- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 3
" பிரபு என்ன இது " என்று அதிர்ந்து கேட்ட எழிலை பயத்தோடு பார்த்தவர்
" தம்பி இப்டி நடக்குறது புதுசு இல்ல. ஒவ்வொரு அம்மாவாசை இரவுக்கும் இந்த மாதிரி ஒரு உடல் கொடூரமா இருக்கும் " என்று சொல்லியதை எழிலால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
" இந்த விஷயம் போலீஸ்க்கு தெரிவிச்சிங்களா " என்று எழில் கேட்க தயங்கியவர்
" அது வந்து உங்க அனுமதி இல்லாமல் இத நாங்க வெளிய சொல்ல கூடாது " என்றதில் கோவமானவன் போனை எடுத்து அருகில் இருந்த காவல் துறைக்கு தகவல் குடுத்தான்.
மருத்துமனை முன் போலீஸ் இருப்பதை கவனித்தவள் உள்ளே செல்ல எதிரில் வந்த சடலத்தை கண்டு அரண்டு போனாள் ஆத்மி.
போலீசிடம் நடந்ததை விளக்கி கொண்டே வந்த எழில் அதிர்ந்து நின்றவளையும் அவள் பார்வை வெறித்த திசையையும் கண்டு ஆத்மியை நோக்கி வந்தான் எழில்.
" சார்... இங்க நடந்தது எங்களுக்கு மர்மமாக தான் இருக்கு. இதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. சிசிடிவி புட்டேஜ்ஜூம் உங்களுக்கு குடுத்துருக்கேன். இனி கண்டு புடிக்கிறது உங்க பொறுப்பு " என்று எழில் கொஞ்சம் பணிவாக கூற
" சார் எங்களால முடிஞ்சத நாங்களும் செய்யுறோம். எந்த நேரத்துக்கும் நீங்க எங்களுக்கு ஒத்துழைக்கணும் " என்றவர் சென்று விட சிலையாய் இருந்தவளின் அருகில் வந்தான் எழில்.
" ஆத்மி " என்ற எழிலின் அழைப்பில் அவன் முகம் பார்த்தவள் " சார் சார் இது அந்த ஆவியோட வேலை தான் " என்று சொல்லியதையே திருப்பி கூற அவளை அழைத்து கொண்டு அவன் அறைக்கு சென்றான் எழில்.
அவளுக்கு குடிக்க தண்ணீர் குடுத்து நிதானமாக்கியவன் " ஆத்மி ஆவி பேய்னு எதும் இல்ல. தேவை இல்லாம உன் மனச வருத்திக்காத " என்று மனநல மருத்துவராய் அவளை ஆறுதல் படுத்த கேளாதவள்
" இல்ல சார். அன்னைக்கு நா ஓடிவந்து உங்க மேல மோதினதுக்கு ஏன்னு கேட்டிங்கள. அப்போ என் பின்னாடி ஒரு தலை மட்டுமே உள்ள உருவம் தொரத்தி வந்துச்சி. இப்போ கூட நம்பிக்கை இல்லனா நீங்களே அந்த சிசிடிவி புட்டேஜ் செக் பண்ணி பாருங்க வாங்க " என்றவள் எழிலை கையோடு இழுத்து சென்றாள்.
அன்று ஆத்மி லிப்ட்டில் மாட்டிக்கொண்ட பதிவை ஓட விட அதை பார்த்த எழில் மிரண்டு போனான். ஆம் ஆத்மி மூன்று என அழுத்தி அமைதியாக நிற்க ஏதோ ஒன்று ஏழை அழுத்தியது
இம்முறை ஆத்மி பெரிதாக அதிர்ந்து போகவில்லை. ஆனால் எழிலோ மிரண்டு போனான். அதன் பின் பதிவில் ஆத்மி பதட்டத்தோடு லிப்ட்டுக்குள் நுழைந்து பட்டனை தட்ட அது ஒர்க் ஆகாமல் திரும்ப அவள் வெளியே ஓடுவதை கண்ட எழிலால் அவளை நம்பாமல் இருக்க முடியவில்லை.
