அத்தியாயம் 4

Joined
Aug 19, 2025
Messages
10
அத்தியாயம் 4:

மாவலியின் கட்டளைக்கு இணங்க ஈஸ்வர், கனி இருவரையும் அழைத்துக் கொண்டு விருந்தினர் அறைக்கு சென்றாள் ரிதி..

அவளின் நடையையும் விடாமல் தன் மூளைக்குள் பதிவு செய்து கொண்டே சென்ற ஈஸ்வர், " க்கும்..." என குரலை செருமி, " ஹே பொண்ணே உன் பெயர் என்ன??" என கணீர் குரலில் கர்ஜனையாய் தமிழில் கேட்க,

அவளோ கேட்டுக் கேட்காதது போல அமைதியாய் சென்றாள்...

அதில் சினந்த ஈஸ்வர், " சரியான திமிரு பிடிச்சவ போல இருக்கு.. இவள.." என ஏதோ சொல்ல வர,

கனியோ அவன் அருகே சென்று, " அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியாது போல சார்.. இதோ இவரை கேட்க சொல்லலாம்." என கூறி " மிஸ்டர் சஜின்.. அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் பேரு கேட்டு சொல்லுறீங்களா??" என கேட்டான்....

அதற்கு சரியென தலையசைத்த சஜின் ரிதியிடம், " நிக்கு பெண் குட்டி.. நின்ட பேர் எந்த பறைஞ்சு கொடுக்கு.." என மலையாளத்தில் கேட்க,

அவளோ ஈஸ்வரை மட்டும் கோப பார்வை பார்த்து, " ரிதி சம்ருதா.." என கூறி விட்டு முன்னே சென்று விட்டாள்...

அவளை பின் தொடர்ந்த ஈஸ்வர் சில நிமிடங்கள் வரையும் அமைதியாகவே வர, அவனின் அமைதியில் சந்தேகித்த ரிதியோ ஒரு கணம் அவனை திரும்பி பார்த்தாள்....

சில நொடிகள் இருவரின் விழிகளும் சுழன்று பார்வை பரிமாற்றங்கள் நிகழ்ந்து அமைதியாய் இருக்க,

அதில் கண்டு ரிதியை அழைத்த கனியன்,
" எம்மா தங்கச்சி ரொம்ப பசிக்குது மா.. இங்க சாப்பிட எங்க போகணும்??" என கேட்டவன் தலையில் அடித்து, " ச்ச அவளுக்கு தான் தமிழ் தெரியாதே..." என கூறிக் கொண்டு அவள் முன் நின்று சைகை மொழியில் தன் பசியை உணர்த்த,

அதில் தலையை மட்டும் அசைத்தவள்,
" இவிட நிக்கு.. ஞான் நிங்களுக்கு பாக்ஷணம் கொண்டு வன்னு தராம்.." என கூறி கொண்டு அப்போதும் ஈஸ்வரை முறைத்து விட்டு தான் சென்றாள் ரிதி...

மூவரும் உள்ளே நுழைய, கால் மேல் கால் போட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்த ஈஸ்வர், " கனி " என அழைத்து " நாம இங்க இருக்க விஷயம் கொஞ்சம் கூட மீடியாவுக்கு லீக் ஆக கூடாது.. நம்ம மொபைல் ரெண்டையும் ஏரோப்ளம் மோட் போட்டு ஆஃப் பண்ணி வை.. பத்து நாளைக்கு மொபைல் எடுக்கவே கூடாது..." என கூறிட,

அவனோ அதிர்ச்சியில் , " ஆனா சார்.. இங்க இடமெல்லாம் அட்டகாசமா இருக்கு.. என்னை போட்டோ எடுக்க நான் என்ன பண்ணுறது??" என வழக்கம் போல தன்னை மறந்து இயல்பாய் கேட்டு விட,

அதில் சஜின் சிரிக்க, அவனை முறைத்த ஈஸ்வர், " டூ வாட் ஐ சே இடியட்..." என திட்டிக் கொண்டே கண்களை மூடி சோபாவில் சரிந்து அவளின் நினைவுகளில் மூழ்கினான்..

அவள் விழிகள் பொழிந்த அசைவுகளை எண்ணிக் கொண்டே தன் படத்திற்கு தேவையான விழி அசைவுகளை அவளை வைத்து கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு நொடி திகைத்து போனான்..

