- Joined
- Nov 10, 2023
- Messages
- 75
- Thread Author
- #1
அத்தியாயம் 11
எவ்ளோ நேரம் கோவில் முன்பு அமர்ந்திருந்தாளோ, மனம் லேசானது போல் உணர்ந்தவள் வீட்டை நோக்கி நடையைக் கட்ட காதில் கேட்டன காரின் சத்தம்.
முன்னேறி நடந்தவள், சக்கரம் உரசும் ஓசையிலே யார் என்பதை உணர்ந்த தேனிசை மறந்தும் நின்று திரும்பாமல் வேகத்தை கூட்ட அதில் இன்னும் கோவமாகிய விஷ்ணு தேனுவின் முன்பே வழியை மறித்து காரை நிறுத்த அதிர்ந்து போனாள் அவனின் எதிர்பாரா செய்கையில்.
தேனிசை அப்போதும் கடந்து தப்ப பார்க்க படு வேகத்தில் இறங்கிய விஷ்ணு பெண்ணின் கரம் பற்றி நிறுத்தினான்.
" என்ன பண்ணுறீங்க? " கையை அவனிடமிருந்து உருவிட முயன்றவளை ஒரே இழுப்பில் தன் மேல் விழ வைத்த விஷ்ணு இன்னும் நெருக்கத்தை கூட்டினானே தவிர விலகி நிற்கவில்லை.
இழுத்த இழுப்பில் முட்டி நின்றவள் அவன் துடிப்பில் மூச்சை அடக்கி நிற்க வலது கரத்தால் அவளின் மோவைப் பற்றி தன்னை பார்க்க செய்தான் விஷ்ணு.
ஆடவன் நெருக்கத்திலே அரண்டு நின்றவள் அவன் தொடுதலில் மொத்தமும் அடங்கி ஸ்தம்பித்து நிற்க விழித்து பார்த்தவளின் பார்வையில் தன்னை இழந்த விஷ்ணு
" என்ன தான்டி உன் பிரச்சனை? நான் என்ன பண்ணா இப்படி என்னை விட்டு தூரம் போகுறத நிறுத்துவ தேன்? என்னால இதை தாங்க முடியலடி. நான் இந்தியா வந்ததுக்கு காரணமே நீ தான்டி. உன்னை பார்க்க, உன்னை இங்கிருந்து கூட்டி போக தான் இவ்ளோ தூரம் வந்தேன். இந்த கண்ணாமூச்சி ஆட்டம் விளையாட இல்லை. நான் பேசுறது பிடிக்கலையா சொல்லு மாத்திக்கிறேன். என் செய்கை பிடிக்கலையா சொல்லு உனக்கு பிடிச்ச மாதிரி பழகிக்கிறேன்டி. இப்படி என்னை விட்டு தூரமா ஓடாத ஹனி " கோவமாய் பேச நினைத்து வந்தவன் நினைத்ததிற்கு மாறாய் கெஞ்சி கொண்டிருக்க இமைக்க மறந்து பார்த்தாள் தேனிசை.
மோவை பற்றிய விரல்கள் மெல்ல கன்னம் வருட சிலிர்த்தடங்கிய தேனிசை மின்னல் பட்டது போல் தள்ளி நின்ற பேதை அதன் பின்பே மூச்சை வெளிவிட்டாள் வேகமாய்.
உணர்ச்சியின் பிடியில் இதயமே வெடித்து விடுவது போல் உணர்ந்தவளுக்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டன தன்னிலை மீள.
கண்களை மூடி உதடுகள் குவித்து நீண்ட பெரு மூச்சை விட்ட தேனிசை தெளிவான மனநிலையில் விஷ்ணுவை பார்க்க, அவனும் அவளை தான் பார்வை எடுக்காது பார்த்திருந்தான்.
மீண்டும் அதில் தடுமாறிய தேனிசை தலையை சிலுப்பி " இங்க பாருங்க. நீங்க உங்க மனசுல இருக்குறத சொல்லிட்டிங்க. இப்போ என் மனசுல நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லணும்ல. கேட்டுக்கோங்க " முறைப்பாய் ஆரம்பிக்க இரு காதையும் விரல் வைத்து அடைத்துக் கொண்டான் விஷ்ணு.
" நான் எதையும் கேட்க போறது இல்லை " வீம்பாக நெஞ்சை நிமிர்த்தி நிற்க, அவனின் சிறுபிள்ளை தனத்தில் மலங்க விழித்தாள் அவள்.
