New member
- Joined
- Aug 14, 2025
- Messages
- 6
- Thread Author
- #1
அழகியின் அரக்கனவன்
அத்தியாயம் : 2
மாளிகையின் பெரிய வரவேற்பறையில், ஒரு மூலையில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவளுக்கு எந்த வேலையும் இல்லை; எதையும் தொட உரிமை இல்லை. வெறும் இருப்பு மட்டும்தான். ஆதித்யாவின் கட்டளை.நேற்று அவன் கிழித்த புகைப்படம் அவளது மனதில் ஆறாத காயமாய் இருந்தது. கண்களை மூடினாலே, அவனது நிழல் அவளை நெருங்குவது போல பிரமை உண்டானது.
அப்போது, வரவேற்பறையின் தூண் மறைவிலிருந்து சமையல் பொறுப்பாளர் மெதுவாக வந்தார். அவர் அவளைப் பார்க்கவில்லை. சுவரில் இருந்த ஒரு சிறிய கருவியின் (CCTV Camera) வெளிச்சம் சரியாக அவளை நோக்கித் திரும்புவதை மட்டும் அவர் கவனித்தார்.
அவரின் நடவடிக்கையா பார்த்த பவித்ராவுக்குக் குழப்பமாக இருந்தது .. "ஐயா, என்ன ஆச்சு? எதுவுமே பேசாம இங்க எதுக்கு நிக்கறீங்க?" என்று மெதுவாகக் கேட்டாள்.
அந்தப் பொறுப்பாளர், பயத்தில் கண்களை அகல விரித்து, உதட்டை இறுக்க மூடி, பேச வேண்டாம் என்று சைகை காட்டினார். பிறகு, மெதுவாக அருகில் இருந்த டீப்பாயில் தண்ணீர் நிரம்பிய கண்ணாடி டம்ளரை வைத்தார்.
"உங்களுக்கு பசிச்சா, இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்னு சொன்னாரு. ஆனா... நீங்க இங்க இருந்து நகரக் கூடாது." அவர் சத்தம் போடாமல், முணுமுணுப்பது போலப் பேசினார்.
பவித்ராவுக்குள் பயம் மெல்ல ஏறியது. ஏன் பேசக் கூடாது?என ஒன்றும் புரியாமல் அவரிடம் கேட்க …
"இங்க கேமரா இருக்குது. அவர் எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காரு. நீங்க என்கிட்டப் பேசுனா, அவர் கோபப்படுவாரு," என்று சொல்லிவிட்டு, சமையல் பொறுப்பாளர் மின்னல் வேகத்தில் மறைந்தார்.
பவித்ராவுக்கு உறைந்து போனது. கேமரா!வா என நினைத்து கொண்டே அந்த வரவேற்பறையில் சுற்றியும் பார்வையை சுழல விட்டால் …
ஆம். அந்த வரவேற்பறையின் மூலையில் இருந்த, அலங்காரப் பொருளாக அவள் நினைத்த, அந்தச் சின்ன கருவி இப்போது அவளை வெறித்துப் பார்ப்பது போல் உணர்ந்தாள். அவள் கண்காணிக்கப்படுகிறாள். இந்த மாளிகையில் அவளுக்குச் சொந்தமான ஒரு தனிப்பட்ட இடம்கூட இல்லை. அவளது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு மூச்சும் ஆதித்யாவின் கட்டுப்பாட்டில்!அவளை அறியாமலே, அவளது கைகள் நடுங்கின. அவளது முதுகுத் தண்டு சிலிர்த்தது. அவளது பயம் இப்போது பல மடங்கு பெருகியது. அவன் அருகில்கூட இல்லை, ஆனாலும் அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்!
சற்று நேரத்தில், ஆதித்யா உள்ளே வந்தான். அவனது முகம் அமைதியாக இருந்தது. அந்தக் அமைதியே அவனுக்குள் இருக்கும் கொடூரத்தைக் காட்டுவது போல இருந்தது பவித்ராவுக்கு …
நேராக அவளருகில் வந்தவன், அந்தப் பழங்கள் வைத்திருந்த தட்டைப் பார்த்தான்.
"ஏன், பவித்ரா? உனக்கு இன்னும் பசிக்கலையா? பசியோடு இருக்கிறதுதான் உனக்குப் பிடிக்குமா?"என அவன் சாதாரணமாக கேட்டான் … ஆனா அந்த சாதாரணம் கூட பவித்ராவுக்கு புயலுக்கு முன் வரும் அமைதி போல தோன்றியது …
பவித்ரா சட்டென்று எழுந்து, நடுங்கும் கைகளால் ஒரு திராட்சையை எடுத்தாள்.
