- Joined
- Nov 10, 2023
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் 15
அவள் கரம் பற்றி மூடிய கதவின் மேல் சிறை பிடித்து மேல் மூச்சை வாங்கினான் விஷ்ணு. சிவந்த அவள் முகத்தினை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன் " சாரி " சாந்தமான குரலில் கேட்க தடுமாறி போனாள் தேனிசை.
கருவிழிகள் இரண்டும் ஜீவனை பறிப்பதை உணர்ந்தவள் விழிகள் அலைய விட்டவளாய் " ம்ம் " முகத்தை திருப்பிக் கொள்ள, உதட்டை வளைத்த விஷ்ணு
" ம்ம் ன்னு சொன்னா என்ன அர்த்தம்? " குறும்பு கேள்வியில் பெருமூச்சை விட்ட தேனிசை
" உங்க மேல எனக்கு எந்த கோவமும் இல்லை. கோவப்படுவதற்கான உரிமையும் இல்லை. நீங்க இப்படி என் பின்னால வர வேண்டிய அவசியமும் இல்லை "
" அப்புறம் " கையை கதவின் மேல் உன்றி அவளை உரசாமல் நிற்பவனை விழித்து பார்த்தாள் தேனிசை.
இதற்கு கோவப்படுவான் கத்துவான் என்று நினைத்தவளுக்கு அலட்டலில்லாத பதில் ஆச்சர்யம் தான் தந்தது.
" அப்றம்....அப்றம்?... ஹான் இந்த மாதிரி என்னை தனியா எங்கையும் கூப்பிடாதீங்க "
" ஓகே "
" முதல்ல என்னை விட்டு இரண்டடி தள்ளியே நில்லுங்க" அவ்ளோதான் என்று கை கட்டி நிற்க ஏற இறங்க பார்வை பார்த்த விஷ்ணு
" சரி இனி உன்னை நான் தொந்தரவு பண்ணல " அமைதியான குரலில் சொல்லியவன் நிற்காமல் சென்று விட திகைத்து போனாள் தேனிசை.
முரண்டு பிடிப்பான், மறுப்பான் என நினைத்தவளுக்கு சொந்த செலவில் சூன்யம் வைத்த கதையாக மாறி போனது பாவம்.
அறையின் கதவை திறக்காமலே சில நிமிடங்கள் துப்பட்டாவை கசக்கி நின்றாள் விஷ்ணு திரும்ப வருவான் என்ற நம்பிக்கையில். ஆனால் நிமிடங்கள் கடந்தும் வராமல் போன ஏமாற்றத்தில் உதட்டை கடித்த தேனிசை படுக்கையில் விழுந்தும் உறக்கத்தை இழந்தாள்.
மறுநாள் மாரி வரும் முன்னே வீட்டில் இருப்பவர்களுக்கு தேநீரை போட்டிருந்தாள் தேனிசை.
" எல்லாருக்கும் போட்டுட்டியா தேனு? "
" ஆமா க்கா. இதை எல்லாருக்கும் கொடுங்க. இதை நான் விஷ்ணு சாருக்கு கொடுத்துட்டு வரேன் " ஆர்வமாக சொல்லிவிட்டு போறவளை சிறு புன்னகையோடு அனுப்பி வைத்த மாரி மற்றவர்களுக்கு அவள் கொண்டு சென்றாள்.
எப்போதும் இவள் கதவு தட்டிய சில நொடிகளில் கதவு திறந்து விடும். முகத்தில் கிலோ கணக்கு பூரிப்போடு முகம் கொள்ளா புன்னகையில் கதவை திறப்பவன் இன்று கதவை திறந்து விட்டு அவள் முகத்தைக் கூட பார்க்காமல் குளியலறைக்குள் சென்று விட இருண்டு போனது தேனிசையின் முகம்.