மீண்டும் நேற்று நடந்த அனைத்தையும் ஓட விட பிணவறையில் அடர் கருப்பு உருவம் போக வீடியோ ஆப் ஆகி வெள்ளை திரை தெரிந்ததால் மிரண்டு போனான் எழில்.
" ஆத்மி இது எல்லாம் என்னால நம்ப முடியல " என்றவனை பார்த்தவள்
" அறிவியலையும் தாண்டி அமானுஷ்யங்களும் இருக்கு சார். எப்டி கடவுள் இருக்கோ அதே மாதிரி ஆவிகளும் இருக்கு. அதற்கு இப்போ நீங்க பார்த்ததே ஒரு சாட்சி. இப்போ இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற அந்த ஆவிய எதாவது பண்ணுல அப்றம் இறந்து போன சடலம் இருக்குறதுக்கு பதிலா நம்ப யாராவது அங்க இருப்போம் " என்றவள் அவனை யோசிக்க விட்டு வெளியேறினாள் ஆத்மி.
மருத்துவமனை பழைய நிலைமைக்கு வந்தாலும் எல்லார் மனதிலும் பயம் மட்டும் இருக்க தான் செய்தது.
ஆத்மி அவள் அறைக்குள் வந்ததும் கதவு தானாக மூடி கொள்ள இம்முறை பயம் கொள்ளவில்லை.
பவானி தான் அங்கு இருந்தாள். ஆத்மி அருகில் வந்தவள் " ஆத்மி இங்க இருக்குற அந்த ஆவி ரொம்ப கொடியது. அதால உனக்கு ஆபத்து இருக்கு " என்று சொல்லியதில் கோவமானவள்
" எனக்கு ஆபத்துனு அது உன்னால தான். எதுக்கு என் பின்னாடியே வந்து தொல்லை பன்ற " என்று எரிந்து விழ வேதனையானவள்
" ஆத்மி கோவத்துல மதி இழக்காத. அந்த ஆவி பத்தி உனக்கு தெரியாது. அவங்க ரத்த வெறி பிடிச்சவங்க உடல திங்க ஆவியா திறிவாங்க " என்றதும் அதிர்ச்சியாய் பவானியை பார்த்தவள் இப்போது தான் அவள் கூறுவதை கேட்க தயாரானாள்.
" என்ன சொல்ற. இந்த ஆவியை ஒழிக்க என்ன வழி. இது எப்டி இங்க வந்துச்சி " என்று கேட்க ஆத்மியிடம் தனக்கு தெரிந்ததை கூற தொடங்கினாள் பவானி.
" ஆத்மி என் சக்தியை பயன்படுத்தி நா தெரிஞ்சிக்கிட்டத உனக்கு சொல்றேன். இந்த ஆவி இவ்ளோ கொடூரமா வெறியா இருக்குறதுக்கு காரணம் இவங்க சூனியக்காரிங்க. ஆமா ஆத்மி. இவங்க ஒரு காலத்துல மனுஷியா பில்லி சூன்யம் என்று இருந்தாங்க. அதோட விளைவு அவங்களோட மந்திரம் அவங்களுக்கே எதிரா செயல்பட்டு இப்டி ஆவியா மாத்திருச்சி. இவங்க யாரோடைய உடம்புல புகுந்து அவங்கள கொஞ்சம் கொஞ்சமா தன் கட்டுக்குள்ள கொண்டு வந்து அவங்களோட தலையையும் இதயம் குடலோட வெளிவந்து கொன்னுரும். அதுக்கு அப்றம் ரத்த வெறி பிடிச்சி அலையும்.
இப்போ அது ஆசை படுறது உன்ன அது உன்ன அடையாம விடாது " என்று கூற ஆத்மி உடல் நடுக்கம் கண்டது.