"நான்... நான் சாப்பிடுறேன்..." அவள் குரல் அவளது கட்டுப்பாட்டில் இல்லை; நடுங்கி ஒலித்தது.நடுங்கும் கரங்களால் எடுத்து கொண்டிருக்க …
அதை பார்த்தவனோ "சாப்பிடு," என்றான் ஆதித்யா. "ஆனா, அதை நீ எப்படிச் சாப்பிடணும்னு நான் சொல்றேன்."என சொல்லி விட்டு அவளை நக்கல் கலந்த பார்வையாக பார்த்தான் …
அவன் சொன்னதை கேட்டவளுக்கு கண்கள் வெளியே வந்து விடும் அளவிற்கு இருந்தது …. அந்த கொடுமைதான் அவளை அலறலின் விளிம்பிற்கே கொண்டு சென்றது.
"நீ இந்தத் திராட்சையை அப்படியே முழுங்கணும். கண்ணை மூடிட்டு முழுங்கு."என அவளை கூர்மையாக பார்த்து கொண்டே சொல்ல ..
பவித்ரா திடுக்கிட்டாள். மென்று சாப்பிடாமல், அப்படியே திராட்சையை முழுங்குவது என்பது மிகச் சிறிய விஷயம். ஆனால், ஒரு சாதாரண விஷயத்தைக்கூட, அவளைக் கட்டாயப்படுத்திச் செய்யச் சொல்வதுதான் அவளுக்குள் பயங்கரமான அழுத்தத்தை ஏற்படுத்தியது. அவளுக்கு எதிர்த்துப் பேசத் துணிவில்லை.அதனால் அவள் அமைதியாக இருந்தால் ….
அவள் அமைதியாக இருப்பதை உணர்ந்தவன் "முழுங்கு!" என்று குரலை உயர்த்தினான்.
பவித்ரா பயத்தில் கண்ணை இறுக மூடிக்கொண்டு, அந்தத் திராட்சையை முழுங்க முயற்சி செய்தாள். அது தொண்டைக்குள் சிக்கியது. அவள் இருமினாள். அவளுக்கு மூச்சுத் திணறியது.
"ஆ... ஆ..." அவள் தொண்டையில் இருந்து பலவீனமான சத்தம் வந்தது.
ஆதித்யாவுக்குச் சிரிப்பு வந்தது. அவளது பயத்தையும் திணறலையும் அவன் ரசித்தான்.
"என்ன ஆச்சு? இவ்வளவு சின்ன விஷயம் கூடச் செய்யத் தெரியலையா? நீ ஒரு பலவீனமான பொம்மைதானே, பவித்ரா?" அவன் குரலில் ஏளனம் கொப்பளித்தது.
பவித்ரா எப்படியோ அந்தத் திராட்சையை முழுங்கினாள். பயத்தால் அவள் கண்ணில் நீர் வடிந்தது. அவள் உடலின் உள்ளே ஒரு தீக்காயம் உண்டானது போல உணர்ந்தாள். அவளது பயம் உச்சகட்டத்தை அடைந்தது. அவன் எதிரில் விழுந்து அலற வேண்டும் போலிருந்தது.
"உன் பயத்தை நான் ரசிக்கிறேன், பவித்ரா. நீ நடுங்குறது, நான் உனக்குக் கொடுத்த சன்மானம்." ஆதித்யா மேலும் நெருங்கி வந்தான். "இனிமே நீ எதைச் செஞ்சாலும், உன் பயத்தோடுதான் செய்யணும். உன் உடம்பில் பயம் ஓடுறப்போ, அதை நான் இங்க இருந்தே பார்ப்பேன்."
அவன் வேண்டுமென்றே தனது கட்டளைகளைச் சாதாரண விஷயங்களில் வைப்பதன் மூலம், அந்தச் சிறிய செயல்களையே அவளுக்கு மிகப்பெரிய தண்டனையாக மாற்றுகிறான்.
"இந்தா," என்று ஆதித்யா ஒரு சாவிக் கொத்தை அவள் கையில் திணித்தான். "இது உன் அறைக்குள்ள இருக்கற ஒரு அலமாரியோட சாவி. அதத் திறந்து பாரு. உனக்கு ஒரு பொருள் இருக்கும்."
