அத்தியாயம் 2

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
57
அத்தியாயம் 2

பதினைந்து வருடங்களுக்கு பிறகு.....


ரம்மியமான மாலைப்பொழுது ......சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்க அதன் பிரதிபலனாய் பறந்து விரிந்த வானமும் கடலும் சிவந்து காணப்பட்டது.


தூரத்தில் மீனவர்கள் போதுமான மீன்களை பிடித்து விட்டு கரையை நோக்கி வந்தனர் .ஆங்காங்கே கடலோரத்தில் குழந்தைகள் மணல் வீடு கட்டி அதை கட்டிய தன் கைகளாலே இடித்து மகிழ பெற்றவர்கள் கடலை ரசிக்காமல் தன் மழலைகளின் சிரிப்பை ரசித்து கொண்டிருந்தனர் .


கண்ணில் படாமல் பல காதல் ஜோடிகள் தங்கள் காதலனுடன் கைகோர்த்து கதையளந்தபடி கடலை ரசிக்க இதை எல்லாம் கடற்கரை ஓரமாய் இருக்கும் ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்து இதழில் சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாள் நிலாழினி .


இவள் தனியாக இருப்பதை கவனித்த ஒரு வாலிப கூட்டம் தங்களுக்குள் எதையோ பேசி சிரித்து கொண்டிருந்தனர்.


அதில் ஒருவன் " மச்சான் நா வேணா பெட் கட்டுறேன்... உன்னால அந்த பொண்ணோட பேர் கூட தெரிஞ்சிக்க முடியாது " என்ற ஒருவன் உசுப்பேத்த சதீஷ் சிரித்தவன்


" நா இந்த பந்தயத்துல ஜெயிச்சுட்டா... இன்னைக்கு உன் ட்ரீட் தான் " என்று சதீஷ் சொன்னதில் முழித்தவன் பின் சரியென ஒப்பு கொள்ள எல்லாரும் அடி வாங்காம வர ஆல் தி பெஸ்ட் மேன் என்ற நண்பர்களின் வாழ்த்தில் ஒரு திமிரான சிரிப்புடன் அமைதியாக அமர்ந்திருக்கும் நிலா முன் சென்றான்.


சதீஷ் சுத்தமான பிளேபாய். அவன் கலரும் பணமும் பல பெண்களை அவன் காதல் வலையில் வீழ வைத்தது. இதே போல் பல முறை இதே ரெஸ்டாரண்டில் நண்பர்களிடம் பந்தயம் வைத்து ஜெயித்திருக்கிறான்.


சதீஷ் நிலா அருகில் சென்றவன் " ஹேய் நீ ராகினி தானே.... எப்டி இருக்க " ஏதோ பழகி நீண்ட காலம் ஆனது போல் உரிமையாக பேச முழித்து கொண்டிருந்த நிலா



" சாரி... நீங்க நினைக்கிற பொண்ணு நா இல்ல.... என் பேர் ராகினியும் இல்ல " என்று நிதானமாக சொல்ல சதிஷ் அடுத்து என்ன சொல்வது என புரியாமல் தலையை சொரிந்து கொண்டிருந்தான்.


" டேய் என்னடா இந்த முறையும் பந்தயித்துல ஜெயிச்சுடுவானோ " நண்பர்களுக்குள்ளே பேசிக்கொண்டவர்கள் ஆர்வமாக சதீஷை தான் பார்த்து கொண்டிருந்தனர்.


யோசித்த சதீஷ் " ஓ சாரி.... நீங்க பார்க்க என் தோழி மாதிரி இருந்திங்க.... அதான்.... உங்க பேர் என்னானு தெரிஞ்சிக்கிலாமா... " என்று சதீஷ் கேட்க யோசித்த நிலா


" நிலா " என்று சொன்ன மறுக்கணம் அவளின் அனுமதி கூட கேட்காமல் அவளுடன் சேர்ந்து ஒரு செல்ஃபீ எடுத்தவன் அவனின் நண்பர்களை நோக்கி ஓடினான்.


" நீ பேர் மட்டும் தானே கேட்ட நா போட்டோவே எடுத்துட்டு வந்துட்டேன் " கெத்தாக சதீஷ் சொல்ல பந்தயம் வைத்தவனை மற்ற நண்பர்கள் கேலி கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.



அப்போது தான் நிலாவுக்கு புரிந்தது, இவர்கள் தன்னை வைத்து பந்தயம் செய்திருக்கிறார்கள் என்று. கோவமாக அவர்களின் அருகில் சென்ற நிலா



" ஹெலோ ஒழுங்கா என் போட்டோவ டெலீட் பண்ணிருங்க.... அடுத்தவங்க அனுமதி இல்லாம இப்டி பன்றது தப்பு ..தேவை இல்லாது பிரச்சனையாகிரும் " மிரட்டியவளை பார்த்து சிரித்த சதீஷ்



" அழகுனாலே பிரச்சனை தானே.... தாராளமா ஏத்துக்குறேன் " மாதிரியான குரலில் பேசியவன் நிலாவின் கையை பிடிக்க போக பின்னால் இருந்து யாரோ அடித்த அடியில் சதீஷ் தலை மேசையில் மோதி ரத்தம் வழிந்தது.



