- Joined
- Nov 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் 16
" சப்பாஆ ஒரு வழியா தாய்க்கிழவி ஜோலி முடிஞ்சிது " என்ற ஆரவை பார்த்த கணபதி
" என்ன மச்சான் உன் காதலி உன்ன விட்டு போய்ட்டானு கவலையா " என்ற கணபதியை உதைத்தவன்
" ஏன்டா என்ன கொலை வெறி ஆக்குற. அந்த பேயி தான் போயி சேந்துட்டாளே... இனி அவளை எனக்கு நியாபக படுத்தின கொன்னு போட்ருவேன் உன்ன " என்று பல்லை கடித்து கூறியவனை கண்டு எல்லாரும் சிரித்து விட்டனர்.
" போதும். எல்லாரும் வீட்டுக்கு போலாம் வாங்க " என்ற எழில் எல்லாரையும் அழைத்து கொண்டு ஆத்மி வீட்டை நோக்கி சென்றான்.
ஆத்மியையும் மேகாவையும் வீட்டில் விட்டவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றனர். இந்த ஆரவ் செல்லும் மேகாவை அழைத்தவன் " மின்னல் மலர் நாளைக்கு என்கூட ஒரு காபி சாப்பிட வர முடியுமா " என்றவனை பார்த்து கணபதி அதிர்ச்சியில் வாய் பிளந்து விட மேகா ஆரவை முறைத்து பார்த்தவள் பின் " ஈவினிங் வந்து என்ன பிக் அப் பண்ணிக்கோ " என்று சொல்லி சென்று விட கணபதி தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான். எழில் ஒரு சிரிப்போடு பார்த்தவன் ஆத்மிக்கு கண்ணாலே பாய் சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான்.
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக ஆத்மியும் மேகாவும் குளித்து முடித்தவர்கள் காமினி சமைத்து வைத்து விட்டு தூங்கி விடவே அவளை தொல்லை செய்யாமல் இருவரும் அவர்கள் அறைக்கு வந்தனர்.
" எப்டியோ ஆத்மீ உனக்கு இருந்த பிரச்சனை முடிஞ்சிது. இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு " என்ற மேகாக்கு சிரிப்பை பதிலாய் குடுத்தவள்
" நீ இருக்குற வரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மேகா. நீ எனக்கு எதும் ஆக விட மாட்டா " என்றவளை கேலியாக பார்த்தவள்
" ஹான் இது மட்டும் அந்த எழில் கேட்டாரு என்ன பார்வையாலே பஸ்பம் ஆக்கிருவாரு . எவ்ளோ பொசஸிவ் உன் மேல " என்றவளை செல்லமாக அடித்த ஆத்மி
" போதும் என்ன வச்சி கிண்டல் பண்ணுது. கம்முனு தூங்கு " என்றவள் திரும்பி படுத்துக்கொள்ள சிரித்த மேகாவும் படுத்துகொண்டாள். ஏனோ ஆரவின் சேட்டைகள் எல்லாம் மேகாவின் கண் முன்னே வர சிரித்து கொண்டவள் முயன்று உறங்க ஆரம்பித்தாள்.
எங்கும் மணல் தெரியாமல் மறைத்து வளர்ந்த புல்வெளி மேல் நடந்து சென்றான் ஆரவ். பனியில் நனைந்த புல்கள் காலில் பட்டதும் உடலெங்கும் சிலிர்த்தது.
இன்னும் பனி விலகாமல் புகை மூட்டமாக இருந்தது. அதை ரசித்தவன் இதழில் சிறு புன்னைகையுடன் முன்னேறி செல்ல அவளை கண்டான்.
நதியை ரசித்த படி ஆரவ்க்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டிருந்தாள் அவள்.
அவளின் பின்னே நின்று ரசித்தவன் அவளின் தோளை தொட திரும்பியவளின் முகம் கண்டு அரண்டு போனான் ஆரவ் . சட்டென்று அவள் முகம் தாய்க்கிழவி போல் மாறி விட எதிரில் நின்ற ஆரவை வெறித்து பார்த்த அது " நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ " சொல்லி சத்தமாக சிரிக்க ஆரவை சுத்தி பயங்கரமான சத்தம் கேட்டதில் மிரண்டு போனவன்..
" ஆஆஆஆ.. " என்று அலறி கொண்டே ஓடியவனை பின்னால் துரத்த தொப்பென விழுந்தான் ஆரவ். கவுந்தடித்து விழுந்ததில் மூக்கை தேய்த்து கொண்டு சுற்றி பார்த்தவன் முன்னால் டிவியில் பேட்டை படம் ஓட தலையில் அடித்து கொண்ட ஆரவ்
" அடக்கருமமே இவர் பேசுன டயலாக் தான் அந்த தாய்க்கிழவி பேசுன மாதிரி இருந்துச்சு.. செத்து போனவ கனவுல வந்தும் என் உசுர வாங்குறாளே " புலம்பி தள்ளியவன் தூக்கம் வராமல் போகவே காரை எடுத்து கொண்டு கிளம்பினான்.