எனில் அத்தனை பாந்தமாய் பொருந்தி இருந்தது அவளுக்கு.. அதில் மூழ்கி போனவன் அடுத்தடுத்து அவளுக்கு கற்று கொடுக்க வேண்டிய விஷயங்களை சிந்திக்க துவங்கிட,

அவளை பற்றி சிந்தித்ததாலா இல்லை தான் ஆத்ம தேடலான படத்தின் சிந்தனையோ எதுவோ ஒன்று அவன் பசியை மறக்க செய்து அவனை அதிலேயே லயிக்கவும் செய்தது சில மணி நேரங்கள்...

அவனையே பார்த்துக் கொண்டிருந்த கனியோ, " இவர் எப்போ இந்த இடத்தை பத்தி தெரிஞ்சுகிட்டாரு?? எப்படி இவ்வளவு சீக்கிரம் இங்க தங்க அனுமதி வாங்கினாரு?.. ச்ச நம்ம யோசிக்கிற நேரத்துல இவர் செஞ்சு முடிச்சுடுறார்.. அதான் டாப் 3 டைரக்ட்ரா இருக்காரு போல.. இவர் கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..." என தனக்கு தானே பேசிக் கொண்டே அவ்விடத்தை சுற்றி வந்தான்...

அதற்குள் ரிதி வேறொரு பெண்ணின் உதவியோடு உணவை அங்கு கொண்டு வந்து வைத்து விட்டு நிற்க,

அவள் கொலுசொலி கேட்டு கண்களை திறந்து சொடக்கிட்டு அவளை அழைத்த ஈஸ்வர், " மிஸ் ஆர் மிஸஸ் ரிதி??" என நக்கலாய் கேட்டான்....

அதில் கோபம் கொண்டவள் அவளோ பல்லை கடித்துக் கொண்டு,
" மிஸ் ரிதி சம்ரிதா சேது மாதவன்..." எனக் அழுத்தி கூறி விட்டு வெளியே செல்ல போக,

அவனோ மீண்டும் சொடக்கிட்டு, " டூ யூ நோ இங்கிலீஷ்??" என கேட்டான்....

அவன் முகம் பார்த்து நேருக்கு நேர் நின்று கண்களை பார்த்து பேசும் போது அவன் விழிகளில் வீச்சை தாங்க முடியாதவள், கண்களை அழுந்த மூடி திறந்து, " குறைச்சு மாத்திரமே அறியும்.." என கூறிக் கொண்டு நின்றாள்...

அவள் விழிகளையே பார்த்த ஈஸ்வர்,
" தென் ஓகே.. யூ கேன் கோ நௌ.." என தோள்களை குலுக்கி கூறி விட்டு ஷோபாவில் சாய்ந்து அவளையே பார்த்தான்..

அவள் கொண்டு வந்திருந்து சாதம், கத்தரிக்காய் குழம்பு, மாங்காய் பச்சடி, இஞ்சிப்புளி என அனைத்தையும் பார்த்த கனிக்கு பசி வயிற்றை கிள்ள,
" சார்..." என அவன் அழைக்க,

சட்டென எழுந்த ஈஸ்வர், " சேர்வ் மீ மிஸ் ரிதி" என கூறிக் கொண்டு உணவு மேஜையில் அமர்ந்தான்...

கனியின் பசி எனும் உணர்வையும், விருந்தோம்பல் பண்பையும் மனதில் கொண்டவள் கோப தாபமின்றி மூவருக்கும் சமமாய் பரிமாற துவங்கிட, அதில் ஈஸ்வர் தான் திகைத்து போனான்..

எனில் அவன் எண்ணியதோ அவள் பரிமாறாமல் ஏதேனும் கோபத்தில் பேசுவாள்.. அதில் சில தகவல்களை பெற்று விடலாம் என,

எனில் அவளோ விருந்தாளிகளுக்குப் படைக்கப்படும் உணவு கடவுளுக்கு கொடுப்பதற்கு சமம் என்பதை முழுதாய் உணர்ந்து மூவருக்குமே சமமாய் உணவளித்து மனதார பரிமாறினாள்..

