அத்தியாயம் 11

Administrator
Staff member
Joined
Nov 10, 2023
Messages
67
அத்தியாயம் 11

மிக நீண்ட நாட்களுக்கு பின்பு ராஜ்
குடும்பம் கூடியிருந்தது அந்நாளில், வேந்தனின் ஒரே தங்கை வர்ஷினியின் திருமண பேச்சிற்காக.

இவர்கள் ஈடிற்கு வசதி இல்லையென்றாலும் சொல்லிக்கொள்ளும் தொழிலதிபர்களே. தேடி வந்த சம்பந்தம். வர்ஷினிக்கு மாப்பிள்ளையின் ஸ்டைலும் அழகும் பிடித்து போனவளுக்கு குணம் எப்படி இருக்கும் என்று யோசிக்காமலே சம்மதம் சொல்லிவிட, இதோ நிச்சயத்தார்த்த ஏற்பாடும் செய்து விட்டனர் அவர்கள் வீட்டிலே.

நடைபெறும் நிச்சயதார்த்திற்கு வேலைகள் அரங்கேற, தலைமை தாங்க வேண்டியவனோ பெண்ணவள் காலை பற்றி பக்குவமாய் நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தான் வேந்தன்.

" அங்க எல்லாரும் உங்கள தேட போறாங்க. முதல என் காலை விடுங்களேன் " கெஞ்சாத குரலில், உருவ முயல காலின் மணிக்கட்டை ஒற்றை கரத்திற்குள் சிறை பிடித்துக்கொண்டான் அவன்.

அவள் உடுத்திருக்கும் அடர் குங்கும நிற புடவைக்கு ஏற்ப நெயில் பாலிஷ்ஷை இரண்டு பாதங்களுக்கும் போட்டு விட்டவன் " உன்னை பார்லர் போய் இதெல்லாம் பண்ணிக்கோன்னு சொன்னேன்லடி? " முறைக்க,

" எனக்கு அதுலாம் பிடிக்காது "

" அப்போ அமைதியா இரு " அதிரடியான அவன் பதிலில் மல்லுக்கட்டுவதை நிறுத்தி ஒத்துழைத்தாள் கீதாஞ்சலி.

மெத்தையில் அவளை அமர வைத்து எதிரே அமர்ந்து அவள் காலை தன் மடி மீது தாங்கிருப்பவனை கண்ணால் கண்டு ரசித்தாள் பேதை.

அவள் புடவைக்கு ஏற்ப ஷர்ட், அது மேல் கருப்பு நிற கோட் என கொள்ளை அழகில் இருப்பவன் தன் காலை பிடித்திருப்பது தான் வேடிக்கையாய் தோன்றியது.
சந்தன தேகம் கொண்டவன் எடுப்பாய் போட்டிருக்கும் கழுத்து சங்கிலியும் சரி, அடங்காத அலை கேசமும் இன்னும் அவன் அழகை மெருகூட்டி தான் காட்டும்.

இரண்டு காலுக்கும் நெயில் பாலிஷ் போட்டு முடித்து ஊதி விட, பற்கள் தெரிய சிரித்தாள் கீதா.

" போதும். இதெல்லாம் யாரு பார்க்க போறா? "

" நான் பார்ப்பேன்டி. நான் இதை வச்சதும் இன்னும் அழகா இருக்கு பாரு " அவனின் கிறுக்கலை அவன் மட்டுமல்லாது அவளும் ரசித்து ஏற்றுக்கொண்டாள்.

" ஆமா ரொம்ப அழகா தான் இருக்கு. இப்போவாச்சும் போலாமா "

" போலாம் போலாம். என்ன அவசரம்?? " போறவளை இழுத்து பின்னிருந்து அணைத்துக்கொள்ள அவன் கதகதப்பில் கரைந்துருகி போனாள் கீதா.

