- Joined
- Nov 10, 2023
- Messages
- 77
- Thread Author
- #1
அத்தியாயம் 11
ஆரவ் கணபதியும் எழில் அறைக்குள் நுழைய சரியாக ஆத்மியும் வந்து சேர்ந்தாள். எழிலுக்கு ஆரவின் கோபமான முகம் சிரிப்பை தந்தது.
"மச்சி கோவமா இருக்கியா? நீ கோவமா இல்லனா நைட் சில் பண்ணுலாம்னு நானும் கணபதியும் பிளான் பண்ணோம். நீ தான் கோவமா இருக்கில்ல. நீ போ நாங்க பாத்துக்குறோம் " என எழில் அவன் பங்கிற்கு பேச ஓசி குடிக்கு உசிரை விட துணிந்த ஆரவ்
" நா எப்போ மச்சி கோவமா இருந்தேன்? நல்லா தான் இருக்கேன் ஈஈஈ " என்று இளித்து காட்ட சிரித்த எழில்
" ஆத்மி அந்த இறந்து போன பொண்ணோட ரிப்போர்ட் நம்ப ஹாஸ்பிடல்ல எங்க இருக்கும்?" என்று கேட்டதில் யோசித்தவள்
" அது கீழ் தளத்துல வச்சிருப்பாங்க சார் " என்றவளை பார்த்தவன்
" எப்பவும் போல எழில்னே கூப்டு. சார் வேணாம். இப்போ நம்ப வேலையே அந்த பொண்ணோட ரிப்போர்ட் தேடி எடுக்குறது தான். வாங்க. இந்த விஷயம் ஹாஸ்பிடல்ல யாருக்கும் தெரிய கூடாது " என சொல்லவே நால்வரும் சேர்ந்து அடித்தளத்திற்கு சென்றனர்.
மழை வேறு கொஞ்சம் கொஞ்சமாக பூமாதேவியை அடைந்தது. நால்வரும் அந்த அறைக்குள் செல்ல கும்மிருட்டு. ஆரவ் பயத்தில் கணபதியை பிடித்து கொண்டான். எங்கு ஆத்மி பயத்தில் தன் கை பிடிப்பாள் என எதிர்பார்த்த எழிலுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவள் பிடிக்குலனா என்ன நான் பிடிப்பேன் என எழில் அவளின் கையை பற்றி கொள்ள அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது இன்னும் எழிலுக்கு கோவத்தை தந்தது.
" என்னடா ஒரே இருட்டா இருக்கு " என்ற சொல்லியபடி நடந்த ஆரவ்க்கு ஏதோ தடுக்க மிரண்டு போனவன் " டேய் மொதல்ல லைட்ட போடுங்கடா ஹார்ட் அட்டாக் வந்துரும் போல " என சொல்லவே ஆத்மி அந்த அறையின் விளக்கை போட்டாள்.
ஒழுங்காக பராமரிக்கபடாமல் தூசியும் ஒட்டடையுமாய் பாழடைந்து போய் இருந்தது.உடைந்து போன பொருட்களும் அங்கு கிடப்பதை பார்த்து ஆரவ் அது தான் தன்னை தடுக்கிருக்கும் என விட்டுவிட்டான். பல ரிப்போர்ட்கள் அடுக்க பட்டிருக்க எழில் மற்றவரிடம்
" டேய் எல்லாரும் ஒவ்வொரு பக்கமா போய் தேடுங்க அந்த பொண்ணோட பேர் இருக்குற கோப்பையை மட்டும் எடுங்க " என்று எழில் சொல்ல அதிர்ந்த ஆரவ்
" அடேய் நாலாம் தனியா போக மாட்டேன். நா கணபதி கூடவே தான் இருப்பேன் " என்றவன் கணபதியின் கையோடு கை கோர்க்க
" டேய் நா என்ன உன் பொண்டாட்டியா? போய் தேடுடா " என்றவன் தனியாக செல்ல எழிலும் ஆத்மியும் வெவ்வேறு பக்கம் சென்று விட்டனர்.
" ஏன்டா பிடிவாதமா இழுத்துட்டு வந்து அம்போன்னு விட்டுட்டிங்களே. ஆத்தா மாரியாத்தா என் செத்துப்போன அப்பத்தா எல்லாரும் என் கூடவே இருங்க தெய்வமே " என்று கும்புடு போட்டவன் மெல்ல நடந்து அங்கு இருந்த கோப்புகளை பார்த்து கொண்டிருக்க சடாரென ஒரு உருவம் ஆரவ் பின்னால் ஓட விழி பிதுங்கியவன் மெல்ல திரும்பி பார்த்தான்.