நிலா அதிர்ச்சியில் " விக்ரம் " என்று அழைக்க கோவத்தில் கண்கள் சிவக்க நின்றவன் நிலாவை தன் புறம் இழுத்து கொண்டான்.


சதீஷின் நண்பர்களும் சுற்றி இருப்பவர்களும் இது இவனுக்கு தேவை தான் என்பது போல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.



விக்ரம்க்கு இன்னும் கோவம் குறையவில்லை. கிழே விழுந்து கடந்தவனின் போனை தன் காலால் மிதித்து நொறுக்கியவன் சதீஷின் கழுத்தை பிடித்து தூக்கிய விக்ரம் " எவ்ளோ தைரியம் இருந்தா என் நிலாவை தொட்டிருப்ப" என்றவன் பாவம் பார்க்காமல் அவன் முகத்திலே சரமாறியாக குத்து விட ரத்தம் வழிந்து கொட்டியது.


நிலாவுக்கு தான் இவன் செத்து விடுவானோ என்ற பயம் தர.... பயத்தில் விக்ரமை பின்னிருந்து பிடித்து கொண்டவள்


" விக்ரம் ப்ளீஸ் அவன விட்ரு எனக்கு பயமா இருக்கு... இங்க இருந்து போலாம் வா " என்றவளின் நடுக்கம் உணர்ந்த மறுகணம் அவனை விட்டுவிட்டு நிலாவை இழுத்து கொண்டு சென்றான்.


" டேய் என்னடா இப்டி வெளுத்து வாங்கிட்டாரு.... நல்லவேளை மனுஷன் நம்ப பக்கம் திரும்பல " சதீஷின் நண்பன் ஒருவன் அரண்டு சொல்ல பந்தயம் வைத்த நண்பன்


" டேய் வாய மூடிட்டு இவனை தூக்குங்கடா.... செத்துட போறான்... இவன் அப்பாகிட்ட வேற என்ன சொல்லி சமாளிக்கிறதுனு தெர்லயே.... டேய் எவனும் இங்க நடந்தத யார் கிட்டையும் சொல்லாதீங்க " என சொல்ல மற்றவர்களும் சரி என்றவர்கள் மயங்கி கிடந்த சதீஷை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்றனர்.


********** ********* ********


இங்கு கோவத்தில் நடந்தவனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவனின் பின்னாலே ஓடினாள் நிலா. அவளுக்கு தெரியும் விக்ரமின் கோவத்தின் வீரியம் எந்த அளவுக்கு என்று.


" விக்ரம் கொஞ்சம் பொறுமையா தான் போயேன்... எனக்கு கால் வலிக்குது " கொஞ்சம் அவளின் குரலில் வலியை காட்ட சட்டென நின்றவன் எதுவும் அவளிடம் பேசாமல் தூக்கி கொண்டான். பதறியவள் இறக்கி விட சொல்லி கெஞ்ச காதில் வாங்கி கொள்ளவில்லை விக்ரம்.


அவன் கோவத்தில் பேசாமல் இருப்பதை கவனித்தவள் " இப்போ நீ பேச போறியா இல்லையா.... இப்போ என் மேல எதுக்கு கோவ படுற " அப்பாவியாக கேட்டவளின் முகம் பார்க்காமல் முன்னாள் நடந்தவன்


" உன்கிட்ட பல முறை சொல்லிருக்கேன்.... எனக்கு முன்னாடி இப்டி தனியா வெயிட் பண்ணாதனு..... அப்றம் எதுக்கு நீ தனியா வெயிட் பண்ண.... நா அவன கொன்னுருக்கணும் " மீண்டும் கோவமாக சோகமானவள்


" நீ எதுக்கு இப்டி என்மேல கோவப்படற.... எனக்கு கஷ்டமா இருக்கு.... என்ன இறக்கி விடு... நானே போயிக்குறேன் " முகத்தை திருப்பி கொள்ள சிரித்து விட்டான் நிலாவின் செயலில்.


அது கண்டும் காணாது போல் இருந்தவளின் முகத்தை பார்த்த விக்ரம் " நா கேட்குறது சரின்னு சொல்லு... உன்ன இறக்கி விட்டுடுறேன் " என்றவனை கண்களை சுருக்கி பார்த்தவள்


" என்ன சொல்லு " பொய்யான கோவத்தில் கேட்க சிரித்த விக்ரம்

" என்ன கல்யாணம் பண்ணிக்குறியா " என்ற கேள்வியில் வாயடைத்து போனாள்.


விக்ரம் நிலா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். கால போக்கில் அவள் மீது வைத்திருக்கும் அதிகப்படியான அக்கறை காதலாக மாறியது விக்ரம்க்கு. நிலாவுக்கும் அதே உணர்வு தான் போல.



நிலாவிற்கு அப்பா அம்மா என்று யாரும் கிடையாது. அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள். அந்த ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளரான சச்சினின் மகன் தான் விக்ரம்.


