- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 13
மாடியில் டங்கென கேட்ட சத்தத்தில் விலகியவர்கள் மாடி நோக்கி ஓடினர். அங்கு இருக்கும் ஆபத்தை அறியாமல்.
இருவரும் போய் பார்க்க ஒரு மண் ஜாடி உடைந்து இருந்தது. சுத்தி பார்த்தால் ஜன்னல் திறந்து இருக்கவே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
" ஆத்மி இங்க எதாவது தகவல் கிடைக்குதான்னு பாரு. இந்த வீட்டுல இருந்தவங்க வேற எங்க ஷிப்ட் ஆகிருக்காங்க அது பத்தி தகவல் இருக்கானு பாரு. தனியா போகிறவள" என்றவனை பார்த்து சிரித்தவள்
" அதுலாம் எனக்கு என்ன பயம் நீ இருக்கும் போது. நா தனியா போறேன் " என்றவள் வேறுபுறம் சென்று ஒரு அறைக்குள் புகுந்து கொள்ள எழில் ஒரு புறம் சென்றான்.
மெல்ல அடிவைத்து சென்றவளுக்கு பயம் உள்ளூர இருக்க தான் செய்தது. அதை வெளிக்காட்டதவள் முன்னேறி நடக்க பட்டென ஒரு கதவு காற்றில் படாரென திறக்க பயந்து போனாள் . அந்த அறையில் இருந்து பிணம் அழுகிய வாடை குப்பென வர மூக்கை சால்வையால் பொத்தி கொண்டாள் ஆத்மி.
மூச்சு வாங்கி கொண்டவள் வேர்த்து விறுவிறுத்து அந்த அறைக்குள் மெல்ல சென்றவள் அவள் உள்ளே பார்த்த கட்சியில் மிரண்டு போனவள் தெறித்து ஓடினாள் எழிலை அழைத்து கொண்டு.
************** ************* ************
நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு படுத்து கொண்டான் ஆரவ். ஏதோ ஒரு புகை நிறைந்த சூழலில் வெள்ளை உடையில் அழகாய் இருந்தான் ஆரவ்.
ஒரு அழகிய பெண்ணின் சிரிப்பின் சத்தமும் அவளின் கொலுசு சத்தமும் கேட்க அந்த சத்தம் வந்த திசை நோக்கி ஓடியவன் ஒரு அழகிய பெண்ணை கண்டான். அவளும் ஆரவை கண்டு வசீகரமாக சிரிக்க அவளை நெருங்கிய ஆரவ் அவளுக்கு இதழ் முத்தம் குடுக்க அவளின் முகம் நோக்கி குனிய திடீரென அந்த பெண்ணின் அழகிய முகம் கோரமாக மாறியது .
டக்கென அந்த அழகிய பெண் தாய்க்கிழவியாக மாறியதில் மிரண்டு போனான்.
முத்தம் குடுக்க போன ஆரவின் முகம் வெளிறி போனது எதிரில் தலைவச்ச தாய்கிழவியை கண்டு. எடு ஓட்டம் நீக்கவே இல்லையே ஏதோ தடுக்கி தொம்மென்று கீழே விழுந்தவன் தூக்கத்தில் எழ புகை மூட்டமெல்லாம் மறைந்து அவனின் அறை தெரியவே நிம்மதி மூச்சி விட்டுக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான் .
தண்ணீரை குடித்து முகத்தை அழுந்த துடைத்து கொண்டவன் " அட கருமாந்திரம் புடிச்ச கனவு இப்டியா வரணும்? அடியே என் அப்பன பெத்த ஆத்தா உன்ன மேல அனுப்புனது எதுக்கு எனக்கு கோஸ்ட் கார்டா (பாடி கார்ட்) இருக்க தான். ஒழுங்கா உன் பேரனை உசுரோட பத்திரமா பார்த்துக்கோ " என்று மேலே பார்த்து கத்தியவன் சன்னிலியோனை நினைத்து கொண்டே உறங்கி போனான்.
ஆத்மி அலறி அடித்து கத்திகொண்டே வர அவளின் குரலில் திடுக்கிட்ட எழில் வெளியே வர அவன் மேல் மோதி நின்றாள் ஆத்மி.