" அத ஒழிக்கணும்னா என்ன பண்ணனும் " என்று கேட்டது ஆத்மி இல்ல அந்த அறைக்குள் வந்த எழில்.
ஆத்மியே அதிர்ந்து பார்த்தாள், பவானிக்கோ இவன் கண்ணிற்கு தெரிவதை கண்டு அதிர்ச்சியானாள்.
அதை கவனித்த எழில் " நீங்க அதிர்ச்சியாகவேண்டிய அவசியம் இல்ல. என் கண்ணுக்கு ஆவிகள் தெரியும். ஆனா நா அத பெரிசா வெளிக்காட்டிக்க மாட்டேன். ஆனா இது ரொம்பவே தீவிரம். இப்போ இதுக்கான மாற்று வழி என்னானு சொல்லு " என்று கேட்க பவானி ஆத்மியை பார்த்தவள் எழிலிடம்
" இல்ல இதுக்கு மாற்று வழி எனக்கு தெரியாது. நான் கொஞ்ச நாள் துர் ஆவிகளோட கட்டு பாட்டுல இருந்ததால எனக்கு இத பத்தி தெரிய முடிஞ்சது. உங்களுக்கு இன்னும் தெரியணும்னா கொல்லிமலைல அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு முனிவர் இருக்காரு. நீங்க அவர்கிட்ட தான் இத பத்தி கேட்கணும். இது நீங்க எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்கிரம் பண்ணா தான் ஆத்மியை காப்பாத்த முடியும். தாமதம் ஆச்சு மரணம் நிச்சயம் " என்று சொல்லி மறைந்து போக திகிலாய் நின்றவள் மேல் பார்வை பதித்தவன் ஒரு முடிவு எடுத்தான்.
******
" என்னடா எரும இந்த பக்கம் வந்துருக்க " என்று ஆரவ் வருகையை கண்டு கணபதி கேட்க அதில் முறைத்தவன்.
" ஹான் அதுவா மச்சான்?....உன் ஹோட்டல் சாப்பாடு சாப்ட்டு ரெண்டு தெருநாய் ஒரு பூனை செத்துருச்சாம். அதோட நீ வச்ச வடைய சாப்ட்டு பத்து காக்கா செத்துருச்சாம் அதான் ப்ளூக்ராஸ்ல கம்பளைண்ட் பண்ண வந்துருக்கேன் " என்று பெரிய வசனம் பேசியவனை தீயாய் முறைத்து பார்த்தான் கணபதி.
" டேய் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நா சமைச்ச சாப்பாட்ட கிண்டல் பண்ணுவ.... அப்போ இங்க ஒக்காந்து சாப்பிடுறவங்களுக்கு என்ன நாக்குல சொரணை இல்லையா " என்று அருகில் சாப்பிடுவர்களை கைகாட்ட நக்கலாய் சிரித்த ஆரவ்
" டேய் சாம்பார்ல விழுந்த பல்லிய தூக்கி போட்ட விஷயம் நீ என்கிட்ட சொன்னது இவங்களுக்கு எப்டி தெரியும் மச்சி " என்று சொன்னதும் சாப்பிட்டு இருந்தவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று காசை கொடுக்காமல் ஓடி விட சிரித்த ஆரவை வெளுத்து கொண்டிருந்தான் கணபதி.
" எரும எரும உனக்கு என்னடா பாவம் பண்ணேன்.... வந்த கஸ்டமர்ர ஓட விட்டிட்டியேடா பாவி " என்ற கணபதி இன்னும் ஒரு குத்து விட வாங்கி கொண்டவன்
" பின்ன என்னடா போர் அடிக்குது எழில பாக்க போலாம்னு கூப்ட்டா வேலை இருக்குனு சொன்ன..... இப்போ ஆளில்லாத கடைக்கு எதுக்கு டீ வா மச்சி போலாம் " என்று கணபதியை கையோடு இழுத்து கொண்டு எழிலை பார்க்க சென்றனர் வாலில்லாத வானரங்கங்கள்.