பவித்ரா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். ஒரு பொருள் ? ஏன்?என புரியாமல் அவள் பார்க்க …
ஆதித்யா அவளது பயத்தை நீக்கி, அவளுக்கு ஒரு சிறு நம்பிக்கையைக் கொடுத்து, அதை உடைக்கப் போகிறான்.என பாவம் அவளுக்கு தெரியவில்லை …
ஆதித்யாவின் உத்தரவின்படி, அவள் நடுங்கும் கால்களுடன் அந்த அலமாரியைத் திறந்தாள். உள்ளே அவளது பழைய, மிகவும் பிடித்தமான டைரி இருந்தது. சிறு வயதில் இருந்து நடந்த விஷயங்களையும், அவனது குடும்பத்தைப் பற்றி அவள் எழுதியிருந்த ரகசியங்களையும் அடக்கிய டைரி.
பவித்ரா ஆச்சரியத்துடன் அதைத் தொட்டாள். அவளது முகத்தில் ஒரு நொடி மகிழ்ச்சி மின்னியது. "இது... இது என் டைரி!"
"ஆமா," என்றான் ஆதித்யா. "நீ ரொம்ப ஆசையா, உன் நெஞ்சுக்குள்ள மறைச்சு வெச்ச ரகசியங்கள் எல்லாம் இதுக்குள்ள இருக்கும்ல?"
பவித்ரா அவனது முகத்தில் தெரிந்த கொடூரமான புன்னகையைப் பார்த்ததும், அவளது இதயம் நின்றுவிட்டது போல உணர்ந்தாள். அவள் சட்டென்று டைரியைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
"வேணாம்... இதை நீங்க..."என்று அவள் முடிப்பதற்கு முன், ஆதித்யா வேகமாக டைரியைப் பிடுங்கி, அதன் பக்கங்களைப் புரட்டினான். "நீ என் குடும்பத்தைப் பத்தி, என்னைப் பத்தி, உன்னோட கோபத்தை எப்படி எல்லாம் எழுதியிருக்கேன்னு நான் படிச்சுட்டேன். உன் ரகசியங்கள், இப்போ என்னோட ஆயுதம்."என ஆக்கிரோஷமாக சொல்லியவன்
அவள் டைரியின் ஒரு பக்கத்தைக் கிழித்தான். அதில், அவன் செய்த ஒரு தவறைப் பற்றி அவள் கோபமாக எழுதியிருந்தாள்.
"நான் உன்னைத் தண்டிக்கிறதுக்கு உனக்கு நிறைய விஷயங்கள் இருக்கு, பவித்ரா. நீ நேசிக்கிற, உன்னோடன்னு நீ நினைக்கிற ஒவ்வொன்றையும் நான் அழிக்கும்போது, நீ எப்படி அலறிப் பயப்படப் போறேன்னு பார்க்கப் போறேன்."
பவித்ரா இப்போது உணர்ந்தாள்: அவனுக்குத் தன் மீது வெறுப்பு மட்டுமல்ல, தனது வாழ்க்கையின் மீது முழு அதிகாரம் வேண்டும். அவன் அவளை உடல் ரீதியாகத் துன்புறுத்துவதை விட, அவளது நம்பிக்கைகளையும், தனிப்பட்ட சுதந்திரத்தையும் அழிப்பதன் மூலம் அவளை மனதளவில் நிரந்தரமாக முடக்கிப் போட நினைக்கிறான். என புரிந்தவளோ அலறினாள் ..
அவள் பயத்தில் அலறி நடுங்கினாள். அவள் கண்முன்னால் அவள் ரகசியங்கள் கிழிபடும்போது, அவள் உணர்ந்த வலி உடல் வலியை விடக் கொடூரமானது. இனிமேல், இந்த வீட்டில், அவனுக்குத் தெரியாத ஒரு ரகசியம்கூட அவளிடம் இருக்காது. அவனைக் கண்டாலே அவள் பயத்தில் உறைந்துபோவாள்.
ஆதித்யா அவளை வெறித்துப் பார்த்தான். "வாழ்த்துகள், பவித்ரா. என் பயத்தின் முதல் பாடம் இதுதான்."என சொல்லி கொண்டே கலகலவென்று அந்த அறையை அதிரும் வண்ணம் சிரிக்க ஏனோ அந்த சிரிப்பில் அவளுக்கு அதிகப்படியான பயம் தான் தெரிந்தது …. ஒரு அரக்கத்தனமான மிருகம் எப்படி தன்னுடைய குரலில் கர்ஜிக்குமோ அதே மாதிரி தான் இப்பொழுது ஆதித்யன் சிரிப்பது பார்க்கும் பொழுது பவித்ராவிற்கு தோன்றியது …
அரக்கனவன் வருவான் ..😈

Author: அம்மு
Article Title: அத்தியாயம் : 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.