அத்தியாயம் 16

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
57
அத்தியாயம் 16


அர்த்த ராத்திரி. அருகே கூப்பிடும் தூரத்தில் கூட இங்கு வீடுகள் இல்லை. மூர்த்திடமிருந்து தன்னை காத்துக் கொள்ள ஓடியவளை பாய்ந்து பிடித்து விட்டான் அவன்.


“எங்கடி ஓட பார்க்குற” கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் அவளை சுவரில் தள்ளி பாய முற்பட, கதவு தட்டும் ஓசை அவனை அதிர்ச்சியாக்கியது.

“காப்...” கத்த முயன்ற தேனுவின் வாயை அழுத்தி மூடிக் கொண்டான் மூர்த்தி.

“மூச்சை விட்ட? கொன்னு போட்டுருவேன் ஜாக்கிரதை” பல்லைக் கடித்தவன் கதவினை பார்க்க இப்போது தட்டும் சத்தம் நின்றது.

மயான அமைதி. வந்தவன் போகிருப்பான் என மீண்டும் தேனின் ஆடைகளை அவன் கிழிக்க முற்பட, அவன் கையை கடித்தவளை இம்முறை மிருகம் போல் தாக்கினான் மூர்த்தி. பாவம் அவன் அடித்த வேகத்தில் நெற்றி சுவரில் மோதி அப்படியே மயங்கி சரிந்தாள் தேனிசை.


“&@@##” பச்சையாக பேசியவன் கீழே சுருண்டு கிடப்பவளின் பேண்ட்டை உருவ முற்பட, திடீரென கதவின் தாழ் உடைக்கப்பட்டு உள்ளே வந்த உருவத்தைக் கண்டு அரண்டு போனான் மூர்த்தி.


அவனை விட உயரம். அவனைக் காட்டிலும் திடமான உடல். பயந்த மூர்த்தி தப்பிக்க முயலும் முன் அவன் கழுத்தை பிடித்திருந்தான் விஷ்ணு மதுராந்தகன்.


அக்னி பிழம்பாய் நின்றவன் மூர்த்தி ஓங்கிய கையினை முட்டில் அடித்து இரண்டாக எலும்பை உடைத்தவன், கத்த விடாமல் கழுத்திலும் ஓங்கி குத்திட சம்பவ இடத்திலே சரிந்தான் மூர்த்தி.


அவன் மயங்கி விழுந்தும் சரமாரியாக மூஞ்சில் குத்தியவனுக்கு மெல்லிய முனகல் ஒன்று கேட்ட பின்பே தன்னிலை திரும்பியவனாய் ஓடினான் அவனின் தேனுவிடம்.


“தேனு... தேனு!!! ஹே நா வந்துட்டேன்டி. இங்க பாரு. உனக்கு ஒன்னும் இல்லை” மடியில் கிடத்தி அவளின் கன்னத்தை தட்ட முழுதாக மயக்கம் தெளிந்தவள் அவனின் கழுத்தை எக்கி பிடித்து கதறி அழுதாள் பாவை.


பெண்ணின் உடல் பயத்தில் வெடவெடத்ததை உணர்ந்த விஷ்ணுவும் வாரிக் கொண்டான் அவளை. அவளின் பின்னந்தலையில் கரம் பதித்து வருடியவன்

“ஒன்னும் இல்லைடி. நான் வந்துட்டேன்”

“ஒரு நொடி செத்துட்டேன்” கேவி அழுதிட, கலங்கியவன்

“சாரிடி, என் தப்பு தான். உன்னை தனியா விட்டு போகிருக்க கூடாது. நீ நம்ப வீட்டுல இருப்பேன்னு நினைச்சேன். சாரிடி” மூச்சு விடாமல் கேட்பவனின் கழுத்திலே முகம் புதைத்தவள் இன்னும் அழ

“அழாதடி” கெஞ்சியும் மட்டுப்படவே இல்லை. பயம் தெளியமட்டும் அவன் அணைப்பிலே கொட்டி தீர்த்தாள் தேனிசை. அழுகை நின்று விம்மல் மட்டும் இருக்க அவளை விலக்கியவன் அப்போது தான் பெண்ணின் முகத்தையே சரியாய் பார்த்தான்.


நடந்த கலோபரத்தில் முகத்தில் ஆங்காங்கே மூர்த்தியின் கீறல். நெற்றியில் சிவந்து வீங்கிய காயம். உடை மோசமாக கிழிந்து காட்சியளிக்க தன் சட்டையை கழட்டி அவளை மொத்தமாக சுற்றிக் கொண்டு கையில் தூக்கிக் கொண்டான் விஷ்ணு.