" இப்படி சின்ன பிள்ளை மாதிரி பண்ணா என்ன அர்த்தம்? நான் சொல்லுறத கேட்க போறிங்களா இல்லையா? "
" நீ என்ன சொல்லுவேன்னு தெரியும். சோ, அதை கேட்க எனக்கு விருப்பம் இல்லை " சீரியஸ்ஸாக அவன் சொல்ல முட்டிக்கொண்டு வரும் சிரிப்பை அடக்கிய தேனிசை பொய்யான கோவத்தோடு
" ஏற்கனவே உங்களுக்கு யார்க் கூட கல்யாணம்னு முடிவு பண்ணத யாராலும் மாற்ற முடியாது. வீணா என் மீது உங்க நேரத்தை வீணடிக்காம லைலா அக்காவை கல்... ம்ம்" முழுதாய் சொல்ல விடாமல் அவள் வாயை விரல் கொண்டு அடைத்து விட்டான் விஷ்ணு.
கொலை வெறி வருகிறது தான் எதிரில் இருப்பவள் மீது. ஆனால் அவளை தானே காதலிக்கிறோம் என்ற எண்ணம் கோவத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தியது.
பெண்ணை அழுத்தமாக பார்த்தவன் " இங்க யாரு என்ன வேணாலும் முடிவு பண்ணட்டும் ஹனி. நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன். இந்த மதுராந்தகனுக்கு மனைவின்னா அது நீ தான். நீ இல்லைனா உன் இடத்துல வேற யாருக்கும் இடம் கிடையாது. இது தான் என் முடிவு. சம்மதம் மட்டும் சொல்லுடி வாழ்க்கையை நான் காட்டுறேன் " ஆழ்ந்து சொல்ல அதிசயித்து பார்த்தவள் தயங்கினாள் தன் தகுதி நினைத்து.
அவளின் தயக்கம் தாங்கிய முகத்தை கவனித்த விஷ்ணு " ஒரு செகண்ட் ஆகாது ஹனி உன்னை என் மனைவியாக்கிக்க. எனக்கு இங்க யாரோட விருப்பமோ அனுமதியோ தேவையில்லை. எனக்கு வேண்டியது எல்லாம் உன் விருப்பம் மட்டும் தான்" என்றவன் மேலும் அவளை அழுத்தமாக்காது
" வந்து கார்ல ஏறு. நானே உன்னை வீட்டுல விடுறேன் " சொன்னதோடு நில்லாமல் வீட்டில் இறக்கி விட்டு விஷ்ணு சென்று விட அவன் பேசிப் போன மயக்கத்தில் தேனிசை தான் பிரம்மை பிடித்தவள் போல் உழன்றுக் கொண்டிருந்தாள்.
மாரியின் ஒரு பார்வை தேனிசை மீது தான் பதிந்திருந்தது. காலையில் கோவிலுக்கு பொய்ட்டு வந்ததில் இருந்து இவள் முகமே சரியில்லையே என யோசித்தாரே தவிர வாய் விட்டு கேட்கவில்லை. அவளும் வெளிப்படையா சொல்லவில்லை.
மதிய உணவிற்கு காயை நறுக்கிக் கொண்டிருந்த தேனிசை யோசனையில் விரலையும் நறுக்க போக, நல்லவேளையாக தடுத்து விட்டார் மாரி.
" ஏய் தேனு!! என்னாச்சு புள்ள உனக்கு? உன் மொகமே சரியில்ல "
" அதுலாம் ஒண்ணுமில்லக்கா. ஏதோ நியாபகம் போல"
" விரலை வெட்டிக்க போற அளவுக்கு என்ன யோசனை? "
" ம்ச் ஒண்ணுமில்ல. முதல்ல கத்தியை கொடுங்க " மீண்டும் காயை இம்முறை கவனமாக நறுக்க புருவம் சுருக்கிய மாரி மேலும் குடையவில்லை அவளை.
அவர் அறியாததா தேனுவின் குணத்தை. அவர் கேட்காமல் அவளே பேச துவங்க மெல்லிய சிரிப்போடு கேட்களானார்.
