அத்தியாயம் 2

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
77
அத்தியாயம் 2

உடல் இல்லாமல் பறந்து வந்த அகோரமான அந்த தலையை கண்டு மிரண்டு ஓடியவள் ஒரு உருவம் மீது மோதி நின்றாள். ஆடி போனவள் முன்னாள் பார்க்க எழில் தான் நின்றிருந்தான். " நீ யாரு இங்க என்ன பன்ற " என எழில் கேட்க " அங்க அங்க பின்னால " என திக்கி திணறியவள் அப்படியே மயங்கி சரிய அவளை தாங்கி பிடித்து கொண்டவன் பின்னால் பார்க்க எதுவும் இல்லாமல் போகவே ஆத்மீயை கையில் தூக்கி கொண்டு கீழிறங்கினான். அந்த சிவந்த கண்கள் கொண்ட தலை மீண்டும் அந்த அறைக்குள் ஊர்ந்து சென்று அடைந்து கொண்டது.

எழில் ஆத்மியை தூக்கி வருவதை பார்த்து அனைத்து மருத்துவர்களும் பதற்றமாக வர திரும்பி பார்த்தவன் " இது ஜஸ்ட் மயக்கம் தான்..... நானும் ஒரு டாக்டர் தான் நீங்க போய் உங்க வேலைய பாருங்க " என்று கொஞ்சம் வார்த்தையில் கடுமை சேர்த்து கூற எல்லாரும் அவர்கள் வேலையை பார்க்க சென்று விட்டனர். ஆத்மியை அவனின் தனியறையில் இருக்கும் சோபாவில் படுக்க வைத்தவன் அவளின் பல்ஸ் செக் செய்து அவளின் முகத்தில் தண்ணீர் தெளிக்க புருவம் நெறுக்கியவள் மிக மெதுவாக இமைகளை திறந்தாள்.

மயக்கம் தெளிந்தவளுக்கு எழிலை கண்டதும் தான் பயம் போனது. அவளை கூர்மையாக பார்த்தவன் அவளுக்கு குடிக்க தண்ணீர் குடுக்க மறுக்காமல் வாங்கி குடித்தாள். அவள் நிதானமாகிவிட்டாள் என அறிந்தவன் "சரி சொல்லு நீ எதுக்கு அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்கு போன " என்று கேட்க அவன் முகம் பார்த்தவள் " நா மூணாவது தளம் தான் போகணும்னு போனேன்...... ஆனா லிப்ட் எப்டி ஏழாவது தளம் போச்சுன்னு தெரியாது " என்று சொல்ல " சரி எதுக்கு தலை தெறிக்க அங்க இருந்து ஓடிவந்த " என்றவனிடம் நடந்ததை கூறினால் கண்டிப்பாக நம்ப மாட்டான் என ஆத்மீக்கு நன்றாக தெரியும். " அது எனக்கு பயமா இருந்துச்சு. அதும் இல்லாம லிப்ட் ஒர்க் ஆகுல அதான் படிக்கட்டு பக்கம் ஓடி வந்து உங்க மேல மோதிட்டேன் சாரி " என்றவளின் வார்த்தையை எழில் ஒன்னும் நம்பவில்லை.

அவளிடம் மேலும் கேள்வி கேட்டு குடைய விரும்பாதவன் " சரி இனி கொஞ்சம் ஜாக்கிரதயா இரு.... ஆமா உன் பேர் என்ன " என்று கேட்டவனிடம் " ஆத்மிகா " என்றவள் எழிலின் அறையில் இருந்து வெளியேற போகிறவளை யோசனையாக பார்த்தான் எழில். பிரபு கூறிய காரணத்தை எழிலால் ஏற்க முடியவில்லை. அதனால் தான் ஏழாவது மாடி சென்றவன் எதிரில் அலறியடித்து ஓடிவரும் பெண்ணை கண்டு அதிர்ந்து போனான். ஆனால் எழிலுக்கும் ஏதோ ஒன்று சரியாக படவில்லை இந்த மருத்துவமனையில்.

பணி முடித்த ஆத்மி வீட்டிற்கு செல்ல அவளை அழைத்தாள் காமினி. " என்னடி " என்றவளிடம் " இல்லடி நா வாடகை இருக்குற வீட்டு ஓனர் அந்த வீட்ட விக்க போறாராம்..... நீ தனியா தானே இருக்க நானும் உன் கூட வந்து பேயிங் கெஸ்ட்டா தங்கிக்கிறேன் " என்று சொல்ல மிரண்டு போன ஆத்மி பதில் சொல்வதற்குள் " சரி டி மத்த விஷயம் நாளைக்கு பேசிக்குலாம் பாய் " என்று நில்லாமல் ஓடி விட அதிர்ந்து போய் இருந்தாள் ஆத்மி. இவளே வாழ்வோ சாவோ என ஒவ்வொரு இரவையும் கழித்து கொண்டு இருக்கிறாள் இப்போது இவள் வேறையா என பயந்து போனாள் ஆத்மி.