“நம்ப வீட்டுக்கு போலாம்” திரும்பியவன் விழுந்து கிடந்த மூர்த்தி இல்லாததை கவனித்தான்.
தப்பி ஓடி விட்டான் போல பொறுக்கி. அவனை பிறகு கவனித்து கொள்ளலாம் என முடிவு செய்த விஷ்ணு தேனுவை அவர்களின் பெரிய வீட்டிற்கு அழைத்து சென்றான்.


போகும் வழியில் கூட தேனுவின் அழுகை நிற்கவில்லை. அவளால் அதை மறக்க முடியவில்லை. அவன் தொட்டது தன்னை என்ன செய்ய நினைத்தான் என்ற எண்ணமே மீண்டும் மீண்டும் அவளை புழுவை போல் வதைக்க, விஷ்ணு இருப்பதையும் மறந்து முகத்தை மூடி கதறுபவளை காரை நிறுத்தி பார்த்தான் அவன்.


சற்று முன்பு நடந்த காரியத்தை முழுதாக மறைக்க வேண்டும் என முடிவு செய்தவனின் கண்ணில் பட்டது கோவில் ஒன்று. வழக்கமாக தேனு செல்லும் கோவில் தான்.
ஒரு முடிவோடு இறங்கிய விஷ்ணு மறுமுனையில் அழுபவளையும் இறக்கி இழுத்து செல்ல விழித்து பார்த்தாள் ஒன்றும் புரியாமல்.


“இங்க எதுக்கு” வெம்பிய குரலில் கேட்பவளை தன் முன்னே நிற்க வைத்தவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்தான்.


நகை பெட்டி அது. “எல்லார் முன்னாடியும் உன்மேலான என் காதலை சொல்லி இந்த தாலியை உன் கழுத்துல போட நினைச்சேன். ஆனா இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் நான் பொறுமையா இருக்க விரும்பல. உன்னை இழக்கவும் விரும்பல. என்னை பொறுத்தவரை இந்த நொடி நீ என் மனைவிடி” தாலியோடு இருக்கும் தங்க சங்கிலியை அவள் கழுத்தில் போட்டவனை திகைத்து பார்த்தாள் தேனிசை.


இதை அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவனும் எதிர்பார்க்கவில்லை தான் இப்படி ஒரு சூழலில் அதை அணிவிப்பான் என.


அவளுக்காக பரிசு வாங்க நினைத்தவனுக்கு தாலியே சிறந்த பரிசு என ஏன் தோன்ற வேண்டும்?? அதோடு ஜெயினாகவே ஆசையாய் வாங்கி வந்தான் விஷ்ணு. அவளிடம் அதை காட்டி இதை எல்லார் முன்னிலையில் உன் கழுத்தில் போடுவேன் என சொல்ல நினைத்தான். ஆனால் அவனின் ஆசையெல்லாம் வந்த ஒரு அழைப்பில் தலைகீழாக மாறியது.


இதோ! இப்போது இரவின் வெளிச்சத்தில் மின்னும் தாலியை அவள் நம்பாது பார்க்கும் போதே கட்டுப்பாடின்றி கண்ணீரை சுரக்க, அவளை அணைத்துக் கொண்ட விஷ்ணு “இனி ஒரு நொடியும் உன்னை விட்டிருக்க நான் விரும்பல தேனிசை. ஐ லவ் யூ. ஐ டோன்ட் வான்ட் டு லூஸ் யூ. இனி நா இருக்கேன் உனக்கு” ஒரு வித பயத்தில் அவளை இறுக்கிட மறுவார்த்தை பேசவில்லை அவள்.


ஆறுமுக இல்லம்....


வீடே உறங்கிருக்க, விஷ்ணு அறையில் அப்பாவியாக முழித்தப்படி அமர்ந்திருந்தாள் தேனிசை. நேரடியாக அறைக்கு அழைத்து வந்து விட்டான். அங்கும் இங்கும் போகும் விஷ்ணுவை கண்கள் தொடர, இறுதியாக அவள் முன் வந்து அமர்ந்தவன் “நான் ரூம்ல இருந்து டிரஸ் எடுத்துட்டு வரேன். வேற மாத்திக்கோ” நிதானமாக சொல்லியவன் எழ பதறி பிடித்துக் கொண்டாள் அவன் கரத்தை.


இன்னும் அவள் பயத்தில் இருப்பதை உணர்ந்தவன் , அவள் உயரத்திற்கு மண்டியிட்டு “இப்படியே தூங்க முடியாது ஹனி. என் ரூம்க்குள்ள என்னை உன்ன தவிர யாரும் வர மாட்டாங்கனு உனக்கே தெரியும்ல. நான் அஞ்சே நிமிஷத்துல வரேன்” என்றவன் முடிந்தளவு வேகமாகவே அவளிற்கு மாற்று துணியை எடுத்து கையில் கொடுத்தான் விஷ்ணு.


