அத்தியாயம் 3

Joined
Aug 19, 2025
Messages
10
அத்தியாயம் 3:


காரில் அமர்ந்து எதிரே நின்று பேசி சிரித்துக் கொண்டிருந்த ரிதியின் செயல்களை அணுவணுவாக உள்வாங்கிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்..

கண் சிமிட்டி அவள் சிரிக்கும் விதம் பேரழகு.. மற்றவராய் இருந்திருந்தால் அவளின் குட்டி குட்டி அசைவுகளையும் தலை சாய்த்து ஆர்வமாய் பார்த்திருப்பார்கள்..

எனில் ஈஸ்வருக்கோ அவளின் மழலை குணம், அழகு என எதுவும் அவன் மனதை துளியும் ஈர்க்கவே இல்லை.. அவன் கண்கள் ரசித்தது என்னவோ அவளின் விழிகள் காட்டும் நயனங்களை தான்... ஒரு இயக்குநராக அவளின் முக பாவங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டவன் அவளை இன்னும் இன்னும் ஆராய துவங்கினான்..

இங்கோ ரிதி தன் எதிரே கனியோடு நிற்கும் மலையாள இளைஞனிடம் ஏதோ பேசி சிரித்து விட்டு பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு கொண்டு அங்கிருந்து தன் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு செல்ல,

அவளை பற்றிய தகவல்களை அறிய முழுதாய் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அவளை பின்தொடர துவங்கினான் ஈஸ்வர்...

கனியனோ அவளை பற்றிய பல விஷயங்களை அந்த வயதான பெண்மணியிடம் கேட்டு அறிந்து கொண்டு ஈஸ்வரை தேடி செல்ல,

அந்தோ பாவம் அவனோ எப்போதோ அவளை தேடி சென்று விட்டான்..

கனியன் உடனே தன் கைபேசியை எடுத்து ஈஸ்வருக்கு அழைக்க,

அதை எரிச்சலாய் ஏற்றவன், " லொகேஷன் ஷேர் பண்ணுறேன் வந்து சேரு.." என கூறி அழைப்பை துண்டித்து விட்டான்...

தலையில் அடித்துக் கொண்ட கனி, "மொழி தெரியாத ஊரில் தனியா இவன் என்ன செய்வான் கொஞ்சம் கூட நினைப்பே இல்லாம போறாரு பாரு.. ஆண்டவா நானா விரும்பி தான் இவர் கிட்ட வேலைக்கு வந்தேன்.. அதுக்கு இப்படி வச்சு செய்யுறியே?? இது உனக்கே நல்லா இருக்கா??" என வாய்விட்டே புலம்பிக் கொண்டு,

பின் தான் அழைத்து வந்த நபரை கூட்டிக் கொண்டு ஈஸ்வரை சென்றான் கனியாளன்...

இங்கோ ஈஸ்வரின் கார் ரிதியின் மிதிவண்டியை மெதுவாக பின்தொடர்ந்து சென்றது..

செல்லும் வழி நெடுக ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள் மட்டுமே இருக்க, சிறிய சாலையின் இருபுறமும் பூக்களும், செடிகளும், மரங்களும் அவ்விடத்தையே அழகாய் மாற்றிக் கொண்டிருந்தன...

இயற்கையின் வளங்கள் மொத்தமும் சூழ்ந்துள்ள வனப்பகுதி போல் இருந்த சாலையை கடந்து சென்று கொண்டிருந்தாள் ரிதி...

ரிதி அவ்வப்போது கீழே இறங்கி, ஓணம் கொடி என அழைக்கப்படும் மஞ்சள் நிற சிறிய பூக்களை கொண்ட கொடியை பறித்துக் கொள்வதும், வேற சில சிவப்பு நிற செம்பருத்தி பூக்கள், மஞ்சள் நிற ஆவாரம் பூ, என பல பூக்களையும், பிரண்டை, கற்பூரவள்ளி, தூதுவளை, போன்ற மூலிகை செடிகளையும் பறித்து தன் பையில் போட்டுக்கொண்டே சென்றாள்...

நடுநடுவே இறங்கி பூக்களை எடுத்து தேனை உறிஞ்சி பார்ப்பதும், அதை எடுத்து ஊதி விட்டு விளையாடுவதுமாக மெதுவாய் சென்று கொண்டு, வழி நெடுகிலும் உள்ள சில வீடுகளில் இருந்த குழந்தைகளை கொஞ்சி விளையாடி கொண்டே செல்ல,

அவளின் குழந்தை குணத்தையும் அவள் கன்னம் குழி விழ சிரித்து, கண்களை உருட்டி மிரட்டி விளையாடும் அழகையும் ரசிக்க வேண்டியவன் மனமோ மாறாக அவள் செயலை கண்டு எரிச்சல் தான் அடைந்தது...