ரிதியின் மற்றொரு பரிணாமத்தை கண்ட ஈஸ்வர் மனதுக்குள், " இவ நடிக்கிறாளா?? இல்ல நிஜமாவே இவ இப்படித்தானா??" என சிந்தித்துக் கொண்டிருக்க,

இன்னொரு மனமோ, " வாட் எவர்.. நமக்கு தேவை அவ நடிக்கணும் அவ்வளவு தான்.. அவளை பத்தின ஆராய்ச்சி நமக்கு தேவை இல்லை..." என மற்றொரு சிந்தனையை கொடுக்க,

சதிராடிக் கொண்டிருக்கும் அவன் மனதிற்கு " ஷட் அப்" என ஒற்றை வார்த்தையில் கடிவாளமிட்டவன், பெயருக்கு உண்டு முடித்து எழுந்து சென்று விட்டான்...

கனி தான் அவளிடம், " சாப்பாடு சூப்பர்.. யார் சமையல்??" என தமிழில் கேட்க,
அதை சஜின் மொழி பெயர்க்க,

அதை கேட்டு இதழ்கள் கூட விரியாமல் லேசாக புன்னகைத்த ரிதி, " எண்ட சகோதரியானு.." என கூறி விட்டு,
" ஏதெங்கில் அவஷியமுண்டெங்கில் விளிக்கிக.." என கூறியவள் ஈஸ்வரை திரும்பியும் பார்க்காமல், மற்ற இருவரிடமும் சிநேகமாய் புன்னகைத்து விட்டு சென்றாள்...

ஈஸ்வருக்கோ அவள் தன்னிடம் மட்டும் வித்தியாசமாக நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சினந்தவன் , " பெரிய அழகின்னு திமிரு.. என் கிட்ட மட்டும் இப்படி நடந்துக்குறா பாரு?? இரு டி.. இதுக்கெல்லாம் சேர்த்து ஒரு நாள் இருக்கு உனக்கு??" என திட்டிக் கொண்டே சென்றவன், தனியறை ஒன்றிற்குள் நுழைந்து தன் குறிப்பேடு புத்தகத்தை எடுத்தவன், எதையோ சிந்தித்து முடித்து தான் எழுதியிருந்த ஒரு சில வரிகளை அடிகோடிட்டு கொண்டிருந்தான்..

இங்கோ ரிதியை உள்ளே அழைத்த மேனஜர் மாவலி, " இங்க பாரு ரிதி.. இவரை பத்தி நான் செய்தித்தாள், அப்புறம் கூகுள் இப்படி எல்லாத்திலும் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.. இவர் நிஜமாவே ஒரு பெரிய டைரக்டர்.. இவர் படம் எல்லாமே வெற்றி தான்.. இவருக்காக ஒரு ஹீரோயின் என்னன்னவோ எல்லாம் பண்ணி இருக்காங்க.. தமிழ்நாட்டில் பேரும் புகழும் இவருக்கு நிறையப் இருக்கு..

இவரை நம்பி உன்னை அனுப்புவதில் எங்களுக்கு எந்த பயமும் இல்ல.. கூடவே நீ நடிக்க ஆரம்பிச்சா ஒரு படத்துக்கு ஒரு கோடி கூட கிடைக்கும்.. அப்போ நம்ம ஹாஸ்பிடல்ல இன்னும் கொஞ்சம் விரிவடைய செய்ய வைக்க முடியும்.. ஒரு கார் பார்க்கிங்.. ஒரு தோட்டம், ஒரு குழந்தைகள் ஆசிரமம்.. இப்படி நிறைய உருவாக்கலாம்..

அதே நேரம் நீ ஆசைப்பட்ட மாதிரி இங்க உள்ளவர்களை உன்னை மாதிரியே அன்போட கவனிக்க நிறைய பேரை வேலைக்கு வைக்கலாம்..

அப்புறம் உன் தங்கை அதிதி.. அவளுக்கும் நல்ல விதமான படிப்பு, வாழ்க்கை எல்லாத்தையும் தாராளமா கொடுக்கலாம்.. கொஞ்சம் யோசி ரிதி..." என விரிவாக அவளிடம் அரைமணி நேரமாய் மலையாளத்தில் பேசி கொண்டிருந்தார் மாவலி..