எழில் வெளியே வந்தவன் யோசனையில் இருப்பவளை கவனித்தான். " வீட்டுக்கு போகாம என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க " என்று அருகில் கேட்ட குரலில் துள்ளி விலகினாள் ஆத்மி. அதில் சிரித்தவன் " ஏய் கூல் கூல்.... எதுக்கு இப்டி பயபடுற " என்று கேட்க தடுமாறியவள் " நத்திங் சார் " என்று சொல்லிவிட்டு ஓடி மறைந்தாள் ஆத்மி. தோள் குலுக்கியவன் அவனின் வண்டியில் வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிற்கு வந்தவன் தன்னறைக்கு சென்று குளியல் போட்டுவிட்டு மீண்டும் கீழே வர இலா அவன் கையில் காபீ கொடுத்தவள் " பேபி முதல் நாள் அனுபவம் எப்டி போச்சி " என்று கேட்க எதையும் அவளிடம் மறைக்காதவன் இன்று நடந்ததை சொல்லி இறுதியாக " அந்த ஹாஸ்பிடல்ல ஏதோ ஒன்னு மர்மமா இருக்கு பேபி " என்று சொல்ல பயந்து போனவள் " டேய் ஒழுங்கா நீ நம்ப ஹாஸ்பிடல்க்கு வா.... அந்த ஹாஸ்பிடல் உனக்கு வேணாம் " என்று சொல்ல சிரித்தவன் " ஹேய் டோன்ட் பானிக் பேபி..... எனக்கு இந்த ஹாஸ்பிடல் பிடிச்சிருக்கு " என்று சொல்ல அவனின் பிடிவாதம் அறிந்தவள் விட்டுவிட்டாள்.

இலாவுக்கும் ருத்ராவுக்கும் பிறந்த குட்டி ருத்ராவை தூக்கி கொண்டு வந்தான் ருத்ரா. " டேய் ஹௌ இஸ் யுவர் டே " என்று

கேட்க அவனின் கையில் இருந்த குட்டி ருத்ராவை தூக்கி கொண்டவன் " நாட் பேட் அண்ணா..... சூப்பரா போச்சு " என்றவன் குழந்தையை கொஞ்ச ஆரம்பிக்க ருத்ரன் அவனின் இலாவை கொஞ்ச ஓடி விட்டான்.

நடு இரவு. மருத்துவமனையில் ஒரு சிலரின் நடமாட்டம் மட்டுமே இருந்தது. ஏழாம் மாடியில் இருந்த அந்த அகோரம் மெல்ல ஊர்ந்து மோப்பம் பிடித்து பிணவறைக்கு சென்றது. அங்கு ஒரு சில சடலங்கள் மூடிய நிலையில் மேசையில் வைக்க பட்டிருந்தது. கொலை பசியில் இருந்த அந்த தலை ஒரு சடலத்தை கொதறி தின்றது. " ஜதக் ஜதக் " என்ற அது திங்கும் சத்தம் மட்டுமே கேட்டது. வயிறு பகுதியை வெறிகொண்டு கடித்து குடல் உடல் உறுப்புகள் சதைகள் எல்லாத்தையும் சதக் சதக் என மென்னு தின்ன அந்த தலை பசி தீர்ந்ததும் அதே போல் ஊர்ந்து அந்த ஏழாம் தளம் அறையில் புகுந்து கொண்டது.

ஆத்மிக்கு வீடு செல்லும் தைரியம் சிறிதும் இல்லை. ஏற்கனவே ஒரு கொடூரமான ஒரு உருவம் இவளை பின் தொடரும். இன்றோ அந்த அகோர தலையிடம் இருந்து தப்பித்தவளுக்கு எப்படி தூக்கம் வரும். அம்மாவாசை வேறு நிலவு கூட துணைக்கு வராது. என்ன செய்வது என புரியாமல் இருந்தவளுக்கு வழி காட்டியது. ஆத்மி நின்ற திசைக்கு எதிரில் ஒரு அம்மன் கோவில் இருந்தது. அம்மன் கோவிலில் அம்மாவாசை அன்று இரவு முழுவதும் இருப்பது அந்த ஊரின் வழக்கம். சந்தோசமானவள் கோவிலை நோக்கி செல்ல அந்த கரிய உருவம் வேகம் கொண்டு ஆத்மி பின்னால் பாய்ந்து வந்தது.

