அத்தியாயம் 4

Member
Joined
Aug 20, 2025
Messages
37
அத்தியாயம் 4

ஜன்னல் கம்பிகளின் வழியே தெரிந்த இயற்கை காட்சிகளை தன்னிலை மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள் தேவசேனா...

தென்றல் காற்று வீச அழுத்தமான அமைதி நிலவிக் கொண்டிருந்தது வெளியே.. அழுத்தமான உதடுகளை இறுக மூடிக்கொண்டு.. அமைதி நிலவுவது போல் முகத்தை வைத்திருந்தாலும்.. மனதிற்குள் புயல் வீசி கொண்டிருந்தது தேவாவிற்கு...!!

அந்த நேரம் பூட்டி இருந்த அந்த அறை கதவை யாரோ திறப்பது போன்ற ஓசை கேட்க மெல்ல திரும்பி பார்த்தாள்...

ஒருவேளை கதவை திறந்து கொண்டு உள்ளே வருவது விக்ரம் தானா?? இல்லை வேறு யாராவதா?? என சற்றே குழப்பத்துடனும் பயத்துடனும் யோசித்த வண்ணம் அவள் நின்றிருக்க.. சடாரென்று கதவு திறந்தது !!

கையில் சாப்பாடு தட்டுடன் அங்கு வந்தது வேறு யாரும் அல்ல.. அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் ராஜப்பாதான்...

" அம்மா உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன் சாப்பிடுங்க..", என்றான் கனிவுடன்..

" இல்ல எனக்கு பசிக்கல.."

" அப்படி சொல்லாதீங்கம்மா.. உங்கள சாப்பிட வைக்கணும்னு ஐயா சொல்லிட்டு போயிருக்காரு.. இப்ப நீங்க சாப்பிட மாட்டேன்னு சொன்னா அவர் என்னையதான் திட்டுவாரு.."

ஓஹோ இதெல்லாம் விக்ரமின் ஏற்பாடா?? தாலி கட்டிக் குண்டு கட்டாக தூக்கி வந்து ரூமில் அடைத்து வைத்ததும் இல்லாமல்.. இப்போது கனிவாக சாப்பாடு வேறு கொடுக்க சொல்லி இருக்கார்.. இதில் எந்த விக்ரம் நிஜமானவர்?? ஒண்ணுமே புரியல.. என சிந்தனையில் மூழ்கி இருந்தவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தது ராஜப்பாவின் குரல்...

" அம்மா என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க ??..சாப்பிடுங்க அம்மா.."

" சரி அங்க வச்சுட்டு போங்க நான் பாத்துக்குறேன்", என்றாள்...

" சரிங்கமா", என்று கூறி அங்கிருந்த மேஜை மீது சாப்பாட்டு தட்டை மூடி வைத்து விட்டு மீண்டும் வாசல் நோக்கி நகர்ந்தவன்.. என்ன நினைத்தானோ தெரியவில்லை, அவளை திரும்பி பார்த்து ஏதோ கூற வருவது போல் தயங்கி நின்றான்....

" என்னாச்சு சொல்லுங்க..", என்று அவள் கேட்கவும்..

" இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த நாள்ல இருந்து ஐயாவை பார்த்துட்டு இருக்கேன் ரொம்ப நல்ல மனுஷன்.. அவர் வயசுக்கு பசங்க எல்லாம் எப்படி எப்படியோ ஊர் சுத்திட்டு ஜாலியா இருக்காங்க.. ஆனா இந்த சின்ன வயசுலயும் ரொம்ப பொறுப்பா தொழிலை எடுத்து நடத்தி அதில் வெற்றியும் கண்டு தன்னம்பிக்கையோடு தன்னடக்கம்மா வாழ்றவரு.. கிட்டத்தட்ட என்னை ஒரு சகோதரன் போல தான் நடத்துவார்.. எப்பயாவது பிசினஸ் டீலிங் விஷயமா வந்தா மட்டும்தான் இந்த பக்கமா வந்து தங்குவார்.. அதுவும் தனியா தான் வருவார்.. ஆனா இந்த முறை உங்களை கூட்டிட்டு வந்து இருக்காரு.. அதுவும் ரொம்ப கோவமா... அதான் எனக்கு ஒன்னும் புரியல.. நீங்களும் பார்க்க புது மணப்பெண் போல இருக்கீங்க தாலியோடு.. உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?? என்ன ஏது?? என்று எனக்கு எதுவும் தெரியாது.. ஆனா ஏதோ ஒரு பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குனு மட்டும் புரியுது.. எல்லாம் சீக்கிரமே சரியாகும்.. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க மா.. என்னை தப்பா எதுவும் எடுத்துக்காதீங்க.. மறுபடியும் கதவை பூட்டிட்டு போக சொல்லி இருக்காரு ஐயா.. அதனால தான் இப்ப பூட்ட போறேன், எதுவும் நினைச்சுக்காதீங்க ", என்று தன்னிலை விளக்கம் போல் சொல்லிவிட்டு, கதவை பூட்டி சென்றான் அவன்..