பெரு மூச்சை விட்டவள் அவன் புறம் திரும்பி லேசர் வீச்சாய் விழியை எறிய, உறைந்த சிலையாய் அசைய மறுத்துவிட்டான் அந்த பார்வையிலே. உள்ளே துளைத்து உயிரையே குலைப்பது போல் உணர்வு.

விரல் கொண்டு தீண்டாமலே பார்வை தீண்டியதில் தடுமாறி தவித்து தான் போனான் வேந்தன். மகுடிக்கு மயங்கிய பாம்பினை போல்.

மயங்கி, கிறங்கி கிடக்கிறான் அவளிடம். அவளிடம் மட்டுமே. இதழ் வழி கேட்க முடியா வார்த்தைகளை விழி வழியே உணரும் அந்த பார்வைக்கே அடிமை....

அறைக்குள் நுழைந்த வெளிச்சம் வேறு அவள் கண்களை மின்ன செய்ய, மெய்மறந்தவன் முகத்தை பார்த்தவள் " எல்லாத்தையும் யோசிச்சிங்களா? நான் இதுல கலந்துக்குறதுனால உங்களுக்கு ஏதும் பிரச்சனை " மென்று முழுங்க முகமாறியது வேத்தனிற்கு.

" உனக்கு நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலே பொருக்காதாடி. ஏதாச்சும் சொல்லி என் மூட மாத்தணும் " முறைப்பாக கத்தினான்.

" அதுக்கு இல்லை. மத்தவங்களையும் நான் யோசிக்க வேண்டாமா? " அவனுக்கு புரிய வைக்க முயன்றாள் கீதா. வருபவர்கள் எல்லாம் செல்வாக்கர்கள். திருமணம் நடந்தது கூட வந்திருப்பவர்களில் சிலருக்கு தெரிய தான் வாய்ப்பு உண்டு.

அதோடு நிச்சயதார்த்தத்திற்கு நான் வரவேண்டும் என்றால் நீயே வந்து என் மனைவியை அழைக்க வேண்டும் என வேந்தன் முடிவாய் சொன்னதில் பீச் ஹவுஸ் வரை வந்த ஹேமா அவன் முன்பு அன்பாக தான் அழைத்தார். ஆனால் அவன் கொஞ்சம் நகர்ந்த மறுக்கணம் ' அங்கு வர்றவங்க கிட்ட என் பையனோட பொண்டாட்டின்னு சொல்லி என் மானத்தை வாங்கிடாத ' எச்சரித்தே சென்றிருந்தார்.

இதை எதையும் கணவனிடம் சொல்லாமல் மறைப்பவள் பாவமாய் நிற்க அவள் மோவை பற்றி தன்னை பார்க்க செய்தவன் "இங்க வாழ போறது நாம. இதுல மத்தவங்க என்ன நினைப்பாங்கனு நினைச்சா நாம எப்போ வாழுறது அஞ்சலி. உனக்கு இன்னும் எப்படி புரிய வைக்கிறதுனு தெரியல நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு. என்னை மட்டும் பாருடி. நான் சொல்லுறத மனசுல பதிய வை. நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் நாம பீச் ஹவுஸ் போகிடலாம். இப்பவும் உனக்கு பிடிக்கலைனா சொல்லு கிளம்பலாம். உன்னை தாண்டி எனக்கு எதுவும் இங்க முக்கியம் இல்லை அஞ்சலி " அணைப்பின் இறுக்கம் கூடியது. அவள் மீதான அவன் காதலுமே...

அதற்கு மேல் அவனிடம் பேச வார்த்தை இல்லை அவளிடம். இனி எது நடந்தாலும் இந்த முகத்திற்காக கடந்து போக வேண்டியது தான் முடிவாகியவள் முறுவலிட்டாள்.

" இப்போவாச்சும் போலாம் வாங்க "

" ஒரு நிமிஷம்" மீண்டும் போறவளை தடுத்தவனை சலிப்பாய் அவள் ஏறிட, கால் மடக்கியவனோ புடவையின் மடிப்பை சரி செய்து திருப்தி கண்ட பின்பே அவளோடு அறையிலிருந்து வெளியேறினான் வேந்தன்.

