு பிறகு தெம்பாய் அமர்ந்து மகளின் பேச்சில் நன்றாக சிரித்தார்.
லைலா ஜோசியர் சொன்ன வார்த்தையை கேட்டு கடுப்பில் அமர்ந்தவள் எதர்ச்சியாக விஷ்ணுவை பார்க்க தன்னை போல் எவ்வித கவலையுமின்றி சத்தியா பேசுவதை காதில் வாங்கிக் கொண்டு போனில் பார்வை பதித்திருப்பதை கடுப்பாய் பார்த்தாள்.
" என்ன மாமாவுக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை. அவருக்கு ஒருவேள என்மேல விருப்பம் இல்லையா? இல்லைனா என்ன நான் வர வைக்கிறேன் " தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் முதல் முயற்சியாய் எழுந்து ஆண்கள் இருவரின் முன்னும் போய் நின்றாள் லைலா.
" அண்ணா உன்னை அம்மா கூப்பிட்டாங்க " பொய்யை சொல்ல சந்தேகமாய் அவளை பார்த்தவன்
" நான் வந்துடுறேன் விஷ்ணு " சொல்லிவிட்டு எழுந்து சென்றவன் இடத்தில் ஓய்யாராமாக அமர்ந்தாள் லைலா.
தன்னை இப்போதாவது கவனிப்பான் என்றவளுக்கு எதுவும் பேசாமல் போனில் பார்வை பதித்திருப்பவன் அதீத எரிச்சலை தர பல்லைக் கடித்து சிரிப்பை வரவழைத்துக் கொண்ட லைலா " மாமா அந்த இடம் உங்களுக்கு நியாபகம் இருக்கா. சின்ன வயசுல நாம அங்க தான் விளையாடுவோம் " வாயிக்கு வந்ததை ஆரம்பிக்க வினோதமாக அவளை பார்த்தான் விஷ்ணு.
கிட்டத்தட்ட பத்து வயது வித்யாசம் இருவருக்கும். இவளோடு அவன் விளையாடியது ஏன் பேசிக் கூட நினைவு இல்லை.
" இல்ல" என்ற ஒரே வார்த்தையில் முகத்தை திருப்பிக் கொள்ள முகம் கருத்தவள்
" உங்களுக்கு எல்லாம் மறந்திருக்கும். ஆனா எனக்கு நியாபகம் இருக்கு. நீங்க இந்த ஊர விட்டு போனப்போ நான் தான் அவ்ளோ அழுதேன்னு அம்மா சொன்னாங்க "
" ம்ம் "
" திரும்ப உங்கள எப்போடா பார்ப்பேன்னு காத்திருந்தேன் "
"...."
" ஒருவழியா உங்கள பார்த்துட்டேன். இனி நீங்க எப்பவும் எங்க கூட தான் இருக்கனும் மாமா. எல்லாரும் குடும்பமா ஒன்னா " கண்கள் விரித்து சொல்ல அலறிய போனில்
" கால் பேசிட்டு வரேன் " மரியாதை நிமிர்த்தமாய் சொல்லிவிட்டு செல்ல ஏதோ விருப்பத்தோடு கெஞ்சளாக சொல்லிருக்கிறான் என கற்பனை செய்து அம்மாவிடம் ஓடிவிட்டாள் முட்டாள்பெண்.
நடுக்காட்டில் நெட்ஒர்க் கிடைக்காமல் மறுமுனையில் பேச சிரமப்பட்டவன் " ஐ கால் யூ லேட்டர். எதுவா இருந்தாலும் மெயில் பண்ணுங்க " அழைப்பை துண்டித்து விட்டான் விஷ்ணு மதுராந்தகன்.
இவன் பேசியது மறுமுனையில் கேட்டதா என்பதே சந்தேகம் தான். எதற்கும் எழுத்து வடிவில் செய்தியும் அனுப்பி நிமிர முன்னால் முறைத்து நின்றாள் தேனிசை.