எதுவும் பேசாமல் குளியலறை சென்றவள் ஆடையை கழற்றி உடலில் ஏற்பட்ட சிராய்ப்புகளை கவனித்தாள். லேசாய் கண்ணீர் சுரக்க, அழுகையை கட்டுப்படுத்தி சுத்தம் செய்தவள் உடை மாற்றி அறைக்குள் நுழைந்தாள்.


“நா... நான் இப்போ ஓகே தான். என் ரூமுக்கே போறேன்”


“போலாம். இங்க வந்து உக்காரு”
ஏதோ ஒரு குழந்தையை நடத்துவது போல் அவளை இருக்கையில் அமர வைத்த விஷ்ணு உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு நிதானமாக மருந்திட்டான்.


“கொஞ்சம் எரியும்” என்றவன் ஊதி விட எரிச்சல் கூட பெரிதாக தெரியவில்லை அவளிற்கு.
“வீட்டுல இருக்குறவங்களுக்கு இது தெரிய வேண்டாம்” தரையை வெறித்தவளை கவனிக்காது தீவிரமாக மருந்திட்ட விஷ்ணு


“எது?” என்று கேட்க, தடுமாறியவள்


“ நீ... நீங்க எ...னக்கு தா..லி கட்டுனது” திக்கி திணறி சொல்ல சட்டென நிமிர்ந்தான் அவன்.



“இவங்க என்ன சொல்லுவாங்கனு நினைச்சி நீ பீல் பண்ண வேண்டாம். எல்லாரையும் நான் சமாளிச்சிக்கிறேன்” கழுத்து நரம்புகள் புடைக்க சொல்லியவன் பல்லைக் கடித்து தன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றான்.



“நீங்க சமாளிப்பீங்கனு தெரியும். ஆனா என்னாலையே இத ஏற்க முடியாத போது. வீட்டுல இருக்குறவங்க எப்படி?”



“நீ ஏத்துக்கிட்டாலும் இல்லைனாலும் நீ தான் என் பொண்டாட்டிங்கிறத யாராலும் மாத்த முடியாது”



“ஆனா சத்தியா அண்ணா கல்யாணத்துல இதால பிரச்சினை வந்தா?”


“உனக்கு என்ன பைத்தியமாடி? இப்போ நீ யோசிக்க வேண்டியது உன்னை பற்றி என்னை பற்றி மட்டும் தான். இங்க யாரு கல்யாணமும் என்னால நிற்க போறது இல்ல ஹனி”



“அதை உறுதியா சொல்ல முடியாதுல உங்களால. என்னால யாரு வாழ்க்கையும் பாழாக விரும்பல. எல்லாரும் உங்க தங்கச்சி கல்யாணத்தை நினைச்சி சந்தோஷமா இருக்காங்க. இப்போ எல்லாரோட நிம்மதியையும் நான் கெடுக்க விரும்பல.
புரிஞ்சிக்கோங்க. இந்த கல்யாணம் முடிஞ்சதும் சொல்லுலாம்” எங்கு ஆறுமுகம் ஐயா தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவாரோ, குடும்பம் பிரிய தானே ஒரு காரணமாகி விடுவேனோ என்ற பயத்தில் கெஞ்சியவளை இழுத்து பிடித்த பொறுமையில் பார்த்தான் விஷ்ணு.


அவனிருக்கும் கோவத்திற்கு இப்போதே எல்லாரையும் எழுப்பி சொல்ல தான் ஆசை. ஆனால் ஆசை காதலி தான் அப்பாவியாக முகத்தை வைத்து கெஞ்சுகிறாளே.


ஆழ மூச்சை இழுத்து பின்னந்தலையை கோதியவன் “நான் சொல்லுலைனா இன்னும் இந்த வீட்டு வேலைக்காரியா ட்ரீட் பண்ணுவாங்க. என்னை அதை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்லுறியாடி!!” பல்லிடுக்கில் சீற அவன் கரத்தை பற்றிய தேனிசை


“எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். கல்யாணம் முடியிற வரை தான்” தலை சாய்த்து கேட்ட விதத்திலே ஆஃப் ஆகி போனான் அவன். இதற்கு மேல் என்னத்த அவன் பேசி ஜெயித்திட முடியும். அதுவும் முடிவாய் இருப்பவளிடம் எங்கன பேசி ஜெயிக்க.


“ஓகே நான் சொல்லுல. பட் அதுக்கு சில கண்டிஷன் இருக்கு” அழுத்தமாய் நோக்க


“என்ன?” என்றவளுக்கு தலை சுற்றியது அவன் போட்ட கண்டிஷனில்.