அவள் முகம் வெளிறி போய் இருப்பதை கண்டு அதிர்ந்து போன எழில் என்னமோ ஏனோ என பயந்து " ஆத்மி என்னாச்சு ? ஏன் இப்டி பயந்து போய் இருக்க " என்றவனிடம் பதில் கூற முடியாமல் திணறி போய் இருந்தாள் பயத்தில்.
அவள் பயம் அறிந்தவன் அவளை இறுக்கமாக அணைத்து கொண்டு அவள் தலை மெல்ல வருட கொஞ்சம் சீராக மூச்சி விட்டவள் " எழில் அந்த அறையில நா ஒன்னு பார்த்தேன். அத பார்த்து தான் பயந்து போய்ட்டேன் " என்று சொல்ல அவளை அணைத்தபடி அந்த அறை நோக்கி சென்றான்.
எழில் அந்த அறைக்குள் நுழைய போக ஆத்மீ அவனின் மார்பில் முகம் பதித்து கொண்டாள். எழில் அவளை இறுக்கி கொண்ட கைகளை தளராமல் அந்த அறையை பார்த்தவன் மிரண்டு போனான்.
இரண்டு எலும்பு கூடுகள் மெத்தையில் இருப்பதை கண்டான். எழில் பார்த்ததும் கணித்து விட்டான் அது ஆண் மற்றும் பெண்ணின் எலும்பு கூடு என. ஏதோ யோசித்தவன் ஆத்மியிடம் " ஆத்மீ அதான் நா உன் பக்கத்துல இருக்கேன்ல. இங்க என்ன பாரு. இது அந்த பொண்ணோட பெற்றோர்கள் சடலம்னு நெனைக்கிறேன் " என்றதும் அவன் முகம் பார்த்தவள்
" என்ன சொல்ற? அப்போ அவங்க இறந்து போய் " என்ற ஆத்மீயிடம் தலையாட்டியவன்
" ஆமா ஆத்மி இவங்க இறந்து பல வருஷம் ஆகுது. இந்த அறையில எதாவது கிடைக்குதான்னு பாக்குலாம் " என்றவன் அந்த அறையை அலசி ஆராய
அவன் கையில் சிக்கியது ஒரு டைரி.
இதை எல்லாம் ஒரு உருவம் பார்த்து கொண்டு தான் இருந்தது. எழில் டைரியை எடுத்து கொண்டு ஆத்மி அருகில் வந்தவன் அவளை அழைத்து கொண்டு அந்த அறை விட்டு வெளியேறினான்.
எழில் அந்த டைரியை பிரித்து பார்த்தான். அவன் தேடிய விஷயங்களுக்கு அதில் பதில் கிடைத்து போக ஆத்மியிடம் " ஆத்மி அந்த பொண்ணோட உடல் இந்த வீட்டுக்கு பக்கத்துல தான் புதைச்சிருக்காங்க. நாளைக்கே அந்த பொண்ணோட உடம்ப நாம கை பற்றனும் " என்று சொல்லியவன்
" இப்போ இங்க இருந்து கெளம்பலாம் " என்ற எழில் அந்த டைரியோடு அந்த வீட்டை விட்டு எப்படி வந்தானோ அப்படியே வெளியேறி செல்ல இருவரையும் அந்த வீட்டின் கண்ணாடி ஜன்னல் வழியே ஒரு உருவம் வெறித்து பார்த்தது.
எழில் கார் ஆத்மி வீட்டின் அருகில் வந்து நின்றது கூட தெரியாமல் ஏதோ யோசனையில் இருந்தவளை கவனித்தவன் " என்ன யோசிச்சிட்டு இருக்க " என்றவனை கவலையோடு பார்த்தவள்
" எழில் அவங்க செத்து போனது கூட யாருக்கும் தெரியாம அவங்கள அடக்கம் க்கூட பண்ணுல. பாவம் எழில் அவங்க. பிள்ளையையும் இழந்துட்டு அத தாங்க முடியாம அவங்களும் விஷம் குடிச்சி செத்து போயிருக்காங்க. அவங்கள நாமளே அடக்கம் பண்ணுலாம் எழில் " என்ற ஆத்மியை பார்த்து புன்னகைத்தவன்
" நாளைக்கே அவங்கள முறையா அடக்கம் பண்ணுலாம். நீ எதுக்கு நினைக்காம வீட்டுக்கு போ. நான் இதை போலீஸ்க்கும் தெரிய படுத்தனும். நீ எதையும் யோசிக்காம போ. எதாச்சும்னா கால் பண்ணு. சரியா " என்று அவளின் நெற்றியில் முத்தம் வைத்து விலக சிரித்தவள் அவனிடம் இருந்து விடை பெற்றாள்.