அவன் எப்படிப்பட்டவன் என்று இவர் சொல்லி தான் எனக்கு தெரிய வேண்டுமா என்ன ??அது எனக்கே தெரியுமே.. அவன் நல்லவன் தான் என்று.. ஆனா என்ன?? எதுக்காக என்னை இப்படி கூட்டிட்டு வந்து அடைச்சு வச்சிருக்கார்?? என்றுதான் ஒன்னும் புரியல.. என தனக்குள் பேசி கொண்டாள் அவள்...

மனதில் இருக்கும் வேதனைக்கு.. பசி அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.. நினைவுகளை எங்கோ சிறகு விரித்து பறக்க விட்டிருந்தாள்..

கட்டிலில் அமர்ந்து கொண்டு வெளி உலகை வேடிக்கை பார்த்த வண்ணம் யோசனையில் மூழ்கி இருந்தவள் நேரம் போவது தெரியாமல் அப்படியே இருந்து விட.. ஒரு கட்டத்தில் கண்கள் சொருக, நித்திரா தேவி அவளை அணைத்து கொண்டாள்...!!

❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

சக்கரவர்த்தி இல்லம் என்ற பெயர் பலகையை தாங்கிய வண்ணம் அழகாய் நிமிர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்தது அந்த பங்களா....!!

நீச்சல் குளத்துடன் கூடிய அந்த அழகிய பங்களா நவீன முறையில் அதுவும் கலைநயத்துடன் கட்டப்பட்டிருந்தது...!!

விக்ரம் ஓட்டி வந்த காரை கண்டவுடன் வாசலில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி உடனே கேட்டை திறந்து விட்டார்..

வெண்ணை போல் வழுக்கிச் சென்ற அந்த உயர்ரக கார்.. அந்த பெரிய கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டது....

வேகமாக உள்நுழைந்து தன் அறையை நோக்கி செல்ல இருந்தவனை தடுத்து நிப்பாட்டியது அந்த கம்பீர குரல்....!!

" நில்லு விக்ரம்.. நேத்து மதியம் வெளியே கிளம்பி போனவன் இப்பதான் வீட்டுக்கு வர.. என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல?? எங்க போன அப்படி??", என்று அதட்டினார் விக்ரமின் தாயார் சங்கவி.....

நேத்து மதியம் ஆக்ரோஷமாக கிளம்பி போய் என்ன செய்வது என்று அறியாமல் தண்ணி அடிச்சுட்டு மறுநாள் காலையில போதை தெளிந்ததும் அவளின் கல்யாணத்தை நிப்பாட்ட வேண்டும் என்று மண்டபத்தை நோக்கி சென்றது முதல்... அவளை தாலி கட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அந்த பண்ணை வீட்டில் அடைத்து வைத்திருப்பது வரை மனக்கண் முன் ஓட்டி பார்த்தான் ஒவ்வொரு காட்சியாக......!!

நடந்த இத்தனை விஷயத்தையும் அவரிடம் சொல்லவா முடியுமா அவனால்?? இல்லை சொன்னால் தான் அவர் எளிதில் ஏற்றுக் கொள்ளும் ராகமா?? கிடையவே கிடையாது...

அவரின் குணம் பற்றி நன்றாக அறிந்தவன் விக்ரம்.. அதனால் அவனுக்கும் தேவசேனாவிற்கும் நடந்த திருமணத்தை பற்றி அவன் மூச்சு கூட விடவில்லை... !!