“இந்த வீட்டை விட்டு எங்கு போறதா இருந்தாலும் எனக்கு தெரியாம இருக்க கூடாது. அண்ட் நா இப்போ உன் புருஷன். யாருகிட்டையும் சொல்லததுனால இது இல்லைனு ஆகிடாது. ஆல்சோ இனி தனியா தூங்குறதுல எனக்கு விருப்பம் இல்லை. என் ரூம்லையே தூங்கு. உனக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் நா சோபாலயே படுத்துக்கிறேன். இதுக்கெல்லாம் ஓகே னா? எனக்கும் நீ சொன்னது ஓகே” தோளை குலுக்கி உதட்டை பிதுக்கியவனை அரண்டு பார்த்தாள் தேனிசை.


அவளுக்கு அவன் கல்யாண விஷயத்தை சொல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் அதி முக்கியம். தற்போதைக்கு சரியென்று சொல்லி விட்டு பிறகு சமாளித்து கொள்ளலாம் என முடிவெடுத்த தேனிசை

“சரி” மெல்லிய குரலில் சொல்ல


“குட் கேர்ள். அப்போ தூங்கலாம்” மெத்தையில் படுக்க வந்தவனை கேள்வியாக தேனிசை பார்க்க புரிந்து கொண்டவன்


“ஹான். பக்கத்துல படுக்கலடி. அப்படி பார்க்காத” முகம் கறுத்தவன் வேண்டா வெறுப்பாக சோபாவில் தலையணையை போட


“நீங்க இங்க படுத்துக்கோங்க” என்ற வார்த்தையில் சிரித்த முகம் அடுத்து “நான் சோபால படுத்துக்கிறேன்” என்றதில் மீண்டும் சுருங்கியது.


“சும்மா மனுஷன டென்ஷன் பண்ணாம படுத்து தூங்கு ஹனி” பொய்யாய் கோவித்தவன் படுத்துக் கொள்ள, மெலிதாக புன்னகைத்த தேனிசை உறங்க முயன்றாள் அவன் மெத்தையில்.


பஞ்சு மெத்தை புதியது அவளிற்கு. கட்டாந்தரையும் இரும்பு கட்டிலிலும் படுத்தவளுக்கு பஞ்சு மெத்தை ஒரு வித இதத்தை தர தன்னையும் மீறி நெடுநேரம் கழித்தே உறங்கி போனாள் பாவை.


அவள் உறங்கி விட்டதை உறுதி செய்த பின்பே தன் போனை எடுத்துக் கொண்டு அறையிலிருக்கும் பால்கனி புறம் சென்று விட்டான் விஷ்ணு. யாரிடம் பேசினானோ. முகம் அத்தனை ரவுத்திரமாக காட்சி அளிக்க இறுதியாக எதையோ சொல்லி அழைப்பை துண்டித்த விஷ்ணு நெடு நேரம் கழித்தே மீண்டும் அறைக்குள் நுழைந்தவன் உறக்கமின்றி அவளையே வெறித்து பார்த்தான் மௌனமாய்.


விடியற்காலை.... மெல்ல மனிதர்கள் எழ துவங்க பெரிய வீட்டிலும் வேலையாட்கள் அவர்களின் அன்றாட வேலையை பார்க்க துவங்கிருந்தனர்.



ஆறுமுகம் வீட்டில் பெரிய மாட்டுபண்ணை உண்டு. அதற்கே இரண்டு ஆட்கள் மேல் தேவைப்படும். வழக்கமாக தேனிசை தான் வீட்டிற்காக பாலை கறந்து தேநீரை போடுவாள். இன்று அவளை காணாது மாரி பார்ப்பவர்களிடமெல்லாம் விசாரித்திட, அவளின் தேடுதலுக்கு சொந்தமானவளோ அசந்து போய் உறங்கிக் கொண்டிருந்தாள்.


ஜன்னல் வழியே வந்த பகலவன் பிரகாசத்தில் நெற்றி சுருங்க மெல்ல தூக்கம் கலைந்த தேனிசை தன் வயிற்றை சுற்றி ஒரு கரம் அணைத்திருப்பதை உணர்ந்து பதறி எழ முயற்சிக்க, அலெக்காக புரட்டி தன் பக்கம் பார்க்கும் படி செய்த விஷ்ணு " அமைதியா தூங்குடி" கடிந்தவன் உறக்கம் தொடர விக்கித்து போனாள் தேனிசை.

- தொடரும்...
 
Last edited:

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 16
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 16, 2023
Messages
14
காப்பாத்த வருவேன்னு நினைச்சேன் ஆனா நீ நேரடியா கல்யாணத்தையே முடிச்சிட்டு வந்துட்டியே மது மாம்ஸ் 😂😂😂😂
 
Top