" அக்கா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்பேன். இது என்னை சம்பந்தபட்டது இல்ல. எனக்கு தெரிஞ்சவங்களோடது "
" பீடிகைலாம் பலமா இருக்கு. எனக்கே தெரியாம அப்படி யாரை உனக்கு தெரியும்? சொல்லு கேட்குறேன் "
" யாருனு கேட்காதீங்க அக்கா. அந்த பொண்ண ஒருத்தர் விரும்புறதா சொல்லுறாரு. ஆனா அவளுக்கும் அவருக்கும் இடையில கடல் அளவு தூரம் இருக்கு. பிறப்பிலும், தகுதியிலும் உயர்ந்த அவரை அந்த பொண்ணும் விரும்ப நினைக்கிறது சரியா? " பயந்த விழியில் வாட்டமாய் கேட்க அந்த பெண் யாரென்பதை அறிந்து புன்னகைத்தாள் மாரி.
இருந்தும் அதை வெளிப்படையாக சொல்லாத மாரி " என்னதான் வீட்டு வேலை பார்த்தாலும் படிச்சவ நீயி. உனக்கு தெரியாததா தேனு. பிறப்பால் இங்க யாருமே மேல கீழன்னு இல்லை. இங்க தகுதியும் மதிப்பும் பார்க்கிற பார்வையை பொறுத்து மாறுபடும். ஒருவேளை அந்த தம்பி அவளையும் மனுஷியா பார்த்துருக்குலாம். அவளுக்குள்ள இருக்குற மனச பார்த்துருக்குலாம். ரொம்ப யோசிக்காம ஓகே சொல்லிடு " கண்ணடிக்க வாயை பிளந்த தேனிசை அவசரமாய் சமாளித்தாள்.
" அக்கா அதான் சொன்னேன்ல அது நான் இல்லை வேற பொண்ணுன்னு "
" நம்பிட்டேன்டி. அந்த பொண்ணுகிட்ட சொல்லு. ஒழுங்கா அந்த தம்பிக்கு சம்மதம் சொல்லி ஒரு புது வாழ்க்கையை வாழுறத விட்டுட்டு இது தான் விதியேன்னு அடுப்படியிலே கடக்காதன்னு " அவள் போக்கிலே இருப்பதை சொல்லிவிட்டு மாரி சென்று விட பலமாய் யோசனையில் மூழ்கி போனாள் தேனிசை.
மதிய உணவை உண்ண மொத்த குடும்பமும் குவிந்த நிலையில் விஷ்ணு எட்டிக் கூட பார்க்கவில்லை அங்கு.
" சத்தியா, எங்க விஷ்ணு? "
" அவன் வேலையா இருக்கான் அத்தை. நான் அப்புறமா அவனுக்கு எடுத்துட்டு போறேன். நீங்க சாப்பிடுங்க " என்றவனும் உணவை உண்ண லதா பேச்சை ஆரம்பித்திருந்தாள்.
" சத்தியா கொஞ்சம் ஈவினிங் ரயில்வே ஸ்டேஷன் வரை பொய்ட்டு வரியா. உங்க அப்பாவோட அக்கா பையன் முரளி வந்துட்டு இருக்கான் " என்றதும் தான் மொத்த குடும்பத்தின் முகமே அஷ்டகோணலாக மாறியது.
அவன் எப்பேர்ப்பட்ட பொறுக்கி என்பதை குடும்பமே அறியும். அதும் பெண்கள் விடயத்தில் அவன் எந்தளவிற்கு என்பது சத்தியா நன்கு அறிவான். அதனாலோ முதலில் குரல் உயர்த்தியது அவனே.
" அவனை எதுக்கு வர சொன்னிங்க? அதான் இன்னும் நாள் இருக்குல்ல கல்யாணத்துக்கு. அப்போ வர சொல்ல வேண்டியது தானே " தாயின் மீது எரிந்து விழ அவனை சட்ட செய்யாத லதா தன் அண்ணனிடம் ஆரம்பித்தாள் அவள் நாடகத்தை.
