அத்தியாயம் 12

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
75
அத்தியாயம் 12


" ஊட்டி விடு " பிடிவாதமாக சொல்லி விட்டு தன் இடத்தில் அமர்ந்து கணினியில் விஷ்ணு பார்வை பதிக்க, ' எப்படியோ போங்க' என்று வெளியேற போனவளால் கதவை திறந்து வெளியேற முடியவில்லை.


நொந்து போய் நின்ற பேதை " இப்போ சாப்பிட போறிங்களா இல்லையா? " முடிவாக கேட்பவளை நிமிர்ந்து பார்க்காமல் தட்டச்சை தட்டிக் கொண்டிருந்த விஷ்ணு



" ஒரு முக்கியமான வேலை இருக்கு ஹனி. முடிச்சிட்டு சாப்பிடுறேன் " இம்முறை குறும்பை விட்டு இயல்பாக சொல்ல நின்று பார்த்தவள்


" இல்லை. பசிக்குது சொன்னிங்க... நா... நான்வேணா... உங்களுக்கு " திக்கி திணறி கேட்டிட, புன்னகை தவழ ஏறிட்ட விஷ்ணு



" அதுக்குலாம் இன்னும் டைம் இருக்கு ஹனி " கண்ணடித்தவன் பெரிதாக புன்னகைக்கவே, விக்கித்த தேனிசை வேகமாக ஓடி விட்டாள் அவனைறையிலிருந்து.


அவன் பேச்சும், பார்வை தரும் குறுகுறுப்பையும் பெண்ணவளால் எவ்ளோ முயன்றும் மறைக்க முடியவில்லை.


அதான் அவன் முன் நிற்காமல் வெளியே வந்தவளை, தாயின் அறையிலிருந்து அப்போது தான் வெளியே வந்த லைலா கண்டு ஸ்தம்பித்து நின்றாள் ஒரு நொடி.



" இவ எதுக்கு மாமா ரூம்ல இருந்து வரா? அதும் சிரிச்சிட்டு எதுக்கு ஓடுறா? "
வாய்விட்டே புலம்பிய லைலா விஷ்ணுவின் கதவை தட்டிட, எங்கு தன் ஹனியோ என ஆவலாய் திறந்தவன் முகம் எதிரில் இருப்பவளின் சிரிப்பை பார்த்ததும் பாறையாய் இறுகியது.



கண்களும் கடுமையாக " என்ன? "



" இல்லை, சாப்பிட வரல நீங்க. அதான் சாப்பிட்டிங்களான்னு கேட்கலாம்னு "



" சாப்பிட்டேன் " அடுத்து எதும் பேசாமல் கதவை மூடிக்கொள்ள முகம் இருண்ட லைலா கடுப்பாக நகர்ந்து விட்டாள்.


அவளும் கவனிக்காமல் இல்லை விஷ்ணுவின் நடவடிக்கைகளை. தேனுவை மட்டும் பார்க்கும் கண்கள் தன்னை பார்க்க கூட முயலுவதில்லை. அவளிடம் விரும்பி பேசுபவன் தன்னிடம் சேர்ந்தார் போல் இரண்டு வார்த்தைகளை பேசுவதில்லை.



கோவம் எரிமலை போல் பொங்கிட அறைக்குள் அடைந்து ஆதிரத்தில் கிடைத்த பொருள்களை வீசி எறிந்த லைலா மெத்தையில் தொப்பென விழுந்தாள்.



" அவளுக்கு என் மாமா கேட்குதா? அவ தகுதி என்னானு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சிரும். அம்மா சொன்ன மாதிரி அந்த முரளியோட இவளை சேர்த்து விட்டுட்டா அப்றம் என் மாமா எனக்கு தான் " தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்ட லைலா முரளி வருகையை தான் ஆவலாக எதிர்பார்த்திருந்தாள்.



மாலை நேரம் ஆவலாய் காத்திருந்தாள் லைலா. எல்லாம் மாமன் வருகைக்காகவே. வாசலை எதிர்பார்த்து காத்திருந்தவள் சத்தியா மட்டும் வருவதை பார்த்து கண்கள் சுருக்க,


" என்ன அப்படி பார்க்கிற? "



" முரளி வரலையா? "



"அதை ஏன் நீ கேட்குற?"



" ம்ச், அம்மா ஈவினிங் அவர் வருவாருன்னு சொன்னாங்கல்ல. பார்த்து ரொம்ப நாள் ஆச்சேன்னு கேட்டேன் " அவசரமாக சொல்ல அவளை ஏற இறங்க பார்த்த சத்தியாவிற்கு தங்கையின் செயல் வினோதமாக தெரிந்தது.