இவர்கள் இருவருக்கும் நெருக்கமான நண்பன் ஒருவன் இருக்கிறான். கெவின். அவனும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து இப்போது காவல் துறையில் வேலை செய்கிறான்.


********* ******** *********

அதிர்ச்சியில் கண் இமைக்காமல் இருப்பவளை கார் அருகே இறக்கி விட்டவன் " உனக்கு விருப்பம் இல்லனா சொல்லிடு... அப்பா கிட்ட வேற பொண்ணு பாக்க சொல்லிடுறேன் " என்று விக்ரம் சொன்னதும் தான் அவனின் கன்னத்திலே ஒரு அடி குடுத்தவள்


" கொன்றுவேன் என்ன விட்டு நீ வேற பொண்ண கல்யாணம் பண்ணா " என மிரட்டியவளின் தோளிலே ஒரு கை விழுந்தது.



" யூ டோன்ட் ஒர்ரி பேபி... அவன் இல்லனா என்ன,.. நா உன்ன கல்யாணம் பண்ணி காலத்துக்கும் கண்கலங்காம பார்த்துக்கிறேன் " கெவின் சொல்ல அவனிடம் இருந்து நிலாவை இழுத்து கொண்டான் விக்ரம்.



" எது பேசுறதா இருந்தாலும் அவ கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி நின்னே பேசு " என்ற விக்ரமின்

இந்த பொறாமையை கண்டு நிலா சிரிக்க கெவினோ " டேய் அவ உனக்கு முன்னாடியில இருந்து எனக்கு பிரண்ட்டு டா.... இப்டி இழுத்து வச்சிக்குற.... என்ன தான் இருந்தாலும் எனக்கு அவ மேல உரிமை இருக்கு.... ஆமா தானே நிலா " என மீண்டும் அவளின் கை பிடிக்க போக விக்ரம் அதை பிடித்து முறுக்க வலியில் கத்தியவனிடம்



" இன்னொரு முறை என் முன்னாடி அவ மேல உன் கை பட்டுச்சு... இப்டியே முறுக்கிருவேன் " என்றவனிடமிருந்து கையை விடுவித்து கொண்ட கெவின்



" டேய் இவ்ளோ பொஸ்ஸஸிவ் ஆகாதுடா உனக்கு.... ஆமா ரெஸ்டாரண்ட்க்கு கூப்பிட்டுட்டு.. நா கார் பார்க் பண்ணிட்டு வர்றதுக்குள்ள ஏன் வந்துட்டிங்க" கெவின் கேட்க நிலா விக்ரமை ஒரு பார்வை பார்த்தவள் நடந்ததை சொல்ல கெவின் வாய் மேல் கைவைத்தபடி அதிர்ச்சியோடு பார்த்தான்.


விக்ரமோ அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் நிற்க கடுப்பான கெவின் " பன்றதையும் பண்ணிட்டு எப்டி நிக்கிறான் பாரு...."


" ஹான்.... போதும் போதும்... எனக்கு டைம் ஆச்சு மதர் ஜெனிமா என்ன தேடுவாங்க.... உங்க முறைப்ப நா போனதுக்கு அப்றம் வச்சுக்கோங்க.. " என்றவள் காரில் ஏறி கொள்ள விக்ரம் கெவினை கண்டு கொள்ளாமல் காரை எடுக்க கடுப்போடு கெவினும் ஏறிகொண்டான்.


கெவினுக்கு விக்ரமின் இந்த கோவம்... அதும் நிலா மேல் அவன் வைத்திருக்கும் பாசத்தின் விளைவு மனதில் சிறுபயத்தை கிளப்பியது.

அவனின் இந்த பிடிவாதமான முரட்டு குணம் எங்கு நிலாவை கஷ்டப்படுத்தி விடுமோ என்பது தான் கெவினின் பயம்.

********** ********** *********

விக்ரம் மழலை ஆசிரமம் முன் காரை நிறுத்தினான். மூவரும் இறங்கி கொள்ள டாட்டா காட்டி உள்ளே செல்ல போனவளை தடுத்து நிறுத்தியது விக்ரமின் கைகள்.


" நா ஜெனிமா கிட்ட கொஞ்சம் பேசணும்.... என்கூட வா " என்ற விக்ரம் உள்ளே நுழைய " என்ன செய்ய போறானோ " மனதில் நினைத்த கெவின் அவர்களின் பின்னாலே சென்றான்.


" விக்ரம் என்ன அவசரம்..... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்... நானே மதர் கிட்ட பேசுறேன் " விக்ரமின் பிடியில் இருந்து கைகளை உருவ அவளின் கைகளோடு தன் கையை பிணைத்து கொண்ட விக்ரம்


" நா இவ்ளோ நாள் வெயிட் பண்ணதே உனக்காக தான் நிலா.... இதுக்கு அப்றமும் என்னால இப்டி உன்ன இங்க தனியா விட்டு இருக்க முடியாது.... இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்றேன் " என்றவன் முன்னாள் வந்த கெவின் " குறுக்க இந்த கெவின் தடையா வந்தா " என்றவன் சிரிக்க,....புரியாமல் பார்த்தாள் நிலா
.
 

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top