நடந்ததை சொன்னால் வண்டி எந்த பக்கமாக திரும்பும் என்று அவனுக்கே தெரியாது.. ஒருவேளை கடுப்பாகி அவனை போட்டு துவைத்து எடுத்து விட்டால் என்ன செய்வது?? எப்படி எடுத்துக் கொள்வார் தன் தாய், இந்த விஷயத்தை?? என்பதெல்லாம் யோசித்துப் பார்த்துவிட்டு அவன் உண்மையை மறைத்து விட்டான்...

" அது.... என்னோட பால்ய சிநேகிதன் ஒருத்தனை பாக்க போனேன் அம்மா.. அதனாலதான் என்னால வீட்டுக்கு வர முடியல.. அவங்க வீட்டிலேயே தங்கிட்டேன்..", என்று வாய் கூசாமல் பொய் சொன்னவன்.. அடுத்த நொடியே அவர் பதிலுக்காக காத்திராமல் வேகமாக தன் அறையை நோக்கி சென்று விட்டான் விக்ரம்....

மகனின் இந்த நடவடிக்கையை கவனித்த சங்கவி சிறு புருவ சுழிப்புடன் யோசிக்க தொடங்கினார்..

" என்ன ஆச்சு இவனுக்கு?? கொஞ்ச நாளாக இவனோட நடவடிக்கை சரியில்லையே.. எப்ப பாத்தாலும் எதையோ யோசிச்சிட்டே இருந்தான்.. என்ன ஏதுன்னு கேட்டா அதுக்கும் பதில் சொல்றதில்ல.. எப்பவும் இல்லாத வழக்கமா புதுசா என்னென்னவோ பழக்கத்தை கொண்டு வந்திருக்கான்.. எங்கேயும் வெளியே போய் யார் வீட்டிலும் தங்காதவன்.. அது எப்படி நேற்று மட்டும் நண்பன் வீட்டில் போய் தங்குவான்?? எதுவும் நம்பற மாதிரியே இல்லையே??", என தன் மகனை பற்றி கவலைப்பட்ட வண்ணம் சோபாவில் அமர்ந்திருந்தார் சங்கவி..

அடுத்த சில மணி நேரத்தில்...

இன்னொரு கார்... பார்க்கிங் ஏரியாவில் வந்து நிற்க... அதிலிருந்து கம்பீரமாக இறங்கி நடந்து வந்தார் தீபன் சக்கரவர்த்தி.. விக்ரமின் தந்தை..!!

எப்பொழுதும்.. தான், உள்ளே நுழைந்தால் வாங்க என்று அன்போடு அழைத்து.. வந்தவுடன் கையில் ஒரு டம்ளர் மோரை அக்கறையாக குடுத்து பருக சொல்லும் தன் மனைவி.. இன்று என்னவோ சோகமாக அதுவும் சிறு யோசனையுடன் சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டவுடன் இவருக்கும் சற்றுக் குழப்பமாக இருந்தது...!!

" அம்மாடி சங்கவி.. என்ன.. யோசனை பலமாக இருக்கு??", என்று தன் மனைவியை பார்த்து கேள்வி கேட்டவர் கையில் கொண்டு வந்திருந்த சூட்கேஸை சோபாவில் வைத்துவிட்டு.. தன் மனைவியின் அருகில் அமர்ந்து கொண்டார்..

அவர் இப்போது பேசியதையோ அல்லது அவரின் அருகில் அமர்ந்ததையோ கொஞ்சம் கூட கவனிக்காமல் அப்படியே யோசனையில் மூழ்கிய வண்ணம் இருந்தார் சங்கவி...

அதன் பிறகு தான் அவரின் தோளை தொட்டு.." சங்கவி , என்ன ஆச்சு உனக்கு??", என்று சற்று சத்தமாகவே அவர் கேட்கவும் தான் அவருக்கு சுயநினைவு திரும்பியது..

" என்னங்க... எப்ப வந்தீங்க??"

" சரியா போச்சு போ.. இந்த லட்சணத்தில் நீ இங்க உக்காந்து இருந்தா.. இந்த வீட்டுக்குள் திருடன் வந்தால் கூட உனக்கு தெரியாது.. அப்படி என்ன தீவிர யோசனையில் இருக்க??"

" நம்ம பையன் விக்ரம் இருக்கான் இல்ல"

" ஆமா இருக்கான் அவனுக்கு என்ன??"