எந்தளவு எதிர்பார்த்து சென்றாளோ அத்தனையும் வடிந்து கறுத்த முகத்தோடு காலை உணவை செய்தவள் தனக்கு பின்னால் நிழலாடும் உணர்வில் விஷ்ணுவோ என ஆர்வமாக திரும்பியவள் முரளியின் இளித்த முகத்தை கண்டு அஷ்டகோணலாகியது அவள் முகம்.
'இது வேறையா?' நொந்த தேனிசை பேருக்கு " ஏதாச்சும் வேணுமா சார்? " சோர்ந்த குரலில் கேட்க, பெண்களை நன்கு படித்தவன்
" என்னாச்சு தேன் உன் முகமே சரியில்ல. எதும் பிரச்சனையா? " திட்டில் சட்டமாக அமர்ந்து பேசுபவனை சற்றே எரிச்சலாக பார்த்தாள் தேனு.
' சொன்னால் தீர்த்து வைப்பியா?' என கேட்க நினைத்த தன் எண்ணத்தை அடக்கிய தேனு
" அது ஒண்ணுமில்ல சார். தலைவலி "
" அச்சோ. நான் வேணா சூடா காபீ போட்டு தரவா? நீ ஏன் வேலை செய்யிற போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே. நான் டேப்லெட் தரேன் சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுமா " பாசத்தை சக்கையாக பிழிபவன் பேச்சில் சலித்த தேனிசை
" அவ்ளோ சீரியஸ் இல்லை சார். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க செஞ்சு கொடுக்குறேன். நீங்க இங்க உக்காரணும்னு அவசியம் இல்லை " எழுந்து போய் தொலையேன்டா என்று நேரடியாக சொல்லவில்லை. அவ்ளோ தான் வித்தியாசம்.
அவளின் கடுப்பில் சிரித்த முரளி " என்ன விஷ்ணு கூட சண்டையா? " ரகசிய குரலில் கேட்க அதிர்ந்து போனாள் தேனிசை.
சில நொடி உறைந்து நின்ற பெண் மீண்டும் வேலையை தொடர்ந்தவளாய் " அ... அது... அதுலாம் ஒண்ணுமில்ல. நான் ஏன்? அவர் ஏன் என்கூட " திக்கி திணறிட வாய் விட்டே சிரித்த முரளி
" ரொம்ப சிரம படாத பாப்பா. நேத்து நைட் நீங்க பேசுனத கேட்டேன். என்ன பார்க்குற நேத்து நான் உன் ரூம் பக்கத்துல தான் டவர் கிடைக்கலையேனு போன் பேசுறதுக்காக நின்னுட்டு இருந்தேன் " பல்லைக் காட்டி சொல்ல விக்கித்தவள் சுற்றும் முற்றும் வேகமாய் பார்த்தாள் யாராவது இருக்கிறார்களா என்று.
முரளியின் அருகே ஓடி நின்றவள் " அய்யோ!!! நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. நாங்க சும்மா தான் " பொய் கூட ஒழுங்காக சொல்ல தெரியாமல் முழிப்பவளை கண்டு சத்தமாக சிரித்தான் முரளி.
அவன் சிரிப்பில் பீதியாகியவள் " ப்ளீஸ் இதை பெருசு பண்ணாதீங்க " அப்பாவியாக கேட்கும் பெண்ணை ஊடுருவியவன்
" நான் சொல்லக்கூடாதுனா நீ எனக்கு ஒன்னு பண்ணனும் " பீடிகை போட
" என்ன? "
" வேறென்ன கேட்க போறேன். வீட்டுலையே இருந்து போரடிக்குது. சும்மா சுத்திக் காட்டு என்னை " தோளை குலுக்க மிரண்டு பார்த்தாள் தேனிசை. கண் முன் விஷ்ணு முகம் தான் மின்னலாய் வந்து போனது.
" அப்படி சுத்தி பாக்குற அளவுக்கு இந்த ஊருல ஒண்ணுமே இல்ல சார். நீங்க ஏன் லைலா அக்காக் கூட போக கூடாது? அவங்க தான் சிட்டி போவாங்க. உங்களுக்கும் பிடிக்கும் " என்பவளை வாட்டமாக பார்த்தான் முரளி.