எப்போதும் அமைதியாக இருக்கும் ஆத்மி வீடு சத்தமாக இருந்தது மேகா மற்றும் காமினி சிரிப்பு சத்தத்தில்.
" இவ எப்போடா காரணம் கிடைக்கும் இவ கூட இருக்குலாம்னு இருந்தா போல. பாரு காலைல வசனம் பேசினா சாயங்காலமே வந்துட்டா " என்று மனதில் நினைத்து கொண்டே போக
மேகா ஆத்மி வருவதை கவனித்தவள் " வாடி என் கூட பிறக்காத பிறவியே. ஏன் இவ்ளோ நேரம்? எங்க போன? காமினி வந்துட்டா உனக்கு என்ன எக்ஸ்ட்ரா வேலை? யாரு குடுத்தது சொல்லு நா வந்து பேசி ஒரு வழி பன்றேன் " என மூச்சு விடாமல் ஆத்மிக்கு பேச இடம் கொடுக்காமல் பேசியவள் முன் ஒரு கும்பிடை போட்டு மேகா வாயை அடைத்தாள் ஆத்மி.
" ஏன்டி, ஏன் உனக்கு இவ்ளோ வாய்? நீ ஒரு ரிப்போர்ட்டர்னு ஒதுக்குறேன் அதுக்கு இப்டியா? நானும் எழிலும் அது விஷயமா போகிருந்தோம் " என்று சொல்லவே
'' இத வந்ததுமே சொல்லிருந்தா நா என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணிருக்க மாட்டேன்ல " என்றவள் கையில் இருந்த காபியை காலி செய்ய முறைத்த ஆத்மி
" எங்க என்ன பேச விட்ட? எனக்கும் சேர்த்து தான் நீயே தம் கட்டி பேசுறியே. பாவம்டி உன்ன கட்டிக்க போறவன் " என்றவளின் தோளில் கை போட்டு சிரித்தவள்
" நீ வேணா பாரு அவன் எனக்கும் மேல வாய் பேசி எங்கையாவது வாங்கி கட்டிக்கிட்டு இருப்பான் " என்றவள் சிரிக்க அவளின் தலையில் கொட்டிய ஆத்மி அவளின் அறைக்குள் புகுந்து கொள்ள தோளை குலுக்கிய படி காமினி அருகில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள்.
மூவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு தூங்க போக ஆத்மி பின்னாலே வந்தாள் மேகா. ஆத்மீ முறைப்பதை கூட கண்டு கொள்ளாமல் மெத்தையில் படுத்து கொள்ள அவளை அடித்து எழுப்பிய ஆத்மி " ஏய் இங்க என்னடி பன்ற? ரூம்க்கா குறைச்சல். போய் மாடி ரூம்ல தூங்கு. இல்ல காமினி கூட தூங்கு " என்றவளை கண்டு கொள்ளாமல் திரும்பி படுத்தவள்
" தூங்கு ஆத்மி. எனக்கும் தூக்கமா வருது " என்று போத்தி மேகா படுத்து கொள்ளவே வேறு வழி இல்லாமல் மேகா பக்கத்தில் படுத்து கொண்டாள் ஆத்மி.
போனில் க்ளிங் என்ற சத்தம் கேட்க ஆத்மி எடுத்து பார்க்கும் முன்னே மேகா எட்டி பார்க்க அவளுக்கு அடிவைத்தவள் போர்வைக்குள் புகுந்து அந்த போனை ஆன் செய்து பார்த்தாள்.
எழில் தான் மெசேஜ் அனுப்பியிருந்தான்.
" சாப்டியா? " என்ற எழிலின் குறுஞ்செய்தி பார்த்து சிரித்தவள்
" சாப்டேன் பா. நீங்க சாப்பிட்டீங்களா " என்று பதில் செய்தி அனுப்ப அடுத்த நொடி மீண்டும் பதில் வந்தது எழிலிடம் இருந்து.