காரணம், முரளியை அடியோடு வெறுக்கும் ஆளில் இவளே முதன்மை. அப்படி இருப்பவள் இவ்ளோ ஆர்வம் காட்டுவது சந்தேகத்தை தந்தாலும் " வெளிய இருக்கான் " பதலளித்து அவன் சென்ற பின்பே தன் உடமை நிறைந்த பைகளை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.



தனியார் நிறுவனத்தில் வேலை புரிபவன். பெரிதாக லட்சியம் என்றில்லாமல் வாழ்க்கையை ரசித்து வாழும் வாலிபன். பெண்கள் விடயத்தில் கொஞ்சம் தாராளம். வருடத்திற்கு ஒரு காதலி என நிம்மதியாக இருந்தவனை வலுக்கட்டாயமாக லதா வரவைத்த காரணம் தான் குடும்பம் அறியவில்லை.



" ஹேய் முரளி!! எப்படி இருக்க? " அவனை தன் காட்டுப்பாட்டில் வளைத்து போடும் நோக்கத்தில் முன் வந்து பேசுபவளை ஏற இறங்க எடை போடும் பார்வை பார்த்தான் அவன்.



" நான் தான் லைலா " அவள் அறிமுகம் செய்த பின்பே மின்னல் வெட்டியது போல் பெரிதாய் புன்னகைத்தவன்



" ஹேய் லைலா!!" கட்டி அணைக்க வர பதறி விலகியவள் அவன் கையை பிடித்து உலுக்கி சமாளித்து விட்டாள்.



" எப்போ பார்த்தது உன்னை. இவ்ளோ வளர்ந்துட்டியா? பாரு அடையாளமே தெரியல. அதுக்கு தான் அப்போ அப்போ போட்டோ அனுப்பனுங்கிறது. நான் உன்னை இன்ஸ்டால ரெக்வஸ்ட் கொடுத்தேன். ஏன் அக்ஸப்ட் பண்ணல "



" அது நான் யாரோ பொறுக்கி பசங்களா இருக்கும்னு கொடுக்கல முரளி. நீங்கன்னு தெரிஞ்சிருந்தா கொடுத்துருப்பேன் "



" மறக்காம கொடு. ஆமா அத்தை எங்க? " என்றவன் கேட்கும் போதே குரல் கேட்டு வெளியே வந்தார் லதா.



" டேய் வாடா. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க. என்ன நிற்க வச்சிட்டு இருக்க லைலா. அவனை உக்கார சொல்லு. ஜூஸ்? டீ, காபி? "



" ஐயோ ஸ்ட்ரோங்கா ஒரு காபீ போதும் அத்தை. செம்ம டயர்ட் "



" சரிடா எடுத்துட்டு வர சொல்லுறேன். நீ முதல்ல போய் அலுப்பு தீர குளிச்சிட்டு வா. லைலா முரளிக்கு அவன் அறையை காட்டுமா " தாயவள் வார்த்தைக்கு இணங்க வேண்டா வெறுப்பாய் லைலா அவனுக்கான அறையில் விட்டு வந்தாள்.



' ச்ச என்னெல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு ' பல்லைக் கடித்த லைலாவிற்கு எப்போதாடா அவள் ரூட் கிளீர் ஆகும் என்ற வெசனமே.



முரளி குளித்து உடமை மாற்றி கீழே வர துளசி, கண்மணிக்கு தன் நாத்தனார் மகனை அறிமுகபடுத்தினார் லதா.



சத்தியாவின் வருங்கால மனைவி என்பதால் கண்மணியிடம் அளவோடு பேச்சு. இல்லையேல் அவளிடமும் வழக்கமான கவிதை வசனங்களை அள்ளி வீசிருப்பான் முரளி.



இங்கு சமையலறையில் ஆவி பறக்கும் காபியை ஒரு கப்பில் ஊற்றினாள் தேனிசை.



" எங்க கிளம்பிட்ட தேனு? இப்படி கிளம்பிருக்க? " மாரியின் கேள்வியில் சலிப்பாய் நின்றிருந்த தேனிசை



" எங்கையும் இல்லை. லைலா க்கா தான் கெஸ்ட் வந்துருக்காங்க. குளிச்சு நல்ல டிரஸ் போட்டுட்டு ஒரு காபி எடுத்துட்டு வர சொன்னாங்க. அதான் "



" விருந்தாளி வர்றதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? "



" தெரியலைக்கா "



" ஆமா வாயை திறந்து ஏன்னு கேட்டா முத்து கொட்டிரும்ல. அந்த லைலா எதையும் காரணம் இல்லாம சொல்ல மாட்டா. கவனமா இரு " சரியாக ஊகித்து மாரி எச்சரிக்கை தர அதன் பின்பு தான் தேனிற்கே பட்சி பறந்தது.



