- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 12
ஆர்வ்வை ஓங்கி அறைந்திருந்தவள் "குருட்டு *****...... எதிர்ல யாரு வராங்கன்னு கூடவா தெரியாது.... ஒரு பொண்ண பார்த்தா போதுமே இடிக்க முந்திக்கிட்டு வந்துருவிங்க...... இனிமேல் உன்ன பார்த்தேன் மொவனே தொலைச்சி கட்டிருவேன் ராஸ்கல் " என பட்டாசு போல் வெடித்தவள் நேராக எழில் அறைக்குள் சென்று மறைய
ஆரவ்க்கு அவளின் லிப் மொமெண்ட் மட்டுமே தெரிந்ததே தவிர வார்த்தைகள் எதுவும் காதில் தான் விழவில்லை.
" என்னடா தெரியாம இடிச்சதுக்கு இப்டி அறஞ்சிட்டு போறா? டேய் மச்சான். அடேய்..... அடேய் ஆரவ் போச்சா " என்று கத்தி ஓய்ந்தவன் கண்ணில் கைவைத்து சிலையாய் இருந்தவனை இழுத்து சென்றான்.
எழிலும் ஆத்மியும் இருந்த அறைக்குள் தடாலடியாக வந்தவளை எழில் புரியாமல் பார்க்க ஆத்மி அரண்டு பார்த்தாள். " மேகா நீ இங்க எதுக்கு வந்த? " என்று ஆத்மி சொல்லவே எழில் ஆத்மிக்கு தெரிந்தவர்கள் என புரிந்து கொண்டான்.
அவளோ கோவமாக ஆத்மி அருகில் வந்தவள் " உனக்கு எதாவது பிரச்சனைனா சொல்ல மாட்டியா? நானா தெரிஞ்சிக்கிட்டு உன்ன பார்க்க வரணும் அப்டி தானே " என்று கோவமாக பேசியவளை முதலில் அமர வைத்தவள்
" இல்ல மேகா நீ நெனைக்குற மாதிரி எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஐ ஆம் ஆல்ரைட் " என்று ஆத்மி புரிய வைக்க கேட்காதவள்
" இங்க பாரு நீ என்கிட்ட பொய் சொல்ற. நா அத பார்த்தேன். உன்ன அந்த உருவம் துரத்துனத பார்த்தேன். உனக்கே தெரியும் நா இப்டி பார்த்தா அது உண்மையா நடந்திருக்கும்னு. அப்டி இருக்கும் போது நீ ஏன் சமாளிக்க பாக்குற. சொல்லு என்ன பிரச்சனைனு " என்று மேகா கேட்க ஆத்மியால் இதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை.
எழில் குழம்பி போனவன் " சாரி. நா எழில் ஆத்மி கூட ஒர்க் பன்றேன் அவங்க பிரண்ட்டும் கூட. நீங்க யாருன்னு தெரிஞ்சிக்குலாமா? " என்றவனை அப்போதுதான் கவனித்தாள் மேகா.
" சாரி நா மேகமலர். ஜனலிஸ்ட்டா ஒர்க் பண்றேன். ஆத்மியோட கசின் " என்று தன்னை அறிமுப்படுத்தி கொண்டாள்.
" ஆமா உங்களுக்கு எப்டி ஆத்மிக்கு ப்ரோப்லேம்னு தெரிஞ்சிது " என்று எழில் தன் சந்தேகத்தை கேட்க சிரித்தவள் " சொல்ல போனா நாங்க இரட்டையர்களா பிறக்க வேண்டியவங்க. ஆனா நா இவளோட சித்திக்கு பிறந்துட்டேன். அதிசயம் என்னானா நாங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல ஒரே நாள்ல கொஞ்சமும் மாறாமல் பிறந்தோம். ஆனா எனக்கு ஆத்மிக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நிழலா கனவுல தெரிஞ்சிரும். அது எப்படினு எங்களுக்கும் தெரியாது " என்று மேகா சொல்லியதை கண்டு வியந்து தான் போனான்.