அவளை எதிரே பார்த்த அதிர்ச்சியில் ஆடவனின் கண்கள் சிறகு போல் விரிந்து இயல்பாக கையை கட்டியவள் " இங்க டிரைவர் வேலைக்கு வந்தோமா, வேலையை பார்த்தோமானு இருக்கனும். அதை விட்டுட்டு லைலா அக்காகிட்ட என்ன பேச்சு உங்களுக்கு? ஒழுக்கமா இருந்தா ஐயா உங்கள நல்லா பார்த்துப்பார். இனிமேலாச்சும் பார்த்து பேசுங்க " சற்று முன்பு லைலா விஷ்ணுவிடம் சிரித்து பேசியதை பார்த்துவிட்டு டிரைவர் முதலாளி பெண்ணை கரெக்ட் பண்ண பார்க்கிறான் என தப்பாக அவள் நினைத்து விட்டாள் போலும்.
பொங்கும் சிரிப்பை உதட்டுக்குள் மறைத்துக் கொண்ட விஷ்ணு தான் என்பதை மட்டும் அவளிடம் சொல்ல நினைக்கவில்லை. கொஞ்சம் விளையாடுவோம் என்ற எண்ணம்மோ!! அவளை போல் கைகட்டி நின்றவன்
" உங்கள கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு அவங்ககிட்ட பேசுனதுல கோவமா? " உரிமையாய் அவன் கேட்க அதிர்ந்து போனாள் தேனிசை.
என்ன இவன் வண்டியை என் பக்கம் திருப்புகிறான்!!!
" நா.... நா...ன் எப்போ அப்படி சொன்னேன் "
" பின்ன ஏன் இந்த கோவம்? "
" அ... அது... ம்ச் டிரைவர் தானே. அவங்க கூட நெருக்கமா பேசிட்டு இருந்திங்க " திக்கி திணற உதட்டைக் குவித்தவன்
" அப்போ மேடம்க்கு என்மேல பொசஸ்ஸிவ்? இனி நான் பேசல. போதுமா? " ஏதோ காதலன் காதலிக்கு அடங்கி போவது போல் பேசுபவனை ங்கே என விழித்து பார்த்தாள் தேனிசை.
பதட்டமும் கோவமும் ஒருசேர தக்காளி போல் சிவந்தவள் " உங்களுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. உங்கள பார்த்து முழுசா ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள என்னென்னவோ பேசிட்டு இருக்கீங்க? பொசஸ்ஸிவ்? மன்னாங்கட்டி... உங்கள பத்தி ஏன் உங்க பெயர் கூட தெரியாது. இனி இந்த மா "
" அப்போ தெரிஞ்சுக்குலாம்!" ஒருவரியில் அவள் வாயை மூடிவிட்டான் விஷ்ணு.
" நான் ஒன்னும் உன் முறைப்பொண்ணு இல்லை ஒரண்டு இழுக்க "
" சொன்னாலும் சொல்லினாலும் ஒரு வகையில நீ எனக்கு முறைப்பொண்ணு தான் " கண்ணடிக்க, வாயடைத்து போனாள் தேனிசை.
இனி இவனிடம் பேசி மாலாது என்பதை புரிந்தவள் பெருமூச்சை விட்டு சென்று விட போறவளை கண்கள் சிரிக்க குறும்பாய் பார்த்தான் விஷ்ணு மதுராந்தகன்.
எல்லாரும் கோவிலில் இருந்து கிளம்பிட தேனிசையும் கார் நிற்கும் இடம் வந்தவள் தெனாவட்டாய் சாய்ந்து நிற்பவனை நொந்து போய் பார்த்தாள் பேதை. அவனின் குறுகுறுப்பான பார்வையும் கேலி தவழும் புன்னகையில் யாராவது தன்னை காப்பாற்ற மாட்டார்களா முழித்து நிற்க தெய்வம் போல் கேட்டது ஆறுமுகத்தின் தெய்வ வார்த்தைகள்.