மாலை நேரம். இருள் சூழ்ந்ததில் வீடு ஜொலிக்க ஆரம்பித்தது மின் விளக்கின் உதவியால். திரும்பும் இடமெல்லாம் பணத்தின் வாசனை. எதற்கும் குறைவில்லை. பேத்தியல்லவா. அதனாலே மாணிக்கம் ஆடம்பரத்தை பாரபட்சம் பார்க்காமல் அள்ளி தெளித்திருந்தார்.

வேந்தனோடு நிச்சயதார்த்தம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்த கீதா, தன்னை பார்த்ததும் மாமியார், நாத்தனார் முகம் சுருங்கியதை கவனிக்காமல் இல்லை.

" அஞ்சலி ஜுஸ் " கொஞ்ச நேரம் கவலையாய் இருக்க விட மாட்டான் போல. நிறுவனத்தை ஆளுபவன் அவளை விழுந்து கவனிப்பதை அங்கிருப்பவர்களும் கண்டும் காணாமல் இருந்து விட்டனர் வேந்தனுக்கு பயந்து.

" எல்லாரும் பார்க்குறாங்க. நீங்க ஏன் இதையெல்லாம் பண்ணுறீங்க? "

" புருஷன் இதைக் கூட பண்ணலைனா எதுக்குடி நான்?? சும்மா தொட்டதுக்கெல்லாம் அதட்டாம அதை குடி அஞ்சலி "

" ஆமா நான் அதட்டி தான் நீங்க கேட்டுட்டிங்க பாருங்க "

" நீ சொல்லி நான் என்ன கேட்காமல் இருந்துருக்கேன் சொல்லு?? காலை எழுந்ததும் பிரெஷ் பண்ணாம கிஸ் கொடுக்குறது பிடிக்கலனு சொன்னதுல இருந்து பிரஷ் பண்ணிட்டு வந்து கொடுக்கல... " பட்டென சொல்லிட அவன் வாயிலே ஒரு அடியை அவளை மீறி வைத்தாள் கீதாஞ்சலி.

" எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க? நான் அதை சொல்லவே இல்லை. உங்க தங்கச்சியை கட்டிக்க போறவர் பற்றி விசாரிச்சிங்களா? "

" ம்ம். நல்ல பையன் தான். பொண்ணு போதைனு எந்த பழக்கமும் இல்லை. ஸ்மார்ட் அண்ட் ஹார்ட் ஒர்கிங் மேன் தான். இப்போ வரைக்கும் அவனை பற்றி எந்த குறையும் காதுக்கு வரல " சொல்லிக்கொண்டே சர்வர் கொடுத்த சரக்கை பருகிட ஏற இறங்க அவனை பார்த்தாள் கீதாஞ்சலி.

அவள் பார்வையில் சிரிப்பை உதட்டுக்குள் அதக்கியவன் " போதையும் அளவா தான்டி. உன்னை தவிர யாரும் இல்லை என் வாழ்க்கையில " கண்கள் மின்ன சொல்லிட நம்பாது போல் பார்த்த கீதா

" இது மட்டும் எதுக்காம்? "

" சரி இனி குடிக்கல. ஆனா இன்னைக்கு மட்டும் ப்ளீஸ் " முழு சரக்கையும் உள்ளே தள்ளிட அதிர்ந்தவள் அவன் குடிக்கும் அளவை குறித்துக் கொண்டு தான் இருந்தாள் டிபிக்கல் மனைவியாக.

ஜோடிகள் மோதிரங்களை மாற்றிக் கொண்டு ஆளுயரத்தில் அடுக்கிருக்கும் கேக்கை கட் செய்து தங்கள் சந்தோஷத்தை குடும்பமாய் பகிர்ந்துக் கொண்டனர்.