சிறு அச்சத்தோடு காபியை ஹாலிற்க்கு எடுத்து வர, " இங்க கொடு தேனு " மென்மையான லைலா குரலிலே குழப்பமாய் ட்ரேயை முரளி முன்பு நீட்டினாள் தேனிசை.


பாவம் அவளிற்கு அவனை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹாலில் இருந்த துளசியும் மகளோடு வெளியே பேசிக் கொண்டிருக்க, லதாவும் அங்கு இல்லை.



முரளி, புதிதாக ஒரு பெண்ணை பார்த்த வியப்போடு காபியை கையில் எடுத்துக் கொள்ள நிமிர்ந்து பார்க்காமல் அங்கிருந்து நகர போனவளை வழக்கத்திற்கு மாறாக அமர சொல்லி கட்டளையிட்டாள் லைலா.



" இ... ல்ல... க்கா வேலை இருக்கு "



" இருக்கட்டும் தேனு. நீ உக்காரு. முரளி இவ தான் தேனிசை. தேனு இவர் முரளி. என் அத்தை பையன். அப்பாவோட அக்கா பையன். ஒருவகையில உனக்கும் மாமா தான் " சட்டென சொல்ல அதிர்ந்து அவன் முகம் பார்த்த தேனிசை அவன் பார்வையில் வெடுக்கென தலையை தாழ்த்திக் கொண்டாள் வேகமாய்.



முரளி முகத்தை கவனித்த லைலா " முரளி உனக்கு இந்த ஊர் புதுசு தானே. இங்க தேனுவுக்கு தெரியாத இடமே இல்லை. நீ எங்க போறதா இருந்தாலும் தேனுவை கூட்டிட்டு போ " லைலா பேச்சில் விக்கித்த தேனு



" நா... நானா? "



" பின்ன வேற யாரு? சும்மா தானே இருப்ப."



" சரி க்கா " சோர்ந்த குரலில் முடித்திட அவளை வெறித்தப்படி கப்பை காலி செய்த முரளி



" இவ்ளோ நாள் இருக்க போறோம் போரிங்கா இருக்கும்னு நினைச்சேன். நாட் பேட். அப்போ நாளைக்கு உன் நேரத்தை எனக்காக ஒதுக்கி வச்சிக்கோ ஹனி " காந்த குரலில் சொல்லியவன் எழுந்திட தேனுவின் பின்னால் அடக்கப்பட்ட கோவத்தில் நின்றிருந்தான் விஷ்ணு மதுராந்தகன்.


வேலை முடித்து கீழே தேனுவை பார்க்க வந்தவனுக்கு, யாரோ ஒருவன் தன்னவளை ஹனி என அழைக்கும் உச்சரிப்பில் வெடிக்கும் நிலையில் நின்றிருந்தான்.



கழுத்து நரம்புகள் புடைக்க நிற்பவனை அலட்சியமாய் முரளி பார்க்க, இடையில் நின்ற லைலா " மாமா இவர் முரளி. அப்பாவோட அக்கா பையன் " அறிமுகம் செய்யவே குனிந்திருந்த தேனு திரும்பியவளுக்கு முதுகு தண்டு ஜில்லிட்டது விஷ்ணு பார்வையில்.



அவன் கண்கள் முரளியை கடந்து தேனுவின் மீது அழுத்தமாக பதிவதை உணர்ந்த பெண் அங்கிருந்து அகன்று விட



" ஹாய் விஷ்ணு!!! சின்ன வயசுல மீட் பண்ணது. எப்படி இருக்க? "



"..... "



" விஷ்ணு? விஷ்ணு? " பல முறை அழைத்தும் அலட்சியம் செய்தவன்
பார்வை லைலாவை எரித்தது.



எதிர்பாரா அவன் எரிக்கும் பார்வையை அதிர்ந்து பார்க்க, "இன்னொரு முறை அவளை பொம்மை மாதிரி ட்ரீட் பண்ண, நான் மனுஷனா இருக்க மாட்டேன் " கடைசி முறையாக அவளிடம் எச்சரித்தவன் தேனிசை போன திசையில் செல்ல போகிறவனை கண்கள் சுருக்கி ஸ்வாரஷ்யமாக நோக்கினான் முரளி.