" அவனோட நடவடிக்கை கொஞ்சம் கூட சரியில்லங்க கொஞ்ச நாளாவே", என்று கவலையுடன் அவர் கூற..

" ஏன் அவனுடைய நடவடிக்கைக்கு என்ன குறைச்சல்?? ஒழுங்கா தானே தொழிலையும் கவனிக்கிறான் அப்புறம் என்ன??"

" நான் தொழில் பத்தி இப்ப பேசல.. அவன் வீட்டில் நடந்து கொள்ளும் முறை சரியில்லன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்"

" அப்படி என்ன பண்ணிட்டான் அவன்??"

அவன் இரண்டு நாட்களாக சரியாக வீட்டிற்கு வராமல் இருந்ததும்.. இப்பொழுது அவன் நடந்து கொள்ளும் விதத்தையும் பொறுமையாக எடுத்துக் கூறினார் சங்கவி..

" அவன் தான் சொல்லிட்டானே ஏதோ நண்பன் வீட்டுக்கு போனான் என்று.. அப்புறம் என்னம்மா உனக்கு கவலை?? நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இருக்காது சும்மா கவலைப்பட்டுட்டு இருக்காத சரியா??", அக்கறையாக தன் மனைவியிடம் கூறி அவரை சமாதானப்படுத்தி விட்டு...அவரும், அவர் இருக்கும் அறையை நோக்கி சென்று விட்டார்...

தொழில் செய்கிறேன் பேர்வழி என்று வெளியில் சென்று வரும் ஆண்களுக்கு வீட்டில் இருக்கும் நிலவரம் சொன்னால் புரியாது.. அப்படியே புரிந்தாலும் அவர்களுக்கு இருக்கும் டென்ஷனில் இதை கண்டு கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான்.. இவரிடம் இது பற்றி மேலும் பேசி எதுவும் பிரயோஜனம் இல்லை.. நாம் தான் அவனை கவனிக்க வேண்டும்.. என்று மனதிற்குள் கூறிக்கொண்ட சங்கவி, ஒரு முடிவுடன் அங்கிருந்து எழுந்து சென்றார்....!!

தனது அறைக்கு சென்றவன் உடனே ஒரு குளியலை போட்டுவிட்டு அவசர அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப எண்ணினான் விக்ரம்..

ஆளுயற கண்ணாடி முன் நின்று தன் தலையை சீவிக் கொண்டிருந்தவன்.. எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை தன்னை கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டான்..

பிளாக் கலர் டி-ஷர்ட் அணிந்தவன் அதற்கு பொருத்தமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தான்..

ஒரு முறை பார்த்தவுடன் ஆளை எடை போடும் அளவிற்கு தீர்க்கமாக காட்சி அளித்தது அவனின் கண்கள்... இளம் வயது பெண்கள் ரசிக்கும் வண்ணம் அழகிய பியர்ட் வைத்திருந்தான் முகத்தில்.. அழுத்தமாக மூடியிருந்த அவனின் இதழ்கள் இம்மியளவு கூட சிரிப்பதற்கு மிகவும் யோசித்தது...!!

ஒருமுறை அவனை பார்த்த இளம் பெண்கள் மறுமுறை திரும்பி பார்க்காமல் சென்றதில்லை.. இளம் பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு கம்பீரமான அழகிய தோற்றத்துடன் காட்சியளித்தான் அவன்..!!

அதே சமயம் எந்த பெண்ணாலும் அவனை நெருங்கவும் முடியாது அந்த அளவிற்கு அவன் முகத்தில் கடுமையையும் தேக்கி வைத்திருந்தான் அவன்...!!

சுருக்கமாக சொன்னால் சுட்டெரிக்கும் தீ கங்குகள் போன்ற விழிகளோடு.. இளம் பெண்களின் மனதை குளிர்விக்கும் வண்ணம் அழகிய ஆண் மகனாக திகழ்ந்தான்,
விக்ரம் சக்கரவர்த்தி❤️‍🔥❤️‍🔥

தீயாக இவன் இருக்க.. தூறலாக அவள் வருவாளா,இவனை நனைக்க??!!💕💕

- தொடரும்....
 
Author: praba novels
Article Title: அத்தியாயம் 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Aug 17, 2025
Messages
92

Ennada nadakkuthu inga 🤯
 
Top