சரக்கு, உணவு என வந்திருக்கும் விருந்தினர்களை வேலையாட்கள் கவனிக்க, மாணிக்கம் பேரன் அருகில் நின்று ஒவ்வொருவர்களாய் அடையாளம் காட்டிக் கொடுத்தார் நினைவு இழந்தவனுக்கு.

" இவங்க யாருகிட்டவும் நீ அதிகமா பேச்சு வார்த்தை வைக்காதனால, உனக்கு எந்த பிரச்னையும் இல்லை வேந்தா "

" அதுவரை சந்தோஷம். அப்போ என்னைக் கொஞ்சம் விடுறிங்களா? என் அஞ்சலி வேற தனியா நிற்கிறா. நான் போறேன் " சிறுவன் போல் அடம்பிடிப்பவனை ஆச்சர்யமாய் பார்த்தார் மாணிக்கம். தன் பேரனா இவன் என்ற வியப்போ.

இருந்தும் அவனை நகர விடாமல் பிடித்துக்கொண்ட மாணிக்கம் " கொஞ்ச நேரம் அவளை நிம்மதியா இருக்க விடு வேந்தா "

" வாட்??? நான் அவ பக்கத்துல இருந்தா தான் நிம்மதியா இருப்பா. பாருங்க நான் இல்லாம சோகமா நிற்கிறான்னு " திரும்பி மனைவியை சுட்டிக்காட்ட அவளோ அங்கு வந்த குழந்தைகளிடம் எதையோ பேசி குலுங்கி சிரிக்க முகம் புஸ்ஸன சுருங்கியது வேந்தனிற்கு.

" உனக்கு இன்னும் சிலரை இன்ட்ரோ பண்ணனும். கொஞ்ச நேரத்துக்கு என் பேத்தியை சந்தோகமா இருக்க விடுடா. வா "

" தாத்தா நோ. நான் வரல விடுங்க. அஞ்சலி என்னை தேடுவா. ப்ளீஸ் தாத்தா " கெஞ்சும் சிறுவனை இழுத்து சென்று விட்ட பின்பே நிமிர்ந்த அஞ்சலி கணவனை காணாது கண்களை அலைய விட்டாள்.

' இங்கு தானே இருந்தாரு. எங்கு போனாரு அதற்குள்ள??? அதும் என்னை தனியா விட்டுட்டு ' கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல் குறுகி நின்றவளுக்கு அவன் அருகே இல்லாமல் அந்த இடமே நரகமாய் தான் தோன்றியது.

தானே சென்று வேந்தனை தேடலாம் என நகர போனவளை முரட்டு தனமாக கையைப் பிடித்து தனியே இழுத்து சென்றார் ஹேமா.

" அத் " அவள் முடிக்கும் முன் ஹேமாவின் விரல்கள் கன்னத்தை பதம் பார்த்திட, அதிர்ந்து போனாள் கீதாஞ்சலி.

" உனக்குலாம் அறிவுனு ஒன்னு இருக்கா இல்லையா??? சொல்லிட்டு தானே வந்தேன். இங்க வந்து தொலையாதனு புரியும்படி தானே சொன்னேன். மானம் ரோஷம் இருந்திருந்தா இங்க வந்துருப்பியா? வெட்கமே இல்லாமல் என் பையனை தொட்டு பேசுற, சிரிக்கிற. இங்க வந்துருக்கிறவங்க யாராச்சும் உன்னை பார்த்து பேசுனாங்களா? சிரிச்சாங்களா? மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு நீயெல்லாம் வேலைக்காரியா இருக்க கூட தகுதி இல்லைனு தெரியும். உனக்குலாம் எவ்ளோ சொன்னாலும் உரைக்கலைன்னா இன்னும் நான் எப்படி சொன்னா தான் புரியும். முட்டாளா நீ??? என் பொண்ணு வாழ போற வீடு மட்டும் உன்னை பார்த்தால், என்னை எவ்ளோ கீழ்த்தரமா நினைப்பாங்கனு பயந்துட்டு இருக்கேன். உன்னோட இந்த ஆட்டம் எல்லாம் என் பையனுக்கு நினைவு வர்ற வரைக்கும் தான். கண்ணுல படாமல் போய் தொலை "

மேல் மூச்சை வாங்க ஆக்ரோஷமாய் பேசி முடிக்க, வேந்தன் ஏற்றி வைத்த நம்பிக்கை எனும் தீ மொத்தமாக அனைந்து இருண்டு விட்டது ஹேமா பேச்சில்.