" வாவ் இட்ஸ் இன்ட்ரெஸ்ட்டிங். பொதுவா ட்வின்ஸ்க்கு தான் இப்டிலாம் தோணும். பட் நீங்க வித்யாசமா இருக்கீங்க " என்றதில் சிரித்த மேகா மீண்டும் ஆத்மியிடம் " சரி என்னா பிரச்சனைனு சொல்லு " என்று சொல்ல நொந்து போன ஆத்மி இதுவரை நடந்ததை சொல்லினாள். அந்த தாய்க்கிழவியால் தனக்கு பிரச்சனை என்பதையும் சொல்லி முடித்தவள் மேகா முகம் பார்க்க மிரண்டு தான் போனாள். எழிலுக்கு ஆத்மியின் நிலை சிரிப்பை தந்தது.
" இவ்ளோ நடந்திருக்கு நீ எதையும் என்கிட்ட சொல்லாம மறச்சிருக்க. பெரிம்மா போனதுக்கு அப்றம் என்கூட வந்து தங்குனு சொன்னதுக்கும் ஒத்துக்குல. இனி உன் பேச்சை நா கேக்குறதா இல்ல. என் கூட தானே நீ தங்க மாட்ட. இனி நா உன்கூட தான் இருப்பேன். வீட்ல சந்திக்குலாம் பாய் "என்றவள் ஆத்மியின் பதிலை கூட கேட்காமல் சென்று விட ஆத்மி தொப்பென கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்து கொண்டாள்.
" என்னாச்சி மேடம் டயர்டாகிட்டிங்களா " எழில் சிரிப்போடு கேட்க நொந்து போனவள் " எழில் இவள பத்தி உனக்கு தெரியாது. நா இவ்ளோ நாள் இவ கிட்ட சமாளிச்சதே அதிசயமா இருக்கு. இனி என் கூட தங்கிகிட்டா போச்சு. எனி டைம் கேமரா தான் அவ " என்று ஆத்மி சொல்ல சிரித்த எழில்
" ஓகே கூல் ஆத்மி. உனக்கு ஒரு துணை இருக்குறதும் நல்லது தான். நாம அந்த பொண்ணு வீட்டுக்கு போகணும் " என்று எழில் சொல்லவே இருவரும் சாரா வீட்டிற்கு சென்றனர்.
மற்ற வீடுகளை போல் இல்லாமல் காட்டு பகுதி ஒட்டி இருந்தது அந்த சாராவின் வீடு. காரை நிறுத்தி இருவரும் நடந்து சென்றனர் அந்த வீட்டை நோக்கி. சூரியன் மறையும் நேரம். சுற்றி இந்த வீட்டை தவிர வேறு எந்த சிறு கட்டிடம் கூட இல்ல.
சுற்றி காடுகள் இருக்க நடுநாயகமாக இருந்தது அந்த வீடு. பெரிய வீடு தான் ஆனால் பாழடைந்து காணப்பட்டது. இருவரும் அந்த வீட்டின் முன் செல்ல வீடு பூட்டிருப்பதை கண்டு குழம்பி போனார்கள்.
" என்ன ஆத்மி இந்த அட்ரஸ் தானே இருந்தது. இங்க யாரையும் கானும். ஒருவேள இவங்க இந்த வீட்டை விட்டு போய்ட்டாங்களா " என்று சொல்ல யோசனையில் இருந்தவளோ
" ஆமா எழில் எனக்கும் அதே தான் தோணுது. இந்த இடத்த பார்த்தால் யாரும் இருக்குற மாதிரி தோணலை " என்று அவளும் வீட்டின் நிலை கண்டு கூற எழில் அந்த வீட்டினுள் செல்ல வழி பார்த்தான்.
" ஆத்மி இங்கையே இரு வரேன் " என்ற எழில் வீட்டை சுற்றி பார்த்தான். ஒரு ஜன்னல் திறந்திருப்பதை கண்ட எழில் மீண்டும் ஆத்மியை நோக்கி வந்தான்.
" ஆத்மி சைடுல ஒரு ஜன்னல் ஓபன்ல இருக்கு அது வழியா போய் எதாவது துப்பு கிடைக்குதான்னு பார்ப்போம் " என்றவன் செல்ல போக அவனின் கையை பிடித்து நிறுத்தினாள் ஆத்மி.