" அம்மா தேனிசை. வா நம்ப வண்டியில போவோம் "
" ஆமாம். இங்க இடமிருக்கு போலாம் " கண்மணியும் உற்சாகமாக அழைக்க பெரிதாய் சிரித்தவள் திரும்பி விஷ்ணுவை நக்கலாய் பார்த்தாள்.
இப்போது இவள் உற்சாகமாய் ஆறுமுகம் காரில் ஏறிக் கொள்ள பார்வை அகலாது பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் அவளின் செய்கையில்.
நல்லபடியாக ஒரு ஜோடிக்கு கல்யாண முடிவு செய்த நிம்மதியில் வீடு வந்தவர்கள் அவரவர்கள் அறைக்குள் அடைந்துக் கொண்டனர். விஷ்ணுவும் விட்டு வந்த வேலையை சத்தியாவின் அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க கண்மணி நான் என் இடத்திற்கு போகிறேன் என போன தேனிசையை இழுத்துக் கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்தாள்.
" எனக்கு எல்லாமே தெரியும் தேனிசை உன்னைபற்றி. நீயும் இந்த வீட்டுல ஒருத்தி தான் என்னை பொறுத்தவரை. அதுனால என்னை முதலாளி மாதிரி பார்க்காம உன் தோழியா பாரு "
" ஐயோ நீங்க எங்க! நான் எங்க? அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் "
" யாரும் எதும் சொல்ல மாட்டாங்க. கேட்டா நான் தான் சொன்னேன்னு சொல்லு தேன். அதும் இல்லாம எனக்கு அப்ராட்ல
நண்பர்களோட நேரம் செலவிட்டு இங்க தனியா இருக்கவே பிடிக்கல "
" அதான் லைலா அக்கா இருக்காங்களே!!" என்றதும் கண்மணி முகமே மாறியது.
" இருக்கா தான். ஆனா அவளுக்கு என்கிட்ட பேச பிடிக்கலனு நினைக்கிறேன். நான் போனாலே ஏதாச்சும் காரணம் சொல்லி நகர்ந்து போறா " வாட்டமாக சொல்ல மென்மையாய் புன்னகைத்த தேனிசை
" அப்படிலாம் இல்லை. உங்கள இங்க பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. அழகா துருதுருன்னு இருக்கீங்க " கண்கள் சுருக்கி சொல்ல சிரித்த கண்மணி
" நீயும் தான். ரொம்ப கியூட் " சிநேகமாய் சொல்லிட அதன் பின் ஒருவருக்கொருவர் அவர்களின் இனிமையான தருணங்களை பகிர்ந்துக் கொண்டனர்.
சில நிமிடங்களிலே இருவருக்குள்ளும் நட்பு ஒன்று உருவாகிடவே " ஏன் கண்மணி உங்க அண்ணா உங்க கூடவே வரல? அவரையும் கூட்டிட்டு வந்திருந்தா ஐயா சந்தோஷப்பட்டிருப்பாரு " எதார்த்தமாய் கேட்க கண்மணி வாயை திறப்பதற்குள் உள்ளே வந்த லதா வருகையில் சூழ்நிலையே மாறியது தலைகீழாய்.
தேனிசை கண்மணியின் மெத்தையில் அமர்ந்திருப்பதை கண்கள் சிவக்க பார்த்தவள் " ஏய் நாயே, அறிவு இருக்கா? உக்காரணும்னா கீழ உக்கார வேண்டியது தானே. அவ்ளோ சுகம் கேட்குதோ " நஞ்சாய் வார்த்தைகளை கக்க கூனி குறுகி நின்றாள் சிறு பேதை.
கண்மணி அதை கேட்க தாளாதவள் " அத்தை அவளை ஏன் திட்டுறீங்க? நான் தான் தேனை கூட உக்கார வச்சேன். அவ மேல எந்த தப்பும் இல்லை "
" நீ சும்மா இரும்மா. உனக்கு ஒன்னும் தெரியாது. இதுங்க இப்படி தான். கொஞ்சம் இடம் கொடுத்தா மெத்தை வரைக்கும் வந்துருவாங்க. அப்படியே அம்மா புத்தி " நாக்கில் நரம்பில்லாமல் சொல்லிட துடித்த தேனிசை அங்கு நிற்க முடியாமல் வெளியேறி விட்டாள் ஓட்டமும் நடையையுமாய்.