" ஹேய் ஆத்மி நாளைக்கு திங்க்ஸ் எல்லாம் உன் வீட்டுக்கு ஷிபிட் பண்ணிடுறேன்..... இன்னைக்கு ஒரு நாள் ஓனர பேசி சமாளிச்சிருக்கேன் " என்று அலுத்து கொண்டு காமினி கூற சிரித்தவள்
" இட்ஸ் ஓகே. நாளைக்கு உனக்காக நா காத்துட்டு இருப்பேன்" என்றவளிடம் புன்னைகை தந்தவள்
" சரி நீ வீட்டுக்கு கிளம்பலையா..... நைட் ஆகிருச்சி " என்று காமினி ஆத்மி கிளம்பாமல் இருப்பதை கவனித்து கேட்க ஆத்மி பதில் கூறுமுன் அங்கு வந்த எழில்
" ஆக்ட்சுவலி இன்னைக்கு ஆத்மிகாவுக்கு நைட் ஷிப்ட் ஆல்டர் பண்ணிருக்கேன். நானும் அவங்க கூட இங்க தான் இருப்பேன் " என்று சொல்லியதில் எதையோ நினைத்து சிரித்த காமினிb
" சார் அவ ரொம்ப பயந்தவ
பத்திரமா பார்த்துக்கோங்க " என்று பேசி கொண்டே சென்றவள் யார் மீதோ மோதி விழ போக விழாமல் பிடித்து கொண்டான் அவன்.
வண்டியை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்த ஆரவ் அவன் கண்ட காட்சியில் நெஞ்சை பிடித்து கொண்டான்.
காரணம் காமினி இன்னும் கணபதி கை வளைவுக்குள் தான் இருந்தாள். எழிலும் ஆத்மியும் வினோத ஜந்துவை பார்ப்பது போல் இருவரின் நிலையையும் பார்த்து கொண்டிருந்தனர்.
" அட கிராதகா. பஜ்ஜி போடுறவன் ஒருத்தன். தொட்டு சாப்பிடுறவன் இன்னொருத்தனா. வண்டி நிறுத்தற காப்ல இப்டி ஒரு சீன போட்டுட்டானே. இதுக்கா இவன கூட்டிட்டு வந்தேன். " என்று வாய் விட்டு புலம்பியவன் கணபதியை நோக்கி நடந்தான்.
கணபதி காமினியும் ஒருவரை பார்த்து கொண்டிருக்க கடுப்பான ஆரவ் " ஏன்டா பழையப்படம் ஷூட்டிங் போற மாதிரி அந்த பொண்ணு இடுப்ப புடிச்சிட்டு இருக்க? அடச்சீ ரியாக்ஷன மாத்து " என்றவனின் கடுகடுப்பில் இருவரும் விலக காமினி சிறு வெட்கத்தோடு அந்த இடம் விட்டு ஓடி விட
கணபதி போகிறவளை உள்ளங்கைக்குள் அடக்குவது போல் செய்ய. அதை பார்த்த ஆரவ் " என்ன மச்சி ஈ புடிக்கிறியா " என்று கிண்டல் பண்ண எழில் ஆத்மி புறம் திரும்பியவன்
" சாரி ஆத்மி. அந்த மர்மம் கண்டு புடிக்குற வரைக்கும் இங்க இருக்குலாம்னு முடிவு பண்ணேன். கூட நீ இருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு. அதான் உன் பெர்மிஸ்ஸின் இல்லாம சொல்லிட்டேன். உங்க வீட்ல எதும் சொல்ல மாட்டாங்கள " என்றவனை பார்த்து வெற்று சிரிப்பை உதிர்த்தவள்
" சார் வீட்டுக்கு எப்போ வருவேன்னு கேட்க எனக்காக எந்த உறவும் இல்ல. சோ நீங்க ஒர்ரி பண்ணிக்காதிங்க " என்றவள் சென்று விட அவள் கூறிய வார்த்தையில் ஏனோ வருத்தமாகினான் எழில்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 3
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.