அவளை பார்த்துக் கொண்டே இருந்த ஈஸ்வரோ, " ஷிட்.. இதென்ன பழக்கம்.. ரொம்ப தான் குழந்தை மாதிரி நடிக்கிறா... சீக்கிரம் போய் இவ வீடு எங்க, என்னன்னு விசாரிச்சா தானே இவளை அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டு போக முடியும்" என கோபத்தில் திட்டி தனக்கு தானே பேசிக் கொண்டிருக்க,

அவளோ அவ்விடத்தை ரசித்து கொண்டே மிதிவண்டியை செலுத்திக் கொண்டிருந்தாள்...

அதில் கோபம் அதீதமாக ஆளில்லா ஓர் சாலையில் அவள் மிதிவண்டியை தடுத்து நிறுத்தி காரில் இருந்து இறங்கிய ஈஸ்வர், அவளை நோக்கி சென்று, " ஹே.. உன் வீடு எங்க?? உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.. " என தமிழில் பேச,

அவளோ அவனை வெகுவாய் முறைத்துக் கொண்டு, " எத்ர அகங்காரமானு நினக்கு?? நீ என்னே பின்தொடருணமாயிருக்கு?? ஷரியாய் மடங்குக்கா... வேண்டா.. ஆத்யம் ஞான் நின்ன பூகிக்கும்!!" ( என்ன திமிர் உனக்கு?? நீ என்ன இன்னும் பின்தொடருர?? ஒழுங்கா போயிடு.. இல்ல அடிச்சுடுவேன்...) என இடையில் முந்தானையை சொருகி கொண்டு, ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரித்து அவனுக்கு நேர் எரிக்கும் பார்வையில் நின்று மிரட்டிக் கொண்டிருந்தாள் ரிதி...

முதல் முறையாய் ஆடவன் விழிகளோ அவள் புடவை சொருகிய இடையை காண, ஏதோ ஓர் உணர்வால் ஈர்க்கப்பட்டு, எச்சில் கூட்டி விழுங்கி தொண்டைக்குழி ஏறி இறங்க நின்றிட,

அவனின் கண்கள் செல்லும் இடத்தை கண்டவள் அதீத கோபத்தில், " ஏடா பட்டி.. நின்ன..?? " என அடிக்க கைகளை ஓங்கி நின்றாள் ரிதி....

அவள் கைகளை தடுத்து பிடித்த ஈஸ்வர்,
" ஹே ஐ டோண்ட் நீட் யுவர் பாடி.. ஐ ஜஸ்ட் நீட் யூ ஒன்லி. உன் வீடு எங்க இருக்கு.. உன் ஃபேமிலி கிட்ட கொஞ்சம் பேசணும்.. இல்ல நீயே கொஞ்சம் பொறுமையா இரு உன் கிட்டயே பேசிடுறேன்.. ப்ச்.. ஐ டோண்ட் நோ மலையாளம்.. குட் யூ அண்டார்ஸ்ட்டான்ட் இங்கிலீஷ்??" என இடம் பொருள் பாராமல் கடமையே கண்ணாக ஈஸ்வர் அவளை கேட்க,

அவனை இன்னும் கோபத்தில் பார்த்தவள்,
" எந்தா பறையனும்?? எனிக்கு நின்னோடு சம்சாரிக்க தால்பார்யமில்லா... போய்க்கோ..." ( என்ன பேசணும்.. எனக்கு உன் கிட்ட பேச விருப்பமில்ல.. போ.), என கோபமாய் கூறி கைகளை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டு அவனை முறைத்துக் கொண்டே மிதிவண்டியை வேகமாய் செலுத்தி கொண்டு சென்றாள் ரிதி...

அவள் சென்ற பின்னும் அவளை பின்தொடர்ந்த ஈஸ்வர், கோபமாய் காரின் சீட்டை ஓங்கி குத்தி " நீ எங்க போனாலும் விட மாட்டேன் பொண்ணே.. நீ தான்.. நீ மட்டும் தான் என் கதைக்கு பொருத்தமா இருப்ப.. அந்த லிகிதாவை தோற்கடிச்சு, என் இயக்குனர் தொழிலில் ஜெயிக்க நீ மட்டும் தான் சரியான ஆள்.. சோ உனக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்..." என கோபமாய் கூறிக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்....