" அத்தை!!!!... என்ன பேசுறீங்க? இப்போ அவ என்ன பண்ணிட்டான்னு இப்படிலாம் பேசுறீங்க. ச்ச இவ்ளோ மோசமா இருப்பிங்கனு நான் நினைக்கல " லதாவின் கடுமையான பேச்சில் வெறுப்பாய் சொல்ல துணுக்குற்ற லதா நொடியில் தன் உண்மையான குணத்தை மறைத்து பொய்யாய் இளித்தாள்.
எங்கே இதை வைத்து கல்யாணம் வேண்டாமென சொல்லிடுவாளோ என்ற பயம் அவளுக்கு.
சட்டென மாறிய முகப்பாவனையில் வருங்கால மருமகளின் முகத்தை வாஞ்சையாய் வருடிய லதா " நான் அவள காயப்படுத்தணும்னு சொல்லலம்மா. வயசு பொண்ணு. கட்டிக்கொடுக்குற வரை காட்டுப்பாட்டோட வளர்க்கணும். அதான் இந்த கண்டிப்பு. நீயே யோசி. என் இடத்துல எந்த பொம்பளை இருந்தாலும் அவளை இந்தளவுக்கு பார்க்க மாட்டாங்க. என் கணவனை பங்கு போட்டுட்டாங்களேனு ஆத்திரம். அதான் அப்படிலாம் பேசிட்டேன். இனி பேசல. அத்தையை மன்னிச்சிருங்க "
" இந்த மன்னிப்பை தேனு கிட்ட கேளுங்க. அவ தான் உங்க பேச்சுல பாதிக்கப்பட்டிருக்கா "
" சரிம்மா கேட்குறேன் " சும்மா அவளை சமாளிக்க சொல்லிவிட்டு வெளியேறிய லதா முதல் வேலையாக தேனிசை அறைக்கு சென்று கன்னத்திலே ஓங்கி ஒரு அறை விட்டிருந்தாள் பளார் என.
" இன்னொரு முறை உன்னை அவங்களோட அறைக்குள்ள போறத பார்த்தேன். தொலைச்சிருவேன். வேலைக்கார நாயி நீ உனக்கு பஞ்சு மெத்தை கேட்குதோ? ஒழுங்கா இருக்குற இடம் தெரியாம இரு. இல்லையா அந்த பயலுக்கே திரும்ப கட்டி வச்சிருவேன் ஜாக்கிரதை " மிரட்டிவிட்டு செல்ல வாங்கிய அடியிலும் வார்த்தையிலும் அறையின் இருட்டில் முடங்கியவள் இருட்டிய பின்பே வெளியே வந்தாள்.
ஊரே உறங்கிருக்க உறக்கமற்று வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து வானையே இலக்கின்றி வெறித்தாள் தேனிசை.
அம்மாவின் ஏக்கம் புயல் போல் மீண்டும் சுழட்டியது மனதை.
இந்நேரம் அவள் இருந்திருந்தால் இந்த பேச்செல்லாம் கேட்டிருக்க கூடுமா? பேச தான் விட்டிருப்பாளா? பெரிதாக வசதி ஏதும் இல்லாத போதும் இளவரசி போல் தன்னை தாங்கிய அந்த தேவதையை நினைத்து கண்ணீரை வடித்தாள் மௌனமாய்.
இருக்கும் மனநிலையில் எங்கெவாது ஓடிவிடலாம் என யோசிக்க, " இன்னும் தூங்காம இங்க என்ன பண்ணுற கண்ணம்மா " என்பவனின் சட்டமான குரலில் யாரென தெரிந்தும் திரும்பாமல் அமர்ந்திருந்தவள் இன்னும் அவனை டிரைவராய் தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் தேனிசை.
- தொடரும்...

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 6
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.