தொடர்ந்து கேட்ட ஹாரன் சத்தத்தில் நன்றாக தூங்கி கொண்டிருந்த கணபதி தூக்கம் கலைந்த கடுப்பில் வெளியே வந்து பார்க்க ஆரவை கண்டு மிரண்டு போனான்.
" டேய் ஆவிகூட டூயட் பாடி இப்போ ஆவி வர்ற நேரத்துல அலைஞ்சிட்டு இருக்கியா. இந்த நேரத்துல இங்க என்னடா பன்ற " என்றவனை முறைத்து பார்த்த ஆரவ்
" ஹான் நானே வருவேன்னு ஒரு குரல் கேட்டுச்சு. அதான் நீ வரவேணான்னு நானே வந்துட்டேன். டேய் அந்த தாய்க்கிழவி கனவுல வந்து பயம்புடுத்துறா டா " பயத்தில் கூறியவனை கண்டு கணபதி குபீரென சிரித்தவன்
" மச்சி அதுக்கு நீ இல்லாம இருக்க முடியல போல. எவ்ளோ லவ் இருந்தா கனவுல வந்துருக்கும் " கணபதி சொல்ல அவனின் முதுகில் ஒரு அடி வைத்த ஆரவ்
" இன்னொரு முறை அவளை பத்தி என்கிட்ட பேசுன ஒரே உதை மூச்சி நின்னுரும். அப்றம் அந்த தாய்க்கிழவிக்கு தலை வாரி விட நீ போயிருவ பார்த்துக்கோ " ஆரவ் கூறியதில் விழி பிதுங்கி நின்றவன்
" அட உண்மைய சொன்னா கோவ படுவியா. சரி உள்ள வா " என்று கணபதி அழைக்கவே அவனின் அறைக்குள் புகுந்து கொண்டான் ஆரவ்.
'"நீ இங்கையே இரு உனக்கு காபீ போட்டு எடுத்துட்டு வரேன் " என்ற கணபதி ஆரவ்க்கு காபி போட்டு எடுத்து வர அந்தோ பாவம் ஆரவ் நன்றாக தூங்கி கொண்டிருந்தான்.
கோவமும் சிரிப்பும் வர ஆரவ் அருகில் போய் கணபதி படுத்த அடுத்த நொடி ஆரவ்வின் பாதி உடல் கணபதி மேல் தான் இருந்தது.
************* ************ ************
ஆத்மிக்கு ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. கதறி கொண்டிருக்க மீண்டும் ஆத்மி மனக்கண்ணில் அந்த பெண்ணை கூட்டமாக பலாத்காரம் செய்ய பதறி எழுந்தாள் ஆத்மி.
" மீ என்னாச்சு உனக்கு. எதும் கெட்ட கனவா " அவள் முகம் அறிந்து கேட்க
" தெர்ல மேகா யாரோ ஒரு பொண்ண கூட்டமா அவளை கற்பழிக்கிறாங்க. அந்த பொண்ணு கதறல் நிஜம் மாதிரி இன்னும் என் காதுல கேட்குது " என்றவள் உடல் நடுங்க அவளை ஆறுதல் படுத்தியவள்
" ஒன்னும் இல்ல, இது ஒரு கனவு தான். இதுல எதும் இல்ல" என்று மேகா சொல்ல அதை ஏற்கும் மனம் தான் ஆத்மிக்கு இல்லை.
" பவானி பவானி " என்று ஆத்மி அழைக்க புரியாமல் பார்த்த மேகா
" ஏண்டி இப்போ பவானியை கூப்டுற " என்றவள் முகம் வேதனையோடு பார்த்தவள்
" நா பார்த்த பொண்ணு வேற யாரும் இல்ல மேகா பவானி தான். அவளை தான் வலுக்கட்டாயமா கற்பழித்தாங்க " என்றதில் மேகா அதிர்ந்து போய் இருக்க
" நீ பார்த்தது கனவு இல்ல ஆத்மி. அது உண்மையா நடந்தது " என்ற குரலில் இருவருமே அதிர்ச்சி ஆனார்கள்.
"என்ன சொல்ற பவானி. அப்போ உனக்கு " மேகா கேட்க முடியாமல் பாதிலே வார்த்தைகள் நிற்க வெற்று புன்னகை செய்த பவானி
" ஆமா மேகா என்னை கற்பழிச்சி கொலைபண்ணிட்டாங்க " என்று பவானி சொல்லியதை இருவராலும் நம்ப முடியவில்லை. திகைப்பில் இருந்தவர்களை கண்டவள் தனக்கு நடந்த அநியாயங்களை சொல்லத் தொடங்கினாள்.