அங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவு கடந்த நிலையில் அங்குள்ள நுழைவு வாயிலில் நுழைந்து அவள் உள்ளே செல்ல,

அதுவோ தோட்டம், சிறிய கோவில் மிகப்பெரிய வீடு என ஆசிரமம் போன்ற தோற்றத்தில் இருந்தது..

வெளியே மஞ்சள் நிற கதவின் மேல்,
" தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனை " என கருப்பு நிறத்தில் கொட்டை எழுத்துக்களில் பெயர் பொறிக்கப்பட்டு, கீழே நெடும்புழா, திருவனந்தபுரம் என ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதப்பட்டிருக்க,

அதை கவனித்துக் கொண்டே வந்தவன் வாயிலை கடந்து அவள் உள்ளே செல்வதை கண்டு காரில் இருந்து இறங்கி அவளை பின்தொடர்ந்தான்....

உள்ளே சென்ற ரிதியோ அவனை கண்டும் காணாமல் தன் வேலைகளை தொடர தோட்டத்தின் பக்கம் சென்று விட,

அவளை தேடி வந்த ஈஸ்வரை கண்ட அவ்விடத்தின் மேலாளர் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வெளியே வந்து அவனை தடுத்து நிறுத்தி, " ஆராணு நீ.. எந்தானு நினக்க? வேண்டது?" என கேட்க,

அந்நேரம் அவனை தேடி உள்ளே நுழைந்த கனி ஈஸ்வர் அருகே வந்து நின்று மலையாளம் அறிந்த அந்த ஒருவனை பேச சொல்லி கண்களால் செய்கை செய்தான்..

அவன் பின்னே நின்றவன் மேலாளர் மாவலி நாயர் உடன் மலையாளத்தில் உரையாடி விட்டு ஈஸ்வர் பற்றிய தகவல்களை கூற,

அவரோ அவனை இங்கு அனுமதிக்கவும் கூடவே ரிதியை அழைத்து செல்லவும் முதலில் அறவே மறுத்து விட்டார்.....

அந்த இளைஞன் ஈஸ்வரிடம் அதை கூற, அவனுக்கோ கோபம் கண்ணை மறைக்க,
கனியனுக்கு கண்ணை காட்டி விட்டு வெளியே அழைத்து வந்தான்...

காரில் ஏறி அமர்ந்த ஈஸ்வர் சில நிமிடங்களில் யார் யாருக்கோ அழைத்து முடிக்க, அடுத்த அரை மணி நேரத்தில் அவனின் கைபேசிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது..

அதை எடுத்துக் கொண்டு சென்று மாவலி ராஜனிடம் காண்பித்து, " நான் ஒரு இயக்குநர்.. இங்க உள்ள இடங்களை படம் பிடிக்கவும், இங்கேயே தங்கி அதை பற்றி முழுசா தெரிஞ்சுக்கவும் உங்க கேரளா அரசிடம் இருந்து அனுமதி கடிதம் வந்திருக்கு... இதோ பாருங்க.. சோ நாங்க இங்க தங்க நீங்க அனுமதிச்சு தான் ஆகணும்.." என ஆங்கிலத்தில் கூறி அவரிடம் கைபேசியை நீட்ட,

அதை கண்ட அவரும் வேறு வழியின்றி அவனை விருந்தினர்கள் தங்கும் அறைக்கு அனுப்பிட முடிவு செய்தார்...

ஈஸ்வர் அவர் அருகே சென்று நிதானமாக,
" சார்... ஒரு நிமிஷம் நான் சொல்லுறதைக் கேளுங்க.. அந்த பொண்ணு மேல எனக்கு எந்த தப்பான எண்ணமும் இல்ல.. என்னோட படத்திற்கு இந்த பொண்ணு மட்டும் தான் சரியா இருப்பா.. ஆறு மாசமா நான் தேடின அந்த கண்கள் இவங்க கிட்ட தான் முழுமையா இருக்கு.. சோ அவங்க கிட்ட கொஞ்சம் பேசி புரிய வைங்க.. எவ்வளவு பணம் வேணாலும் தரேன்.. அத்தோட அந்த பொண்ணோட எதிர்காலமும் நல்லா இருக்கும்.. இதோ உங்க இந்த ஹாஸ்பிடலுக்கு டொனேஷன் கூட பத்து லட்சம் தரேன்.. கொஞ்சம் பேசணும் அந்த பொண்ணு கிட்ட.. வேணா நீங்களும் கூட எங்க கூடவே இருங்க.." என ஆங்கிலத்தில் அவரிடம் கூறிட,

பணத்திற்கு மதி மயங்கிய மாவலியோ ஒரு நொடி சிந்திப்பது போல பாவனை செய்து முடித்து " அவ அதெல்லாம் விரும்ப மாட்டாள்.. அவளை பத்தி எதுவும் தெரியாம நீங்க இப்படி கேட்கிறது சரியில்ல மிஸ்டர் ஈஸ்வர்.. ஆனா அவளோட எதிர்காலம் சொன்னதும் கொஞ்சம் மனசுக்கு நிறைவா இருக்கு.. சோ வெயிட் பண்ணுங்க அவளோட தாத்தாவையும் அவளையும் வர சொல்றேன்.." என கூறி விட்டு இண்டர்காம் மூலம் ரிதியை அழைத்தார்...