" சாப்டேன். தனியா தூங்காத " என்று அவளின் பயம் அறிந்து சொல்ல புன்னகைத்தவள்
" மேகா கூட இருக்கா. பயம் இல்ல " என்று அனுப்பவே நிம்மதி ஆனவன்
" சரி தூங்கு. குட் நைட் " என்று எழில் அனுப்ப
" குட் நைட் " என்று அனுப்ப சந்தோசத்தில் தூங்கி போனாள் ஆத்மி.
அந்த பெரிய வாயிலை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் ஆத்மி. கும்மிருட்டு. சுற்றி அடர்ந்த மரங்கள் இருக்க மூச்சு வாங்க மெல்ல நடந்து சென்றாள். மீண்டும் அதே அழுகை குரல் ஆத்மி காதில் கேட்க திடுக்கிட்டு போனாள்.
அவளின் இதயம் பயத்தில் துடிக்க அங்கு இருந்து சென்று விடலாம் என திரும்பியவள் மிரண்டு போனாள். இப்போது அவள் ஒரு அடர்ந்த காட்டுக்குள் தன்னந்தனியாக இருக்க அவளுக்கு எதுமே புரியவில்லை. சுற்றி முற்றி பார்க்க மீண்டும் ஒரு பெண்ணின் அழுகை குரல் கேட்டது.
பயந்து போய் ஓட போக அவளின் கையை ஆதரவாக பிடித்தது ஒரு உருவம். பயந்து போன ஆத்மி காதில் " பயபடாத மீ நா உன் பக்கத்துல உன் கூட தான் இருக்கேன். பயத்தை தூக்கி போட்டு அத பேஸ் பன்னு. பயப்படாம போ " என்ற குரல் கேட்டு திரும்ப இப்போது ஆத்மி அருகில் மேகா இருந்தாள் உதட்டில் புன்னகையோடு.
" நீ எப்டி? " என்று ஆத்மி புரியாமல் கேட்க சிரித்த மேகா " நா தான் சொன்னேன்ல இனி உன்ன தனியா விட மாட்டேன்னு. இனி எதுவா இருந்தாலும் சேர்ந்து சந்திப்போம் வா " என்றவள் ஆத்மியை அழைத்து கொண்டு அந்த அழுகுரல் வந்த திசை நோக்கி சென்றனர்.
பிறப்பிலே இருவரும் ஒரே நட்சத்திரம் தான். ஆனால் மேகா எதையும் துணிந்து சந்திப்பாள். ஆத்மி அப்படி இல்லை. அதான் அவளின் பலவீனத்தை பயன்படுத்தி கொள்ள பார்க்கிறது கெட்ட எண்ணம் கொண்ட ஆத்மாக்கள்.
நன்றாக தூங்கி கொண்டிருந்த மேகா ஏதோ முனகல் சத்தத்தில் விழித்து பார்க்க ஆத்மி தான் ஏதோ கெட்ட கனவு கண்டு பயந்து போய் இருந்தாள் . அதை உணர்ந்தவளும் நொடியும் தாழ்த்தாமல் ஆத்மியின் கையை பிடித்து ஏதோ சில வார்த்தைகளை சொல்ல மேகா ஆத்மி கனவுக்குள் நுழைந்தாள்.
இருவரும் அந்த பெண் அழுகை குரல் வந்த திசைக்கு வர அங்கு ஒரு கல்லறை இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் அந்த கல்லறை முன் சென்று பார்க்க ஆத்மி மிரண்டு போனாள்.
" மேகா இது அந்த இறந்து போனா சாரா பொண்ணோட கல்லறை. நாம இங்க எதுக்கு வரணும் " என்று சொல்லி பயம் கொள்ள அவளின் கையை பிடித்து ஆறுதல் கூறியவள்
" பயபடாத. எனக்கென்னவோ அந்த பொண்ணு நம்ப கிட்ட எதையோ சொல்ல நினைக்குது.. பயப்படாம இரு " என்றவள்
" சாரா. சாரா. பயப்டாத. நாங்க உன்ன பார்த்து ஓட மாட்டோம். எங்க முன்னாடி வா " என்று மேகா சொல்ல
பாவமாக இருவரையும் நோக்கி வந்தது அந்த உருவம்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 13
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.