சில மாதங்களுக்கு முன்..
துள்ளலோடு காலேஜ் கிளம்பி கிழே வந்தவள் அலுவலகம் கிளம்பிய தன் தந்தை அருகில் ஓடி வந்து அமர்ந்து கொண்டாள்.
அவளை கண்டதும் போனில் ஏதோ பேசிக்கொண்டிருந்தவர் போனை அணைத்து விட்டு " என்னம்மா காலேஜ் கிளம்பிட்டியா " என்று தலை வருடி கேட்க
" ஹான் கிளம்பிட்டேன்பா. நீங்க இன்னும் ஆபீஸ் போகலையா " என்றவளின் கண்கள் அடிக்கடி போனை நோட்டமிட்டது.
அதை கவனிக்காதவர் " இனிமேல் தான். சரி வா சாப்ட்டு உன்ன காலேஜ்ல ட்ரோப் பண்ணிட்டு அப்பா ஆபிஸ் போறேன் " என்றதில் பதறியவள்
" இல்ல இல்லப்பா உங்களுக்கு எவ்ளோ மீட்டிங்ஸ் இருக்கும் . உங்களுக்கு எதுக்கு தேவை இல்லாத சிரமம். நானே போய்க்குறேன் " என்று பவானி சொல்ல கேட்காதவர்
" முதல்ல வந்து சாப்புடு. அப்றம் பேசிக்குலாம் " என்றவர் உணவு மேசையில் அமர வேறு வழி இல்லாமல் அவருடன் அமர்ந்து கொண்டாள் பவானி.
''டொய்ங் " என்ற சத்தத்துடன் மெசேஜ் வர உற்சாகமானவள் சாப்பிடாமலே "ஓகே டேட் எனக்கு லேட் ஆச்சு. நா காலேஜ் பஸ்ல போறேன். பாய் "என்றவள் நில்லாமல் ஓட இதுவரை வராத சந்தேகம் மகள் மீது வந்தது.
அதை எதையும் அறியாதவள் பஸ் ஸ்டாப்பில் நிற்க சீறி பாய்ந்த வந்த பைக் பவானி முன் நின்றது. தலைக்கவசம் கழட்டி கலைந்த கேசத்தை கோதியவன் தன்னையே இமைக்காமல் பார்க்கும் காதலியை கண்டு அழகாய் சிரித்தான்.
அவனின் சிரிப்பை முதலில் ரசித்தவள் பின் கோவமாக திரும்பி கொள்ள அதற்கும் சிரித்தான் ராகவ். ராகவ் பவானி அளவிற்கு வசதியானவன். சிரித்த முகம். கல்லூரியே இவனை பார்த்தால் இவன் பார்த்தது என்னவோ பவானி ஒருவளின் முகத்தை மட்டும் தான்.
" ஸ்னோ ( பவானியை பனி என்று சுருக்கி செல்லமாக ஸ்னோ என்று அழைப்பான் ) ஸ்னோ கோவமா இருக்கியா என்ன " கேட்டவனை கண்டு கொள்ளாமல் விறைப்பாக நிற்க சிரித்தவன் " அது ஒன்னும் இல்ல ஸ்னோ. வரவழியில ஒரு அழகான பொண்ணு லிப்ட் கேட்டுச்சா. எனக்கும் விட்டுட்டு வர மனசே இல்ல. அதான் அந்த பியூட்டிய ட்ரோப் பண்ணிட்டு வரேன் " என்றவனை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தவள்
" டேய் நீ எது சொல்லிருந்தாலும் நம்பிருப்பேன். ஆனா இப்போ ஒன்னு கேவலமா சொன்ன பார்த்தியா அத மட்டும் என்னால நம்பவே முடியாதுடா. என் பிரண்ட்ஸ் கிட்டையே நீ பேச மாட்ட இதுல நீ ஒரு பொண்ண ட்ரோப் பண்ண. ட்ரோப் பன்ற மூஞ்ச பாரு " என்று பவானி திட்டியதில் முகத்தை தடவியவன்
" என் மூஞ்சிக்கு என்ன குறை. இத தானே நீயும் லவ் பன்ற " என்று சிரிக்க அவனின் சிரிப்பில் விழுந்தவள்
"உன் சிரிப்புல உன் சிரிப்புல தான்டா நா விழுந்தேன். இடியட் பேசுனது போதும் காலேஜ் போலாம் " என பவானி சொல்லவே அவளை அமர வைத்து கொண்டு கிளப்பினான்.