ஆத்மி கோவிலை செல்வதை கவனித்த உருவம் அவளை வெறியோடு பின் தொடர்ந்தது. ஆத்மியின் பாதம் வழியே அவளை அடைய முயல நல்ல வேலை ஆத்மி கோவிலுக்குள் நுழைந்து விட ஏமாந்த உருவம் கோவத்தோடு போறவளை வெறித்து பார்த்து மறைந்து போனது. அன்றிரவு முழுவதும் அம்மன் சன்னதியிலே இரவை கழித்தாள் ஆத்மி. காரிருள் மறைந்து கொஞ்சம் வெளிச்சம் வந்த பிறகே ஆத்மி வீட்டை நோக்கி சென்றவள் மனதில் எத்தனை நாளைக்கு இந்த ஓட்டமோ என்ற கவலை இருக்கதான் செய்தது.

பூட்டை திறந்து உள்ளே வந்தவள் அரண்டு போனாள். பொருள்கள் எல்லாம் சிதறி உடைந்து வீடே அலங்கோலமாக காட்சியளித்தது. ஆத்மி உள்ளே வர பட்டென கதவு மூடிய சத்தத்தில் ஒரு நிமிடம் இதயம் வெளியே வந்து விழும் அளவிற்கு அரண்டு போனாள். ஜன்னல் எல்லாம் திரையால் மூடி இருந்ததில் சூரிய ஒளி கூட உள்ளே வரவிடவில்லை. கொஞ்சம் வெளிச்சம் தெரிய இருளே அதிகமாக ஆதிக்கம் செலுத்திருந்தது.

பயத்தில் மேல் கீழ் மூச்சு வாங்கியவள் சுற்றி பார்க்க அவளின் பின்னால் சகதியில் இருந்து முங்கி எழுந்தது போல் முடியால் முகம் மறைத்து கோரமாக வர பின்னால் திரும்பி பார்த்தவள் மிரண்டு போனாள். தடுக்கி விழுந்தவள் மீண்டும் பார்க்க அங்கு அப்டி எந்த உருவமும் இல்லை. மீண்டும் பின்னால் ஏதோ ஒன்று ஓடுவது போல் உணர ஒரு முடிவை எடுத்தவள் வரவழைத்த தைரியத்தோடு எழுந்து நின்றாள்

சுத்தி சுத்தி பார்த்தவள் " எதுக்கு ஒளிஞ்சிருக்க..... ஹான் எதுக்கு ஒளிஞ்சிருக்க..... உனக்கு என் உயிரு தானே வேணும் வந்து எடுத்துக்கோ..... உன்னால பயந்து பயந்து கொஞ்சம் கொஞ்சமாக சாகுறதுக்கு ஒரடியா நிம்மதியா செத்துரலாம். இன்னும் எதுக்கு ஒளிஞ்சிருக்க..... ஓஹ் என் ரத்தம் வேணுமா வா வந்து குடி " என ஆவேசகமாக பேசியவளுக்கு உயிர் வாழும் ஆசையே வெறுத்து போய் விட்டது. இப்டி பயந்து வாழ்வதற்கு செத்து போலாம் என ஆதங்கத்தை கொட்டி தீர்த்தவள் கீழே பார்வை துளவ விட்டவளின் கண்ணில் உடைந்த கண்ணாடி துண்டு சிக்கியது.

அழுத கண்ணை துடைத்தவள் அந்த உடைந்த கண்ணாடியை கையில் எடுத்து கொண்டு " வா வந்து என் மொத்த ரத்தத்தையும் உறிஞ்சி குடிச்சிட்டு போ " என்றவள் கிழிக்க போக அவள் கையை தட்டி விட்டது அந்த உருவம். அதில் தடுமாறியவள் முன்னால் பார்க்க சகதியில் நினைந்து முகம் முழுக்க முடி போர்த்தி இருந்த உருவத்தின் கண்கள் மட்டுமே தெரிந்தது. மிரண்டு போய் இருந்த ஆத்மி அருகில் நெருங்கிய உருவம் " ஆத்மி என்ன பயத்தோட பார்க்காத.... அதுவே உன்ன ஆபத்துக்கு உள்ளாக்கும்..... தயவு செய்து பயம் கொள்ளாமல் என்னை பாரு " என்று அந்த உருவம் பேசியதில் பேச்சிழந்தவள் தன்னை நிதானித்து கொள்ள பெரும்பாடு பட்டாள்.

இனி எப்படியும் உயிர் வாழப்போவதில்லை. இந்த உருவம் தன்னை கொன்றுவிடும் எதற்கு இனி பயம் என தன்னை சமாதானம் செய்தவள் கண்ணை மூடி ஒரு கணம் அவளின் தாயின் சிரித்த முகத்தை கண்முன்னே கொண்டு வந்தவளின் இதழில் சிறு புன்னகை தோன்ற கண் திறந்தவள் முன் அழகே உருவமாய் ஒரு பெண் தெரிய அதிர்ந்து போனாள் ஆத்மி.