இதற்கு இன்னும் இரண்டடிக் கூட கொடுத்திருக்குலாம். காதலால் அவளை சுற்றி அவன் கட்டிய கோட்டையெல்லாம் தரமட்டாமாகி போக மீண்டும் இருளில் தன்னை குறுக்கிக் கொண்டவள், அழுகையை அடக்கிட பெரும்பாடு பட்டாள் கீதா.

உதட்டைக் இறுக்கி கண்ணீரை உள்ளிழுத்தவள் ஹேமாவின் அடிமட்ட பார்வையில் திரும்பிட அவளை தேடி வந்தான் வேந்தன்.

" இங்க என்ன பண்ணுற அஞ்சலி??? உன்னை காணுமேனு பயந்து போய்ட்டேன் " இயல்பாய் அவள் முன் வந்து நிற்க, யாரை நம்ப கூடாதேன நினைத்தாளோ ; யாரை நெருங்கியதற்கு ஏச்சு பேச்சுகளை வாங்கினாளோ; யார் ஒருவன் தன் வலிக்கும் ரணத்திற்கும் ஆரம்பமோ அவனிடமே சரணடைந்து தாங்க முடியாமல் அழுதிட பதறியவன் பார்வை தாயை கொல்லும் வெறியில் எதிர்கொண்டது.

" அம்மா அவளை என்ன சொன்னிங்க? "

" அவ வேணும்னே உன்கிட்டிருந்து என்னை பிரிக்க வைக்க இப்படி ஒரு நாடகம் போடுறா அமுதன். வேணும்னே உன்னை பார்த்ததும் நடிக்கிறா. அவளை நம்பாத அமுதன். அவ உன்முன்னாடி என்னை கெட்டவளா காட்ட பார்க்குறா. அமுதன்.... " என நெருங்க பார்த்த ஹேமாவின் கால்கள் நிலைக்குத்தி நின்றது அவன் கர்ஜனையில்.

" இன்னும் ஒரு அடி எடுத்து வச்சாலும் நான் என் பொறுமையை இழந்துருவேன். நீங்க கொஞ்சமாச்சும் மாறிரூப்பிங்கனு நினைச்சேன். ஆனா இன்னும் மோசமா இருப்பிங்கனு நினைக்கல. இனி உங்களுக்கு ஒரு பையன் இல்லைனு நினைச்சிக்கோங்க. என் கண் முன்னாடி வந்துராதீங்க "

" அமுதா அம்மா உன் நல்லதுக்கு தான்பா எதையும் செய்வேன். அமுதா நில்லுடா. அம்மாவை விட்டு போகாத. அம்மு ப்ளீஸ் " மனைவியோடு வீட்டை விட்டு வெளியேறும் மகனை தொடர்ந்த ஹேமாவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
 
Author: Thanimai Kadhali
Article Title: அத்தியாயம் 11
Source URL: Thanimai kadhali Novels-https://thanimaikadhalinovel.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Member
Joined
Nov 26, 2023
Messages
23
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
New member
Joined
Mar 6, 2025
Messages
4

பேச கூடாதது எல்லாம் பேசிட்டு இப்போ வந்து கெஞ்சி என்ன பிரயோஜனம் 🙎🙎🙎
 
New member
Joined
Apr 2, 2025
Messages
1
Idhula indha amudhu paiyanaium namba mudila namma writerai um namba mudila.... Ivanga rendu perum serndhu enna aapu vaipangalo therilayae.... Indha amudhu paiyanuku ninaivu vandhrukum nu tan thonudhu.....
 
Top