எழில் அவளையும் அவள் கையையும் மாறி மாறி பார்க்க பட்டென எடுத்து கொண்டவள் " எழில் எனக்கென்னவோ இது சரியா படல. நாம வாங்க போலாம் " என்று சொல்ல கேளாதவன்
" இல்ல ஆத்மி நமக்கு இத விட்டா வேறு வழி இல்ல. அந்த பொண்ணு பாடி நமக்கு வேனும் . அதுக்கு இவங்க வேற எங்க இருக்காங்கனு தெரியணும்.. நாம உள்ள போய் தான் ஆகணும். வேணும்னா நா வர்ற வரைக்கும் நீ எனக்காக வெயிட் பண்ணு" என்று எழில் சொன்னதும் பட்டென மறுத்தவள் அவனுடன் செல்ல ஒப்புக்கொண்டாள்.
இடுப்பிற்கு மேல் இருந்த ஜன்னல் வழியாக முதலில் எழில் எகிறி குதித்தவன் ஆத்மியை கை பிடித்து தூக்கினான். பாதி உயரம் தூக்கியவன் அவளை உள்ளே இழுப்பதற்காக அவளின் இடுப்பில் கை வைத்து இறுக்கியவன் உள்ளே தூக்கி விட அதிர்ந்து பார்த்தவளின் விழியில் சிக்கி கொண்டான் எழில்.
எழிலின் கை இப்போதும் ஆத்மியை இடையை இறுக்கி கொண்டு தான் இருந்தது. இம்முறை காற்று கூட புகமுடியாத நெருக்கம். ஆத்மியால் பொங்கி எழும் மனதை அடக்க முடியவில்லை. பெண்ணவளை இத்தனை நெருக்கத்தில் பார்த்தவன் அவளின் கன்னம் வருட கண்ணை மூடியவளின் முகம் பார்த்தவன்
" ஐ லவ் யூ ஆத்மி " என சொல்லியதில் விழி விரித்து பார்த்தாள். " என்ன பார்க்குற? பார்த்த ஒரே வாரத்துல காதலானா? பார்த்த கணமே சொல்லிருப்பேன் ஒரு சில விஷயங்கள் மறக்காமல் போகிருந்தா. நீ என்ன பார்த்திருக்க ஆனா எதுக்கு பொய் சொன்ன ஆத்மி? " என்று கேட்டவனை கலங்கிய கண்களோடு பார்த்தவள்
" நீ ஹாஸ்பிடல் வந்து என்ன கண்டுக்காம போனதிலே உனக்கு எதுவும் நியாபகம் இல்லனு தெரிஞ்சிகிட்டேன். அதான் உன்கிட்ட தெரிஞ்சதா காட்டிக்குல. நீ என்ன காதலிப்பேனு நா கனவுல கூட நினைக்குல எழில். எனக்கு என்ன சொல்லுறதுனே தெர்ல.. உங்கள முதல் முறை பார்த்ததுமே பிடிச்சது. ஆனா காதலிக்குல. அதுக்கு அப்றம் சீனியர் ராகிங் பண்ணதுல என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண அடுத்த செகண்ட் என் மனசு முழுக்க நீங்க மட்டும் தான் எழில். அதுல இருந்து இப்பவரைக்கும் என் மனசுல நீங்க மட்டும் தான் " என்றவளை அனைத்து கொண்டவன்
" சாரி.. உன்மேல வந்த உணர்வு காதலுனு என்னால சீக்கிரம் புரிஞ்சிக்க முடியல. இந்த கணம் சொல்லுறேன். இனி எப்பவும் உன் கூட நிழலா நா இருப்பேன் " என்றவன் அவளின் நெற்றியில் முத்தம் வைக்க ஆனந்தத்தில் அனைத்து கொண்டாள் ஆத்மி.
இந்த இருவரையும் மாடியில் இருந்து ஒரு கரிய உருவம் வெறித்து பார்த்தது.
இருவரும் மோன நிலையில் இருக்க மாடியில் டங்கென கேட்ட சத்தத்தில் விலகியவர்கள் மாடி நோக்கி ஓடினர். அங்கு இருக்கும் ஆபத்தை அறியாமல்.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 12
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.