" இங்க பாருங்கண்ணா இவன் எப்படி பேசுறான்னு. அவனுக்கும் இவனுக்கும் ஒரே வயசு தானே. வந்து கூடமாட ஒரு உதவி பண்ணுவான்னு தான் வர சொன்னேன். அதும் இல்லாம அவனுக்கும் ஆசை இருக்காது இப்படி குடும்பமா இருக்கணும்னு. பாவம் அந்த பையன் மட்டும் தனியா எப்படி விட முடியும். அதான் வர சொல்லிட்டேன் " பரிதாபமாக சொல்லிட உண்மையை அறியாத ஆறுமுகமும்
" ஆமா ப்பா. தங்கிட்டு போகட்டும். குடும்பம் கூடுனா வீடு இன்னும் கல்யாண கலையா மாறும். உங்களுக்கும் ஒரு துணையா இருக்கும். வீட்டுக்கு வர்றவங்கள இப்படி வரக்கூடாதுனு சொல்லாத சத்தியா " அக்கறையோடு அறிவுரையும் சேர்த்து கொடுக்க முகம் இறுகியவன்
" சரிங்க மாமா " என்பதோடு பேச்சை முடித்துக் கொண்டவன் முகத்தை தாழ்த்திக் கொள்ள கண்மணி கவனித்தவள் அப்போதைக்கு அவனிடம் எதையும் கேட்கவில்லை.
லைலா மட்டும் ஏதோ மின்னல் வெட்டிய பிரகாசத்தில் தாயை அர்த்தமாக பார்த்தவள் வேகமாக சாப்பிட்டு முடித்து லதாவின் பின்னால் ஓட, ஆறுமுகமும் குணசீலனும் வெளியே சென்று விட்டனர். சத்தியாவும் விஷ்ணுக்கு உணவை எடுக்க வந்தவன் ஆறுமுகம் அழைப்பில் " தோ உடனே வரேன் மாமா " பதிலளித்தவன் வீட்டில் இருப்பவர்களை தேட சிக்கியது என்னவோ தேனிசை தான்.
எல்லாரும் சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை எடுத்து வைக்க வந்த தேனுவை கவனித்த சத்தியா " தேனு எனக்கு ஒரு உதவி பண்ணுடா " பாசமாக கேட்க மறுப்பாளா அவள்...
" சொல்லுங்கண்ணா " ஆர்வமாக கேட்டவளுக்கு அவன் பதிலில் ஏன்டா கேட்டோம் என்றானது பாவம்.
"நானா!"
" கோச்சிக்காதடா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ சாப்பாடு எடுத்துட்டு போய் அவன் ரூம்ல மட்டும் வச்சா போதும். இந்த உதவி மட்டும் எனக்காக " கண்ணால் கெஞ்சியவன் அலறிய போனை எடுத்துக் கொண்டு வேக நடையில் வெளியேற போறவனை தடுக்க முடியாமல் உணவை எடுத்துக் கொண்டு விஷ்ணு அறை முன் நின்றவளுக்கு இதயம் படபடத்தது பதட்டத்தில்.
ஓரிரு முறை மூச்சை இழுத்து விட்ட பின் கதவை தட்ட முதல் தட்டில் திறக்கப்படவில்லை.
நேரம் கூட கூட காய்ச்சலே வரும் அளவிற்கு திணறி நின்ற தேனிசை மீண்டும் வரவழைத்த தைரியத்தில் கதவை திட்ட, யாரோ என எரிச்சலாய் திறந்த விஷ்ணுவின் முகம் நொடியில் இளகியது பெண்ணின் தரிசனத்தில்.
" நீ இங்க என்னடி பண்ணுற? " உரிமையில் கேட்பவனை அலட்சியம் செய்த தேனு உணவைக் கொண்டு வந்து மேசையில் வைத்து விட்டு திரும்ப கதவை உள் பக்கம் தாழிட்டு மறித்து நின்றவன்
" இப்படி வச்சிட்டு போனா என்ன அர்த்தம்? "
" சாப்பாடு இருக்கு. பசிக்கும் போது சாப்பிடுங்கனு அர்த்தம் "
" ஆனா எனக்கு இப்போ வேலை இருக்கே "
" வேலையை முடிச்சிட்டு சாப்பிடுங்க "
" பசியும் இருக்கு ஹனி "
" அதுக்கு இப்போ நான் என்ன பண்ண? "
" ஊட்டி விடு " குறும்பாய் கேட்க திகைத்து நின்ற தேனிசைக்கு அவன் சொன்ன வார்த்தைகளே காதுக்குள் லூப் மோடில் ஒலித்தன.
*****
மன்னிக்கவும் எப்போவோ போட்டிருக்க வேண்டிய பதிவு. போன் சரி பண்ணும் போது டேட்டா clear ஆனதுல எழுதி வச்சது அழிஞ்சிருச்சு... அகைன் புதுசா எழுதி இங்க அப்டேட் பண்ணுறேன். ரொம்ப சாரி

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 11
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.