ஹேய் 2010 வருஷத்துல சாரா என்ற பேர் கொண்ட கோப்பு கண்டு புடிங்க என்று எழில் சொல்லியவன் ஒரு புறம் செல்ல ஆரவை விட்டுவிட்டு மற்றவர்கள் தனித்தனியா சென்று விட்டனர்.
"ஓசி சரக்குக்கு ஆசை பட்டு உயிர விட துனிஞ்சிட்டியே ஆரவ். ம்ம்ம்ம் சமாளிப்போம். பேய்னா எனக்கு என்ன பயமா? அந்த தாய்க்கிழவி மட்டும் என் முன்னால வந்தா அப்டியே அவ தலையை பாஸ்கெட் பால் மாதிரி உருட்டி தூக்கி போட்ருவான் இந்த ஆரவ். நீ தைரியமா இருடா ஆரவ் " என மனதில் தனக்கு தானே பேசி கொண்டவன் ஒரு வரிசையில் தேடி கொண்டிருந்தான்.
ஏதோ பின்னால் வேகமாக போனது போல் தோன்ற அரண்டு போன ஆரவ் பின்னால் திரும்பவே எதுவும் இல்லாமல் போனது .
" அடியே அகோர மூஞ்சிக்காரி. இந்த ஆரவ் கை வச்சா நாறிடுவா நாறி " என்று ஆள் இல்லாத இடத்தில் வசனம் பேசியவன் பார்வையை சுழல விட்டான். அவன் அறியவில்லை போன சனியனை சட்டையில் எடுத்து வைத்து கொண்டான் என.
மழைச்சாரல் ஜன்னல் வழியே சிதறி கொஞ்சம் அறைக்குள் விழுந்தது. ஆரவ் எதுவும் பின்னால் இல்லாமல் இருப்பதால் மீண்டும் தேட அவனுக்கு பின்னால் தலைவிரித்த தலை வச்ச தாய்க்கிழவி வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் ஆரவை.
அதை அறியாமல் முன்னால் அந்த ஆண்டு கோப்புகளை புரட்டி பார்த்து கொண்டிருந்தான் ஆரவ்." ஏய் " என்று கேவலமான குரல் கேட்க அரைவேக்காடு ஆரவ் இந்த முறை கணபதி என நினைத்து
" டேய் கேவலவாதி என்ன கோத்து விட்டு ஓடிட்டு. இப்போ பயமா இருக்குன்னு என்கிட்ட வந்துட்டியா. நா உனக்கு பாவம் பாக்குறதா இல்ல பே " என்று பின்னால் இருக்கிறது தாய்க்கிழவி என தெரியாமல் உளறி கொண்டிருந்தான் ஆரவ்.
தாய்க்கிழவி இன்னும் அவனையே தான் வெறித்து பார்த்து கொண்டிருந்தது. அதை அறியாதவன் " டேய் என்னடா உன்மேல பொணம் செத்த வாடை வருது. ஹ்ம் கருமம் கருமம். நாலு கிலோ சோப்பு வாங்கி தரேன் குளிச்சு தொலைடா. ப்ப்பா என்னா கப்பு " என்று பைலை புரட்டி பார்த்து கொண்டிருந்த ஆரவ் அடுக்கப்பட்ட கோப்புகளின் வரிசைக்கு நடுவில் இருந்த சிறு இடைவெளியில் மறு பக்கம் கணபதி இருப்பதை பார்த்தவனுக்கு இதயம் தாறுமாறாக ஓடியது.
" ஆஹா செத்தடா ஆரவ். என் செத்துப்போன அப்பன பெத்த ஆத்தா மேல ஒரு இடம் புடிச்சு வை உன் பேரன் வரேன். புடிக்குறதும் புடிக்குற ரம்பா ஊர்வசி பக்கத்துல புடிச்சி வை " கொஞ்ச கூட குசும்பு குறையாமல் பேசியவன் எச்சிலை விழுங்கி மறுபக்கம் இருந்த கணபதியை அஸ்கி குரலில் அழைக்க பார்க்க அந்தோ பரிதாபம் வெறும் மூச்சு காத்து தான் வந்தது.
இங்கு எழில் ஒவ்வொரு கோப்புகளாக தேடி அந்த பெண்ணின் ரிப்போர்ட்டை கண்டறிந்து எடுத்தவன் அதை முதுகில் பதுக்கி கொண்டவன் ஆத்மியை தேடி வந்தான்.
அவள் அமைதியாக தேடி கொண்டிருந்தவள் எழிலின் குரலில் திடுக்கிட்டு அதிர்ந்து பின்னால் அடிவைக்க மழைத்தூறலால் நனைந்த அந்த இடம் சரியாக ஆத்மி காலை வாரி விட விழ போனவளை தாங்கி பிடித்து கொண்டான் எழில்.