இப்டியே நாட்கள் போக கல்லூரியில் மாணவர்களுக்காக ட்ரிப் ஏற்பாடு செய்தனர். ராகவ் எதாவது சொல்லி வந்துவிடு என்று கெஞ்சாத குறையாக கேட்கவே அவன் மனம் நோக கூடாது என விரும்பியவள் அவளின் தந்தையிடம் அனுமதி கேட்டாள்.
அவரும் இறுதி ஆண்டு என்பதால் அனுமதி குடுக்க சந்தோசமானவள் ராகவ்க்கும் தகவல் சொல்லி விட்டாள்.
கல்லூரி வந்து எல்லாரும் ஏற்பாடு செய்ய பட்ட பேருந்தில் அமர பவானியை தனியாக இழுத்து கொண்டு நடந்தான் ராகவ்.
" ராகவ் என்ன பன்ற. எங்க கூட்டிட்டு போற. பஸ் போகிற போகுது " புரியாமல் கேட்டவளுக்கு சிரிப்பை தந்தவன்
" ஸ்னோ நாம இப்போ காலேஜ் ட்ரிப் போற போகிறது இல்ல. உன்ன ஒரு முக்கியமான இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன். ப்ளீஸ் ஸ்னோ... இத விட்டா உன்கூட என்னால தனியா டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. ப்ளீஸ் " கண்களை சுருக்கி ராகவ் கெஞ்சவே சரியென ஒப்புக்கொண்டவள் அவனின் பின்னால் அமர்ந்து கொண்டாள்.
நேராக ராகவின் கெஸ்ட் ஹவுஸ் முன் பைக் நின்றது. எதிரில் இருந்த நீர்வீழ்ச்சியும் சுற்றி இருந்த மரங்களும் பவானியை வெகுவாக கவர்ந்தது.
அவளின் முகம் கண்டு மனம் அறிந்தவன் அவளின் மென் கரங்களை பற்றி வீட்டினுள் அவனின் அறைக்கு அழைத்து வந்தான். அங்கிருந்து பார்க்கவே அருவி அழகாய் இருந்தது.
ரசித்தவளை பின்னிருந்து அணைத்து கொண்ட ராகவ் " இது எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் ஸ்னோ. உன்ன காதலிக்கிறதுக்கு முன்னாடி எந்த கஷ்டம்னாலும் இங்க வந்துருவேன்.. இங்க வந்தாலே எனக்கு இருந்த கஷ்டம் எல்லாம் மறந்து போயிரும். ஆனா உன்ன பார்த்ததுக்கு அப்றம் என் வாழ்க்கையில கஷ்டம்னு ஒன்னு இல்லவே இல்லடி.. நீ எனக்கு கிடைச்ச கிப்ட்..
என் வாழ்க்கையில உன்ன எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன். யூ ஆர் மை எவெரிதீங் " பேசிக்கொண்டே அவளின் விரலில் ஒரு அழகிய மோதிரத்தை அணிவித்தவன் விழி விரித்து பார்த்தவளின் இதழை மென்மையாக கவ்வினான்.
அவனின் திடீர் செயலில் பவானி கண்களை மூடிக்கொள்ள அவளை இறுக்கி அணைத்து கொண்டது ராகவின் கரங்கள்.
அவள் மூச்சுக்கு ஏங்கவே விலகி அவளின் நெற்றி முட்டி சிரிக்க அவனையே பார்த்தவள் " எங்க அப்பா இதுக்கு ஒதுக்கலைனா " பயத்தில் கேட்டவளின் கன்னம் தாங்கியவன்
“போராடுவேன் ஸ்னோ உன்ன கை விடமாட்டேன் " என்ற ராகவ் வார்த்தையில் மகிழ்ந்தவள் எக்கி அவனின் கழுத்தை கட்டிக்கொள்ள அவளை அனைத்து கொண்டான் ராகவ்.
பவானி துளியும் எதிர்பார்க்கவில்லை இன்றோடு அவளின் சந்தோசம் தொலைய போவதை.
அந்த ஒருவாரம் முழுவதும் தனது மொத்த காதலையும் கொட்டி மூழ்க வைத்தான் ராகவ். அவளுக்கு அவனே சமைத்து பரிமாறுவது அவளுடன் கதை அளப்பது என்று நாட்களை அழகாய் கடத்தினர்.
ஆனால் இந்த ஒரு வாரத்தில் இருவரும் தங்களின் எல்லைகளை மீறாமல்
கட்டுப்பாடனுடனே இருந்தனர். சரியாக கல்லூரி ட்ரிப் முடியும் சமயம் ராகவ் பவானியை அழைத்து கொண்டு அவளின் வீட்டின் கொஞ்சம் தூரம் தள்ளி இறக்கி விட்டான்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 16
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.