" ம்ச். எனக்கும் ஆசை தான். பட் அவ என்கூட 1 நிமிஷம் கூட நின்னு பேச மாட்டேங்குறா " வாடிய அவன் குரலில் கண்கள் இடுங்கியது.
" நீங்க எப்படி கூப்பிட்டா அவங்க வருவாங்கனு எனக்கு தெரியும் " அவன் கண்களை பார்த்து தேனு சொல்ல உற்சாகமாகியவன் ஆர்வமாய் பார்த்ததிலே முரளி மனதை அறிந்து விட்டவள் இயல்பாகி போனாள் அவனிடம்.
" ஷாப்பிங் போறேன். உனக்கும் பிடிச்சத வாங்கிக்கோ அப்படியே ரெஸ்டாரண்ட் பொய்ட்டு வரலாம்னு சொல்லுங்க. வருவாங்க " சொல்லி முடிக்க முரளி முகம் மாறியது.
" நான் ரொம்ப பெருசா எஸ்பக்ட் பண்ணேன் தேன். அவ்ளோ தானா? "
" ம்ச். உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா விடுங்க "
" இல்லை இல்லை நம்புறேன். நீ சொன்ன மாதிரி மட்டும் நடந்துச்சு மாமா சாக்லேட் வாங்கி தரேன் " துள்ளி குதித்தவனை தேனிசை முறைக்க
" சும்மா " கண்ணடித்தவன் அவனறைக்கு உற்சாகமாக ஓட நடந்த சம்பவங்களை ஊமை படமாய் தூரம் நின்று பார்த்த விஷ்ணு முகம் இறுகியது கோவத்தில்.
இவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாது. ஆனால் அவனோடு தேனு இயல்பாய் பேசியதை பார்த்தவனால் தன்னிலையை நீடிக்க முடியவில்லை.
அன்றைய நாள் முழுவதும் தேனிசையால் விஷ்ணு உருவத்தைக் கூட சரியாக பார்க்க முடியவில்லை. எப்படியாவது பார்த்து அவரை சமாதானம் செய்ய வேண்டும் என காத்திருந்தவளின் காதில் விழுந்தன விஷ்ணு சென்னை சென்ற விடயம்.
" இந்த சமயத்துல ஏன்? கொஞ்ச நாள் இந்த வேலையெல்லாம் விட்டு இருக்க கூடாதா? " ஆறுமுகம் அக்கறையில் கேட்க
" இல்ல மாமா. ரொம்ப நாளா சென்னை ப்ராஞ்ச் போகணும்னு சொல்லிட்டு இருந்தான். அதுக்கு ஏற்ப மீட்டிங் ஏற்பாடு பண்ணவும் கிளம்பிட்டான். ஒரு வாரத்துல வந்துடுவான் "
" ஒரு வாரமாகுமா? " லைலா அதிர்ச்சியாக
" ம்ச். அவன் வேலை அப்படி. மாமா அவன் வந்துருவான் மாமா " சமாளித்த சத்தியா சென்று விட தூரத்தில் நின்று அனைத்தையும் காதில் வாங்கிய தேனிசைக்கு காரணமே இல்லாமல் கண்ணீர் சுரந்தது.
அவசர வேலை அதனால் தான் சொல்லாமல் கூட போகிருப்பார் என்று நினைத்தவளுக்கு தவிப்பு ஏக்கமாக மாறியது அடுத்து வந்த நாட்களில்....
தனிமை தாபத்தை தூண்ட வாடிய மலராய் அவன் வருகை நோக்கி அவளையே அறியாமல் காத்துக் கிடந்தாள் தேனிசை.
உடலில் இருந்து சரி பாதி பிரிந்து சென்ற கவலையில் வேலை பார்ப்பவளிடம் பேச்சுக் கொடுப்பது என்னவோ முரளி தான்.