ஆனால் ஆத்மி தான் பாவம். ஆணவனின் வலியகரம் பெண்ணவளின் மெல்லிய இடையை இறுக்கி பிடித்ததில் அதிர்ந்து போனாள்.
எழிலுக்கோ குறும்புத்தனம் மேலோங்க அவளை விலகாமல் பிடித்து கொண்டே இருக்க ஆத்மி தான் தவித்து போனாள்.
இவன் எப்படியும் விட மாட்டான் போலையே என மனதில் நினைத்தவள் தானே அவனிடம் இருந்து விலக எழிலின் பார்வை ஆத்மியை திணறவைத்தது.
ஆரவ் எதுவும் காட்டிக்கொள்ளாமல் தேடுவது போல் நகர்ந்து வந்தவன் எடுத்தான் ஓட்டம், அவனின் நேரம் மழையில் நனைந்த தூசிகளால் ஆன வழுவழுப்பு சதி செய்து ஆரவை கவுத்து விட தொப்பென விழுந்தவன் உடல் எல்லாம் சகதியாய் மாறியது. ஆரவ் முகமும் சகதியில் முக்கி இருந்தது.
கீழே விழுந்து மூக்கு அடிபட்டும் மீண்டும் எழுந்த ஆரவ் கணபதி இருக்கும் இடத்திற்கு ஓடினான்.
வேகமாக தன்னை நோக்கி வரும் உருவம் ஆரவ் என தெரியாமல் கணபதி பயந்து போனவன் " டேய் மச்சான் என்ன காப்பாத்துடா டேய் எழிலு. என்ன ஒரு சகதி வாயன் தொறத்துறான். காப்பாத்துடா எழிலே " என்று கத்தி கொண்டே கணபதி ஓட
ஆரவோ " அடேய் காட்மாண்டு கருங்குரங்கே. நா தான் மச்சான் " என்றவனின் பேச்சை காதில் வாங்காமல் ஓடிய கணபதி
" அய்யயோ அந்த தாய்க்கிழவி என் நண்பன கொன்னுருச்சா. அதான் ஆவியா வந்திருக்கானா " என பதறி கொண்டு ஓட இவர்களின் கத்தலில் எழிலும் ஆத்மியும் இவர்களை தேடி வந்தனர்.
கணபதி எழில் முன் வந்தவன் " டேய் மச்சான் நம்ப ஆரவ் செத்து ஆவியா தொரத்துறான் டா " என்றவன் கவுந்து விழுந்தான் பின்னால் வந்த ஆரவ் உதைத்த உதையில்.
" கீழ இருந்த சகதியில விழுந்து அடிச்சு வந்தா. பேயா வர்றேன்னு சொல்ற. ஏன்டா டேய் நா பாட்டுக்கு செவினேனு தூங்கிட்டு இருந்தவன்ன உசுப்பி இங்க கூட்டு வந்து உசுர எடுக்க பாத்திங்களேடா. அந்த தாய்க்கிழவி என் பின்னால தான்டா நின்னா " என்ற பதறி சொல்ல ஆரவின் நிலையை பார்த்து எழிலும் ஆத்மியும் சிரித்து விட்டனர்.
கணபதிக்கு அதன் பிறகே உரைத்தது இன்னும் தன் நண்பன் உயிரோடு தான் இருக்கிறான் என்று.
கணபதி ஆரவ்வை சுத்தி வந்தவன் " டேய் மச்சி நா சொல்லுல. அந்த தாய்க்கிழவி உன்ன பாக்குற பார்வையே சரி இல்லன்னு. பாரு சான்ஸ் கிடைக்கும் போது சைட் அடிச்சிட்டு போகுது " என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தவன் கணபதி மேலே உக்காந்து வெளுக்க ஆரம்பித்து விட்டான்.
எழில் அவர்கள் இருவரையும் சமாளித்து தனது அறைக்கு அழைத்து சென்று ஆரவை சுத்த படுத்திக்க சொல்லி விட்டு கணபதியிடம் ஆரவ்க்கு வேறு உடை வாங்கி வர சொன்னான்.
அந்த ஆவி இவர்களை தாக்காமல் சென்றத்துக்கு காரணம் அவர்களின் கையில் இருந்த தாயத்து. அதனால் தான் அந்த தாய்க்கிழவியால் ஆரவையோ மற்றவர்களையோ நெருங்க முடிய வில்லை. அதை அறிந்து கொண்டு அந்த உருவமும் அங்கு இருந்து சென்று விட்டது. ஆனால் அது தெரியாமல் ஆரவ் எடுத்த ஓட்டத்தில் மூக்கு உடைந்தது தான் மிச்சம்.