திணறி போனவள் " ஏய் ஏய் நீ யாரு " என்று திக்கி கேட்க சிரித்த அந்த பெண் " என் பெயர் பவானி. இதற்கு முன்னாடி பயந்து நடுங்கிய அந்த கோரமான ஆவி "என்று சொல்ல நம்பாதவள் " இல்ல..... இப்போ நீ ஒரு பெண்ணா எனக்கு தெரியுற.... நீ எப்டி அந்த கோரமான ஆவியா இருக்க முடியும் " என்று கேட்க சிரித்தவள் " அப்போ நீ என்ன பயத்தோடு பார்த்த நா உனக்கு கோரமாக தெரிஞ்சேன்... இப்போ பயமில்லாமல் பாக்குற அதான் என் உண்மையான உருவம் உனக்கு தெரியுது " என்று விலக்கிய ஆவி ஆத்மியிடம் " நீ எனக்கு ஒரு உதவி செய்னும் " என்று சொல்ல ஆவியை எரிப்பது போல் பார்த்தவள் " என் அம்மாவை கொன்ன உனக்கு நா உதவி பண்ணனுமா.... அதுக்கு நா செத்து போறதே மேல் " என்றவளின் கோவத்தில் பதறி போனாள் பவானி.

" ஆத்மி நீ என்ன தவறா புரிஞ்சிருக்க..... அன்னைக்கு உங்க அம்மா மாடில இருந்து தவறி விழுந்தது காரணம் நா இல்ல..... அன்னைக்கு நான் உன் அம்மாவை காப்பாத்த எவ்ளவோ முயற்சி பண்ணேன் ஆனா என்னால உன் அம்மாவை காப்பாத்த முடியல என் மேல உனக்கு நம்பிக்கை இல்லனா உங்க அம்மா உனக்காக ஒரு கடிதம் எழுதி அது உன்னோட குழந்தை புகைப்படத்தில் மறைத்து வைத்திருக்காங்க அத படிச்சி பாரு " என்று சொல்ல அந்த ஆவி பொய் சொல்வதாக ஆத்மிக்கு தெரியவில்லை.

அவளின் தாய் அறைக்கு ஓடினாள் ஆத்மி. பவானி சொல்லியது போல் அதில் ஒரு கடிதம் இருந்தது. கைகள் நடுங்க உதடுகள் வெம்ப அந்த கடிதத்தை பிரித்து படித்தால். " ஆத்மி கொஞ்ச நாளா அம்மாக்கு அடிக்கடி மயக்கம் வருதுடா.... ரத்த வாந்தியும் வருது....... இத உன்கிட்ட சொல்லி உன்ன கஷ்ட படுத்த எனக்கு விருப்பம் இல்ல தங்கம். என்னால இந்த வலியை பொருக்க முடியல அம்மு...... இன்னும் கொஞ்ச நாளுல நா செத்துருவேன்.....எனக்கே ஒரே கவலை உன்ன அனாதையாக்கிட்டு போறேன்னு தான்மா...... அம்மா இப்டி பாதிலே விட்டு போறேன்னு கலங்காத அம்மு...... ஒரு பெண்ணா நீ தைரியமா இருக்கணும்.... அம்மா எப்பவும் உன் கூடவே இருப்பேன் தங்கம்..... இந்த கடிதம் உன் கைல இருக்கும் போது அம்மா உன் பக்கத்துல இருக்க மாட்டேன்.... ஆனா அம்மா எப்பவும் உன்னையே நெனச்சிட்டு இருப்பேன்..... பத்திரமா இரு தங்கம் " என்று அவரின் கண்ணீர் கொட்டி எழுதிய கடிதத்தை படித்து முடித்த ஆத்மி குலுங்கி அழுதாள்.

ஆத்மி அருகில் தோன்றிய பவானி " உன் அம்மாக்கு திடீர்னு மயக்கம் வந்து ரத்த வாந்தி எடுத்து செத்தாங்க.... என்னால அந்த கொடுமைய பார்த்தும் எதும் பண்ணமுடியாம துடிச்சி போய்ட்டேன்..... இந்த கடிதம் பத்தி உன்கிட்ட பலமுறை சொல்ல முயற்சி பண்ணேன் ஆனா நீ என்ன பார்த்து பயந்து ஓடிட்ட " என்று சொல்ல அழுது ஓய்ந்தவள் தேங்க்ஸ் பவானி என்று மட்டும் சொல்லிய ஆத்மி மனம் மாற மருத்துவமனை கிளம்பினாள்.என்னதான் பேசினாலும் பவானி மீது நம்பிக்கை வரவில்லை.

- நீங்கா இரவுகள் 🖤
 
Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 2
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Mar 6, 2025
Messages
31

கதை ரொம்ப ரொம்ப திரில்லிங்கா போகுது 😱😱😱
 
Member
Joined
Nov 26, 2023
Messages
47
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top