" உன் ஆள் சொல்லாம கொள்ளாமல் சென்னை போன வருத்தமா? நான் வேணா கால் பண்ணி கொடுக்கவா? " சீரியசாக கேட்பவனை திட்டி கடந்து செல்பவளுக்கு அப்படியாவது விஷ்ணு குரலை கேட்டு விடலாம் என்று தான் இருந்தது.
முரளி போல் மற்றவர்களும் தன்னை கவனித்து விட கூடாதென உடம்பு சரியில்லையென அம்மாவோடு வாழ்ந்த வீட்டிற்கு சென்று விட்டாள் தேனிசை.
விஷ்ணுவின் நினைவுகளை ஓரம் ஒதுக்கியவள் தாய் வாழ்ந்த வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் பாவை.
வேலை செய்த பிஸியில் பசியும் மறந்து நேரத்தையும் மறந்தவளுக்கு இருட்டிய பின்பே நேரமானதை உணர்ந்தாள்.
காலையில் வரும் போதே மாரி கட்டிக் கொடுத்த உணவை நடு வீட்டில் அமர்ந்து சாப்பிட்டவள் காரணமே இல்லாது விம்மத் துவங்கினாள்.
உள்ளே சென்ற உணவும் தொண்டையில் இறங்க கடினப்பட " நான் கேட்டேனா? அவரா வந்தாரு. என்னை காதலிக்கிறேன்னு ஆசையை வளர்த்து இப்போ சொல்லாமல் கொள்ளாமல் போகிட்டாங்க. நான் வேண்டாம்னு ஆரம்பத்துல சொல்லும் போதே இப்படி போகிருக்க வேண்டியது தானே. காதலாம் காதல். இனிமேல் எனக்கு யாரும் வேண்டாம் ம்மா. எனக்கு நீ உனக்கு நான் அவ்ளோ தான். என் வாழ்க்கையில வேற யாருக்கும் இடமில்லை " கண்ணீரை வடித்தவள் உணவையும் உள்ளே தள்ளி பசியை போக்கினாள் தேனிசை.
அழுகை அடுத்தக் கட்டமாக ஆதங்கமாய் மாற வீட்டின் கதவு ஜன்னலை மூடியப்படி விஷ்ணுவை கரித்துக் கொட்டியவள் கதவு தட்டும் சத்தத்தில் புருவம் இடுங்கினாள்.
" யாரு? " என்றவள் உள்ளிருந்து குரல் கொடுக்க எவ்வித பதிலும் வராமல் போனதில் கொஞ்சம் பயந்து கதவை நெருங்கினாள்.
மீண்டும் கதவு தட்டும் ஓசை.
" யாருன்னு கேட்குறேன்ல " என்பவளுக்கு ஆண் குரல் மட்டும் கேட்க விஷ்ணுவோ என சற்று முன்பிருந்த மனநிலை மறந்து கதவை திறந்தவள் திகைத்துப் போனாள் வெளியே நிற்பவனைக் கண்டு.
தேனிசை சட்டென கதவை மூட போக, பலமாய் அவளை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த மூர்த்தி கதவினையும் பூட்டி விட மிரண்டு பார்த்தாள் அச்சத்தில்.
அவளின் பயந்த முகத்தினை பற்கள் கடித்து பார்த்தவன் " ஜெயில்ல இருந்தவன் எப்படி வந்தேன்னு பார்க்குறியா? உன்னை அடையவே பெயில் வாங்கி வந்துருக்கேன். அழகா கல்யாணம் பண்ணி உன்னை அனுபவிச்சுருப்பேன். ஆனா ஊர் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தி என்னை ஜெயிலுக்கு அனுப்பி என் வாழ்க்கையையே அழிச்சிட்டியேடி. சின்ன பொண்ணுன்னு விட்டது தப்பா போச்சு. இனி உன்னால தப்பிக்க முடியாது " கடித்து துப்பியவன் ஓட பார்ப்பவளின் காலை பிடித்து இழுத்தவன் அவள் மேல் விழ போக எட்டி உதைத்து ஓட துவங்கினாள் தேனிசை.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 15
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.