அவளும் தான் அறிவாளே.. மாவலி சாதாரணமாகவே ஒரு பணத்தாசை பிடித்த ஜீவன் என்று.. அதையும் தாண்டி அவரது தீவிரமான எண்ணம் என்னவோ ரிதியை திருமணம் செய்தோ அல்லது ஏதேனும் சரியான காரணம் கூறியோ அங்கிருந்து விரைவாய் வெளியே அனுப்புவது தான்.. அதற்கான காரணமும் உண்டு...

அதை எண்ணிக் கொண்டு மாவலி பேசி கொண்டிருந்ததை கேட்ட ரிதி, " ஷெரி.. சாரே ஞான் ஆலோசிச்சிட்டு பறையாம்..." (சிந்தித்து சொல்கிறேன்) என கூறிவிட்டு வெளியே சென்றவள் பெரிதாய் அதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் தன் பிடியில் நிலையை நிற்கும் எண்ணத்தோடு அங்கிருந்து சென்றாள்...

அங்கு பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, களை செடிகளை பறித்து வீசி, வயலின் மடைகளுக்கு தண்ணீர் மாற்றிக் கொண்டும் சுத்தம் செய்து கொண்டிருந்தார் வீரய்யா...

அவரோடு சேர்ந்து ரிதியும் சுத்தம் செய்ய துவங்கிட,

தூரத்தில் மாடியின் பால்கனியில் நின்று அவ்விடத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் பார்வை சரியாய் அவள் மீது விழுந்தது.....

தன் சிவப்பு நிற தாவணியை இழுத்து இடையில் சொருகி விட்டு, தன் நீண்ட கூந்தலை வளைத்து பிடித்து ஒருபுறமாய் கொண்டை போட்டு கொண்டு தலையை ஒரு முறை சிலுப்பிக் கொண்டவள், கையில் மண் வெட்டியோடு தண்ணீர் பாயும் வாழை தோப்பிற்கான மடையை, தென்னைக்கு மாற்றி விட்டு வயல் வேலையை செய்து தன் தாத்தாவிற்கு உதவிக் கொண்டிருக்க,

சில நிமிடங்கள் வரையிலுமே கூட ஏதோ ஓர் உறுத்தல் தோன்ற, சட்டென திரும்பி பார்க்க, சாட்சாட் அவனே.. ஈஸ்வர் அவனே தான் நின்றிருந்தான்...,


அவனை சரியாய் பார்த்து விட்டவள் " ஈ ஆள் ஷெரியன்ன ஆளான்னு தோணுன்னில்லா...( இந்த ஆள் சரியான ஆள் மாதிரி தெரியல.)" என திட்டிக் கொண்டே அதிவேகமாய் தன் வேலையை முடித்துக் கொண்டு அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றாள்....

இங்கோ ஈஸ்வர் அவன் சிந்தனையில் ஓடுவதெல்லாம் அவளின் ஒவ்வொரு அசைவையும் முழுதாய் மனதில் ஏற்றிக் கொண்டு, அவளின் சிறப்பான அசைவினை வைத்து தன் படத்திற்கு தேவையான சில சில மாற்றங்களை செய்ய வேண்டி தான்..

எனில் அவள் புரிந்து கொள்வதோ, அவன் கண்களில் வழிவது மோகம் எனவும், தன்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் தவறான நபர் தான் ஈஸ்வர் எனவும் தான்.....

அவன் கெட்ட நேரமோ என்னவோ இரும்பாய் இறுகி இருந்த அவன் கண்கள், அவள் மீது மட்டும் ரசனையாய் படிந்து தொலைக்கிறது.. இது இயக்குனருக்கே உண்டான எண்ணங்களோ? இல்லை பல நாட்களாக தான் வரைந்த விழிகளோடு வாழ்ந்ததால் அதன் மீது கொண்ட ஈர்ப்பா என்பது அவனின் சிவனுக்கே வெளிச்சம்...

அவள் சென்ற பின் தோள்களை குலுக்கிக் கொண்டு தன் வேலையை தொடர செய்தவன் கண்கள் ஏனோ
மீண்டும் அவளை தேடியே சென்றது..

ஈஸ்வர் மனதில் இருக்கும் ரிதியின் மீதான எண்ணம் தான் என்ன???
 

Author: நீல தூரிகை
Article Title: அத்தியாயம் 4
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top