எழில் எடுத்து வந்த பைலை புரட்டி பார்த்தான். அவனால் அந்த கேஸை புரிந்து கொள்ளவே முடியவில்லை. குழம்பி போனவன் " ஆத்மி என்ன இந்த கேஸ் இவ்ளோ மிஸ்ட்ரியா இருக்கு. அந்த பொண்ணு மைண்ட் அண்ட் ஹெல்த் கண்டிஷன் நார்மலா தான் இருக்கு. பட் அந்த பொண்ணோட அறையில இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ரெகார்ட பார்க்கும் போது சாராவோட நடவடிக்கை இட்ஸ் டோட்டலி அப்நார்மல். அந்த பொண்ணு மெண்டலி அப்செட் ஆஹ் தெரியல அவ எதையோ பார்த்து பயந்து போய் இருக்கா? இது என்ன அந்த பொண்ணு இறக்குறதுக்கு முன்னாடி நாள் வீடியோ ரெகார்ட் ஆகுல " என்ற எழிலுக்கு மண்டையே வெடித்து விடுவது போல் ஆனது.
" இந்த பேய் இந்த ஹாஸ்பிடல்லையே பதினொரு வருஷம் தனியா வாழ்ந்துருக்கு போலையே " என்று கவலையாய் ஆரவ் சொல்ல கணபதி வாய் சும்மா இல்லாமல்
" ஏன் நீ தான் போய் குடும்பம் நடத்துறது " என்றதில் இருவரும் வாக்குவாதம் பண்ண ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவன் இவர்கள் சண்டையில் கடுப்பாகி
" கொஞ்சம் உங்க வாய மூடுங்க டா " என்று கத்த கப்சிப் என மூடி கொண்டனர்.
ஆத்மி எழில் கோவத்தை கண்டு அவன் அருகில் சென்றவள் " எழில் இந்த பொண்ணு மனநல பாதிக்க பட்டிருக்குன்னு அந்த பொண்ணோட பெற்றோர்கள் இங்க அனுமதிச்சிருக்காங்க. ஆனா இந்த பொண்ணுக்கு ஆவி பிடிச்சது அவங்களுக்கு தெரியாமல் போகிருக்கும். இதுக்கு மேல என்ன நடந்ததுன்னு அந்த பொண்ணோட அம்மா அப்பா கிட்ட தான் கேட்டு தெரிஞ்சிக்க முடியும் " என்று பொறுமையாக சொல்ல நிதானமாக யோசித்தான் எழில்.
கணபதி பார்வை சுழற்ற அவனின் மனதை கொள்ளையடித்த காமினி வெளியே செல்வதை பார்த்தவன் நைசாக எழில் அறையை விட்டு வெளியேறினான்.
'' ஹோய்..... ஹெலோ..... ஹேய் ஆட்டக்காரி " என்று கணபதி கத்தியதில் பிரேக் போட்டது போல் நின்றவள் திரும்பி கணபதியை தீயாய் முறைக்கவும் தான் என்ன சொன்னோம் என்பதே உணர்ந்தான்.
" யூ இடியட் என்ன சொல்லி கூப்ட்ட? " கோவத்தில் கத்தியவளை ரசித்த கணபதி " ஆட்டக்காரினு சொன்னேன் அதுக்கு என்னா இப்போ? உன் நடை அப்டி இருந்துச்சி சொன்னேன் " என்றவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தாள்.
" செங்குரங்குக்கு டிரஸ் போட்ட மாதிரி இருந்துட்டு என்னையே ஆட்டக்காரினு சொல்ற? இனி அப்டி கூப்ட்ட சொன்ன வாயிலையே வெஷ ஊசி போட்ருவேன். போடா மலமாடே " என்றவள் இடுப்பை ஆட்டி நடந்து செல்ல போறவளையே ரசனையோடு பார்த்து கொண்டிருந்தான் கணபதி.
" ரொம்ப ஓவரா லந்து பண்ணிட்டோமோ. பண்ணுவோம் " என்று தோளை குலுக்கியவன் மீண்டும் எழிலிடம் சென்றுவிட்டான்.
" ஆரவ் கணபதி நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க நாளைக்கு பாக்குலாம் " என்று எழில் சொன்னதும் தான் தாமதம் ஆரவ் கணபதியை இழுத்து கொண்டு வெளியே ஓடியவன் கவனிக்காமல் எதிரில் வந்த பெண்ணை இடிக்க அவளுக்கு என்ன கோவமோ ஆரவ் சட்டையை பிடித்து இழுத்து விட்டா பாருங்க ஒரு அறை.
"கொய்ங்க்க்க்க்க்க்க் " என்ற சத்தம் தான் ஆரவ் காதில் கேட்டு கொண்டே இருந்தது.

Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 11
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.