" ஹ்ம்... நிறையவே என்டேர்டைன்மெண்ட் இருக்கு போல. ஓகே லைலா. நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன். ஐம் டயர்ட் " நெட்டி முறித்த முரளி சென்று விட அசைய மறுத்து விஷ்ணு போன திசையையே வெறித்தாள் பாவம்.



அவள் இன்னும் உணரவில்லை. அவளின் ஒவ்வொரு செயலும் விஷ்ணுவை எந்தளவிற்கு தள்ள போகிறது என்பதை.



தனக்கு பின்னால் விஷ்ணு வருகிறான் என்பதையும் உணராமல் தன் அறை நோக்கி நடந்த தேனிசை கடுப்பில் புலம்பிக் கொண்டிருந்தாள்.



" இதுக்கு தான் என்னை தயாராகி வர சொன்னாங்களா ? மாரி அக்கா சொன்னது சரி தான். ச்ச தேவை இல்லாம இந்த டிரஸ்... ஆ " திடீர் தாக்குதலாக பின்னிருந்து இழுத்த இழுப்பில் விஷ்ணு மேல் உரசி நின்றாள் பேரதிர்ச்சியில்.



" நீ... நீங்க எப்போ!!"



" அவன் உன்னை எதுக்கு ஹனி ன்னு கூப்பிட்டான்? " அவளின் கேள்வியை அலட்சியம் செய்து பற்கள் கடித்து கேட்பவனை விழித்து பார்த்தாள் தேனிசை.



" உன்கிட்ட தான்டி கேட்குறேன். அவன் எதுக்கு உன்னை ஹனின்னு கூப்பிட்டான்? "



" என்னைக் கேட்டா எனக்கு எப்படி தெரியும்? "



" நீ ஏன் பதிலுக்கு எதும் சொல்லுல? "



" எப்படி கூப்பிட்டா என்ன... இதுக்கு போய் நான் என்ன சொல்ல? " விஷ்ணுவின் ஆத்திரம் புரியாமல் பேச கண்கள் சிவந்தான் ஆடவன். இப்போது தான் கொலை வெறியே வருகிறது.



அவளை பிடித்திருந்த பிடியை இறுக்கிய விஷ்ணு " நான் கட்டிக்க போறவளை கண்டவன் எல்லாம் செல்லமா கூப்பிடறது எனக்கு பிடிக்காது. இன்னொரு முறை அவன் உன்னை அப்படி கூப்பிட்டான் அடுத்த முறை கூப்பிட அவன் வாய் இருக்காது. புரியுதா? " கர்ஜித்தவன் பிடியை தளர்த்தி அப்போது தான் பெண்ணை முழுமையாக கவனித்தான்.


லேசான ஒப்பனையில் அலங்கரித்து நிற்பவளை இன்னும் சூடாகி முறைக்க, புரிந்துகொண்ட தேனிசை " நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. லைலா அக்கா தான் கெஸ்ட் வராங்கனு ஒழுங்கா ட்ரெஸ் பண்ண சொன்னாங்க. அதான் ரெடியாகி வந்தேன். வேற எதுமே எனக்கு தெரியாது " வேகமாய் நடந்ததை ஒப்பிக்க, இருண்ட விழி இலகியது மெல்ல.



அவள் காதோர கூந்தலை ஒதுக்கிய விஷ்ணு " இனி அவன் உன்கிட்ட பேச முயற்சி பண்ணா என்கிட்ட சொல்லு. சரியா? " மென்மையாய் சொல்ல அதில் ஏதோ உணர்ந்த தேனிசை சற்று முன்பு நடந்ததை சொல்ல மீண்டும் இறுகிய அவன் முகப்பாவனையில் நொந்து போனாள் தேனிசை.



" லைலா அக்கா தான் அவர சுற்றி காட்ட சொல்லிருக்காங்க. போய் தான் ஆக" தேனிசை முடிக்கும் முன்னே



" நாளைக்கு நீ எங்கையும் போக போறது இல்லை. நாளைக்கு முழுக்க நீ என்கூட தான் இருக்க போற " உறுதியாக சொல்லிய விஷ்ணு சென்று விட திகைத்து நின்ற தேனிசைக்கு தலை சுற்றவே தட்டு தடுமாறி அறைக்கு சென்று விட்டாள் பாவம்.
 

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 12
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Mar 6, 2025
Messages
15
லைலா உன்னோட புத்தியே கேவலமாக இருக்கு 😡😡😡 உன்னோட பிளான் எதுவுமே நடக்க விடாம பண்ணிடுவான் விஷ்ணு
 
Member
Joined
Nov 26, 2023
Messages
50
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Top