சில நிமிடங்களில் அலுவலகம் வந்து சேர்ந்த ரிதி அவனை கண்டு கோபமாய் வெளியே செல்ல முயல,

அவள் கைப்பிடித்து தடுத்து நிறுத்திய அவளின் தாத்தா வீரய்யா, " நிக்கு ரிதி.. முத்திர்நவர் உள்ளப்போல் நீ இங்கன பகுமானமில்லாது புறத்திறங்குறது??"
( நில்லு ரிதி.. பெரியவங்க இருக்கும் போது மரியாதை இல்லாம இப்படி வெளியே போக கூடாது..) என கூறியவர் அவர்கள் அருகே சென்றார்...

ரிதியை கண்ட கனி இதழ் விரிந்த லேசான புன்னகை சிந்திட, அவனுக்கு சினேக புன்னகையை பரிசளித்தவள் ஈஸ்வரை கோபமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்...

வீரய்யன் பின்னே நின்றிருந்த அவளின் கோபம் மிகுந்த விழிகளை தன் விழிகள் விரிய பார்த்தவன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு, அங்குள்ள சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்..

மாவலி ரிதியிடம் ஈஸ்வர் பற்றி கூறி அவள் நடிப்பதற்கு சம்மதம் கேட்க,

அவளோ அவனை வெகுவாய் முறைத்து இல்லையென கூறி தன் தாத்தாவின் கைப்பிடித்து கொண்டு ஒதுங்கி நின்றாள்...

மாவலி, வீரய்யாவிடம், " இவளை இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க சொன்னா நம்ம ஹாஸ்பிடல் பேரும், அவளோட வாழ்க்கையும் பெரிய உயரத்திற்கு போகும்.. நல்ல எதிர்காலம் அமையும் அவளுக்கு.. இத்தனை நாள் அவ பட்ட கஷ்டங்களுக்கும் செஞ்ச புண்ணியங்களுக்கும் பிரதிபலனா அவளுக்கு மிகப்பெரிய எதிர்காலம் அமைய போகுது.. அவளை நல்லா யோசிக்க சொல்லு... இவர் இன்னும் பத்து நாள் இங்க தான் இருக்க போறாரு... " என வீரய்யாவிடம் கூறி விட்டு திரும்பி,

" ஈஸ்வர் சாருக்கு தேவையான தகவல், அப்புறம் இங்க உள்ள சிறப்பான இடங்களையும் நீ தான் சுத்தி காட்டணும் ரிதி.." என கூறிக் கொண்டு ஈஸ்வரை பார்த்து கண்ணடித்து விட்டு அங்கிருந்து சென்றார்...

வீரய்யா ஈஸ்வரை பார்த்து, " அவ முடிவு தான் எல்லாம்.. நான் கட்டாயப்படுத்த மாட்டேன் சார்..." என மலையாளத்தில் கூறிக் கொண்டு செல்ல,

ரிதியோ அவனருகே சென்று, " நீ எந்து செய்தாலும் ஞான் அதிண்ட சம்மதிக்கில்லா.. அகங்காரா..." என திட்டிக் கொண்டே அவனை முறைத்து பார்த்துக் கொண்டு நடக்க,

அவள் பேசும் மொழி புரியா விடினும் விழி அசைவில் அத்தனையும் புரிந்து கொண்டவன், " உன்னை நெருங்க முடிஞ்ச என்னால உன்னை என் நிபந்தனைக்கு சம்மதிக்க வைக்க முடியாம போயிடுமா என்ன மிஸ் ரிதி??" என அவளை பார்த்து கூறி ஏளன புன்னகை சிந்தினான்...

ஈஸ்
வரின் எண்ணம் பலிக்குமா??
அவனோடு சேர்ந்து சுற்றுப் போகும் இந்த பத்து நாட்களில் அவனை அறிந்து கொள்வாளா ரிதி??
 

Author: நீல தூரிகை
Article Title: அத்தியாயம் 3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top